Tamil News | Online Tamil News |
- தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு
- உள்ளாட்சி தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும்? : கருணாநிதி கையில் பலே திட்டங்கள்
- வெளிநாட்டு நிலங்களை குத்தகை எடுத்து விவசாயம் அதிரடி விளைபொருள் விலையை கட்டுப்படுத்த அரசு திட்டம்
- ரேஷன் பருப்பில் லாபம் பார்க்கும் அதிகாரிகள்!
- சிம்லாவில் பிரியங்காவுக்கு வீடா?: பா.ஜ., - எம்.எல்.ஏ., கடும் எதிர்ப்பு
- ரயில்வேயை கட்டுப்படுத்த தனி ஆணையம் அதிரடி விரைவில் அமைக்க மோடி அரசு தீவிரம்
- நெருக்கடியை மறைக்க என் மீது பாய்வதா ஓ.பி.எஸ்., புகாருக்கு ஸ்டாலின் பதிலடி
- தேர்தலின் போது நம்பிய பலர் துரோகம் செய்ததாக ஜெயலலிதா...ஆவேசம்! பணத்தை அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
- பிரதமர் மீது பாக்., மீடியா மோகம்!
- தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக எஸ்ஸார் குழுமம் மீது புகார்: விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு
| தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு Posted: 18 Jun 2016 07:31 AM PDT இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தை, 5 முதல், 14 வயது வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே செலுத்தும்.சேர்க்கை:ஆனால், தமிழகத்தில் இந்த சட்டம், 5 முதல், 14 ... |
| உள்ளாட்சி தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும்? : கருணாநிதி கையில் பலே திட்டங்கள் Posted: 18 Jun 2016 07:51 AM PDT விரைவில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து, கட்சியில் தொடர் மாற்றங்களைக் கொண்டு வர, தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில், எப்படியும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடும் என, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், தி.மு.க., ௮௯ இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பெற முடிந்தது. இதனால், கட்சியினர் அவ்வளவு பேரும் 'அப்செட்' ஆகினர்.இருந்த போதும், சில நாட்களில் மீண்டும் பழைய படியே, அரசியல் பணியாற்ற ... |
| வெளிநாட்டு நிலங்களை குத்தகை எடுத்து விவசாயம் அதிரடி விளைபொருள் விலையை கட்டுப்படுத்த அரசு திட்டம் Posted: 18 Jun 2016 08:29 AM PDT புதுடில்லி: இந்தியாவில் உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மத்திய அரசே தற்போது நேரடியாக இறக்குமதி செய்து வருகிறது. அடுத்தபடியாக, வெளிநாடுகளில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயத்தில் நேரடியாக களமிறங்கவும் அரசு தயாராகி வருகிறது. கடுமையான வறட்சி, நிலத்தின் அளவு குறைந்து வருவது போன்ற காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளாக, பருப்பு உற்பத்தி வெகுவாக குறைந்து, அதன் விலை கடுமையாக உயர்ந்தது. இதுபோலவே, தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடுமையாக ... |
| ரேஷன் பருப்பில் லாபம் பார்க்கும் அதிகாரிகள்! Posted: 18 Jun 2016 08:48 AM PDT தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பருப்பு வகைகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், குறித்த காலத்தில் கொள் முதல் செய்யாததால், ரேஷன் கடைகளில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது, வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளில், பருப்பு இருப்பு இல்லாததால், ரேஷன் கடைகளில் பருப்பு வினியோகம் முற்றிலும் முடங்கி யுள்ளது. இந்நிலையில், ரேஷனில் வழங்க, 16 ஆயிரம் டன் கனடா மஞ்சள் பருப்பு; 7,000 டன் உளுத்தம் பருப்பு என, மொத்தம், 23 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்ய, வாணிபக் கழகம் முடிவு செய்து உள்ளது. ... |
| சிம்லாவில் பிரியங்காவுக்கு வீடா?: பா.ஜ., - எம்.எல்.ஏ., கடும் எதிர்ப்பு Posted: 18 Jun 2016 09:15 AM PDT சிம்லா,:'பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் வீடு கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெறவேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் பரத்வாஜ் வலியுறுத்தி உள்ளார். மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில், காங்., தலைவர் வீர்பத்ர சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் உள்ள சிம்லா நகரில், ஜனாதிபதி, கோடை காலத்தில் தங்குவதற்காக கட்டப்பட்ட, 'தி ரிட்ரீட்' சொகுசு பங்களா உள்ளது. இதன் அருகே, காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ... |
| ரயில்வேயை கட்டுப்படுத்த தனி ஆணையம் அதிரடி விரைவில் அமைக்க மோடி அரசு தீவிரம் Posted: 18 Jun 2016 09:42 AM PDT ரயில்வேயை கட்டுப்படுத்த தனி ஆணையத்தை உருவாக்கும் நோக்கில், அமைச்சரவை குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. இக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.இன்சூரன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை கட்டுப்படுத்த, தனி ஆணையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், ரயில்வேயை கட்டுப்படுத்த, தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தி யில் புதிய அரசு அமைந்தது முதல், ... |
| நெருக்கடியை மறைக்க என் மீது பாய்வதா ஓ.பி.எஸ்., புகாருக்கு ஸ்டாலின் பதிலடி Posted: 18 Jun 2016 10:29 AM PDT சென்னை,:'தனக்கும், தன் குடும்பத்துக்கும் உள்ள நெருக்கடியை மறைக்க, என் மீது பாய்ந்துள்ளார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை : 'தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, சட்டசபையில் உரிய இடம் ஒதுக்க வேண்டும்' என, சபாநாயகருக்கு தி.மு.க., கோரிக்கை விடுத்தது.இதற்கு சபாநாயகர் பதில் அளிக்கும் முன், அவரது அதிகாரத்தை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுத்துக் கொண்டு, நான் அளித்த பட்டியலில், கருணாநிதி பெயர் இல்லை. தந்தைக்கும் - மகனுக்கும் இடையே போட்டி என, ... |
| Posted: 18 Jun 2016 11:07 AM PDT 'சட்டசபை தேர்தலில், நம் வேட்பாளர்கள் தோற்றதற்கு, நமது கட்சியினர் செய்த உள்ளடி வேலையே காரணம். நான் நம்பிய பலர், துரோகம் செய்து விட்டனர்' என, சென்னையில் நேற்று நடந்த, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா ஆவேசமாக பேசி உள்ளார். மேலும், 'பணத்தை அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என, அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ... |
| பிரதமர் மீது பாக்., மீடியா மோகம்! Posted: 18 Jun 2016 12:15 PM PDT இந்தியாவைப் பற்றி எப்போதுமே மட்டம் தட்டி பேசுவது தான் பாகிஸ்தான் மீடியாவிற்கு பழக்கம். சமீபத்தில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று, அங்கு பார்லிமென்டில் உரையாற்றினார். இந்த பேச்சைக் கேட்ட பாக்., 'டிவி' சேனல்கள், தங்களுடைய இந்தியா எதிர்ப்பு நிலையிலிருந்து, தலைகீழாக மாறி விட்டன.அனைத்து பாகிஸ் தான் செய்தி சேனல்களும், பிரதமர் மோடியின் உரை பற்றி, பெரும் விவாதம் நடத்தின. அதில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர்கள் மற்றும்அரசியல்வாதிகள் என அனைவரும், மோடியை தலையில் துாக்கி வைத்து, ஆடாத குறை தான். அந்த அளவிற்கு பாராட்டு பிரதமருக்கு. 'என்னமாகப் ... |
| தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக எஸ்ஸார் குழுமம் மீது புகார்: விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு Posted: 18 Jun 2016 02:04 PM PDT புதுடில்லி: வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்டோரின் தொலை பேசிகளை ஒட்டுக்கேட்டதாக எழுந்த புகாரில் உரிய விசாரணை நடத்திட பிரதர் மோடி உத்தரவிட்டுள்ளார்.முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமம், தனது தொழில் போட்டியாளர் நிறுவனங்கள், மற்றும் அந்நிறுவனத்துடன் தொடர்புவைத்துள்ள வி.வி.ஐ.பிக்கள், மத்திய அரசின் ஏஜென்சியான, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதை பொருள் தடுப்புப்பிரிவு, உளவு அமைப்புகளான ' ரா', 'ஐ.பி.' மற்றும் தேசிய தொழில்நுட்ப அமைப்பு ஆகிய துறை அதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்டுபதிவு செய்யுமாறு அதன் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டதாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 19,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |