Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கயத்தாறு காவல் நிலையம் முற்றுகை

Posted: 29 Jun 2016 01:00 PM PDT

கயத்தாறையடுத்த ஆத்திகுளம் பகுதி மக்கள் கயத்தாறு காவல் நிலையத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடியில் ரயில் மறியல் முயற்சி: வழக்குரைஞர்கள் 21 பேர் கைது

Posted: 29 Jun 2016 12:59 PM PDT

தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர்கள் 21 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:59 PM PDT

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத் தேர்வில் மீன்வளக் கல்லூரி மாணவி சிறப்பிடம்

Posted: 29 Jun 2016 12:59 PM PDT

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் தகுதிக்கான தேர்வில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவி சிறப்பிடத்தைப் பிடித்தார்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 29 Jun 2016 12:58 PM PDT

தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த இளைஞர் சாவு

Posted: 29 Jun 2016 12:49 PM PDT

குரும்பூரில் அரசுப் பேருந்து மோதி காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

தூத்துக்குடி கடலில் நாட்டுப்படகுகள் மோதி விபத்து: 2 மீனவர்கள் காயம்

Posted: 29 Jun 2016 12:49 PM PDT

தூத்துக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடுக்கடலில் நாட்டுப்படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் தொடர் மின்தடை அறிவிப்பு

Posted: 29 Jun 2016 12:48 PM PDT

தூத்துக்குடி பிரையன்ட்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 30) முதல் தொடர் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அரசுப் பேருந்து முகவர் மீது தாக்குதல்

Posted: 29 Jun 2016 12:47 PM PDT

கோவில்பட்டி நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் அரசுப் பேருந்து முகவர் தாக்கப்பட்டதால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தூத்துக்குடி கடல் பகுதியில் கூட்டு ரோந்து

Posted: 29 Jun 2016 12:46 PM PDT

தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோரக் காவல் படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் இணைந்து புதன்கிழமை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பெண்ணை மிரட்டி 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 29 Jun 2016 12:46 PM PDT

சாத்தான்குளம் அருகே கடையில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரையில் பீடா கடையில் குழாய் வெடிகுண்டு கண்டெடுப்பு

Posted: 29 Jun 2016 12:45 PM PDT

மதுரையில் பீடா கடையில் வைக்கப்பட்டிருந்த குழாய் வெடிகுண்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கண்டிபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:45 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுமக்களின் பாதுகாப்பில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்

Posted: 29 Jun 2016 12:44 PM PDT

உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகாவது, பொதுமக்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை

Posted: 29 Jun 2016 12:42 PM PDT

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்வதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல் துறையின் நிலையை மாற்றிட நடவடிக்கை தேவை:இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 29 Jun 2016 12:41 PM PDT

காவல் துறையின் கவலை தரத்தக்க செயல்பாடுகளை மாற்றிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் ஜூலை 2-இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:40 PM PDT

சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 2-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு உருளை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 29 Jun 2016 12:39 PM PDT

ஏழைப் பெண்களுக்கு எரிவாயு உருளைகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

நிதி நிர்வாகத்தை அரசு மேம்படுத்த வேண்டும்

Posted: 29 Jun 2016 12:39 PM PDT

நிதி நிர்வாகத்தை மேம்படுத்தாவிட்டால், கடன் சுமையில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஒரு கொலை; ஒரு தற்கொலை!

Posted: 29 Jun 2016 12:38 PM PDT

அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் தமிழகத்தின் ஆன்மாவையே உலுக்கிப் போட்டிருக்கிறது. ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை. அந்த இரண்டு பெண்களின் மரணங்களுமே பல செய்திகளை உணர்த்துகின்றன. வெறும் உணர்வு ரீதியில் இந்த மரணங்கள் அணுகப்படாமல் ஆழமான சிந்தனைக்கும் தீர்வுக்கும் உள்படுத்தப்பட வேண்டியவை.

தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் தேவை!

Posted: 29 Jun 2016 12:37 PM PDT

இந்தியத் தேர்தல் ஆணையம், காலத்தின் கட்டாயம் கருதி வாக்குச்சீட்டுகளில் மக்கள் வாக்களிக்கும் நடைமுறையிலிருந்து முன்னேறி, நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் மக்கள் வாக்களிக்கும் நடைமுறையைப் புகுத்தியது,

மஞ்சப் பை அவமானமல்ல, அவசியம்!

Posted: 29 Jun 2016 12:36 PM PDT

நம்மில் பெரும்பாலானோர் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது பைகளை கொண்டுசெல்லாமல் வெறும் கையுடனேயே செல்கிறோம். அங்கு கடைக்காரர் பொருள்களை நெகிழி (பிளாஸ்டிக்) பையில் போட்டுத்தர அதனைப் பெற்றுத் திரும்புகிறோம்.

பாஜக பிரமுகர் மீது தாக்குதல்: குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தல்

Posted: 29 Jun 2016 12:36 PM PDT

எட்டயபுரத்தில் பாஜக பிரமுகரை தாக்கியதாக, அதிமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் புதன்கிழமை கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.

3 வட்டங்களில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்

Posted: 29 Jun 2016 12:35 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.

பத்மநாபபுரம் நகராட்சியின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா: நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 29 Jun 2016 12:35 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சியின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

Posted: 29 Jun 2016 12:34 PM PDT

வெள்ளிசந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லுரியில் வங்கிகள் நடத்திய வளாக தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 17 மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

முந்திரித் தொழிலாளர்களை பாதுகாக்க தனி ஆணையம்: சிஐடியூ மாநிலக் குழு தீர்மானம்

Posted: 29 Jun 2016 12:34 PM PDT

தமிழகத்தில் உள்ள முந்திரித் தொழிலாளர்களைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென சிஐடியூ மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.

குமரியில் மீண்டும் மழை தீவிரம் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியது

Posted: 29 Jun 2016 12:33 PM PDT

குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மழை மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து, பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40 அடியைக் கடந்தது.

குமரி கடலோரப் பகுதியில் "ஆபரேஷன் சட்ராக்' ஒத்திகை

Posted: 29 Jun 2016 12:33 PM PDT

குமரி மாவட்டம் நீரோடி முதல் நெல்லை மாவட்டம் பெரியதாழை வரை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பாதுகாப்பு போலீஸார் புதன்கிழமை "ஆபரேஷன் சட்ராக்' மேற்கொண்டனர்.

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 192 மாணவ - மாணவியருக்கு வாய்ப்பு

Posted: 29 Jun 2016 12:32 PM PDT

நாகர்கோவிலில் நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்ப்புக்கான தரவரிசைப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் புதன்கிழமை வெளியிட்டார். இதில், 192 மாணவர், மாணவிகள் இடம்பெற்றனர்.

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 29 Jun 2016 12:32 PM PDT

களியக்காவிளை அருகே சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

வைப்பு நிதி வழங்கக் கோரி குலசேகரம் முந்திரி ஆலை முற்றுகை

Posted: 29 Jun 2016 12:31 PM PDT

வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குலசேகரம் அருகே தனியார் முந்திரி ஆலையில் தொழிலாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தரங்கோடு-சுவாமியார்மடம் சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:31 PM PDT

சித்தரங்கோடு- சுவாமியார்மடம் சாலையை சீரமைக்கக் கோரி ஜனநாய கிறிஸ்தவப் பேரவை மற்றும் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் வேர்கிளம்பியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயத்தில் தங்கக்கிரீடம் திருட்டு

Posted: 29 Jun 2016 12:31 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கிறிஸ்தவ தேவாலாயத்தில் தங்கக் கிரீடம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

நாகர்கோவிலில் ரயில் மறியல் முயற்சி: வழக்குரைஞர்கள் 390 பேர் கைது

Posted: 29 Jun 2016 12:30 PM PDT

வழக்குரைஞர்கள் சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர்கள் 390 பேர் கைது செய்யப்பட்டனர்.

போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்புப் பணி: மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 29 Jun 2016 12:30 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ரூ.1.18 கோடி மதிப்பில் காதப்பாறை ஊராட்சியில் நலப்பணிகளுக்கு பூமிபூஜை

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

கரூர் ஒன்றியம், காதப்பாறை ஊராட்சியில் ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கான பூமிபூஜையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.

சட்ட விதிகள் திருத்தம் குறித்த கருத்துகளை வழக்குரைஞர்கள் நீதிபதிகள் குழுவுக்கு அனுப்பலாம்

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

வழக்குரைஞர் சட்ட விதிகள் திருத்தம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு கருத்துகளை வழக்குரைஞர்கள் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.ஹேமலதா தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர்கள் 124 பேர் கைது

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

கரூரில் தடையை மீறி ரயில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 124 பேரைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மண்மங்கலத்தில் மணல் லாரிகள் சிறைபிடிப்பு

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

மண்மங்கலத்தில் மணல் லாரிகளைத் தொழிலாளர்கள் புதன்கிழமை சிறைபிடித்தனர்.

புகழூர் குறுவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

கரூர் மாவட்டம், புகழூர் குறுவட்டத்துக்குள்பட்ட  வேட்டமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு,கோம்புபாளையம்,திருகாடுதுறை, என்.புகழூர் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் மற்றும் புன்செய் புகழூர் வடக்கு மற்றும் தெற்கு,புன்செய் மற்றும் நன்செய் தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை புகழூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கரூர் அருகே பிளஸ்-1 மாணவியிடம் ஈவ் டீசிங்: கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

கரூரில் பிளஸ்-1 மாணவியை ஈவ் டீசிங் செய்து தாக்கியக் கல்லூரி மாணவர்கள் இருவரைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குப்பம் ஊராட்சியில் கொசு ஒழிப்புப் பணி

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

குப்பம் ஊராட்சியில் தீவிர நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது: எஸ்ஆர்எம்யூ

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ரயில் மறியலுக்கு வந்து கைது ஆகாமல் சென்ற வழக்குரைஞர்கள்

Posted: 29 Jun 2016 12:29 PM PDT

வழக்குரைஞர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரியலூரில் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட வந்த வழக்குரைஞர்களை போலீஸார் தடுத்ததால் அவர்கள் கைதாகாமல் சென்றனர்.

வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் வசித்து வரும் 120 நரிக்குறவர்களுக்கு அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தை விவசாயம் செய்ய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலத்தைச் சீரமைத்த நரிக்குறவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்தனர். இந்நிலையில், அப்பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. 

ஜூலை 26-ல் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

கறவை மாடுகளுடன் ஜூலை 26 ஆம் தேதி மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பேராசிரியர்களுக்கு சுய மேம்பாட்டு கருத்தரங்கம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் அகமதிப்பீட்டுத் தரவரிசை சீரமைப்பு சார்பில், ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்களுக்கான சுய மேம்பாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவாழ்வுத் திட்ட செயல்பாட்டுக்கு ரூ.35.35 கோடி

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் புதுவாழ்வுத் திட்டச் செயல்பாட்டுக்காக ரூ. 35.35 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

தேளூர், த.சோழன்குறிச்சியில் நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. ஜூன் 1 ஆம் தேதி அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

மொபெட்டில் சென்ற பெண் லாரி மோதி சாவு: அரியலூர் அருகே சாலை  மறியல்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

அரியலூர் அருகே புதன்கிழமை மெபெட்டில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரி மீது கல்வீசித் தாக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆதார் புகைப்பட முகாம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக ஜூலை 1 முதல் 31 ஆம் தேதி வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் ஆட்சியரகம் மற்றும் ஆண்டிமடம்,தா.பழூர்,ஜயங்கொண்டம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், செந்துறை வட்டாட்சியர் அலுவலத்தில் நடைபெறவிருக்கிறது.  இந்த முகாம் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாள்களிலும் காலை 10.00 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறலாம்.

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

சிட்டி அரிமா சங்கம் நலத் திட்ட உதவிகள்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வாண்டான்விடுதியில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ. 44.17 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 44.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலபச்சக்குடியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை பயிற்சி

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

விராலிமலை அருகேயுள்ள மேலபச்சக்குடி தொகுப்பு கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்ட விவசாயிகள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. 

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

புதுக்கோட்டை அரசு ராணியர் பள்ளியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

"விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும்'

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்களை விவசாயிகள் குழுவாக இணைந்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம்.

புதுகையில் ரயில் மறியல் முயற்சி: வழக்குரைஞர்கள் 60 பேர் கைது

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

புதுக்கோட்டையில் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தினர் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுகை வெங்கடேஸ்வரா பள்ளியில் புத்தகமில்லா பள்ளி நாள்

Posted: 29 Jun 2016 12:28 PM PDT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் புத்தகப் பைகளை எடுத்துவராமல், வெறும் கைகளுடன் பள்ளிக்கு வந்து புத்தகமில்லா நாளை உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் புதன்கிழமை கொண்டாடினர்.

டயர் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்த வேன்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

புதுக்கோட்டை அருகே தனியார் ரொட்டி நிறுவன வேன் டயர் வெடித்ததால், சாலையில் கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

தரப் பரிசோதனை பெட்டி மூலம் "பொதுமக்கள் குடிநீரின் தரமறிந்து பயன்படுத்த வேண்டும்'

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

தரப் பரிசோதனை பெட்டி மூலம் பொதுமக்கள் குடிநீரின் தரமறிந்து பயன்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

கந்தர்வகோட்டையில் ஜூன் 30 மின்தடை

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

கந்தர்வகோட்டை அருகேயுள்ள புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 30) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் திறப்பு

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையை என்னும் பணி புதன்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் ஏஐடியுசி சார்பில், போக்குவரத்து தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை பணநாயகம் தீர்மானிக்கும் நிலை மாற தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் தேவை: தஞ்சையில் வைகோ பேட்டி

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

தேர்தலை பணநாயகம் தீர்மானிக்கும் நிலைமை மாற தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் தேவை என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

பேராவூரணி அருகே பெண் எரித்து கொலை?

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

பேராவூரணி அருகே சொத்தை அபகரிப்பதற்காக பெண் எரித்து கொல்லப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கீழ் பாலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றக் கோரி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் கீழ் பாலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் ஒன்றிய அலுவலக ஜீப்பை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஒரத்தநாட்டில் சாலை மறியல்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க திரண்ட மக்கள்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் மையத்தில் புதன்கிழமை கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சிலை கடத்தல் வழக்கு: சுபாஷ் கபூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூரை போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 90 வழக்குரைஞர்கள் கைது

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

வழக்குரைஞர்களைப் பாதிக்கும் புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 90 வழக்குரைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக் காலமாக அறிவிக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் புதன்கிழமை சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாபநாசம் அருகே நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 29 Jun 2016 12:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் ஜூலை 2-ல் குடிநீர் விநியோகம் இருக்காது

Posted: 29 Jun 2016 12:23 PM PDT

கும்பகோணத்தில் வரும் 2-ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

சிறையில் என்னைக் கொல்ல முயற்சி: நீதிபதியிடம் ரௌடி முறையீடு

Posted: 29 Jun 2016 12:23 PM PDT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி, பெரிய கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜா என்கிற கட்டை ராஜா. இவர் மீது பல்வேறு கொலை வழக்கு இருப்பதால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை:மீனவ சமுதாயப் பிரதிநிதிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

Posted: 29 Jun 2016 12:20 PM PDT

இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தன்னைச் சந்தித்த தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 15 மீனவ சமுதாயப் பிரதிநிதிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.

ஜெகன் மோகனின் ரூ.749 கோடி சொத்துகள் முடக்கம்

Posted: 29 Jun 2016 12:20 PM PDT

சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது மனைவி ஒய்.எஸ்.பாரதி ரெட்டி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.749.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் புதன்கிழமை முடக்கினர்.

கடைகள், திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 29 Jun 2016 12:19 PM PDT

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம்:அமித்ஷா தாக்கு

Posted: 29 Jun 2016 12:18 PM PDT

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை நீடிப்பதற்கு மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருதான் காரணம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

ரயில் மறியல்: 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கைது

Posted: 29 Jun 2016 12:18 PM PDT

தமிழகம் முழுவதும் பல இடங்களில் வழக்குரைஞர்கள் ரயில் மறியல்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாநிலங்களவை:57 புதிய எம்.பி.க்களில் 55 பேர் கோடீஸ்வரர்கள்

Posted: 29 Jun 2016 12:13 PM PDT

மாநிலங்களவைக்கு அண்மையில் தேர்வான 57 எம்.பி.க்களில், 55 பேர் கோடீஸ்வரர்கள் என்பதும், 13 எம்.பி.க்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

பி.இ.: 6,600 பேர் சேர்க்கை

Posted: 29 Jun 2016 12:12 PM PDT

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 6,606 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.

குரூப் 2ஏ: ஜூலை 4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 29 Jun 2016 12:12 PM PDT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஜூலை 4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை:உச்சநீதிமன்றம் அதிருப்தி

Posted: 29 Jun 2016 12:10 PM PDT

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்த பரிந்துரைகளை மத்திய அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்படாதது குறித்து உச்ச

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு:கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்

Posted: 29 Jun 2016 12:10 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கர்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுக்க நேர்ந்தது.

வெள்ளத்தைச் சமாளிப்பதற்கு தயார் நிலை: அதிகாரிகளுக்கு ஒடிஸா முதல்வர் அழைப்பு

Posted: 29 Jun 2016 12:09 PM PDT

ஒடிஸாவில் இந்த ஆண்டு அளவுக்கு மீறிய பருவமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்திருக்கும் நிலையில் வெள்ளச் சூழலை சமாளிப்பதற்கு தயாராக இருக்குமாறு அரசு அதிகாரிகளை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் சர்வதேச ஆயுர்வேத மாநாடு

Posted: 29 Jun 2016 12:09 PM PDT

ஆயுர்வேத மருத்துவத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக, முதலாவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டில் பிரபல இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீவிரமடைகிறது தென்மேற்கு பருவ மழை

Posted: 29 Jun 2016 12:08 PM PDT

நாட்டின் வட மாநிலங்களில் இன்னமும் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்து வருவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானுடனான வர்த்தகத் தடை நீக்கம்

Posted: 29 Jun 2016 12:08 PM PDT

ஈரானில் இருந்து சில பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு புதன்கிழமை விலக்கிக் கொண்டது.

"கொலீஜியம்' விவகாரத்தில் கருத்து வேறுபாடு:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

Posted: 29 Jun 2016 12:08 PM PDT

"கொலீஜியம்' வரைவு அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதிபதிகள் குழுவுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொருட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரை மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், சதானந்த கெளடா ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

சித்தராமையா குறித்த புத்தகத்தை வாங்க அரசு உத்தரவு: கர்நாடகத்தில் சர்ச்சை

Posted: 29 Jun 2016 12:07 PM PDT

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை நூலகப் பயன்பாட்டுக்கு வாங்குமாறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாநில கல்வித்துறை உத்தரவிட்டது தெரியவந்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வாராக் கடன் நிலவரம் கட்டுக்குள் உள்ளது

Posted: 29 Jun 2016 12:06 PM PDT

நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் நிலவரம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 29 Jun 2016 12:06 PM PDT

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வாட்ஸ் அப் உள்ளிட்ட பயன்பாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

காஷ்மீர் விவகாரத்தால் பேச்சுவார்த்தையை இந்தியா தவிர்க்கிறது:பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted: 29 Jun 2016 12:05 PM PDT

"காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதை தவிர்க்கவே, இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா தட்டிக்கழிக்கிறது' என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

தேசியக் கொடியை அவமதித்ததாக மோடி மீது நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 29 Jun 2016 12:05 PM PDT

சண்டீகரில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சார்க் நாடுகளில் நுழைவுத் தேர்வு: ஐ.ஐ.டி. முடிவு

Posted: 29 Jun 2016 12:05 PM PDT

பாகிஸ்தான் அல்லாத ஏனைய சார்க் நாடுகள், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் முதன்முறையாக நுழைவுத் தேர்வினை நடத்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) முடிவு செய்துள்ளது.

செல்லிடப்பேசி கதிர்வீச்சு ஆபத்து:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 29 Jun 2016 12:04 PM PDT

செல்லிடப்பேசிகள் மற்றும் அதன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம்,வெள்ளி டாலர்கள் மீண்டும் விற்பனை

Posted: 29 Jun 2016 12:04 PM PDT

ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி, செப்பு டாலர்களை மீண்டும் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™