Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அனுமதி! தியேட்டர்கள், உணவகங்கள், வங்கிகள் 24 மணி நேரமும் செயல்பட...: புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

Posted: 29 Jun 2016 09:54 AM PDT

புதுடில்லி:கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான, புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை, நேற்று அனுமதி அளித்தது.

தற்போது, மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சில சேவைத் துறை நிறுவனங்கள் மட்டுமே, 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இந்நிலையில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், சில முக்கிய முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.இதன்படி, கடைகள், தியேட்டர்கள், ...

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted: 29 Jun 2016 10:05 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது அமலுக்கு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுகிறது. முதல் ஊதியக் குழு, 1946ல் உருவாக்கப்பட்டது. கடைசியாக, கடந்த, 2006ல், 6வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, 2008ல், நடைமுறைக்கு வந்தது.நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் குழு, கடந்த, 2013ல் அமைக்கப்பட்டது. இந்தக் ...

பணம் கறப்பதில் மொபைல் போன் சேவையாளர்கள் முதலிடம்

Posted: 29 Jun 2016 10:12 AM PDT

புதுடில்லி,: நுகர்வோர் சேவையை பொறுத்தவரை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தான் அதிகம் செலவழிப்பதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில்...கிராமப்புறங்களில், 47,535 வீடுகள் மற்றும் நகர்ப்புறங்களில், 36,065 வீடுகளின் செலவினங்கள் குறித்து, போக்குவரத்து, பலதரப்பட்ட நுகர்வோர் சேவைகள், பிற சேவைகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகிய, நான்கு பிரிவு களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், நுகர்வோர் சேவைகளுக்கான செலவில், கிராமப்புறத்தினர் மிக அதிகமாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, ...

மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 18ல் துவங்கும்

Posted: 29 Jun 2016 10:16 AM PDT

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை, 18ல் துவங்கவுள்ளது. இத்தொடரின்போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரை, ஜூலை, 18 முதல், ஆகஸ்டு, 12 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆளும், தே.ஜ., கூட்டணி அரசுக்கு, ராஜ்யசபாவில் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. நீண்ட காலமாக ...

சுவாதி கொலையாளியை அடையாளம் காட்டிய தோழி! : தனிப்படை போலீசார் கையில் குற்றவாளி படம்

Posted: 29 Jun 2016 10:21 AM PDT

சுவாதி கொலை வழக்கில், அவரது தோழி ஒருவர், கொலையாளியை அடையாளம் காட்டி உள்ளார். 'பேஸ்புக்' வலைதளத்தில் தன்னுடன் பழகி, பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய வாலிபனே, சுவாதியை கொலை செய்துள்ளார் என, அவர் அளித்துள்ள தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கொலையாளியை நெருங்கி உள்ளனர்.

சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவரது இளைய மகள் சுவாதி, 24. செங்கல்பட்டு அருகே, பரனுாரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.வேலைக்கு செல்வதற்காக, ஜூன், 24ல், சென்னை, ...

நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு

Posted: 29 Jun 2016 10:27 AM PDT

தீபாவளி பண்டிகை ரயில் பயணத்திற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், துவங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்., 29ம் தேதி வருகிறது. இதற்காக, ஒரு நாள் முன் சொந்த ஊரில் இருக்கும் வகையில் பயணம் செய்வர். ரயில்களுக்கு, 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, அக்., 27ம் தேதி ரயிலில் பயணிப்போருக்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.காலை, 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கிய, இரண்டு நிமிடங்களில் பாண்டியன், நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் டிக்கெட்கள் ...

ஒருதலை காதல் கைகூடாததால் ஆத்திரம்: பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியிட்டவன் கைது

Posted: 29 Jun 2016 10:35 AM PDT

சேலம்,:'பேஸ்புக்'கில் வினுபிரியாவின் புகைப்படத்தை, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவன் கைது செய்யப்பட்டான்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மோட்டூர் புவனகிரி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 46. அவரது மகள் வினுபிரியா, 21. கடந்த, 16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின், 'மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச புகைப்படம், பரவியது. இது குறித்து, புகார் அளித்த வினுபிரியாவின் பெற்றோர் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மார்பிங் ஆபாச படம் தொடர்ந்து, பரவி வந்ததால், மனமுடைந்த வினுபிரியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் ...

'வாட்ஸ் ஆப்'புக்குதடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 29 Jun 2016 10:39 AM PDT

புதுடில்லி:'நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள, 'வாட்ஸ் ஆப்' சமூகதளத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

வாட்ஸ் ஆப்க்கு தடை கோரி, சமூக ஆர்வலரான சுதிர் யாதவ் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில்கூறப்பட்டுள்ளதாவது:'என்கிரிப்ஷன்' எனப்படும், புதிய தொழில்நுட்பம் மூலம், வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் தகவலை, அதை அனுப்புபவர் மற்றும் அதைப் பெறுபவர் மட்டுமே பார்க்க முடியும். இது பயங்கரவாதிகளுக்கு சாதகமாகஉள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரிய ...

ரூ.31,870 கோடி நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு வரி வருவாயில் தொடர் சரிவு; சம்பள உயர்வாலும் சிக்கல்

Posted: 29 Jun 2016 10:42 AM PDT

'வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு, நிதி நெருக்கடிக்கான எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது' என, 'தினமலர்' நாளிதழ் எச்சரித்தது போல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கி, தமிழக அரசு திணறுவதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது.

வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் அமலாகி சம்பளம் உயர்ந்தால், தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ம் நிதியாண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ...

பாகிஸ்தான் குறித்து மோடி தவறான கணிப்பு: சர்தாஜ் அஜீஸ் பேச்சு

Posted: 29 Jun 2016 12:35 PM PDT

இஸ்தான்புல்: பாகிஸ்தான் குறித்து இந்திய பிரதமர் மோடி தவறாக கணித்து வருகிறார் என பாகில்தான் கூறியுள்ளது. பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு தனியார் டி.வி. சானலுக்கு பேட்டியளித்தார். இதில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான நட்புறவு குறித்து கருத்து தெரிவித்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியது, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் பாகிஸ்தான், இந்தியாவுடான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா தான் விலகி செல்கிறது. பாகிஸ்தான் குறித்து இந்திய பிரதமர் ...

கேதார்நாத் கோவிலின் அடித்தளம் 'வீக்' : சென்னை ஐ.ஐ.டி., எச்சரிக்கை

Posted: 29 Jun 2016 01:46 PM PDT

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலின் அடித்தளம், மிகவும் பலவீனமாக இருப்பதாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையமான, ஐ.ஐ.டி., நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, கோவிலை சுற்றிலும், 'வாட்டர் புரூப்' எனப்படும், தண்ணீர் புகாத தடுப்பு அமைக்கும் பணியை, தொல்லியல் துறை துவக்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2013ல் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கேதார்நாத் கோவிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புனித யாத்திரை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™