Tamil News | Online Tamil News |
- கொடூர குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படையினரை...சுட்டுத் தள்ளுங்க! :போலீசாருக்கு தமிழக உயரதிகாரிகள் உத்தரவு
- நகர்ப்புற மேம்பாட்டுக்காக மாவட்ட குழுக்கள்புதுமை!: மக்கள் பங்களிப்பை அதிகரிக்க அரசு திட்டம்
- ஜெ., வீசிய குண்டு: தி.மு.க.,வில் சர்ச்சை
- 'கோபாலபுரம் இல்லத்துக்கு வராதே''மாஜி' மந்திரிக்கு கருணாநிதி தடை
- உளுந்தூர்பேட்டையில் தோல்வி ஏன்?:நாளை விஜயகாந்த் விசாரணை
- இப்தார் விருந்து ரத்துக்கு பின்னணி என்ன? தேசிய அரசியலில் தனிமைப்பட்டது காங்.,
- நிதிக்கொள்கை குழு அமைக்க மத்திய அரசு...தீவிரம்! ஆறு உறுப்பினர்களை நியமிக்க திட்டம்
- நாலாபுறமும் எதிர்ப்பு; ராகுலும் மூக்கறுப்பு 'பதவியே வேணாம் சாமீ...' என இளங்கோவன் 'எஸ்கேப்!'
- தெற்காசிய கூட்டமைப்பு இந்திய ரூபாய்:பொது கரன்சி?
- சமாஜ்வாடி கட்சிக்கு குற்றப்பின்னனி உடையோர் தேவையில்லை: அகிலேஷ்
| Posted: 25 Jun 2016 10:34 AM PDT தமிழகத்தில், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கொடூர குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத் தள்ளும்படி, போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் குற்றங்களை குறைக்க, உள்துறை செயலர், டி.ஜி.பி., மாநகர கமிஷனர்கள் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, அதிரடி உத்தரவுகளை பிறப் பித்து வருகிறார்.எனினும், குற்றங்களை கட்டுப்படுத்த முடியா மல் போலீசார் ... |
| நகர்ப்புற மேம்பாட்டுக்காக மாவட்ட குழுக்கள்புதுமை!: மக்கள் பங்களிப்பை அதிகரிக்க அரசு திட்டம் Posted: 25 Jun 2016 10:49 AM PDT நகர்ப்புற மேம்பாட்டுக்காக, மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த, மூத்த எம்.பி., தலைமை வகிப்பார்.நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில், அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, டி.எல்.ஏ.எம்.சி., எனப்படும் மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் கண் காணிப்பு குழுக்கள் அமைக்கும் திட்டத்துக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.மாவட்ட அளவிலான...இக்குழுவில் இடம் பெறும் ... |
| ஜெ., வீசிய குண்டு: தி.மு.க.,வில் சர்ச்சை Posted: 25 Jun 2016 10:53 AM PDT 'தி.மு.க., தலைவர் யார்? என, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்விக்கு, சபையிலேயே பதிலடி கொடுக்காதது, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மீது, கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், பெரும் விவாதம் நடந்தது. 'கச்சத்தீவை, இலங்கையிடம் தாரை வார்க்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி தான் காரணம்' என, அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் பேச ஆரம்பித்ததில் இருந்து, தி.மு.க.,வினர், சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபையில் கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது.குற்றச்சாட்டு: இருந்தபோதும், அ.தி.மு.க., ... |
| 'கோபாலபுரம் இல்லத்துக்கு வராதே''மாஜி' மந்திரிக்கு கருணாநிதி தடை Posted: 25 Jun 2016 10:56 AM PDT முன்னாள் அமைச்சர் ஒருவரை, தன் கோபாலபுரம் வீட்டிற்கு வர வேண்டாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தடை விதித்திருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தால், கட்டாயம் தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும் என்றும், முதல்வர் வேட்பாளராக, 92 வயது கருணாநிதியை அறி வித்ததை, இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளா ததால், தோல்வி ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, கட்சியினர் மத்தியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்படு வதற்கு, கருணாநிதி விரும்பினார். ஆனால், அந்த பதவியை ஸ்டாலின் ... |
| உளுந்தூர்பேட்டையில் தோல்வி ஏன்?:நாளை விஜயகாந்த் விசாரணை Posted: 25 Jun 2016 10:59 AM PDT உளுந்துார்பேட்டை தொகுதியில், தன் படுதோல்வி குறித்து, நாளை விஜயகாந்த் விசாரணை நடத்த உள்ளார். சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கட்சியை பலப்படுத் தும் வகையில், பல கட்ட கூட்டங் களை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நாளை தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில், உளுந்துார் பேட்டை தொகுதியில், தன் படுதோல்வி குறித்து, கட்சியினரிடம் விரிவான விசாரணை நடத்துகிறார் விஜயகாந்த்.இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்களில் ... |
| இப்தார் விருந்து ரத்துக்கு பின்னணி என்ன? தேசிய அரசியலில் தனிமைப்பட்டது காங்., Posted: 25 Jun 2016 11:07 AM PDT ஜி.எஸ்.டி., மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் தனித்து விடப்பட்டது உட்பட, வேறு சில முக்கிய அரசியல் காரணங்களுக்காகவே, இந்த ஆண்டு இப்தார் விருந்தை, அக்கட்சி தலைவர் சோனியா, ரத்து செய்துள்ளார் என்பது, தெரியவந்துள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளும், இப்தார் விருந்து அளிப்பது வழக்கம். காங்கிரஸ் சார்பில், டில்லி அசோகா ஓட்டலில், அக்கட்சி தலைவர் சோனியா அளிக்கும் விருந்தில், தேசிய அளவில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர். இப்தார் விருந்து என்ற பெயரில் நடந்தாலும், முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகவே, ... |
| நிதிக்கொள்கை குழு அமைக்க மத்திய அரசு...தீவிரம்! ஆறு உறுப்பினர்களை நியமிக்க திட்டம் Posted: 25 Jun 2016 11:16 AM PDT புதுடில்லி:'நிதிக் கொள்கை குழுவை அமைக்கும் பணியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த குழு அமைக்கப்பட்டு, செயல்பட தொடங்கும்' என, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் ஷக்திகாந்த தாஸ் தெரிவித்தார். சேமிப்பு, கடனுக்கான வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுதான் முடிவு செய்யும், இந்த குழுவில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இதில், மூன்று உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கி பிரதிநிதிகளாகவும், மூன்று பேர், மத்திய நிதியமைச்சக பிரதிநிதிகளாகவும் இருப்பர். ஒப்புதல்:இது தொடர்பான ஒப்பந்தம், மத்திய ... |
| நாலாபுறமும் எதிர்ப்பு; ராகுலும் மூக்கறுப்பு 'பதவியே வேணாம் சாமீ...' என இளங்கோவன் 'எஸ்கேப்!' Posted: 25 Jun 2016 12:05 PM PDT தமிழக காங்கிரசில் தன்னிச்சையாக செயல்பட்ட இளங்கோவனுக்கு, கட்சியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும், நாலாபுறமும் எதிர்ப்பு வலுத்ததால், ஆதரவு தேடி டில்லியில் முகாமிட்டார். காப்பாற்றுவார் என நம்பிய ராகுல், கை விரித்ததுடன் மட்டுமின்றி, நோகடிக்கும் கேள்விகளை கேட்டு, மூக்கறுப்பு செய்தார். அதனால், இனியும் தமிழக காங்., தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அறிந்த இளங்கோவன், டில்லியிலேயே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்து விட்டு, திரும்பி பார்க்காமல் சென்னை ஓடி வந்துவிட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ௪௧ ... |
| தெற்காசிய கூட்டமைப்பு இந்திய ரூபாய்:பொது கரன்சி? Posted: 25 Jun 2016 01:09 PM PDT ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் விலக வேண்டும்' என்ற காரண-ங்களுக்கு பின், இந்தியாவிற்கும் ஒரு செய்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, தெற்கு ஆசிய நாடுகளின் குழுமத்தை, ஐரோப்பிய கூட்ட மைப்பை போலவே, ஒரு பொருளாதார மண்டலமாகவும் மாற்ற வேண்டும் என்ற கருத்து, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்டு உள்ளது.இதன் ஒரு பகுதியாக, தெற்காசிய பொது நாணயம் அல்லது 'கரன்சி' தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவியது; இன்ன மும் நிலவுகிறது. இந்திய ரூபாய், இந்த பொது கரன்சியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும், பிற ... |
| சமாஜ்வாடி கட்சிக்கு குற்றப்பின்னனி உடையோர் தேவையில்லை: அகிலேஷ் Posted: 25 Jun 2016 02:08 PM PDT லக்னோ: சமாஜ்வாடி கட்சிக்கு குற்றபின்னனிக் கொண்ட முக்தர் அன்சாரி போன்றோர் தேவையில்லை என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் கொள்ளைக்காரராக இருந்து அரசியல்வாதியாக ஆன அன்சாரியின் கட்சி சமீபத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங், அன்சாரியை வரவேற்றுள்ள நிலையில் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நான் முக்தர் அன்சாரியை வரவேற்கவில்லை. அவரது கட்சி எங்களுடன் இணையும் முடிவினை நான் எடுக்கவில்லை. அன்சாரி கட்சியில் இணைவதன் மூலம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 26,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |