Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன?

Posted: 29 Jun 2016 01:23 PM PDT

தவறான வாழ்வியல் முறை காரணமாக என்னென்ன நோய்கள் வருகின்றன? உடல்பருமன் வைட்டமின் டி குறைபாடு சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் தைராய்டு கோளாறுகள் ஹார்மோன்கள் சமச்சீரின்மை புற்றுநோய் செரிமானக் கோளாறுகள் மனஅழுத்தம் இதய நோய்கள் நரம்பு மண்டலப் பாதிப்புகள் முதுகுவலி, மூட்டுவலி சருமக் கோளாறுகள் பாலியல் பிரச்னைகள் சுவாசப் பிரச்னைகள் சீரற்ற மாதவிலக்கு அதிக ரத்தப்போக்கு ஹார்மோன் மாறுபாடு காரணமாக சருமப் பிரச்னை குழந்தையின்மை தீர்வு என்ன? தொடரும்................

ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்!

Posted: 29 Jun 2016 01:20 PM PDT

'நான் சொல்றது எல்லாமே உண்மை. அதை அவங்களால ஏத்துக்க முடிஞ்சாலும், முடியாட்டாலும் நான் வெளிப்படையாகத்தான் பேசுவேன்'' என்று ஆரம்பிக்கிறார் கங்கை அமரன். உங்க முதல் பட அனுபவம், இப்போ உங்களோட பயணமும்? '' கோழி கூவுது படத்த இயக்கினப்போ, படத்த நல்லபடியா கொடுக்கணும்ங்ற பயம் கொஞ்சம் இருந்தது. மத்த டைரக்டர்கள் எல்லாம் சில சீன்ஸ வேகமா ஓட்டிட்டுப் போயிடுவாங்க.. நான் ஒவ்வொரு ஷார்ட்டா ரொம்ப ஷார்ப்பா பண்ணேன். என்னோட வேலையை ரொம்ப நியாயமா பார்த்தேன். அதனாலதான் என்னோட ஒவ்வொரு படமும் இயல்பா இருந்தது. ...

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Posted: 29 Jun 2016 12:59 PM PDT

ஹரியானாவில் நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்ட குத்துச்சண்டை வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார் கவிதா என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி. மேலும் இவர் பளு தூக்கும் வீராங்கனை ஆவர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் வங்கிகள், திரையரங்குகள், உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 29 Jun 2016 12:52 PM PDT

திரையரங்குகள், கடைகள், உணவகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை இனி 24 மணி நேரமும் திறந்திருக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இரவில் பணி செய்யும் பெண்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன சட்டத்திற்கு பார்லி., ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நேரடியாக விரைவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ...

மிரளவைக்கும் சந்திரபாபு நாயுடு : கால்வாய்களிலும் மின்சார உற்பத்தி !

Posted: 29 Jun 2016 12:41 PM PDT

மிரளவைக்கும் சந்திரபாபு நாயுடு : கால்வாய்களிலும் மின்சார உற்பத்தி ! கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கிருஷ்ணா நதியையும் கோதாவரி நதியையும் இணைத்துக் காட்டினார் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகப் பெரிய சாதனையை படைத்து காட்டினார். தற்போது தான் சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்து காட்டாக கால்வாய்கள் மூலம் மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பீமாவரம் அருகே கொலவென்டிபா கிராமத்தில் ...

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !

Posted: 29 Jun 2016 12:25 PM PDT

இன்ஜினீயரிங் படித்ததுமே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது கார்த்திக்கு. கை நிறைய சம்பளம். ஆறு ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. 27 வயதில், ஒரு பெரிய எம்.என்.சி-யில் சீனியர் மேனேஜர் வேலை... புராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறிமாறிப் பயணம். வீட்டில் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். லைஃபில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்த நேரம்... ஒரு நாள் அலுவலகத்துக்குச் சென்ற கார்த்தி, திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் ...

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)

Posted: 29 Jun 2016 12:17 PM PDT


-

வணக்கம் தமிழா

Posted: 29 Jun 2016 12:07 PM PDT

பெயர்: குணசேகரன். எஸ்
சொந்த ஊர்: வேலூர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: web
பொழுதுபோக்கு: புத்தகம் padithal
தொழில்: data entry
மேலும் என்னைப் பற்றி: 52 yrs, புத்தகம் சேகரிப்பு, ஆலய-ஆன்மிக தரிசனம். வர்மம், (சித்த) மருத்துவம் கற்றல்.

வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை

Posted: 29 Jun 2016 12:04 PM PDT


-

-

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Posted: 29 Jun 2016 12:04 PM PDT

ஆளில்லா நூலகம்

Posted: 29 Jun 2016 11:49 AM PDT

கே.ஆர்.மகேந்திர குமார், அம்பத்தூர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர். டெலி கம்யூனிகேஷன்ஸ் துறையில் அஸிஸ்டென்ட் ஒயர்லெஸ் அட்வைஸராக இருந்த இவருக்கு ஓயாமல் ஒரு சிந்தனை இருந்தது. "வெளிநாடுகளில் கடைகளில் ஆளில்லாமல் வியாபாரம் நடக்கிறது. மக்கள் வந்து தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை வைத்துவிட்டுப் போகிறார்கள். இங்கே நாமும் ஏன் ஏதாவது செய்யக்கூடாது என்ற சிந்தனை. "நம் வீட்டின் முன்பாக தெருவில் பூட்டாத ஒரு பீரோவில் புத்தகங்களை அடுக்கி வைப்போம். படிக்க விரும்புகிறவர்கள் ...

வெளிநாட்டுமொழிகளை கற்க விண்ணப்பிக்கலாம்

Posted: 29 Jun 2016 11:47 AM PDT

பெங்களூருபல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டுமொழிகள் சான்றிதழ், பட்டயம் மற்றும் உயர்பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகள் துறையின் சார்பில் பிரெஞ்ச், ஜெர்மனியம், ஜப்பானியம், இத்தாலியம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், போர்த்துகீசியம், ரஷ்யன், ஃபின்னிஷ்மொழிகளுக்கு 2016-17-ஆம் கல்வியாண்டில் சான்றிதழ், பட்டயம், உயர்பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தபடிப்புகளில் ...

நம் தமிழை முறையாக அறிவோமே !

Posted: 29 Jun 2016 11:44 AM PDT

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ? நாள் + கள் = நாள்கள் கால் + கள் = கால்கள் கோள் + கள் = கோள்கள் வேல் + கள் = வேல்கள் தாள் + கள் = தாள்கள் இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு. இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று. மேல் + கணக்கு கால் + கடுக்க பால் + பசு நாள் + கோள் பால் + பழம் கால் + சட்டை மேல் + படிப்பு கால் + புள்ளி நூல் + பா மேல் + கொண்டு ...

வாழ்த்துவோம் ayyasami ram அவர்களை .--21000 பதிவுகள்

Posted: 29 Jun 2016 11:30 AM PDT

வாழ்த்துவோம் ayyasami ram அவர்களை .--21000 பதிவுகள் [b]வாழ்த்துகள் ram அவர்களே     தங்களுடைய  ஜெட் வேகப் பதிவுகளுக்கு   ரமணியன்[/b][/b]

தேயாத அழகு..!

Posted: 29 Jun 2016 11:24 AM PDT

- – அவள் வானம் காணாத நிலவு வடிவு தேயாத அழகு கூடி மகிழாத பருவம் குலவச் சலிக்காத உருவம் – தேடக் கிடைக்காத செல்வம் தேடி நான் பெற்ற இன்பம் வானில் பறக்கின்ற பறவை கூடிப் பெறுகின்ற உறவை நாடி நாம் பெற வேண்டும் – மேகம் தேராக வேண்டும் ராஜன் எனைத் தாங்க வேண்டும் ராணி நீ அங்கு வேண்டும் உலகம் சுகமாகத் தோன்றும் – இனிமை அது வேறு இன்பம் தனிமை நான் பெற்ற துன்பம் இளமை உனக்குண்டு என்றால் இன்பம் இணையாமல் வருமோ..? – —————————- -கே.பி.எஸ்.ராஜா கண்ணதாசன் காலக் குயில்- கவிதை தொகுப்பிலிருந்து

தாயைத் தேடி ....

Posted: 29 Jun 2016 11:20 AM PDT

ஒரு முனிவர் காட்டுவழியே சென்றுகொண்டிருந்தார் . அப்போது ஒரு குடிசையின் முன்னே ஒரு பெண் அழுதுகொண்டு இருந்தாள். அவளைப் பார்த்த முனிவர் , " ஏனம்மா ! அழுதுகொண்டு இருக்கிறாய் ? " என்று கேட்டார். " ஐயா ! என் பாட்டி இறந்துவிட்டார்கள் ! அதுதான் அழுதுகொண்டு இருக்கிறேன் ! " என்று சொன்னாள் . உடனே முனிவர் , " உன் பாட்டி இறக்கவில்லையம்மா ! அவள் , அவளுடைய அம்மாவைத் தேடிச் சென்றிருக்கிறாள் . நாளைக்கு உன்னுடைய அம்மா , அவளுடைய அம்மாவைத் தேடிச் சொல்லுவாள் ; மறுநாள் நீ உன்னுடைய அம்மாவைத் தேடிச் செல்வாய் ...

ஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர் பிறந்த தின சிறப்பு பதிவு

Posted: 29 Jun 2016 11:17 AM PDT

ஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர் ! தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் (R.S.Manohar) பிறந்த தினம் இன்று (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் ...

நூற்றாண்டுகளில் வரலாறு

Posted: 29 Jun 2016 11:15 AM PDT

இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'

Posted: 29 Jun 2016 11:04 AM PDT

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அதிர்ச்சிகரமான தீர்ப்பை மக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். அந்த நாட்டு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட வட அயர்லாந்துக்கு ...

விக்ரம் மகளுக்கு கல்யாணம்

Posted: 29 Jun 2016 11:04 AM PDT

- விக்ரமிற்கு துருவ் என்ற மகனும், அக்‌ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்‌ஷிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மனு ரஞ்சித் என்பவருக்கும் ஜூலை மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. கேவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் தான் மனு ரஞ்சித். இவரது தாயார், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ...

கி. வா. ஜகந்நாதன் - கி.வா.ஜ.வின் சிலேடைகள் மற்றும் விடையவன் விடைகள்.

Posted: 29 Jun 2016 10:44 AM PDT

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 128 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் 83ம் பக்கம் வரை உரைநடை சிலேடைகளும், பின் செய்யுள் சிலேடைகளும் கொடுக்கப்ப்ட்டுள்ளன. http://s000.tinyupload.com/index.php?file_id=03718670073342975894 விடையவன் விடைகள் கலைமகள் இதழில் கி. வா. ஜகந்நாதன் அவர்கள் வாசகர்களின் கேள்விகளுக்கு விடையவன் என்ற பெயரில் எழுதிய விடைகள். இலக்கண இலக்கியம்  என்ற  தலைப்பில் 406  விடைகளும், சமயம் என்ற  தலைப்பில்  125 விடைகளும், பல்வகை என்ற  தலைப்பில் 35  விடைகளும் உள்ளன. சொற்பொருள் அகராதியும் ...

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Posted: 29 Jun 2016 10:23 AM PDT

தேவையான பொருட்கள் சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட் கோஸ்…………………………………..2 கப் வெங்காயம் நறுக்கியது……………2 கப் பூண்டுபல்………………………………..10 பல் உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்………………………10 கொத்தமல்லி தழை…………………………..1/2 கப் அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன் கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணை………………………………………75 கிராம் செய்முறை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும் நூடுல்ஸை ...

அண்ணாமலை பல்கலையில் நிதி நெருக்கடி எதிரொலி...

Posted: 29 Jun 2016 09:44 AM PDT

தீபத்தின் ஒளியில்.: இரா. சுந்தரேசன்

Posted: 29 Jun 2016 09:20 AM PDT

தீபத்தின் ஒளியில் திருக்குறளும் படிக்கலாம் தீபத்தின் ஒளியில் தீயதும் செய்யலாம் தீபத்தின் ஒளியில் கூரையையும் எரிக்கலாம் தீபத்தின் ஒளியில் வீட்டையும் ஒளிர்க்கலாம்.. - நல்லதும் தீயதும் தீபத்தினிடம் இல்லை ஞானமும் அஞ்ஞானமும் அதனிடம் இல்லை அதைக் கையாளும் திறமை மனிதனிடம் உள்ளது அந்த ஞானத்தை மனிதனிடமே விட்டுவிட்டது - பலநாள் இருண்டுகிடக்கும் ஒரு குகையில் இருட்டை விரட்ட பல தீபங்கள் தேவையில்லை ஒரு தீபம் மட்டுமே போதும், குகை தீபத்தின் ஒளியில் நனைந்து தன்னைப் பார்க்க.. - இருளில் பேயைப் பார்த்து ...

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Posted: 29 Jun 2016 08:29 AM PDT

-- திருச்சி: எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது ...

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’

Posted: 29 Jun 2016 08:01 AM PDT

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்' என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது: விஜயகாந்த் மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து 14 மாவட்ட செயலாளர்கள் பெயரில் வெளியான கடிதம் தொடர்பாக அந்த மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் விசாரணை நடத்தினார். இந்த ...

அன்னை தெரசா

Posted: 29 Jun 2016 07:55 AM PDT

-- நேற்றைய இந்தியர்களைக் கேட்டால் சொல்வார்கள், அமெரிக்க ஜனாதிபதிகளில் அழியாத புகழைப் பெற்ற ஜான் எஃப் கென்னடி பற்றி. நேருவும் அவரும் அன்பின் அரியணையை ஆண்ட சமகாலத்தவர்கள். போர் விமானங்களைப் புறக்கணித்து, அமைதியின் ஆகாயத்தில் சமாதானப் புறாக்களைப் பறக்க விட்டனர். அது அறுபதுகளின் அர்த்த சாஸ்திரம்! - காந்தி, நேரு ஃபோட்டோக்களுக்குப் பிறகு கென்னடியின் புகைப்படங்கள் இந்தியாவின் குக்கிராமங்களின் தேநீர்க் கடைகளிலும் வீடுகளிலும்கூட சகஜமாகக் காணப்பட்டது. அந்த அளவுக்கு அவர் அரை இந்தியர். - அத்தகைய ...

திமுகவில் இணைந்தது மக்கள் தேமுதிக ஜூலை 17-இல் இணைப்பு விழா

Posted: 29 Jun 2016 07:48 AM PDT

தேமுதிகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வந்த மக்கள் தேமுதிக புதன்கிழமை திமுகவில் இணைந்தது. சேலத்தில் மிகப்பெரிய அளவில் ஜூலை 17-ஆம் தேதி இணைப்பு விழா நடைபெறும் என்று மக்கள் தேமுதிக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறினார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வி.சி.சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை காலை 10.50 மணிக்கு வந்தனர். கருணாநிதியைச் சந்தித்து மக்கள் தேமுதிகவை இணைப்பது தொடர்பான கடிதத்தைக் கொடுத்தனர். ...

எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Posted: 29 Jun 2016 06:14 AM PDT

- படி படி என்றோரை பல படி ஏற்றியோரை திறம்படச் செய்தோரை தப்படி தடுத்தோரை எப்படி மறப்பேன்? – படகு மிதந்த தண்ணீரை மறந்து படகினுள் புகுந்த தண்ணீரில் மூழ்கும் பழய நினைவுகளை எப்படி மீட்பேன்? – தண்ணீர் நிறைந்த படகு மூழ்கிப்போவதுபோல கண்ணீர் நிறைந்த நினைவுகள் மறைவதில்லையே? எப்படி மறப்பது? – தொடர் வெற்றிகளின் மேடைகளை – ஒரு தோல்வியின் வடு பள்ளமாக்கிவிடுகிறதே? எப்படி மறப்பது? – பதவிகள், பரிசுகள் தந்த மகிழ்ச்சிகள் பதவி முடிவில் பளிச்சிடும் ஏக்கங்களாய் எப்படி மறப்பேன்? – பெற்றோரின் ...

எப்படி மறப்பேன்: கவிஞர் இளவல் ஹரிஹரன்

Posted: 29 Jun 2016 06:12 AM PDT

என்றுமுள தென்தமிழை எப்படி மறப்பேன்…. எனையீன்ற பெற்றோரை எப்படி மறப்பேன்… எந்தையர்தம் தாய்நாட்டை எப்படி மறப்பேன்…. ஏற்றமிகு குருவினையும் எப்படி மறப்பேன்…. என்விரல் எழுதிய அட்சரத்தை எப்படி மறப்பேன்…. என்கால்பட்ட தொடக்கப் பள்ளியை எப்படி மறப்பேன்… என் பதின் பருவ விளையாட்டை எப்படி மறப்பேன்…. என்கல்லூரி நாட்களினை எப்படி மறப்பேன்…… எப்படி மறப்பேன் என்னுயிர்க் காதலினை….. எப்படி மறப்பேன் என்முதல் முத்தத்தை….. எப்படி மறப்பேன் என்முதல் கவிதையினை…. எப்படி மறப்பேன் என் காதல் கடிதத்தை….. எப்படி ...

கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted: 29 Jun 2016 01:02 AM PDT

- ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கபாலி. ரசிகர்களின் உச்சபட்ட எதிர்பார்ப்புடன் வெளியாக தயாராகிவரும் கபாலி படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. கபாலி படம் தமிழ் பதிப்பிற்கான சென்சாருக்கு வரும் ஜூலை 1ம் தேதி படம் அனுப்பப்படவிருக்கிறது. தொடர்ந்து ஜூலை 15ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. கூடுதலாக, இப்படத்தில் இளம் வயது ரஜினி தான் அதிக காட்சிகள் படத்தில் வருவார் என்றும் கூறப்படுகிறது. தவிர, ஜூலை 14ம் தேதியே பாரிஸின் மிகப்பெரிய திரையரங்கான "லீ ...

துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி

Posted: 29 Jun 2016 12:41 AM PDT

- துருக்கியில் இஸ்தான்புல் விமானநிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு 36 பேர் பலியாகியுள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். - இஸ்தான்புல் நகரின் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்துக்கு காரில் வந்த தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். - பின்னர் விமானநிலையத்தில் 3 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 36 பேர் பலியாகினர். - தாக்குதலையடுத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™