Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அமெரிக்க அதிபர் தேர்தல்:ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து
- கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் இன்று முதல் நீராவியை வெளியேற்றி சோதனை
- வழித்தட ஆக்கிரமிப்புகள் கல்லாறு வனப் பகுதிக்குத் திரும்ப முடியாமல் 10 நாள்களாகத் தவிக்கும் யானைக் கூட்டம்
- பிளஸ் 2 தேர்வெழுதியவர்களுக்கு ஜூன் 20 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
- புதிய திருத்தங்கள் குறித்த ஆய்வு முடியும் வரை வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை இல்லை:உயர் நீதிமன்றம்
- இன்று மழைக்கு வாய்ப்பு
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜூலை 1-இல் உண்ணாவிரதம்:என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு
- புதிய அணை நிலைப்பாட்டுக்கு தமிழகம் மாற வேண்டும்:உம்மன்சாண்டி
- சம்ஸ்கிருதம் பற்றி திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை
- வீராணம் ஏரியில் 100 கோடி கனஅடி நீரைத் தேக்க நடவடிக்கை: ஆட்சியர்
- வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கும்:எஸ்ஆர்எம்யு தலைவர் நம்பிக்கை
- தலைமைக் காவலர் கொலை சம்பவம்: கூடுதல் டி.ஜி.பி. திரிபாடி நேரில் விசாரணை
- அஞ்சலகத்தில் ரூ.1 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை
- அவையும் விலையும்!
- விருதுகளும் சர்ச்சைகளும்...
- அப்பாவைக் கொண்டாடுவோம்!
- ஆளுநர் உரை மீதான விவாதம்:திமுகவினர் மூவர் பேச அனுமதிக்கக் கோரிக்கை
- இந்தியா - தாய்லாந்து இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- காங்கிரஸின் ஆதரவு இல்லாமலேயே ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முயற்சி
- பிற கட்சியினரை விமர்சிக்காமல் டெபாசிட் பெற பாஜக முயல வேண்டும்:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவுறுத்தல்
- மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்
- இரங்கல் தெரிவித்து அவையைஒத்திவைப்பது புதிதல்ல:மு.க.ஸ்டாலின் புகாருக்கு விளக்கம்
- தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்க நடைமுறை:நாடாளுமன்ற நிலைக் குழு 21-இல் சென்னையில் ஆய்வு
- இந்திய உதவியுடன் யாழ்ப்பாண மைதானம்: இன்று திறப்பு
- சண்டீகரில் ஜூன் 21-இல் சர்வதேச யோகா தினம்: மோடி பங்கேற்பு
- கைரானாவில் இருந்து யாரும் இடம்பெயரவில்லை:உ.பி.அமைச்சர்
- காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- ஜிஎஸ்டி மசோதாவால் பொருளாதாரத்தில் மாற்றம் நிகழாது
- உ.பி.யில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக, சமாஜவாதி முயற்சி
- "பொலிவுறு நகரம்' திட்டம்: ஜூன் 25-இல் தொடக்கி வைக்கிறார் மோடி
- ராமகிருஷ்ண மடத்தின் சன்யாசிக்கு கொலை மிரட்டல் விவகாரம்: வங்கதேசத்திடம் எழுப்பியது இந்தியா
- முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகளை தனியார் நிறுவனம் ஒட்டுக்கேட்டதா?விசாரணைக்கு ஜேடியு, ஆம் ஆத்மி வலியுறுத்தல்
- யூரோ கோப்பை :காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி
- கோபா அமெரிக்கா கால்பந்:அரையிறுதியில் அமெரிக்கா
- ரியோ ஒலிம்பிக்: தமிழக வீரர் சதீஷ் குமார் களமிறங்குகிறார்
- ஒலிம்பிக் தகுதிச் சுற்று:2-ஆவது சுற்றில் மனோஜ் குமார்
- சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி:முதல்முறையாக இறுதிச் சுற்றில் இந்தியா
- டொரன்டோ மாஸ்டர்ஸில் களமிறங்குகிறார் நடால்
- ஹராரேவில் இன்று நடைபெறுகிறது இந்தியா-ஜிம்பாப்வே முதல் டி20
- ஆப்கன் - பாக் எல்லைப் பகுதியில் லஷ்கர்,ஹக்கானி, தலிபான்கள் ஆதிக்கம்:அமெரிக்க சி.ஐ.ஏ. தலைவர்
- ஃபலூஜா மாகாணத் தலைமையகம் ஐ.எஸ்.ஸிடமிருந்து மீட்பு
- உடலுக்குள் 1.5 மீட்டர் இரும்புக் கம்பி பாய்ந்தும் உயிர் பிழைத்த அதிசய நபர்!
- அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்
- மாணவனுக்கு கத்திக் குத்து:11வயதுச் சிறுவன் கைது
- மலேசியத் தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்: ஒபாமா பரிந்துரை
- எச்.டி.எப்.சி. லைஃப் நிறுவனத்துடன் இணைகிறது மேக்ஸ் லைஃப்
- வரலாறு காணாத தேயிலை உற்பத்தி
- தென் கொரியாவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்த நடவடிக்கை
- "பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதில் வெற்றி'
- எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை
- திருட்டு வி.சி.டி.க்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ. 392 குறைவு
- குறைகிறது எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்
- என்டிஎம்சி அதிகாரி கொலை விவகாரம்: கேஜரிவாலுக்கு பாஜக எம்.பி. சவால்
- ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம்
- ரூ.2 கோடி போதை பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது
- சிவசேனையின் பொன் விழா: பாஜகவுக்கு அழைப்பு இல்லை
- புது தில்லி
- தில்லி தமிழ் சங்கத்தில் இன்று, நாளை சிறப்பு நிகழ்ச்சிகள்
- டிஜேபி டேங்கர்கள் முறைகேட்டில் உள்நோக்குடன் பாஜக பிரசாரம்
- டிஜிஹெச்எஸ் அலுவலக இடமாற்ற உத்தரவு வாபஸ்
- தலைநகரில் 7 இடங்களில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
- மழை, வெள்ளம் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை
- நெடுஞ்சாலைகளில் விமானங்களைத் தரையிறக்கும் வசதி: மத்திய அரசு திட்டம்
- விடைத்தாள் திருத்தும் பணியை தொடர டி.யு. ஆசிரியர்கள் முடிவு
- 100 வயது மூதாட்டியின் இதயத்தில் "பேஸ்மேக்கர்' பொருத்தி சாதனை
- ரூ. 2 கோடி மோசடி: டிஜேபி முன்னாள் அதிகாரி மீது வழக்கு
- பேரவைச் செயலர்கள் விவகாரம்: "கேள்வியெழுப்பும் தார்மீக உரிமை காங்கிரஸ், பாஜகவுக்கு கிடையாது'
- "பெண்களால் தொடுக்கப்பட்ட 12 சதவீத வழக்குகள் நிலுவை'
- ஜூலை 31-க்குள் கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: மும்பை நீதிமன்றம் உத்தரவு
- கோயில் சேதம் குறித்து வதந்தி: ஜம்முவில் இணையச்சேவை முடக்கம்
- தில்லி பல்கலை. விண்ணப்பங்கள் மூன்று லட்சத்தை கடந்தது
- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தூத்துக்குடியில் ராட்சத கிரேன் மூலம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட மாதா கெபி
- தூத்துக்குடியில் நாளை மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்: 2 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
- திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- திருப்பணிசெட்டிக்குளத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்
- வாஞ்சிநாதன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
- கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம்
- தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஜூன் 18 மின்தடை
- சாத்தான்குளம் அருகே திருமண்டில செயற்குழு பெண் உறுப்பினர் கைது
- தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
- தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நலக் கூட்டணி வலுப்பெறும்
- தூத்துக்குடி சிவன் கோயில் முன்பிருந்த இரும்பு கேட் திடீர் அகற்றம்: 3 பேர் கைது
- கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- "கால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம்'
- கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- மலையோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை: 100 வீடுகள் சேதம்; வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன
- அணை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாக தொடக்கம்
- திருச்சானூரில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்
- நன்கொடையாளர்கள் வாடகை அறை முன்பதிவு செய்யும் முறை ரத்தாகிறது
- திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு
- மீனவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது இந்திய கடற்படை: கடற்படை அலுவலர் அலோக்பட்நாகர் தகவல்
- ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.78 கோடி
- அடுத்த தலைமுறை இணையம் தாற்காலிகமாக தொடக்கம்
- அரக்கோணம் நகர்மன்றக் கூட்டம்: திமுக புறக்கணிப்பு
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் பணியிட மாற்றம்
- சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவிக்கு ரூ.50,000 நிதியுதவி: வேலூர் விஐடி வேந்தர் வழங்கினார்
- ஜூன் 18 மின் தடை
| அமெரிக்க அதிபர் தேர்தல்:ஹிலாரிக்கு ஜெயலலிதா வாழ்த்து Posted: 17 Jun 2016 01:26 PM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். |
| கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் இன்று முதல் நீராவியை வெளியேற்றி சோதனை Posted: 17 Jun 2016 01:26 PM PDT கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் கிரிட்டிகாலிட்டிக்கு (அணுப் பிளவு) முந்தைய ஆயத்தப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுவதாக அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார். |
| Posted: 17 Jun 2016 01:25 PM PDT வழித்தட ஆக்கிரமிப்புகளால் கல்லாறு வனப் பகுதிக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கடந்த 10 நாள்களாக யானைக் கூட்டம் தவிப்புக்குள்ளாகி வருகிறது. |
| பிளஸ் 2 தேர்வெழுதியவர்களுக்கு ஜூன் 20 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் Posted: 17 Jun 2016 01:24 PM PDT பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும். |
| புதிய திருத்தங்கள் குறித்த ஆய்வு முடியும் வரை வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை இல்லை:உயர் நீதிமன்றம் Posted: 17 Jun 2016 01:24 PM PDT வழக்குரைஞர் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்கள் ஆய்வு நிலுவையில் இருக்கும்வரை, அதன்படி வழக்குரைஞர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், இது வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிட்டு அவர்கள் பணிக்கு திரும்புவதை பொருத்து அமையும். |
| Posted: 17 Jun 2016 01:10 PM PDT வெப்பச் சலனத்தின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் சனிக்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| Posted: 17 Jun 2016 01:09 PM PDT என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக வரும் 23-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில், ஜூலை 1-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
| புதிய அணை நிலைப்பாட்டுக்கு தமிழகம் மாற வேண்டும்:உம்மன்சாண்டி Posted: 17 Jun 2016 01:09 PM PDT முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் நிலைப்பாட்டுக்கு தமிழகம் மாற வேண்டும் என, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். |
| சம்ஸ்கிருதம் பற்றி திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை Posted: 17 Jun 2016 01:08 PM PDT சம்ஸ்கிருதம் குறித்து திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெள்ளிக்கிழமை கூறினார். |
| வீராணம் ஏரியில் 100 கோடி கனஅடி நீரைத் தேக்க நடவடிக்கை: ஆட்சியர் Posted: 17 Jun 2016 01:08 PM PDT வீராணம் ஏரியில் 100 கோடி கனஅடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். |
| வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கும்:எஸ்ஆர்எம்யு தலைவர் நம்பிக்கை Posted: 17 Jun 2016 01:07 PM PDT ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) |
| தலைமைக் காவலர் கொலை சம்பவம்: கூடுதல் டி.ஜி.பி. திரிபாடி நேரில் விசாரணை Posted: 17 Jun 2016 01:07 PM PDT ஒசூரில் தலைமைக் காவலர் முனுசாமி குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி. திரிபாடி வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினார். மேலும், கத்திக் குத்தில் காயமடைந்த மற்ற போலீஸாரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். |
| அஞ்சலகத்தில் ரூ.1 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை Posted: 17 Jun 2016 01:06 PM PDT காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் ரூ.1 கோடி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடக்கிறது. |
| Posted: 17 Jun 2016 12:33 PM PDT நடந்து முடிந்த மாநிலங்களவைக்கான தேர்தலில் 30 பேர் போட்டியின்றியும், 27 பேர் போட்டி மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு, 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், |
| Posted: 17 Jun 2016 12:32 PM PDT இந்திய அரசு தன் குடிமக்கள், வேற்று நாட்டு மக்கள் என்று பேதம் பார்க்காமல் வழங்கும் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா. 1954-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்தெந்தத் துறைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, ராணுவத்தினர், விளையாட்டு வீரர்களை கெளரவிக்கத் தனியாக உயரிய விருதுகள் இருக்கின்றன. |
| Posted: 17 Jun 2016 12:31 PM PDT அம்மாவைக் கொண்டாடுகிற அளவுக்கு நாம் அப்பாவைக் கொண்டாடுவதில்லை. கண்டிப்பும் கறாருமாக இருக்கும் அப்பாவை பெரும்பாலான பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. குழந்தைகளுக்கு எப்போதும் செல்லம் கொஞ்சுகிற அம்மா மீதுதான் பிரியம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. |
| ஆளுநர் உரை மீதான விவாதம்:திமுகவினர் மூவர் பேச அனுமதிக்கக் கோரிக்கை Posted: 17 Jun 2016 12:28 PM PDT ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேச திமுக சார்பில் மூன்று உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| இந்தியா - தாய்லாந்து இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து Posted: 17 Jun 2016 12:28 PM PDT இந்தியாவுக்கு தாய்லாந்து பிரதமர் வருகைத் தந்ததையொட்டி, இரு நாடுகள் இடையே கலாசாரப் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட இரண்டு ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின. |
| காங்கிரஸின் ஆதரவு இல்லாமலேயே ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முயற்சி Posted: 17 Jun 2016 12:27 PM PDT நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதாவை காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். |
| பிற கட்சியினரை விமர்சிக்காமல் டெபாசிட் பெற பாஜக முயல வேண்டும்:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவுறுத்தல் Posted: 17 Jun 2016 12:26 PM PDT தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்வதில் கவனம் செலுத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் பெறுவதற்கு பாஜக தலைவர்கள் முயல வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவுரை வழங்கினார். |
| மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் Posted: 17 Jun 2016 12:25 PM PDT சட்டப் பேரவையின் முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு பேரவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூன் 20) ஒத்திவைக்கப்பட்டது. |
| இரங்கல் தெரிவித்து அவையைஒத்திவைப்பது புதிதல்ல:மு.க.ஸ்டாலின் புகாருக்கு விளக்கம் Posted: 17 Jun 2016 12:25 PM PDT சட்டப் பேரவை உறுப்பினரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவையை ஒத்திவைப்பது புதிய நடைமுறையல்ல என்று, பேரவைச் செயலக முன்னாள் உயரதிகாரிகள் விளக்கம் அளித்தனர். |
| தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்க நடைமுறை:நாடாளுமன்ற நிலைக் குழு 21-இல் சென்னையில் ஆய்வு Posted: 17 Jun 2016 12:24 PM PDT தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்க நடைமுறைகளை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக் குழு தமிழகம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வரும் 20 முதல் 25-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செல்கிறது. |
| இந்திய உதவியுடன் யாழ்ப்பாண மைதானம்: இன்று திறப்பு Posted: 17 Jun 2016 12:23 PM PDT இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவும் சனிக்கிழமை (ஜூன் 18) கூட்டாக திறந்து வைக்கவுள்ளனர். |
| சண்டீகரில் ஜூன் 21-இல் சர்வதேச யோகா தினம்: மோடி பங்கேற்பு Posted: 17 Jun 2016 12:22 PM PDT சர்வதேச யோகா தினத்தையொட்டி, சண்டீகரில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள யோகக் கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதால், அந்நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. |
| கைரானாவில் இருந்து யாரும் இடம்பெயரவில்லை:உ.பி.அமைச்சர் Posted: 17 Jun 2016 12:22 PM PDT "உத்தரப் பிரதேச மாநிலம், கைரானாவில் இருந்து ஹிந்துக்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள் என்பது உண்மையல்ல; அதுபோன்று யாரும் வெளியேறவில்லை' என அந்த மாநில அமைச்சர் சிவபால் யாதவ் தெரிவித்தார். |
| காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 17 Jun 2016 12:17 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| ஜிஎஸ்டி மசோதாவால் பொருளாதாரத்தில் மாற்றம் நிகழாது Posted: 17 Jun 2016 12:15 PM PDT சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவால் பொருளாதார மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் ஏற்படாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். |
| உ.பி.யில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக, சமாஜவாதி முயற்சி Posted: 17 Jun 2016 12:14 PM PDT உத்தரப் பிரதேசத்தில் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கி அரசியல் ஆதாயமடைய பாஜகவும், சமாஜவாதி கட்சியும் முயலுகின்றன என்று மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டினார். |
| "பொலிவுறு நகரம்' திட்டம்: ஜூன் 25-இல் தொடக்கி வைக்கிறார் மோடி Posted: 17 Jun 2016 12:13 PM PDT பொலிவுறு நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம், புணேவில் பிரதமர் மோடி, வரும் 25-ஆம் தேதி தொடக்கி வைக்கிறார் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். |
| ராமகிருஷ்ண மடத்தின் சன்யாசிக்கு கொலை மிரட்டல் விவகாரம்: வங்கதேசத்திடம் எழுப்பியது இந்தியா Posted: 17 Jun 2016 12:11 PM PDT வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் சன்யாசிக்கு மர்மக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த விவகாரத்தை அந்நாட்டு அரசிடம் இந்தியா எழுப்பியுள்ளது. |
| Posted: 17 Jun 2016 12:11 PM PDT மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகளை தனியார் நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| யூரோ கோப்பை :காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலி Posted: 17 Jun 2016 12:09 PM PDT யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தியதன் மூலம் நாக் அவுட் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. |
| கோபா அமெரிக்கா கால்பந்:அரையிறுதியில் அமெரிக்கா Posted: 17 Jun 2016 12:08 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தனது காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை தோற்கடித்தது. |
| ரியோ ஒலிம்பிக்: தமிழக வீரர் சதீஷ் குமார் களமிறங்குகிறார் Posted: 17 Jun 2016 12:08 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் களமிறங்குகிறார். இவர் வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர். |
| ஒலிம்பிக் தகுதிச் சுற்று:2-ஆவது சுற்றில் மனோஜ் குமார் Posted: 17 Jun 2016 12:07 PM PDT சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்று வரும் குத்துச்சண்டைக்கான உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனோஜ் குமார் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி:முதல்முறையாக இறுதிச் சுற்றில் இந்தியா Posted: 17 Jun 2016 12:07 PM PDT சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிரிட்டன்-பெல்ஜியம் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததன் மூலம் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிச்சுற்றில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா. |
| டொரன்டோ மாஸ்டர்ஸில் களமிறங்குகிறார் நடால் Posted: 17 Jun 2016 12:05 PM PDT டொரன்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் களமிறங்குகிறார். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஃபார்முக்கு திரும்புவதற்காக அவர் டொரன்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் ஆடுகிறார். |
| ஹராரேவில் இன்று நடைபெறுகிறது இந்தியா-ஜிம்பாப்வே முதல் டி20 Posted: 17 Jun 2016 12:05 PM PDT இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| ஆப்கன் - பாக் எல்லைப் பகுதியில் லஷ்கர்,ஹக்கானி, தலிபான்கள் ஆதிக்கம்:அமெரிக்க சி.ஐ.ஏ. தலைவர் Posted: 17 Jun 2016 12:03 PM PDT உலகம் முழுவதும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் நிலவும் அச்சுறுத்தல் முதலிடம் வகித்தாலும், ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்கள், ஹக்கானி அமைப்பு, லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளே ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பின் இயக்குநர் ஜான் பிரென்னன் தெரிவித்தார். |
| ஃபலூஜா மாகாணத் தலைமையகம் ஐ.எஸ்.ஸிடமிருந்து மீட்பு Posted: 17 Jun 2016 12:02 PM PDT இராக்கின் ஃபலூஜா மாகாணத் தலைமையகத்தை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து அந்த நாட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| உடலுக்குள் 1.5 மீட்டர் இரும்புக் கம்பி பாய்ந்தும் உயிர் பிழைத்த அதிசய நபர்! Posted: 17 Jun 2016 12:02 PM PDT கட்டுமானப் பணியின்போது உயரத்திலிருந்து விழுந்ததில், உடலுக்குள் 1.5 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி பாய்ந்து தலை வழியாக வெளியேறியும், 46 வயது சீனத் தொழிலாளி அதிசயமாக உயிர் பிழைத்தார். |
| அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் Posted: 17 Jun 2016 12:00 PM PDT சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். |
| மாணவனுக்கு கத்திக் குத்து:11வயதுச் சிறுவன் கைது Posted: 17 Jun 2016 12:00 PM PDT சக மாணவனைக் கத்தியால் குத்திய 11 வயதுச் சிறுவனை பிரான்ஸ் போலீஸார் கைது செய்தனர். அந்நாட்டின் லியோன் நகரின் அனடோல் பிரான்ஸ் பள்ளியில் புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். |
| மலேசியத் தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்: ஒபாமா பரிந்துரை Posted: 17 Jun 2016 11:59 AM PDT அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் பதவிக்கு கமலா ஷிரின் லக்திர் என்கிற இந்திய வம்சாவளிப் பெண்ணை நியமிப்பதாக அதிபர் ஒபாமா அறிவித்தார். |
| எச்.டி.எப்.சி. லைஃப் நிறுவனத்துடன் இணைகிறது மேக்ஸ் லைஃப் Posted: 17 Jun 2016 11:59 AM PDT எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தை இணைக்கும் வகையிலான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 17 Jun 2016 11:58 AM PDT சென்ற 2015-16 நிதி ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாத அளவில் 123.30 கோடி கிலோவாக அதிகரித்தது என தேயிலை வாரியம் தெரிவித்தது. |
| தென் கொரியாவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்த நடவடிக்கை Posted: 17 Jun 2016 11:58 AM PDT தென் கொரியாவுடனான வர்த்தகத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். |
| "பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதில் வெற்றி' Posted: 17 Jun 2016 11:54 AM PDT பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதில் தொடர்ந்து வெற்றி கண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை Posted: 17 Jun 2016 11:53 AM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. |
| திருட்டு வி.சி.டி.க்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் Posted: 17 Jun 2016 11:52 AM PDT திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்தி அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கூறினார். |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ. 392 குறைவு Posted: 17 Jun 2016 11:51 AM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.22,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| குறைகிறது எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் Posted: 17 Jun 2016 11:51 AM PDT தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான அனைத்துப் பிரிவு (ஓ.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. |
| என்டிஎம்சி அதிகாரி கொலை விவகாரம்: கேஜரிவாலுக்கு பாஜக எம்.பி. சவால் Posted: 17 Jun 2016 11:51 AM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரி கொல்லப்பட்ட விவகாரத்தில், பொது விவாதத்துக்கு தயாரா? என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாஜக எம்.பி. மகேஷ் கிரி சவால் விடுத்துள்ளார். |
| ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம் Posted: 17 Jun 2016 11:51 AM PDT தெற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் 25 வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ரூ.2 கோடி போதை பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது Posted: 17 Jun 2016 11:51 AM PDT தில்லியில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் 2 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். |
| சிவசேனையின் பொன் விழா: பாஜகவுக்கு அழைப்பு இல்லை Posted: 17 Jun 2016 11:51 AM PDT தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சியின் 50-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு பாஜகவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. |
| Posted: 17 Jun 2016 11:49 AM PDT |
| தில்லி தமிழ் சங்கத்தில் இன்று, நாளை சிறப்பு நிகழ்ச்சிகள் Posted: 17 Jun 2016 11:49 AM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை (ஜூன் 18) பரத நாட்டிய நிகழ்ச்சியும், கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) திரைப்பட மெல்லிசை மற்றும் சமூக நாடகங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. |
| டிஜேபி டேங்கர்கள் முறைகேட்டில் உள்நோக்குடன் பாஜக பிரசாரம் Posted: 17 Jun 2016 11:48 AM PDT தில்லி குடிநீர் வாரியத்தின் (டிஜேபி) தண்ணீர் டேங்கர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக பிரசாரம் செய்வதாக தில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் குற்றம்சாட்டினார். |
| டிஜிஹெச்எஸ் அலுவலக இடமாற்ற உத்தரவு வாபஸ் Posted: 17 Jun 2016 11:48 AM PDT தில்லி கட்கர்டூமாவில் செயல்பட்டு வரும் தில்லி சுகாதார சேவை (டிஜிஹெச்எஸ்) தலைமை இயக்குநர் அலுவலகத்தை லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனைக்கு மாற்ற பிறப்பித்த உத்தரவை தில்லி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. |
| தலைநகரில் 7 இடங்களில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி Posted: 17 Jun 2016 11:47 AM PDT சர்வதேச யோகா தினத்தையொட்டி, தில்லியில் 7 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. |
| மழை, வெள்ளம் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை Posted: 17 Jun 2016 11:47 AM PDT தில்லியில் பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து புகார்களைத் தெரிவிக்க கட்டுபாட்டு அறையையும், இலவச தொலைபேசி எண்ணையும் தில்லி அரசு அறிவித்துள்ளது. |
| நெடுஞ்சாலைகளில் விமானங்களைத் தரையிறக்கும் வசதி: மத்திய அரசு திட்டம் Posted: 17 Jun 2016 11:46 AM PDT தொலை தூரப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் விமானங்களைத் தரையிறக்கும் வசதியைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| விடைத்தாள் திருத்தும் பணியை தொடர டி.யு. ஆசிரியர்கள் முடிவு Posted: 17 Jun 2016 11:45 AM PDT பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து வந்த தில்லி பல்கலைக்கழக (டி.யு.) ஆசிரியர்கள், இறுதியாண்டு மாணவர்களின் விடைத்தாள்களை மட்டும் திருத்த முடிவு செய்துள்ளனர். |
| 100 வயது மூதாட்டியின் இதயத்தில் "பேஸ்மேக்கர்' பொருத்தி சாதனை Posted: 17 Jun 2016 11:45 AM PDT தில்லியிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றில் 100 வயது மூதாட்டியின் இதயத் துடிப்பை சீராக்குவதற்காக அவருக்கு "பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது. |
| ரூ. 2 கோடி மோசடி: டிஜேபி முன்னாள் அதிகாரி மீது வழக்கு Posted: 17 Jun 2016 11:45 AM PDT தில்லி குடிநீர் வாரிய (டிஜேபி) தண்ணீர் கட்டணம் வசூலில் ரூ.2 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற டிஜேபி அதிகாரி மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. |
| பேரவைச் செயலர்கள் விவகாரம்: "கேள்வியெழுப்பும் தார்மீக உரிமை காங்கிரஸ், பாஜகவுக்கு கிடையாது' Posted: 17 Jun 2016 11:44 AM PDT ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேர், பேரவைச் செயலர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வியெழுப்ப காங்கிரஸ், பாஜகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. |
| "பெண்களால் தொடுக்கப்பட்ட 12 சதவீத வழக்குகள் நிலுவை' Posted: 17 Jun 2016 11:44 AM PDT கீழமை நீதிமன்றங்களில் பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட 12 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றக் குழு தெரிவித்துள்ளது. |
| ஜூலை 31-க்குள் கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: மும்பை நீதிமன்றம் உத்தரவு Posted: 17 Jun 2016 11:43 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கடற்கரைகளில் நீச்சல் பயிற்சியாளர்களை பணியமர்த்துவது, எச்சரிக்கை சமிக்ஞைகள் அளிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைள் அடுத்த மாதம் (ஜூலை) 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. |
| கோயில் சேதம் குறித்து வதந்தி: ஜம்முவில் இணையச்சேவை முடக்கம் Posted: 17 Jun 2016 11:43 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கோயில் சேதப்படுத்தப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, ஜம்மு பகுதியில் இணையதளச் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| தில்லி பல்கலை. விண்ணப்பங்கள் மூன்று லட்சத்தை கடந்தது Posted: 17 Jun 2016 11:42 AM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர பதிவான விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மூன்று லட்சத்தை கடந்தது. |
| பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Jun 2016 11:42 AM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடியில் ராட்சத கிரேன் மூலம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட மாதா கெபி Posted: 17 Jun 2016 11:41 AM PDT தூத்துக்குடியில் நவீன வசதிகளுடன் கூடிய ராட்சத கிரேன் மூலம் மாதா கெபி ஒன்று வெள்ளிக்கிழமை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. |
| தூத்துக்குடியில் நாளை மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்: 2 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு Posted: 17 Jun 2016 11:41 AM PDT மத்திய அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க கூட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். |
| திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 17 Jun 2016 11:40 AM PDT திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை, கரிசன்விளை, குதிரைமொழி ஆகிய கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| திருப்பணிசெட்டிக்குளத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம் Posted: 17 Jun 2016 11:40 AM PDT ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி மன்றத்துக்குள்பட்ட திருப்பணிசெட்டிக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் சனிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது. |
| வாஞ்சிநாதன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 17 Jun 2016 11:39 AM PDT சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினத்தையொட்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நூதனப் போராட்டம் Posted: 17 Jun 2016 11:39 AM PDT கோவில்பட்டி வட்டம், முடுக்கலாங்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லிணக்க பண்பாட்டுக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஜூன் 18 மின்தடை Posted: 17 Jun 2016 11:38 AM PDT தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாத்தான்குளம் அருகே திருமண்டில செயற்குழு பெண் உறுப்பினர் கைது Posted: 17 Jun 2016 11:38 AM PDT சாத்தான்குளம் அருகே குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில செயற்குழு பெண் உறுப்பினரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 17 Jun 2016 11:37 AM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 ஆவது அலகில் வெள்ளிக்கிழமை பழுது ஏற்பட்டது. ஏற்கெனவே, 4 ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்போது 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நலக் கூட்டணி வலுப்பெறும் Posted: 17 Jun 2016 11:37 AM PDT மக்கள் நலக் கூட்டணி நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது; இனி தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மேலும் வலுப்பெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். |
| தூத்துக்குடி சிவன் கோயில் முன்பிருந்த இரும்பு கேட் திடீர் அகற்றம்: 3 பேர் கைது Posted: 17 Jun 2016 11:36 AM PDT தூத்துக்குடியில் சிவன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டை சிலர் வியாழக்கிழமை நள்ளிரவு அகற்றியதால் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 17 Jun 2016 11:36 AM PDT களியக்காவிளை அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்த 4 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| "கால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம்' Posted: 17 Jun 2016 11:36 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம். |
| கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 17 Jun 2016 11:35 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மலையோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை: 100 வீடுகள் சேதம்; வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்தன Posted: 17 Jun 2016 11:35 AM PDT குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 100 வீடுகள் வரை சேதமாகின. |
| அணை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 17 Jun 2016 11:34 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் அணை மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாக தொடக்கம் Posted: 17 Jun 2016 11:33 AM PDT திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் ஜேஷ்டாபிஷேகம் விமரிசையாகத் தொடங்கியது. |
| திருச்சானூரில் 2-ஆம் நாள் தெப்போற்சவம் Posted: 17 Jun 2016 11:33 AM PDT திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
| நன்கொடையாளர்கள் வாடகை அறை முன்பதிவு செய்யும் முறை ரத்தாகிறது Posted: 17 Jun 2016 11:33 AM PDT திருமலையில் நன்கொடையாளர்கள் முன்பணம் அனுப்பி வாடகை அறைக்கு முன்பதிவு செய்யும் முறையை தேவஸ்தானம் வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் ரத்து செய்ய உள்ளது. |
| திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு Posted: 17 Jun 2016 11:33 AM PDT திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க முடியாது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. |
| மீனவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது இந்திய கடற்படை: கடற்படை அலுவலர் அலோக்பட்நாகர் தகவல் Posted: 17 Jun 2016 11:33 AM PDT தமிழக கடலோரப் பகுதி வாழ் மீனவர்கள் எல்லை தாண்டாமல் மீன்பிடிக்க உதவி செய்யும் வகையிலும், பாதுகாப்பாக மீன்பிடிக்கவும் பல்வேறு உதவிகளை செய்துவரும் இந்திய கடற்படை, தமிழக வாழ் மீனவர்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது என கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பு அலுவலர் ரியர் அட்மிரல் அலோக்பட்நாகர் தெரிவித்தார். |
| ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.78 கோடி Posted: 17 Jun 2016 11:33 AM PDT திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.78 கோடி வசூலானது. |
| அடுத்த தலைமுறை இணையம் தாற்காலிகமாக தொடக்கம் Posted: 17 Jun 2016 11:33 AM PDT அடுத்த தலைமுறை இணைய தளத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தாற்காலிகமாகத் தொடங்கி உள்ளது. |
| அரக்கோணம் நகர்மன்றக் கூட்டம்: திமுக புறக்கணிப்பு Posted: 17 Jun 2016 11:33 AM PDT அரக்கோணம் நகர்மன்றக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, துணைத் தலைவர் மற்றும் திமுக உறுப்பினர்கள் 17 பேரும் ஒட்டு மொத்தமாக அவையைப் புறக்கணித்தனர். |
| வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் பணியிட மாற்றம் Posted: 17 Jun 2016 11:33 AM PDT வேலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். |
| Posted: 17 Jun 2016 11:33 AM PDT துருக்கி நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவிக்கு வேலூர் விஐடி பல்கலை. சார்பில் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. |
| Posted: 17 Jun 2016 11:33 AM PDT |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |