Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்: மசோதா நிராகரிக்கப்பட்டதால் கோபம்

Posted: 14 Jun 2016 08:57 AM PDT

புதுடில்லி: ''ஆம் ஆத்மி கட்சியின், 21 எம்.எல்.ஏ.,க்களை அமைச்சர்களின் செயலர்களாக நியமிக்கும் மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடியே காரணம்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டில்லி சட்டசபையின், 70 உறுப்பினர்களில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, 67 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 21 எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் செயலர்களாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரி, மசோதா நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஜனாதி பதிக்கு அனுப்பப்பட்டது. இந்த, 21 எம்.எல்.ஏ.,க் களும், ஆதாயம் தரும் ...

'ப்ரிஜ் கெட்டுப்போச்சு; உதவி பண்ணுங்க': 'டுவிட்டரில்' சுஷ்மாவுக்கு வந்த கோரிக்கை

Posted: 14 Jun 2016 09:00 AM PDT

புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஓய்வின்றி பணியாற்றி வரும் மத்திய அமைச்சர்களில் ஒருவர். இத்தனை பணிகளுக்கு இடையில், 'ப்ரிஜ்' பழுதாகி விட்டதாக, புகார் கூறிய ஒருவருக்கு, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், சுஷ்மா பதிலளித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா, சர்வதேச நாடுகளுடனான உறவு மேம்பாட்டுக் காக, ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால், அதற்கு தேவையான ஏற்பாடுகளையும், சுஷ்மா நிர்வகிக்கும் துறைதான் கவனிக்கிறது. சுஷ்மா சுவராஜ், நேரம் ...

ராஜ்யசபாவில் 45; லோக்சபாவில் 5 மசோதாக்கள்...நிலுவை 30 ஆண்டுகளாக தூங்கும் மருத்துவ கவுன்சில் மசோதா

Posted: 14 Jun 2016 09:35 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஜ்யசபாவில், 45; லோக்சபாவில், ஐந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 30 ஆண்டுகளுக்கு முன், தாக்கல் செய்யப்பட்ட மசோதாவும் அடங்கும்.

பார்லிமென்ட் கூட்டத் தொடர்கள், ஆறு மாத இடைவெளியில் கட்டாயம் கூட்டப்பட வேண்டும். பிப்ரவரி - மே பட்ஜெட் கூட்டத் தொடர்; ஜூலை - செப்டம்பர் மழைக்கால கூட்டத் தொடர்; நவம்பர் - டிசம்பர் குளிர்கால கூட்டத் தொடர் என, பார்லிமென்ட் மூன்று முறை கூடுகிறது. பார்லிமென்டின் இந்தக் ...

முதல்வர் வேட்பாளரை அறிவித்து உ.பி., தேர்தலை சந்திக்க காங்., திட்டம்

Posted: 14 Jun 2016 09:38 AM PDT

லக்னோ: உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிட, காங்., திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில காங்., பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தில், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான, ஏற்பாடு களை, பிரதான கட்சிகள் இப்போதே செய்யத் துவங்கி விட்டன. உ.பி., மாநில காங்., பொறுப்பாளராக, குலாம் நபி ஆசாத் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவித்து, போட்டி யிட ...

தமிழகத்திற்கு ரூ.83,475 கோடி தேவை! 29 கோரிக்கைகளை பட்டியலிட்டு, பிரதமரிடம் ஜெ., மனு

Posted: 14 Jun 2016 09:51 AM PDT

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்க வேண்டிய, 83 ஆயிரத்து, 475 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

பிரதமரை சந்திப்பதற்காக, நேற்று காலை தனி விமானம் மூலம், முதல்வர் ஜெயலலிதா, டில்லி சென்றார். அவருக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.மாலை, 4:45 மணிக்கு, பிரதமர் இல்லத்தில், பிரதமர் மோடியை, முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது, 29 கோரிக்கைகள் அடங்கிய, 96 பக்க மனுவை, அவரிடம் வழங்கினார். மனுவில் இடம் பெற்றுள்ள வளர்ச்சி பணிகளை ...

தமிழர் பகுதிகளில் ராணுவம் அகற்ற கருணாநிதி கோரிக்கை

Posted: 14 Jun 2016 10:20 AM PDT

சென்னை,:'இலங்கை தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை அகற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போருக்குப் பின், அங்கே, தமிழர் கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களில், ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை க்கு அச்சுறுத்தல் தொடர்கிறது. தமிழர்கள் வாழும், இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.'தமிழர்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்க ...

பொது இடங்களில் புகைத்த ஆயிரம் பேர்...சிக்கினா! :ஐகோர்ட் உத்தரவால் அதிகாரிகள் அதிரடி

Posted: 14 Jun 2016 10:46 AM PDT

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விழிப்படைந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும், நேற்று திடீர் சோதனை நடத்தி, பொது இடங்களில் புகைபிடித்த, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இன்று முதல், போலீஸ், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், புகை பழக்கம் உள்ளோர் உஷாராக இருப்பது நல்லது.சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவர், 'பொது இடத்தில் புகை பிடிப்போர் மீது, சட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ...

தலித்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுங்க!: பா.ஜ., தலைவர்களுக்கு அமித் ஷா உத்தரவு

Posted: 14 Jun 2016 10:52 AM PDT

உ.பி., மாநிலம், அலகா பாத்தில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், தேசிய அளவில் கட்சியை வேகமாக வளர்த்தெடுப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

அதேநேரத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது உட்பட, தமிழக பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை சமர்ப்பித்தார்.பின், தமிழிசை சவுந்தரராஜன் உட்பட, மாநில தலைவர்கள் பலரிடமும், கட்சியின் தேசிய தலைவர் அமித் ...

நான்கு மேயர், 25 சதவீத பங்கீடு தி.மு.க.,விடம் கேட்கிறது காங்.,

Posted: 14 Jun 2016 12:36 PM PDT

உள்ளாட்சி தேர்தலில், நான்கு மேயர் உட்பட, 25 சதவீத இடங்களை, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இரண்டு மேயர் உட்பட, 15 சதவீத இடங்களை ஒதுக்கலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசுக்கு, ௪௧ தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 'வரும் உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஒரு தரப்பினர், 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட ...

கைக்குழந்தையுடன் ரயில் பயணம் 'ஜனனி சேவா' திட்டம் அறிமுகம்

Posted: 14 Jun 2016 12:42 PM PDT

பொள்ளாச்சி: கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் வசதிக்காக, இந்திய ரயில்வே, 'ஜனனி சேவா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக கைக்குழந்தைகளை வீட்டில் பராமரிப்பது என்பதே மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தையுடன் பயணிக்க வேண்டிய சூழல் நேரும் போது, அக்குழந்தையின் தாய், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவர்.பயணத்தின் போது, குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்கள் கிடைக்காதது தான் இதற்கு காரணம்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தெற்கு ரயில்வே சார்பில், 'ஜனனி சேவா' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ...

ஆப்பிள் டெவலப்பர்ஸ் மாநாட்டில் 9 வயது சிறுமி

Posted: 14 Jun 2016 03:03 PM PDT

சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவன சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட 9 வயது பள்ளி சிறுமி அன்விதா விஜய், அம்மாநாட்டில் கலந்து கொண்ட மிக இளம் வயது வயதுடையவர் என்ற பெருமை பெற்றார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்ஸ் மாநாட்டில், 9 வயதுடைய பள்ளி மாணவி அன்விதா விஜய் கலந்து கொண்டு அசத்தியுள்ளார். இந்திய வம்சாவளி மாணவியான இவர், ஆப்பிள் ஓ.எஸ்.,சில் குழந்தைகளுக்கான 'ஆப்'பை வடிவமைக்கும் பொறுப்புக்காக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™