Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீதியோர நடைபாதைக்குள் புகுந்த வாகனம்: ஒருவர் பலி, ஒருவர் காயம்

Posted: 14 Jun 2016 07:48 PM PDT

p

pவாகனம் ஒன்று வீதியோர நடைபாதையினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மோதிக் கொண்ட விபத்தில் 38 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் சகோதரி ஒருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் Bremner Boulevard மற்றும் Spadina அவனியூப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த இருவரும் பாதசாரிகள் என்றும், உயிரிழந்த பெண் 38 வயதானவர் என்றும், அவரின் சகோதரியான 35 வயது நபர் சிறிய காயங்களுக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.p

அவர்களை மோதித்தள்ளிய வாகனத்தை 48 வயதான பெண்மணி ஒருவர் செலுத்திச் சென்றிருந்தார் என்றும், இந்த விபத்தை அடுத்து அதிர்ச்சிக்குள்ளான அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபத்துக் குறித்து காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வீதியோர நடைபாதைக்குள் புகுந்த வாகனம்: ஒருவர் பலி, ஒருவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உருளைக்கிழங்கு சாறு குடியுங்கள்: மூட்டு வலியை குணப்படுத்துங்கள்

Posted: 14 Jun 2016 07:57 AM PDT

download (1)

download (1)பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

தடுக்கும் முறைகள்

நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும்.

பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

The post உருளைக்கிழங்கு சாறு குடியுங்கள்: மூட்டு வலியை குணப்படுத்துங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்

Posted: 14 Jun 2016 07:48 AM PDT

download

downloadபழங்களிலேயே அதிக மருத்துவ குணங்களை கொண்டது அத்திப்பழம்.

இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அத்திப்பழம் (ஒன்றின் சத்துகள்) (1 பழம் = 50gm) (% சராசரி தினப்படி சத்து)

நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்சியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி
மருத்துவ பயன்கள்

அத்திப்பழத்தை தினமும் 2 முதல் 5 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.

அத்திப்பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும், உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன்பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப்பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும்.

உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளைப்படுதலையும் போக்கிடும்.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது.

இதில் பொட்டாசியம் சத்து உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

The post இரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாற்றியமைக்கப்பட்ட ஒன்ராறியோ அமைச்சரவை!

Posted: 14 Jun 2016 07:44 AM PDT

i

iஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வின் தமது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்துள்ளார்.

அவர் புதிதாக அமைத்துள்ள அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் இடம்பெறுவதுடன் ஏழு பேருக்கு புதிதாக அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளார்.

சிறுவர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராக பதவி வகித்த ட்ரேசி மக்சார்ள்ஸ பதவி குறைக்கப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற வகையில் பெண்கள் விவகாரத்தினை கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

"ஆட்டிசம்" எனப்படும் மனஇறுக்க நோய்கான சிகிச்சை தொடர்பிலான சர்ச்சைகளை அடுத்தே ட்ரேசி மக்சார்ள்ஸ பதவி குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.i

அதேவேளை முன்னாள் புதிய சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி, பின்னர் லிபரல் கட்சிக்கு மாற்றலாகி வந்த கிளன் டீபேட்ற்கு (Glenn Thibeault) ஒன்ராறியோ சக்தி வளத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை கல்வி அமைச்சராக பதவிவகித்து வந்த லிஸ் சான்டல்ஸ் திறைசேரியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்ராறியோவின் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கவனித்துவந்த மிட்ஷி ஹண்டர் (Mitzie Hunter)புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முகங்கள் பெற்றுள்ள அமைச்சுப் பதவிகள் வருமாறு:

1. கிளன் டீபேட்ற் - சக்தி வளத்துறை அமைச்சு

2. எலினார் மக்மஹோன் - சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

3. கத்தரின் மக்கரி - இயற்கை வளம் மற்றும் வனவளத்துறை அமைச்சு

4. மரி பிரான்ஸ் லலோன்டே - பயனாளர் சேவைகள் அமைச்சு

5. லோறா அல்பான்சே - குடியுரிமை மற்றும் குடிவரவுத்துறை அமைச்சு

6. கிறிஸ் பலார்ட் - வீடமைப்புத்துறை அமைச்சு

7. இந்திரா நாயுடு ஹரிஸ் - ஒன்ராறியோவின் ஓய்வூதியத் திட்டத்திற்கான இணை நிதியமைச்சு

ஒன்ராறியோவின் இந்த புதிய அமைச்சரவையில் 40சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மாற்றியமைக்கப்பட்ட ஒன்ராறியோ அமைச்சரவை! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரண்டாவது கனேடிய பிணையாளியும் கொல்லபட்டார்

Posted: 14 Jun 2016 07:38 AM PDT

m

mகனேடியரான ரோபர்ட் ஹோல் (Robert Hall)என்பவரை பிலிப்பீன்சின் அபு சயஃப் பயங்கரவாதிகள் கொன்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தமது அரசாங்கம் பிரிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் பணியாற்றி வருவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

பிணைபிடித்து வைக்கப்பட்டிருந்த ரோபர்ட் ஹாலின் விடுதலைக்க கோரப்பட்ட பிணைப் பணத் தொகை குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தமக்கு கிடைக்கப்பெறாமையால் பிணையாளியான அவரைக் கொலை செய்துள்ளதாக பிலிப்பீன்சின் அபு சயஃப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள நிலையிலே கனேடியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.m

நேற்று திங்கட்கிழமை ஓட்டோவாவில் வைத்து இதனைத் தெரிவித்துள்ள பிரதமர், கனேடியரான ரோபர்ட் ஹாலை பிலிப்பீன்சின் அபு சயஃப் தீவிரவாதிகள் கொன்றனர் என்பதை நம்புவதற்கான காரணம் இருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிலிப்பீன்சில் வைத்து அபு சயஃப் பிரிவினரால் கடத்தப்பட்ட 4 பேரில் ரோபர்ட் ஹாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஏப்ரல் 25ஆம் நாள் கனடியப் பிணையாளியான ஜான் ரிட்ஸ்டெல் குறிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பிணைப்பணம் கிடைக்காததால் கொல்லப்பட்ட நிலையிலேயே, தற்போது இரண்டாவது கனடியரான ரோபர்ட் ஹோல் என்பவரையும் அபு சயஃப் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸின் அபு சயிப் தீவிரவாதிகள் கனேடிய பிரசை ஒருவரை கொலை செய்துள்ளமை பெரும்பாலும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிலிப்பைன்ஸ் சனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தப் படுகொலையானது மிகவும் மோசமான கருணையற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post இரண்டாவது கனேடிய பிணையாளியும் கொல்லபட்டார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™