ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
- மின்நூல் தேவை
- நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!
- தந்தையின் புகழுக்குப் பெருமை சேர்த்த விஞ்ஞானி!
- ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை
- உள்ளக்குடிலில் நீ!!
- நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு
- உலக தந்தையர் தின வாழ்த்துகள் .
- குடிநீர்கூட கிடைக்காததால் நைஜீரிய பாலைவனத்தில் 34 அகதிகள் பரிதாப சாவு
- மூளைக்குணவு
- தவிப்பு !!!
- தூங்காத நினைவுகளோடு ....
- 'ஆசை வெட்கமறியும்' நாவல்
- இடைவெளி
- பிரிட்டனில் பெண் எம்.பி. பட்டப்பகலில் சுட்டுக் கொலை: ஒருவர் கைது
- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகை அட்டையில் பிரிட்டன் இளவரசர்!
- பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடி ராணுவ உதவி: அமெரிக்க நாடாளுமன்றம் நிபந்தனை
| காற்பந்தா? கால் பந்தா? எது சரி ? Posted: 17 Jun 2016 11:11 AM PDT காற்பந்தா? கால் பந்தா? எது சரி ? நாள் + கள் = நாள்கள் கால் + கள் = கால்கள் கோள் + கள் = கோள்கள் வேல் + கள் = வேல்கள் தாள் + கள் = தாள்கள் இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு. இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று. மேல் + கணக்கு கால் + கடுக்க பால் + பசு நாள் + கோள் பால் + பழம் கால் + சட்டை மேல் + படிப்பு கால் + புள்ளி நூல் + பா மேல் + கொண்டு ... |
| Posted: 17 Jun 2016 09:30 AM PDT பாலகுமரன் அவர்களின் கங்கை கொண்ட சோழன் தெளிவாண புத்தகம் தேவை |
| நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Posted: 17 Jun 2016 06:29 AM PDT கவனியுங்கள்! நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள்! உங்கள் மனதில் கடந்து செல்லும் ஒவ்வொரு எண்ணத்தையும் கவனியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் இடை விடாமல் நிறை கவனத்துடன் இருங்கள்! - நீங்கள் கவனிக்க கவனிக்க அவசரத் தனம் குறைகிறது! உங்கள் மனம் பேச்சைக் குறைத்து விடும்! அதனால் எண்ணங்களுக்கு சக்தி இல்லாமல் போய் விடும்! - அப்போது மனதில் ஒரு தெளிவு பிறக்கும்! அந்த தெளிவுதான் பேரானந்தத்திற்கு காரணம்! - அப்போது நிறை கவனம் தான் வாழ்வு என்பதை ஒருவர் கண்டு கொள்கிறார்! ... |
| தந்தையின் புகழுக்குப் பெருமை சேர்த்த விஞ்ஞானி! Posted: 17 Jun 2016 06:24 AM PDT [size=16] - "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்ற பழமொழி உண்டு. அதை மெய்ப்பிப்பது போல, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மேதை சர்.சி.வி.ராமனின் மகனும் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். பிரபல விஞ்ஞானியின் மகனாக இருந்தபோதும், அதை அவர் ஒருபோதும் தனது முன்னுரிமையாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர்தான் விண்வெளி விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன். சென்னையின் தண்டையார்பேட்டையில் 1929 மே 18-இல் வெங்கட்ராமன்- லோகசுந்தரி தம்பதியின் மகனாக ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பள்ளிக்கல்வி சென்னையில் ... |
| ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை Posted: 17 Jun 2016 04:50 AM PDT அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கி துணை தாசில்தாருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2006-ல் ஜாதி சான்றிதழ் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக ஜெயலட்சுமி மீது ஊழல் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இந்த விசாரனையில், துணை தாசில்தார் லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனது. இந்நிலையில், லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்புமன்றம் உத்தரவிட்டுள்ளது. - ---------------- தினமணி |
| Posted: 17 Jun 2016 04:29 AM PDT நான் நானாக இல்லை என்னோடு நீ இல்லாத போது! -நீ என்னவளாய் மாறுவது என்வாழ்வில் எப்போது!! சன்னலோர தென்றலாய் உன் ஞாபகங்கள் தினமும் சத்தமின்றி தீண்டியுமாய்-என் மீது சந்தோச மலரை தூவியுமாய் என்னோடு சரசம் செய்து போகுதடி!!!! உள்மனதின் உண்மைநிலை -என் உயிரே உன்னை சுற்றியே உயிர் கொண்ட ஜடமாய் மட்டுமே -நான் உலவுகின்றேன் இப்புவியில்!! நிம்மதியாய் நானுறங்கி நெடுநாளானதடி -என் நெஞ்சத்தில் உனை பிறந்த வேதனை என்னை நித்தம் நித்தம் கொள்ளுதடி!! அறைநொடி மின்னலை போல் -கனவில் அவ்வபோது வந்து ... |
| நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு Posted: 17 Jun 2016 04:29 AM PDT சென்னை: நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் குறைந்த செலவில் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு கடந்த ஜூன் 1, 2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகை ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என ... |
| உலக தந்தையர் தின வாழ்த்துகள் . Posted: 17 Jun 2016 04:19 AM PDT உலக தந்தையர் தின வாழ்த்துகள் . உலக தந்தையர் தின வாழ்த்துகள் ஈகரை தந்தையர் அனைவருக்கும் . இரண்டு தினங்களுக்கு முன் எழுதிய எந்தன் கவிதை (t 130744-topic ) நீ யாரோ நான் யாரோ அதுவா முக்கியம் நீ யாரோ நான் யாரோ தினம் தினம் பார்த்தாலும் சந்தித்தது இல்லை . நடைப் பயிற்சி வட்ட தளத்திலே ஒரு சுற்றில் நீ முன்னேற மறு சுற்றில் நான் முன்னேற முன்னேறும் போது தோன்றிடும் வெற்றிப் புன்னகை , வெற்றுப் புன்னகை அல்ல நட்புப் புன்னகை . ஆரோக்யமானப் போட்டி ஆரோக்கியத்திற்கான போட்டி . உந்தன் ... |
| குடிநீர்கூட கிடைக்காததால் நைஜீரிய பாலைவனத்தில் 34 அகதிகள் பரிதாப சாவு Posted: 17 Jun 2016 03:08 AM PDT நியாமி: உள்நாட்டுப் போர், தீவிரவாத தாக்குதல்களால் வாழ வழியின்றி, உயிருக்குப் பயந்து அண்டை நாடுகளுக்கு குடியேறச் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், நைஜீரியா, மாலி மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான அகதிகள் சட்டவிரோதமாக அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு இதுபோல் ஆயிரக்கணக்கான அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும்போது இயற்கை ... |
| Posted: 17 Jun 2016 12:26 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 17 Jun 2016 12:19 AM PDT உறங்கும் முன்பும் உறங்கி எழுந்த பின்பும்- நான் உடனே தேடுவது அழைபேசியையே காரணம் உன் குரலை கேட்பதற்காக!! தினமும் நான் தூங்கும் ஆறரை மணி நேர உறக்கதில் நீ என்னோடு ஆனந்தமாய் பேசுகிறாய் என் மீது அன்பும் பாராட்டுகிறாய் -என்னை அணைத்து முத்தமும் இடுகின்றாய்!! தூரத்தில் தொலைத்து விட்டு தூக்கத்தில் தேடுகிறேன் -என் தூயவளே உன் அன்பை !! கடல் தாண்டி வந்துவிட்டேன் உன்னை கண்ணீரோடு தவிக்க விட்டு கவலை ஒன்றும் வேண்டமடி -நம்மை காலம் சீக்கிரம் ஒன்று சேர்க்கும்!! உறக்கம் தொலைத்து ... |
| Posted: 16 Jun 2016 11:47 PM PDT எனக்கு தெரியவில்லை -அவள் என்னை இந்தளவுக்கு நேசிப்பாளென்று அவளிடம் கேட்டேன் நீ என்னை நேசிக்கிறாயா என்று அதற்கு அவள் சொன்னாள் உன்னை நான் நேசிக்கவில்லை ஆனால் உன்னொடு மட்டுமே வாழவேண்டும் என்று என் உள்ளத்துள் ஏற்படும் நினைவுகளைதான் நான் மூச்சாய் சுவாசிக்கிறேன் என்றாள்!! தூரத்தில் இருக்கும் அவளின் தூங்காத நினைவுகளோடு ..... க.சரவணன்...... |
| Posted: 16 Jun 2016 11:44 PM PDT 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களின் 'ஆசை வெட்கமறியும்' நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3r94h6stdov7a8s/Manian_AasaiVetkamariyum.pdf |
| Posted: 16 Jun 2016 09:31 PM PDT அலைபாய்ந்த என் மனதை அடக்கி ஆண்டவளே -என் அன்பே ஆருயிரே -உன் அழகு முகம் காண- நான் ஆவலோடு காத்திருக்கேன்!! தூரம் நம்மை பிரித்த போதும் -உன் தூய்மையான அன்பானது என்னை தொற்றிக்கொண்டு வாட்டுதடி- என் மனதை துளைத்தெடுத்து போகுதடி !! அதிகமான வேலை பளுவிலும் கூட- என் அன்பானவளே உன் ஞாபகங்கள்- என்னை ஆளுமை படுத்துகிறதே உன்னை காணும் ஆவலை தூண்டுகிறதே! உயிரே நீ என்னில் கலந்துவிட்டாய் நான் உன்னில் கலந்துவிட்டேன் -ஆனாலும் இந்த தூரம் என்ற இடைவெளிதான் -நமக்கிடையில் தொல்லையாய் ... |
| பிரிட்டனில் பெண் எம்.பி. பட்டப்பகலில் சுட்டுக் கொலை: ஒருவர் கைது Posted: 16 Jun 2016 05:36 PM PDT - பிரிட்டனில் தொழிலாளர் (லேபர்) கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (41) வியாழக்கிழமை சுட்டுக் கொலை செய்யப்பட்டார். லண்டனில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா - வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு, வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பிரிட்டன் முழுவதும் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான ... |
| ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகை அட்டையில் பிரிட்டன் இளவரசர்! Posted: 16 Jun 2016 05:35 PM PDT - ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகையின் அட்டையில் முதன் முதலாக பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் புகைப்படம் இடம்பெறுகிறது. பிரிட்டனில் இருந்து வெளிவரும் "ஆட்டிடியூட்' ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகையாகும். இந்த பத்திரிகையின் ஜூலை மாத பதிப்பின் அட்டைப் படத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் அலங்கரிக்கிறார். பிரபலமான ஓரின சேர்க்கை பத்திரிகையின் அட்டை படத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் படம் இடம்பெறுவது இதுவே முதல் முறை. பிரிட்டனின் ... |
| பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடி ராணுவ உதவி: அமெரிக்க நாடாளுமன்றம் நிபந்தனை Posted: 16 Jun 2016 05:33 PM PDT பாகிஸ்தானுக்கு 30 கோடி டாலர் (ரூ.2,000 கோடி) ராணுவ நிதியுதவி அளிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவும் பாகிஸ்தானுக்கு 90 கோடி டாலர் (சுமார் ரூ.6,066 கோடி) ராணுவ நிதியுதவி அமெரிக்கா முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டுக்காக 45 கோடி டாலரை (சுமார் ரூ.3,033 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும், பாகிஸ்தான் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |