Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நெகிழ வைக்கும் அபிநயாவின் ‛‛அப்பா' வீடியோ

Posted:

இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி அபிநயாவை 'நாடோடிகள்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இயற்கையிலேயே காதுகேளாத வாய்பேச முடியாத அபிநயா இன்று தென்னிந்திய மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகையாக விளங்குகிறார். இந்தி மற்றும் ஆங்கிலப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமுத்திரக்கனி தற்போது 'அப்பா' என்ற படத்தை ...

வில்லனும் நானே, ஹீரோவும் நானே: 'போகன்' பற்றி ஜெயம்ரவி

Posted:

'ரோமியோ ஜூலியட்' வெற்றிக்குப் பிறகு ஜெயம்ரவி, ஹன்சிகா, லக்ஷ்மண் மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபுதேவா தயாரிக்கிறார். இமான் அண்ணாச்சி, விடிவி கணேஷ், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தனி ஒருவனுக்கு பிறகு அரவிந்த்சாமி இதில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை ...

ஆந்திராவையும் அசர வைத்த அனுபமா பரமேஸ்வரன்

Posted:

மலையாள ரசிகர்கள் கொண்டாடிய 'பிரேமம்' படத்தில் அந்த நீள சுருள் முடி அழகியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்தப் படத்தில் நாயகன் நிவின் பாலி பள்ளி மாணவியான அந்த சுருள் முடி அழகியை ஓடியோடிக் காதலிப்பார். அந்த அழகிதான் அனுபமா பரமேஸ்வரன். தான் அறிமுகமான முதல் படத்திலேயே வசீகரமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் ...

‛இருமுகன்', ‛எஸ்3' இசை வெளியீடு எப்போது? ஹாரிஸ் ஜெயராஜ்

Posted:

ஹாரிஸ் ஜெயராஜ் என்றாலே மெலடி பாடல்கள் இனிமையாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஹாரிஸ் இசையமைத்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறாமல் போனது அவருக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. பாடல்களும் பெரிய அளவில் பேசப்படாமல் போனது. அனிருத், சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் 'ஆக்கிரமிப்பால்' ஹாரிஸ் ஜெயராஜும் ...

அதிகப் படங்களுடன் முன்னணியில் ஜெயம் ரவி

Posted:

2015ம் ஆண்டில் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் ஆகிய படங்களின் வெற்றி ஜெயம் ரவியை தமிழ்த் திரையுலகில் இன்னும் கொஞ்சம் முன்னணிக்குக் கொண்டு வந்துவிட்டது. தற்போது ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கி வரும் போகன் படத்தில் ஜெயம் ரவி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் தான் ரவி நடித்து அடுத்து வெளிவர உள்ள படமாக ...

சுந்தர்.சி, வெங்கட்பிரபு படங்களில் நடிக்கிறாரா சூர்யா?

Posted:

ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்துக்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனாக சூர்யா ...

மலேசியாவில் கபாலி ஜுரம்

Posted:

தமிழ்நாட்டில் வெளியாகும் அனைத்து படங்களும் மலேசியாவில் வெளியாகும். தமிழ் படங்களை மட்டுமே திரையிடும் தியேட்டர்களும் அங்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டை போல மலேசிய மக்கள் திரைப்படங்களை கொண்டாடுவதில்லை. படம் நன்றாக இருந்தால் போய் பார்ப்பார்கள் அவ்வளவுதான். ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு பிறகு 'கபாலி' ...

சந்தானத்தின் தந்தை மறைவு தில்லுக்கு துட்டு தள்ளி வைப்பு

Posted:

சந்தானத்துக்கு சின்னத்திரையில் முகவரியைக் கொடுத்த நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை வைத்து பெரிய திரைக்கு வந்த சந்தானம், நம்பர் ஒன் காமெடியனாக உயர்ந்த பிறகும், லொள்ளு சபாவின் இயக்குநர் ராம்பாலாவை அருகில் சேர்க்காமலே இருந்தார்.

ராம்பாலாவும் பிடிவாதமாக சந்தானத்திடம் உதவி கேட்காமலே ...

சுசீந்திரன் படம் கைவிடப்பட்டது ஏன்?

Posted:

மனிதன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் உதயநிதி. இப்படத்தில் உதயநிதியின் நண்பராக விஷ்ணு விஷால் நடிக்க இருந்தார். மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க இருந்தார்.

இந்த புதிய படத்தை ஆரம்பநிலையிலேயே ட்ராப் பண்ணிவிட்டனர். அந்தப்படத்தில் ...

கபாலி தேதியில் வரும் ஜாக்சன் துரை

Posted:

ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் ஜூலை 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே கபாலி வருவதாக சொல்லப்பட்ட ஜூலை 1 அன்று மிர்ச்சி சிவாவும், பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்த அட்ரா மச்சான் விசிலு படம் வெளியாகிறது.

அதேநாளில் தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ், சிபிராஜ் நடித்திருக்கும் ...

அறிமுக நடிகையை ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வரவழைத்து பாராட்டிய மோகன்லால்..!

Posted:

மலையாள நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அந்த புதிய எண்ணில் இருந்து போன் கால் வந்தபோது வழக்கம்போல யாரோ ஒருவர்தான் பேசுகிறார் என அதை அட்டென்ட் செய்தார்.. ஆனால் எதிர்முனையில் பேசுபவர் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார், தி கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் என்பதை அறிந்ததும் அவரது சர்வநாடியும் சந்தோஷத்தால் நடுங்கிப்போனதாம். அதை நம்பவே அவருக்கு ...

விதார்த்தின் ரூட்டை மாற்றிய ராதாமோகன்..!

Posted:

ஆம்.. உண்மைதான்.. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில் தான் மலையாளத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளார் நடிகர் விதார்த். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாக இருப்பதால், தமிழை விட்டு விலகிப்போனதாகவும் அவர் நினைக்க தேவையில்லை. 'கடோத்கஜன்' என பெயரிடப்பட்டுள்ள சுதி அன்னா என்பவர் இந்தப்படத்தை ...

கத்ரீனாவுக்கு மாப்பிள்ளை தேடுறாங்க...!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் கசிந்துருகினார். இருவரும் திருமணம் செய்ய இருந்த வேளையில் திடீரென, இருவரது காதலில் பிளவு ஏற்பட்டு பிரிந்தனர். அவர்கள் நடித்து வரும் ‛ஜகா ஜாசூஸ்' படத்தில் கூட காட்சிக்கு எப்படி தேவையோ அந்த மாதிரி மட்டும் நடித்துவிட்டு இருவரும் அவரவர் ...

லாஸ் ஏஞ்சல்ஸில் வாடகை கார் ஓட்டும் மம்தா மோகன்தாஸ்...!

Posted:

அளவான படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் வெளியான திலீப்புடன் நடித்த '2 கண்ட்ரீஸ்' படம் 100 நாட்கள் ஓடியதில் சந்தோஷமாக இருக்கும் மம்தா மோகன்தாஸ், அடுத்தடுத்த கதை தேர்வுகளில் கவனம் செலுத்துகிறார்.. ஜானி ஆண்டனி இயக்கத்தில் மம்முட்டி ஜோடியாக 'தோப்பில் ...

“மோகன்லால் என் பெஸ்ட் பிரண்ட்” ; பேபி மீனாட்சி கலாட்டா..!

Posted:

பொதுவாக சின்னக்குழந்தைகள் மனதில் இளம் முன்னணி ஹீரோக்கள் மட்டுமே மனதில் பதிவது வழக்கம். சீனியர் ஹீரோக்களை அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள்.. ஆனால் எல்லா மொழிகளிலும் உள்ள சூப்பர்ஸ்டார்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவர்கள்.. இங்கே நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போல, மலையாளத்தில் மோகன்லாலும் குழந்தைகளிடம் ரொம்பவே கவனம் பெற்றவர்தான்.. ...

யூ டியூப்பில் தனி சேனல் தொடங்கினார் ஹன்சிகா

Posted:

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர்களில் ஹன்சிகாவும் ஒருவர். தற்போது அவர் தனது ரசிகர்களுக்கு யூ டியூப்பில் தனி சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கு 'ஒன்லி ஹன்சிகா' என்று பெயர் வைத்துள்ளார்.

ஹன்சிகா நடிக்கும் படங்களின் புகைப்படங்கள், டிரைலர்கள், கிளப்பிங்ஸ்கள், அவரின் பேட்டிகள் இந்த சேனலில் ...

பஹத் பாசில்-நஸ்ரியா ஜோடிக்கு மோகன்லால் தந்த 'மகிழ்ச்சி'..!

Posted:

மகிழ்ச்சியால் பூரித்துக்கிடக்கின்றனர் பஹத் பாசில்-நஸ்ரியா ஜோடி. அவ்வளவு ஏன்.. பஹத் பாசில் குடும்பமே ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி. பின்னே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தங்களது வீடு தேடிவந்து சந்திகிறார் என்றால் அது சாதாரண நிகழ்வா என்ன..? மோகன்லால் தந்த சர்ப்ரைஸ் ஷாக்கை தாங்கிக்கொள்ளவே அவர்களுக்கு நீண்ட நேரம் ஆனதாம். ஆனால் அவர்கள் ...

பிளாஷ்ஃபேக்: இரண்டாவது ஹீரோவாக ரஜினிகாந்த் அறிமுகம்

Posted:

சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் பாண்டியன் என்ற சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த 'மூன்று முடிச்சு', 'அவர்கள்' படத்திலும் வில்லனாக நடித்தர். அவர் முதன் முறையாக இரண்டாவது ஹீரோவாகவும், பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்த படம் 'கவிக்குயில்'. ஹீரோ சிவகுமார். அவருக்கு ஜோடியாக ...

பவர்லிப்டிங் சேம்பியன் ஆனார் ரம்யா

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா. தற்போது ரேடியோவில் ஆர்ஜேவாகவும் பணியாற்றுகிறார். மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். சினிமாவிலும் நடிக்கிறார். இப்போது அவரது இன்னொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. அது அவர் ஒரு பவர்லிப்டிங் சேம்பியன்.
சென்னை பவர்லிப்டிங் அசோசியேஷன் நடத்திய பென்ஞ்பிரஸ் சேம்பியன் சிப் பவர்லிப்டிங் ...

பவன் கல்யாணுக்கு வில்லனான அஜய்

Posted:

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஜூலை மூன்றாம் வாரத்தில் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். இப்படத்தில் வில்லனாக நடிக்க அஜய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™