Tamil News | Online Tamil News |
- கர்நாடகாவில் 12 டி.எம்.சி., தான் கையிருப்பு தமிழகத்திற்கு 35 டி.எம்.சி., நீர் கிடைக்காது
- தமிழகத்தில் ரூ.90,000 கோடி முதலீடு: மத்திய அமைச்சர்நிதின் கட்கரி தகவல்
- எதிரி கட்சியாக இருக்க மாட்டோம்: சட்டசபையில் ஸ்டாலின் உறுதி
- 'பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்' தி.மு.க.,வுக்கு ஜெ., வேண்டுகோள்
- ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போலீசார் மீது வன்முறை வெறியாட்டம்! உ.பி.,யில் போலீஸ் எஸ்.பி., உட்பட 24 பேர் பலி
- இந்தியாவில் குவியும் மின்னணு கழிவு: ஆண்டுக்கு 30 சதவீதம் அதிகரிப்பு
- ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் போட்டியின்றி தேர்வு
- இளைஞர்கள் தியாகம் செய்ய வேண்டும்: பிறந்த நாளில் கருணாநிதி வேண்டுகோள்
- வக்கீல்கள் பேரணி நடத்துவதற்கு தலைமை நீதிபதி... கண்டிப்பு!:ஒழுங்கு நடவடிக்கையை எதிர்க்க கூடாது என கருத்து
- அரசு முறைப்பயணமாக 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
| கர்நாடகாவில் 12 டி.எம்.சி., தான் கையிருப்பு தமிழகத்திற்கு 35 டி.எம்.சி., நீர் கிடைக்காது Posted: 03 Jun 2016 08:42 AM PDT கர்நாடக அணைகளில், 12 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் இருப்பதால், தமிழகத்திற்கு, 35 டி.எம்.சி., பாக்கி நீர் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும். ஆண்டுதோறும், ஜூன் மாதம் துவங்கி அடுத்த ஆண்டு மே வரை, இந்த நீர் வழங்கும் நடைமுறை அமலில் இருக்கும். அதன்படி, 2015 - -16 நீர் ஆண்டில், தமிழகத்திற்கு, 156.3 டி.எம்.சி., நீரை மட்டுமே கர்நாடக அரசு வழங்கி உள்ளது. மீதம், 35.6 டி.எம்.சி., நீர் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் முறையாக கிடைக்காததால், இந்த ஆண்டும், டெல்டா மாவட்டங்களில் குறுவை ... |
| தமிழகத்தில் ரூ.90,000 கோடி முதலீடு: மத்திய அமைச்சர்நிதின் கட்கரி தகவல் Posted: 03 Jun 2016 08:55 AM PDT ''சாகர் மாலா திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும், 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்படும்,'' என, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மத்திய அரசின், இரண்டு ஆண்டு சாதனை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று, 10 மாநிலங்களில் உள்ள, 15 மையங்களை ஒன்றிணைத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பத்திரிகையாளர் களின் கேள்வி களுக்கு பதிலளித்தார்.அப்போது, தமிழகத்தில் நடந்து வரும் திட்டங் கள் குறித்து, நிதின் கட்கரி கூறியதாவது:சாலை ... |
| எதிரி கட்சியாக இருக்க மாட்டோம்: சட்டசபையில் ஸ்டாலின் உறுதி Posted: 03 Jun 2016 09:27 AM PDT சென்னை,: ''மாநில உரிமை சார்ந்த பிரச்னைகளில், ஆளும் கட்சியோடு இணைந்து போராடுவோம்,'' என, சட்டசபையில், தி.மு.க., சட்டசபை குழுத் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட, சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை வாழ்த்தி, சட்டசபையில் நேற்று, தி.மு.க., சட்டசபை குழுத் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:இந்த சட்டசபை, இன்னும் 5 ஆண்டுகளில், நுாற்றாண்டு விழாவை காண உள்ளது. இந்த சட்டசபைக்கு, பல புகழ்பெற்ற சபாநாயகர்களை பெற்ற பாக்கியம் உண்டு. இங்கு, ஜனநாயகம் செழித்தால்தான், சட்டசபையின் மரபுகளும், நீதியும் காப்பாற்றப்படும் என்பதை ... |
| 'பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்' தி.மு.க.,வுக்கு ஜெ., வேண்டுகோள் Posted: 03 Jun 2016 09:29 AM PDT சென்னை: ''ஜனநாயக நெறிமுறைகளை கட்டிக்காக்க, நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அதே சமயம், எதிர்க்கட்சிகளும், தங்கள் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, மக்களுக்கு பயன்படக்கூடிய, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில், சபாநாயகர் தனபால் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை வாழ்த்தி, ஜெயலலிதா பேசியதாவது:ஒரு நாட்டில், ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக திகழ்வது சட்டசபை. தமிழக சட்டசபைக்கு, தொடர்ந்து, இரண்டாவது முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட, ... |
| Posted: 03 Jun 2016 09:53 AM PDT மதுரா,:உ.பி., மாநிலம் மதுராவில், 260 ஏக்கர் பரப்புள்ள பூங்காவை இரண்டாண்டுகளாக ஆக்கிரமித்து வந்தோரை போலீசார் அகற்ற முயன்றனர்; அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், ஒரு போலீஸ் எஸ்.பி., தலைமைக் காவலர் உட்பட, 24 பேர் கொல்லப்பட்டனர்.உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தில் உள்ள மதுரா நகரில், 260 ஏக்கர் பரப்பளவில், ஜவஹர் பாக் எனப்படும் பூங்கா உள்ளது. 3,000 பேர் போராட்டம்:தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இந்தப் பூங்காவுக்குள், 'ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி ... |
| இந்தியாவில் குவியும் மின்னணு கழிவு: ஆண்டுக்கு 30 சதவீதம் அதிகரிப்பு Posted: 03 Jun 2016 09:53 AM PDT மும்பை:இந்தியாவில் மின்னணு கழிவுகள், ஆண்டுக்கு, 30 சதவீதம் அதிகரிப்பதாக, ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு கழிவுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது: 130 டன்னாக அதிகரிக்கும்இந்தியாவில், தற்போது தேங்கிக் கிடக்கும் மின்னணு கழிவுகள், 18 லட்சம் மெட்ரிக் டன். இது ஆண்டுக்கு, 30 சதவீதம் அதிகரித்து, 2020ல், 52 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். சர்வதேச அளவில் மின்னணு கழிவுகள், இப்போது, 93.5 மெட்ரிக் டன்னாக உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில், இது, 130 டன்னாக அதிகரிக்கும். இந்தியர்களிடம் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதால், மின்னணு ... |
| ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் போட்டியின்றி தேர்வு Posted: 03 Jun 2016 10:32 AM PDT தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், நேற்று முறைப்படி வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, மே, 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது; மே, 31ல் நிறைவு பெற்றது. தி.மு.க., சார்பில் டி.கே.எஸ். இளங் கோவன், ஆர்.எஸ்.பாரதி; அ.தி.மு.க., சார்பில் நவநீதகிருஷ்ணன், வைத்தி லிங்கம், விஜயகுமார், எஸ்.ஆர்.பால சுப்ரமணியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள், ஏழு பேர் மனு தாக்கல் செய்தனர்.எம்.எல்.ஏ.,க்களின் முன்மொழிதல் இல்லாமல் ... |
| இளைஞர்கள் தியாகம் செய்ய வேண்டும்: பிறந்த நாளில் கருணாநிதி வேண்டுகோள் Posted: 03 Jun 2016 10:48 AM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, தன், 93வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவர் வெளியிட்ட பிறந்த நாள் செய்தியில், 'மக்களாட்சியின், நான்கு துாண்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்ய உறுதி கொள்ள வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட பிறந்த நாள் செய்தி: சட்டசபை, நீதி, நிர்வாகம், பத்திரிகை உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய, நான்கு துாண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன.அந்தத் துாண்கள், எத்தகைய ... |
| Posted: 03 Jun 2016 10:58 AM PDT சென்னை:தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன், 6ம் தேதி, வழக்கறிஞர்கள் நடத்தும் பேரணியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கண்டித்துள்ளார். நீதிபதி பெயரைக் கூறி பணம் பெறுவது; நீதிபதியை திட்டுவது, மிரட்டுவது; ஆதாரமில்லாத புகார்களை, மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்புவது; குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராவது; நீதிமன்ற வளாகத்தில் பேரணி, முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ... |
| அரசு முறைப்பயணமாக 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் Posted: 03 Jun 2016 01:16 PM PDT புதுடில்லி: அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜூன் 4) 5 நாடுகளுக்கு தனது சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது: பிரதமர் மோடி இன்று ஜூன் 4 முதல் 10-ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மெக்ஸிகோ என 5 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியை சந்தித்து பேசுகிறார். அப்போது ஹிராட் மாகாணத்தில் உள்ள ஆப்கன்- இந்தியா நட்புறவு அணையை (பழைய பெயர்- சல்மா அணை) தொடங்கி வைப்பார். பின்னர் அங்கிருந்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |