Tamil Star |
- GO பேருந்தில் வெடிகுண்டு புரளி
- தென்மேற்கு ஒன்ராறியோவிற்கு காற்றுத் தூய்மைக்கேட்டு எச்சரிக்கை!
- பேராசிரியரை விடுவிக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை
- ஒன்ராறியோ அமைச்சரவையில் இருந்து மூன்றாவது அமைச்சரும் வெளியேற்றம்
| GO பேருந்தில் வெடிகுண்டு புரளி Posted: 11 Jun 2016 09:47 PM PDT
இரட்டைத் தட்டுப் பேருந்து ஒன்று இன்று காலை 10 மணியளவில் மிசிசாகாவில் நெடுஞ்சாலை 407இன் வழியாக பயணித்துக்கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு அச்சுறுதல் தகவல் பேருந்தின் ஓட்டுனருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. பெண் பயணி ஒருவரை அணுகிய ஆண் நபர் ஒருவர் தாம் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்திருந்ததாகவும், இதனை அடுத்து அந்த பெண் பயணி, பேருந்து ஓட்டுனரிடம் இதனைத் தெரிவித்திருந்ததாகவும் கூற்பபடுகிறது. அதனை அடுத்தே பேருந்து ஓட்டுனர் உடனடியாக வீதியின் ஓரமாக பேருந்தை நிறுத்தியதுடன், உடனடியாகவே தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு ஒன்ராறியோ காவல்த்துறையினரையும் வரவழைத்திருந்தனர். அங்கு விரைந்திருந்த காவல்த்துறையினர் சமரசப் பேச்சுக்களை முன்னெடுத்திருந்த நிலையில், பேருந்தில் இருந்த 20 பயணிகள் பத்திரமாக வாகனத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்க்பபட்டிருந்தனர். அத்துடன் குண்டு வைத்திருப்பதாக தெரிவித்த சந்தேக நபர் அமைதியான முறையில் காவல்த்துறையினரிடம் சரணடைந்த நிலையில், அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடாத்திவருகின்றனர். இந்த அசம்பாவிதம் காரணமாக Britannia மற்றும் Derry வீதிகளுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 407இன் ஊடான இருவழிப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன், பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் அவை வழமைக்கு திரும்பியிருந்தன. The post GO பேருந்தில் வெடிகுண்டு புரளி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தென்மேற்கு ஒன்ராறியோவிற்கு காற்றுத் தூய்மைக்கேட்டு எச்சரிக்கை! Posted: 11 Jun 2016 09:28 PM PDT
கனடா சுற்றுச் சூழல் திணைக்களம மற்றும் ஒன்ராறியோ சுற்றுச் சூழல் அமைச்சு ஆகியன வின்ட்சர் (Windsor), எசெக்ஸ் (Essex) மற்றும் சத்தாம் - கென்ட் (Chatham-Kent) ஆகிய பகுதிகளுக்கான காற்றின் தரம் தொடர்பான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் குறித்த பகுதிகளில் காற்றில் அதிகளவிலான மாசுக்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக இருமல், தலைவலி, தொண்டை அழர்ச்சி, சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகளை மக்கள் உணரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், மூதியவர்கள் மற்றும் இதய, நுறையீரல் நோய் உள்ளவர்களுக்கு இந்த நிலைமை பாதிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காற்றுத் தூய்மைக்கேடு உயர்வாக உள்ள நிலையில், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைச் சுவாசித்தல், கடுமையான வெப்பங்களை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்ற செற்பாடுகளை தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post தென்மேற்கு ஒன்ராறியோவிற்கு காற்றுத் தூய்மைக்கேட்டு எச்சரிக்கை! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேராசிரியரை விடுவிக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை Posted: 11 Jun 2016 01:44 PM PDT
கடந்த திங்கட்கிழமை ஈரானிய அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அனைத்துலக மன்னிப்புச் சபை அவரை விடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள 65 வயது ஹோமா ஹூட்ஃபர்(Homa Hoodfar) என்ற அவர், மொன்றியல் கொன்கோர்டியா(Concordia ) பல்கலைக்கழக பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மானிடவியல் வல்லுநரான அவர் பெண்ணியம் குறித்த ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் எனவும், குறிப்பாக மத்திய கிழக்கு வட்டார வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஈரானில் பிறந்தவர் என்ற போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக அவர் மொன்றியலிலேயே வாழ்ந்து வருவதாகவும், கடந்த பெப்ரவரி மாதம் அளவில் ஈரான் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னரும் சில தடவைகள் அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பேராசிரியர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனச்சாட்சிக்கு விரோதமான ஒரு செயல் என்றும், இந்த கைது நடவடிக்கை கல்வியலாளர்கள், அமைதிச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் கருத்துரிமையை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஈரானிய அதிகாரிகளின் ஆகப் பிந்திய முயற்சி எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் கனேடிய அலுவலக செயலாளர் நாயகம் அலெக்ஸ் நேவா தெரிவித்துள்ளார். வழக்குரைஞர்கள், உறவினர்கள் என எவரையும் தொடர்பு கொள்ள முடியாதவாறு அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை அச்சத்தை உண்டுபண்ணுவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பேராசிரியர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அலெக்ஸ் நேவா , இந்த விவகாரத்தினை மிகவும் கடுமையானதாக கருதி, அவரை உடனடியாக விடுவிப்பதற்கான அரசதந்திர நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். The post பேராசிரியரை விடுவிக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ அமைச்சரவையில் இருந்து மூன்றாவது அமைச்சரும் வெளியேற்றம் Posted: 11 Jun 2016 12:21 PM PDT
மாநிலத்தின் சட்டமா அதிபர் மாடலின் மெய்லர்(Madeleine Meilleur) மற்றும் ஊள்ளூராட்சி, வீடமைப்புத்துறை அமைச்சர் ரெட் மக்மீக்கின் (Ted McMeekin) ஆகியோர் ஏற்கனவே பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூத்தோர் விவகார அமைச்சரான மரியோ சேர்ஜியோ (Mario Sergio) தமது பதவி விலகல் அறிவிப்பை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளதனால் லிபரல் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். தான் தொடர்ந்து அமைச்சரவையில் உறுப்பினராக இருக்க விரும்பவிலலை என்ற தகவலை நேற்று காலையில் முதல்வர் கத்தலின் வின்னிடம் தெரிவித்ததாகவும், சிறந்த சிந்தனைகளைக் கொண்ட புதிய சந்ததியினருக்கு வழிவிடுவதற்காக தருணம் இது என்று கருதுவதாகவும் மரியோ சேர்ஜியோ தெரிவித்துள்ளார். மரியோ சேர்ஜியோ ரொரன்ரோவின் யோர்க் மேற்கு தொகுதியில் இருந்து 1995 ஆம் ஆண்டில் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார். பின்னர் ஒன்ராறியோ அமைச்சரவையில் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்தில் இருந்து மூத்த குடிமக்கள் விவகார அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. The post ஒன்ராறியோ அமைச்சரவையில் இருந்து மூன்றாவது அமைச்சரும் வெளியேற்றம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

வெடிகுண்டு புரளியை அடுத்து GO பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு ஒன்ராறியோவின் சில இடங்களில் காற்றில் அதிகளவிலான மாசுக்கள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கனேடிய பல்கலைக்கழக பேராசிரியரை விடுவிக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது
ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பாக்கப்படும் நிலையில் மேலும் ஒரு அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.