Tamil News | Online Tamil News |
- டெல்டா மாவட்டங்களில் மின் பிரச்னை
- தி.மு.க., கோரிக்கைகளை ஏற்காவிட்டால்... சபாநாயகருக்கு ஸ்டாலின் 2 நாள் கெடு
- பெரியாறு அணையை உடைத்து விடலாம் : உம்மன்சாண்டி யோசனை
- எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியலில் 3 மாணவர்... சாதனை: கேரளா, ஆந்திராவில் படித்தவர்கள் ஆதிக்கம்
- பாக்.,கில் பயங்கரம்; கர்ப்பிணி மகளை கவுரவ கொலை செய்த தாய்
- சிலைகளை தேடி கோவில் நிர்வாகிகள் படையெடுப்பு :பிரம்மன் சிலை அடையாளம் தெரிந்தது
- அதிரடி!: ரூ.400 கோடி ஊழல் புகாரை விசாரிக்க கவர்னர் அனுமதி டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு சிக்கல்
- நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள்
- தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா சலுகை
- வரி ஏய்ப்பாளர்களுக்கு அபராதத்துடன் சிறை!: ஜி.எஸ்.டி., வரைவு சட்டத்தில் அதிரடி
- சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி; இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
- மின் துறை அமைச்சர்கள் மாநாடு தமிழக மந்திரி பங்கேற்காதது ஏன்?
- பலூஜா நகரம் மீட்பு; ஐ.எஸ்., பிடி தளர்கிறது
| டெல்டா மாவட்டங்களில் மின் பிரச்னை Posted: 17 Jun 2016 08:23 AM PDT டெல்டா மாவட்டங்களில், மின் பிரச்னை தலை துாக்கியுள்ளதால், குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பருவத்தில், 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால், குறுவை தொகுப்பு திட்டத்தை, 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம், 3 லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி நடக்கும் என, அரசு எதிர்பார்த்துள்ளது. அரசின் குறுவை தொகுப்பு திட்டத்தை பயன் படுத்தி, ... |
| தி.மு.க., கோரிக்கைகளை ஏற்காவிட்டால்... சபாநாயகருக்கு ஸ்டாலின் 2 நாள் கெடு Posted: 17 Jun 2016 10:10 AM PDT சென்னை, : ''தி.மு.க.,வின் கோரிக்கைகளை நிறைவேற்ற, சபாநாயகர் முன்வராவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கருணாநிதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்,'' என, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில், அவர் பயன்படுத்தும், 'வீல் சேர்' சபைக்குள் வந்து செல்லக்கூடிய வசதி வேண்டும் என, சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தோம்.ஆனால், கருணாநிதி, வீல் சேரில் வந்து செல்ல முடியாத வகையில், இரண்டாவது வரிசையில், இடம் ... |
| பெரியாறு அணையை உடைத்து விடலாம் : உம்மன்சாண்டி யோசனை Posted: 17 Jun 2016 10:18 AM PDT கூடலுார்: ''பெரியாறு அணையை ஒட்டியுள்ள கேரள மக்களுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில், புதிய அணை என்ற பிரச்னையை கையில் எடுத்துள்ளோம். புதிய அணை கட்டி முடித்தவுடன், பழைய அணையை உடைத்து விடலாம்,'' என, கேரளா வண்டிப்பெரியாறில் நடந்த உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேசினார். 'முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது' என கேரளாவில் காங்., தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி யும் ௧௯௭௯ முதல் அரசியல் நடத்தி வருகின்றன.கேரளாவில் கம்யூ., கூட்டணியின் சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணை அருகே ... |
| எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியலில் 3 மாணவர்... சாதனை: கேரளா, ஆந்திராவில் படித்தவர்கள் ஆதிக்கம் Posted: 17 Jun 2016 11:06 AM PDT எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலில், கேரளாவில் படித்த மாணவி ஆதித்யா மகேஷ், முதலிடம் பெற்றுள்ளார். மூன்று பேர் மட்டுமே, 200க்கு, 200, 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 20ல் துவங்குகிறது. தமிழகத்தில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,சுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தன; தகுதி இல்லாதவை போக, 25 ஆயிரத்து, 379 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.இவர்களுக்கான, 'ரேண்டம்' எண், 14ம் தேதி வெளியான நிலையில், கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையிலான, தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.சென்னை, ... |
| பாக்.,கில் பயங்கரம்; கர்ப்பிணி மகளை கவுரவ கொலை செய்த தாய் Posted: 17 Jun 2016 12:15 PM PDT
லாகூர் : பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகளை அவரது தாயே கவுரவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாக்., நாட்டின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியை சேர்ந்த தவுபீக் அகமது, முகாதாஸ் பீபி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக கூறி, அவரது தாய் அம்னா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கர்ப்பிணி என்றும் பாராமல், முகாதாசை சித்ரவதை செய்து கழுத்தை அறுத்து அவரது ... |
| சிலைகளை தேடி கோவில் நிர்வாகிகள் படையெடுப்பு :பிரம்மன் சிலை அடையாளம் தெரிந்தது Posted: 17 Jun 2016 12:42 PM PDT சென்னை,:சென்னையில், சிலைகளை தேடி கோவில் நிர்வாகத்தினர் பலர் குவிந்தனர். ஒருவருக்கு மட்டும் சிலை கிடைக்க, மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை, ஆழ்வார்பேட்டை, 'முர்ரேஸ் கேட்' சாலையில் உள்ள வீடு மற்றும் வீனஸ் காலனியில் உள்ள வீடு மற்றும் குடோனில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், 83, பதுக்கி வைத்து இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த சிலைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேலும், போலீஸ் இணைய தளத்திலும், புகைப்படத்துடன் சிலைகள்குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.இதையடுத்து, தமிழத்தின் பல ... |
| Posted: 17 Jun 2016 01:00 PM PDT புதுடில்லி:டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீதான, 400 கோடி ரூபாய் தண்ணீர் லாரி முறைகேடு தொடர்பான புகாரை, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க, டில்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு உள்ளது. இதற்கு முன், கடந்த, 2008 - 2011 காலகட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். டில்லி குடிநீர் வாரியத் தலைவராகவும் அவர் இருந்தார். அப்போது, டில்லியில் குடிநீர் வினியோகிக்க, 385 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லாரி களை பயன்படுத்துவதற்கு தனியார் நிறுவனத்துடன் ... |
| நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் Posted: 17 Jun 2016 01:20 PM PDT சென்னை: இலங்கை தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி படகில் சென்ற போது, இந்தோனேசியா அருகில் நடுக்கடலில் படகு தத்தளித்தது. படகை அந்நாட்டு கடற்படை போலீசார் மீட்டனர். இலங்கை தமிழர்கள் 44 பேர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல திட்டமிட்டு மீன்பிடி படகில் பயணமாகினர். இதில் 20 ஆண்கள், 15 பெண்கள் (ஒருவர் கர்ப்பிணி), 9 குழந்தைகள் அடங்குவர். ஆஸி., செல்லும் வழியில் இந்தோனேசியாவின் அச்சே தீவு அருகே கடந்த 11ம் தேதி இவர்களது படகு தத்தளித்தபடி நின்று கொண்டிருந்ததை இந்தோனேசிய கடற்படையினர் பார்த்து, படகை கடற்கரைக்கு கொண்டு ... |
| தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா சலுகை Posted: 17 Jun 2016 01:28 PM PDT புதுடில்லி, :இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு, விசா வழங்குவதில் புதிய சலுகையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா, மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தி யாவுக்கு அதிக அளவில் தாய்லாந்து சுற்றுலா பயணிகளை ... |
| வரி ஏய்ப்பாளர்களுக்கு அபராதத்துடன் சிறை!: ஜி.எஸ்.டி., வரைவு சட்டத்தில் அதிரடி Posted: 17 Jun 2016 01:45 PM PDT புதுடில்லி, : அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், வரியை முறையாக செலுத்தாதோர் மற்றும் ஏய்ப்பவர்களுக்கு அபராதத்துடன், சிறைதண்டனையும் விதிக்கும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, நாடு முழுவதும், மாநிலங்களில் பல்வேறு வரிவிதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளன. இதனால், ஒரே பொருளுக்கு, பல்வேறு கட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் ... |
| சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி; இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் Posted: 17 Jun 2016 02:09 PM PDT லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது. பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. லண்டனில், ஆண்களுக்கான 36வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் இறுதிவரை பலனளிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டிக் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 1-3 ... |
| மின் துறை அமைச்சர்கள் மாநாடு தமிழக மந்திரி பங்கேற்காதது ஏன்? Posted: 17 Jun 2016 02:31 PM PDT மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், தமிழக அரசை குறை கூறியதால் தான், கோவாவில் நடந்த, மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக அமைச்சர் தங்கமணி பங்கேற்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மாநில மின் வாரியங்களின் கடனை குறைக்க, 'உதய்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டத்தில், சில மாறுதல்களை செய்யும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதை, மத்திய அரசு ஏற்காததால், 'உதய்' திட்டம், தமிழகத்தில் அமலாகவில்லை.அதனால், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், தமிழகஅரசை கடுமையாக ... |
| பலூஜா நகரம் மீட்பு; ஐ.எஸ்., பிடி தளர்கிறது Posted: 17 Jun 2016 03:27 PM PDT பாக்தாத்: ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பலுாஜா நகரின் அரசு தலைமை அலுவலகத்தை ராணுவத்தினர் மீட்டனர். மேற்காசிய நாடான ஈராக்கில், அரசுக்கு எதிராக ஐ.எஸ்., பயங்கரவாதிகள், போரிட்டு வருகின்றனர். ஈராக்கின் பலுாஜா, மொசூல் ஆகிய நகரங்களை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வைத்திருந்தனர். இதனை மீட்க, அமெரிக்க கூட்டணிப்படைகளின் ஆதரவுடன், ஈராக் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.பலுாஜா நகரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, ஈராக் ராணுவம், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து போரிட்டு வந்தது. ஆனால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 18,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |