Tamil News | Online Tamil News |
- யானை மரணம் குறித்து அறிக்கை: தமிழக அரசு உறுதி
- மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் முறையில்...மாற்றம்!: சட்டசபையில் புதிய சட்ட மசோதா தாக்கல்
- பொருளாதார ஆலோசகர் அரவிந்துக்கு பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன் சாமி குறி
- மாயாவதிக்கு எதிராக போர்க்கொடி; பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் விலகல்
- வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு மறுவாழ்வு : இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம்
- 'ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் தேவையில்லை'
- இன்ஜி., 'ரேங்க்' பட்டியலிலும் கேரள மாணவி முதலிடம்
- 5 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்வு : சட்டசபையில் ஆதாரத்துடன் ஸ்டாலின் குற்றச்சாட்டு
- விஜயகாந்த் திடீர் பெங்களூரு பயணம்
- வாசலை பூட்டிய வங்கிகள்மறுகடன் வாங்க முடியாமல் தவிக்கும் 240 கார்ப்பரேட் நிறுவனங்கள்
- காசுக்கு விலை போகும் எட்டாவது மாடி மின் வாரியத்தில் 'பேனர்' திடீர் பரபரப்பு
- எல்.ஐ.சி. தலைவர் எஸ்.கே. ராய் திடீர் ராஜினாமா
| யானை மரணம் குறித்து அறிக்கை: தமிழக அரசு உறுதி Posted: 22 Jun 2016 10:06 AM PDT சென்னை: 'கோவை, மதுக்கரையில் பிடிக்கப்பட்ட காட்டு யானை மரணமடைந்தது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வழக்கு தொடர்ந்த பிரேமா வீரராகவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அதிகளவில் மயக்க மருந்து கொடுத்ததால், யானை இறந்துள்ளது. யானையின் மரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என, 'முதல் பெஞ்ச்' முன் முறையிட்டார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ''இறந்த யானையை கால்நடை மருத்துவர்கள் ... |
| மாநகராட்சி மேயரை தேர்வு செய்யும் முறையில்...மாற்றம்!: சட்டசபையில் புதிய சட்ட மசோதா தாக்கல் Posted: 22 Jun 2016 10:41 AM PDT
சென்னை:மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும், தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் பழைய நடைமுறை, மீண்டும் அமலுக்கு வரவுள்ளது. அதற்கான சட்ட மசோதா, சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அக்டோபரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் கிடையாது; வார்டு கவுன்சிலர் தேர்தல் மட்டுமே நடைபெறும். இது தொடர்பாக, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த சட்ட மசோதா விவரம்: மாநகராட்சிகளுக்கான தேர்தல், ... |
| பொருளாதார ஆலோசகர் அரவிந்துக்கு பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன் சாமி குறி Posted: 22 Jun 2016 11:13 AM PDT புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனுக்கு குறி வைத்துள்ளார்; அவரை விமர்சித்து நேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் சாமி. ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டம்பரில் முடிகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார் சுப்பிரமணியன் சாமி. அதைத் தொடர்ந்து, 'ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் தொடர ... |
| மாயாவதிக்கு எதிராக போர்க்கொடி; பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் விலகல் Posted: 22 Jun 2016 11:14 AM PDT லக்னோ: உ.பி.,யில், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிகளை, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஏலம் விடுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்வாமி பிரசாத் மவுர்யா, நேற்று, அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரதான கட்சிகள் இடையே, இப்போதிருந்தே பலப்பரீட்சை துவங்கி விட்டன.இம்மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவரும், பகுஜன் சமாஜ் தலைவருமான ... |
| Posted: 22 Jun 2016 11:14 AM PDT பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை உடைய நாடுகளில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, 1951ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா., அகதிகள் தீர்மானம் மற்றும் அதைத் தொடர்ந்து, 1967ல் கொண்டு வரப்பட்ட அகதிகள் தொடர்பான நடைமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஐ.நா.,வில் உள்ள, 190 நாடுகளில், 140 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 'ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான ஆதாரங்கள் ... |
| 'ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் தேவையில்லை' Posted: 22 Jun 2016 11:15 AM PDT புதுடில்லி: பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை ஒருங்கிணைக்க வேண்டுமென, 'நிடி ஆயோக்' உறுப்பினர் பிபெக் தேப்ராய் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. 'நிடி ஆயோக்' உறுப்பினர் பிபெக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, ரயில்வே பட்ஜெட் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டு, அறிக்கைசமர்ப்பித்துள்ளது. இதில், 'ரயில்வே பட்ஜெட்டை, மத்திய பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைக்க வேண்டும். ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை' என பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 20 பக்கம் அடங்கிய இந்தஅறிக்கையை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பியுள்ள, ... |
| இன்ஜி., 'ரேங்க்' பட்டியலிலும் கேரள மாணவி முதலிடம் Posted: 22 Jun 2016 11:21 AM PDT சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வெளியிட்டார். இதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.இவர், மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் பள்ளியில், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த முதல் பாடப்பிரிவில், பிளஸ் 2 படித்துள்ளார். பொதுத்தேர்வில், 1,198 மதிப்பெண் மற்றும் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்,இரண்டாமிடம் ... |
| 5 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்வு : சட்டசபையில் ஆதாரத்துடன் ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: 22 Jun 2016 11:23 AM PDT சென்னை ''தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது,'' என, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பொருட்களின் விலையை பட்டியலிட்டு குற்றஞ்சாட்டினார். சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தற்போது, தகவலறியும் உரிமை சட்டம் எல்லாம் வந்து விட்டது. எனவே, அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத் தன்மை இருக்க வேண்டும். சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ள, நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி விவரத்தை, வேளாண் துறை இணையதளத் தில் வெளியிட வேண்டும். மாவட்ட ... |
| விஜயகாந்த் திடீர் பெங்களூரு பயணம் Posted: 22 Jun 2016 11:54 AM PDT தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பத்திரிகை யாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதற்காக, கார் மூலம் ரகசியமாக பெங்களூரு சென்றார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா வழி உறவினர் வீடு, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ளது. உறவினர் இல்ல திருமண விழா, இன்று பெங்களூரில் நடக்கிறது. இதற்காக, சில நாட்களுக்கு முன், சுதீஷ் மனைவி பூர்ணஜோதியுடன், பிரேம லதா அங்கு சென்றார். விஜயகாந்த், நேற்று காலை, கார் மூலம், சென்னை யில் இருந்து அங்கு புறப்பட்டு சென்றார். விஜயகாந்த், சாலை மார்க்கமாக செல்லும் போது, அந்தந்த மாவட்ட செயலர்களுக்குமுன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். ... |
| வாசலை பூட்டிய வங்கிகள்மறுகடன் வாங்க முடியாமல் தவிக்கும் 240 கார்ப்பரேட் நிறுவனங்கள் Posted: 22 Jun 2016 12:47 PM PDT புதுடில்லி:'வங்கிகளின் தயக்கத்தால், 240 கார்ப்பரேட் நிறுவனங்கள், பழைய கடனை சீரமைத்து, மறுகடன் வாங்க முடியாத நிலையில் உள்ளன' என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: இந்தியாவில், 500 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் குறித்து, ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அவை வாங்கியுள்ள, 11.80 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையில், ஏற்கனவே கடன் வாங்கி, ஒழுங்காக திரும்பச் செலுத்தாமல், மறுசீரமைக்கப்பட்ட கடன், 5.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வங்கிகளின் எண்ணம்: எஞ்சியுள்ள, 6.70 லட்சம் கோடி ரூபாய் கடனை, மறுசீரமைத்து, புதிய கடனாக ... |
| காசுக்கு விலை போகும் எட்டாவது மாடி மின் வாரியத்தில் 'பேனர்' திடீர் பரபரப்பு Posted: 22 Jun 2016 01:31 PM PDT மின் வாரிய முறைகேடை வெளிப்படுத்தும் வகையில், 'பேனர்' வைக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அண்ணா சாலையில், 10 மாடி கட்டடத்தில், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எட்டாவது மாடியில் நிர்வாக பிரிவு; ஒன்பதாவது மாடி யில் செயலக பிரிவு; 10வது மாடியில் உயர் அதிகாரிகளின் அறைகள் உள்ளன. கள உதவி யாளர் முதல், உதவி பொறியாளர் வரை பணி மூப்பு, பதவி உயர்வு பட்டியல்கள் எட்டாவது மாடியிலும், செயற் பொறியாளர் முதல், இயக்குனர் வரையிலான பட்டியல்கள், ஒன்பதாவது மாடியிலும் தயாராகும்.இந்நிலையில், மின் வாரிய அலுவலக நுழைவாயில் ... |
| எல்.ஐ.சி. தலைவர் எஸ்.கே. ராய் திடீர் ராஜினாமா Posted: 22 Jun 2016 01:51 PM PDT புதுடில்லி: எல்.ஐ.சி.யின் தலைவர் எஸ்.கே.ராய் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இன்னும் 2 இரண்டாண்டுகள் பதவிகாலம் உள்ள நிலையில் முன்கூட்டியே ராஜினாமா செய்தார்.இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்..ஐ.சி.யின் தலைவராக எஸ்.கே.ராய் கடந்த 2013-ம் ஆண்டு ஜுன் மாதம் மத்தியில் காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகள் இப்பதவியில் இருக்க வேண்டிய நிலையில் அதற்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்தாகவும்,அவரது ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சரவையில் நியமனக்குழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 23,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |