Tamil News | Online Tamil News |
- விமான கொள்கைக்கான செயல்திட்டம் தயார்
- லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள் : பா.ஜ.,வினருக்கு அமித் ஷா உத்தரவு
- வடகொரியாவுக்கு உதவியா: இந்தியா மறுப்பு
- தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! :திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு
- நேர்மையாக பரிசீலிக்க சீனாவுக்கு மோடி வலியுறுத்தல் : என்.எஸ்.ஜி., உறுப்பினராக தீவிர முயற்சி
- கறுப்பை வெள்ளையாக்கும் திட்டத்தை விளம்பரப்படுத்த முடிவு
- வங்கிகள் இணைப்பு: மத்திய அரசு அதிரடி திட்டம்
- கருணாநிதிக்கு முதல்வர் ஜெ., சவால் : தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
- மரபை மாற்றி புதிய ஏற்பாடு: கருணாநிதி கண்டனம்
- தே.மு.தி.க., தொழிற்சங்க செயலர் கட்சியில் இருந்து திடீர் நீக்கம்
- இப்தார் விருந்தை ரத்து செய்தது காங்கிரஸ்
- 'செல்பி' ஆசையால் விபரீதம்: கங்கையில் விழுந்து 7 பேர் பலி
- நலிவுற்ற ஆலைகளை மீட்க அரசின் புதிய முயற்சி
- சோலார் விமானம் ஸ்பெயினில் வெற்றிகரமாக தரையிறங்கியது
| விமான கொள்கைக்கான செயல்திட்டம் தயார் Posted: 23 Jun 2016 08:29 AM PDT நாடு முழுவதையும் இணைக்கும் வகையிலான புதிய தேசிய விமானக் கொள்கை அறிவிக்கப் பட்ட ஒரு வாரத்துக்குள், அதை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம், இறுதி கட்டத்தில் உள்ளது. ' ஒரு மணி நேர விமானப் பயணத்துக்கு அதிகபட்சம், 2,500 ரூபாய் கட்டணம்; நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விமான சேவை' உள்ளிட்டவை அடங்கிய தேசிய விமானக் கொள்கை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதை செயல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் வகுத்து வருகின்றனர்; இது ... |
| லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள் : பா.ஜ.,வினருக்கு அமித் ஷா உத்தரவு Posted: 23 Jun 2016 08:29 AM PDT திருவனந்தபுரம் : கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, ''அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும்,'' என, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் வென்று, மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்தது. மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பொறுப் பேற்றார்.சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, 15 சதவீத ஓட்டுகள் கிடைத் தன. தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணி கட்சி யினருடன் பா.ஜ., தேசியத் ... |
| வடகொரியாவுக்கு உதவியா: இந்தியா மறுப்பு Posted: 23 Jun 2016 08:30 AM PDT புதுடில்லி : 'ஐ.நா.,வின் தடையை மீறி, வட கொரியாவுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை' என, இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆசியா மற்றும் பசிபிக் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையத்தில், வடகொரியாவைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாக, 'அல்ஜசீரா' என்ற, கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும், தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: டேராடூனில் உள்ள மையத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் ... |
| தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! :திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு Posted: 23 Jun 2016 10:46 AM PDT தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது. அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ... |
| நேர்மையாக பரிசீலிக்க சீனாவுக்கு மோடி வலியுறுத்தல் : என்.எஸ்.ஜி., உறுப்பினராக தீவிர முயற்சி Posted: 23 Jun 2016 11:04 AM PDT தாஷ்கண்ட் : ''என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் சேரும் இந்தியாவின் விண்ணப்பத்தை நேர்மையாகவும், சரியான நோக்கத்தையும் புரிந்து ஆதரிக்க வேண்டும்,'' என, சீனாவை, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது, என்.எஸ்.ஜி., இதில், 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்தியா, 2030க்குள், 63 ஆயிரம் மெகாவாட் மாசில்லா மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அணு மின் நிலையங்கள் அமைப்பதற்காக, அது தொடர்பான ஒப்பந்தங்கள், தொழில் நுட்பத்தை பகிர்ந்து ... |
| கறுப்பை வெள்ளையாக்கும் திட்டத்தை விளம்பரப்படுத்த முடிவு Posted: 23 Jun 2016 11:06 AM PDT புதுடில்லி : உள்நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளோர், தாமாக முன்வந்து அதை தெரிவிக்கும் திட்டம் குறித்து, நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வரு மான வரித் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்த, பல் வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக வெளிநாடு களில் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டில், கணக்கில் காட்டாமல் பதுக்கியுள்ள கறுப்புப் பணம், வாங்கி யுள்ள சொத்துக்கள் குறித்த தகவல்களை தாமாக ... |
| வங்கிகள் இணைப்பு: மத்திய அரசு அதிரடி திட்டம் Posted: 23 Jun 2016 11:11 AM PDT புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்கிகளை இணைத்து, 4 அல்லது 5 பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டம் குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது. ஒருமித்த கருத்து:இந்த இணைப்பு பணிகள், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் முடிவடையும். அதன் பின், பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைத்து, 4 அல்லது 5 பெரியவங்கிகளாக ... |
| கருணாநிதிக்கு முதல்வர் ஜெ., சவால் : தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு Posted: 23 Jun 2016 11:16 AM PDT சென்னை : கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் அளிக்க கோரி, முதல்வர் ஜெயலலிதா, ஆறு கேள்விகளை கேட்டார். முதல்வரின் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தராததை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: முதல்வர் ஜெயலலிதா: இம்மாதம், 21ம் தேதி, கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'கச்சத்தீவை தாரை வார்க்க, எந்த காலத்திலும் நான் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை' என, தெரிவித்துள்ளார். '2013 மே மாதம், 'டெசோ' அமைப்பு சார்பில், ... |
| மரபை மாற்றி புதிய ஏற்பாடு: கருணாநிதி கண்டனம் Posted: 23 Jun 2016 11:19 AM PDT சென்னை : 'சட்டசபையில், எனக்கு இரண்டாவது வரிசையில், சக்கர நாற்காலி போக முடியாத இடத்தில், இடவசதி செய்து இடம் ஒதுக்கி அறிவித்துள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், பெரும்பாலும் ஒவ்வொரு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலும், நான் பங்கேற்றுள்ளேன். முதல்வர் ஜெயலலிதா, எந்தவொரு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலும் பங்கேற்றதாகத் தெரியவில்லை. கவர்னர் உரைக்கு முதல்வர் பதில் கூறும் நாளில், கடைசியாகஎதிர்க்கட்சித் தலைவர் பேசிய பின், முதல்வர் பதிலளித்து பேசுவது வழக்கம், மரபு. எத்தனையோ ஆண்டுகளாக, இந்த ... |
| தே.மு.தி.க., தொழிற்சங்க செயலர் கட்சியில் இருந்து திடீர் நீக்கம் Posted: 23 Jun 2016 11:30 AM PDT சென்னை : கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதால், தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை செயலரை, கட்சியில் இருந்து நீக்குவதாக, விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பான விஜயகாந்த் அறிவிப்பு: தே.மு.தி.க., இணைப்பு அமைப்பான, தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் செயலர் சவுந்தரபாண்டியன். இவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்; கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார்; தே.மு.தி.க.,வின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். இதனால், அவர் வகித்து வந்த ... |
| இப்தார் விருந்தை ரத்து செய்தது காங்கிரஸ் Posted: 23 Jun 2016 12:26 PM PDT புதுடில்லி : ராகுல் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு, இப்தார் விருந்தை, காங்., ரத்து செய்துள்ளது. ஆண்டுதோறும், முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில், காங்., சார்பில், டில்லியில், இப்தார் விருந்து வழங்கப்படுவது வழக்கம். பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விருந்தில், காங்கிரசின் தோழமை கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பர். இந்நிலையில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல், வெளிநாடு சென்றுள்ளார். அவர், எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'ராகுல் இல்லாத ... |
| 'செல்பி' ஆசையால் விபரீதம்: கங்கையில் விழுந்து 7 பேர் பலி Posted: 23 Jun 2016 01:45 PM PDT கான்பூர் : 'செல்பி' எடுக்க முயற்சித்தபோது, கங்கை ஆற்றில் விழுந்து மாணவன் இறந்தான்; அவனை காப்பாற்ற முயற்சித்த நண்பர்கள் ஆறு பேரும், நீரில் மூழ்கி இறந்தனர். 'ஸ்மார்ட் போனில்' தன்னைத்தானே போட்டோ எடுக்கும், 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் வேகமாக அதிகரித்து வருகிறது; இது, பல நேரங்களில், அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இந்த மோகத்தால், இந்தியாவில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்த பலத்த மழையால், கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், கான்பூரில் நேற்று முன்தினம் பெய்த மழையில் ... |
| நலிவுற்ற ஆலைகளை மீட்க அரசின் புதிய முயற்சி Posted: 23 Jun 2016 02:33 PM PDT புதுடில்லி : இந்தியன் ஆயில், கோல் இந்தியா, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கூட்டு தொழிலாக புதிய நிறுவனம் ஒன்றை அமைக்கிறது. இந்த புதிய நிறுவனம் மூலமாக, நலிவுற்றிருக்கும் மூன்று உர ஆலைகளை மீட்கும் முயற்சி எடுக்கப்பட இருக்கிறது. புதிய நிறுவனத்துக்கு, 'ஹிந்துஸ்தான் உர்வாரக் அண்டு ரசாயன் லிமிடெட்' என பெயரிட்டிருக்கின்றனர். இதன் மூலமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிந்த்ரி, உத்தர பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூர், பீஹாரில் இருக்கும் பராயுனி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளை மீட்டெடுக்க உள்ளனர். இதற்காக, 60 ஆயிரம் கோடி ... |
| சோலார் விமானம் ஸ்பெயினில் வெற்றிகரமாக தரையிறங்கியது Posted: 23 Jun 2016 03:20 PM PDT சவில் : .சோலார் சக்தியில் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் - 2' விமானம் அமெரிக்காவிலிருந்து 3 நாள் பயணத்தில், அட்லாண்டிக் கடலை கடந்து ஸ்பெயின் வந்தடைந்தது. சூரிய சக்தியில் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் - 2' விமானம், கடந்த 2015 மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிது முதல், பல சுற்றுகளாக உலகை வலம் வரும் வருகிறது. பெட்ராண்ட் பிக்கார்டு எனும் சுவிஸ் விமானி அந்த விமானத்தைச் செலுத்துகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்திலிருந்து கடந்த 20ம் தேதி புறப்பட்ட விமானம், 71 மணிநேரம் 8 நிமிடம் பயணித்து, நேற்று ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 24,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |