Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 6 பந்தயக் குதிரைகள் சாவு

Posted: 14 Jun 2016 01:21 PM PDT

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த கனரக லாரி செவ்வாய்க்கிழமை அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குதிரைகள் உயிரிழந்தன.

விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு:அரசின் நிலைப்பாட்டை ஜூன் 27-க்குள் தெரிவிக்க ஆணை

Posted: 14 Jun 2016 01:20 PM PDT

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி, நளினி தாக்கல் செய்த வழக்கில் ஜூன் 27-ஆம் தேதிக்குள் அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு வெளிமாநில அதிகாரிகள்:திமுக வலியுறுத்தல்

Posted: 14 Jun 2016 01:19 PM PDT

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை பாரபட்சம் இல்லாமல் நடத்த, வெளி மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

வேளாண் விளைபொருள் சந்தை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்:மத்திய அமைச்சர் ராதாமோகன்

Posted: 14 Jun 2016 01:18 PM PDT

வேளாண் விளைபொருள் சந்தை, விற்பனைக் குழு ஆகியவற்றை அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய விவசாயம், விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

சத்துணவு மைய சமையல் கூடங்களிலேயே உணவு தயார் செய்ய வேண்டும்:தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

Posted: 14 Jun 2016 01:16 PM PDT

பள்ளிகளில் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவைத் தயார் செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தினார்.

முதல்வர் மனது வைத்தால்...

Posted: 14 Jun 2016 01:16 PM PDT

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் 39-ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவுக்கு வந்திருக்கிறது. பதிமூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏறத்தாழ ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) தெரிவிக்கிறது.

உயர்கல்வியின் இன்றைய நோக்கும் போக்கும்!

Posted: 14 Jun 2016 01:15 PM PDT

நம் நாட்டில் ஒவ்வொரு வருஷமும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு வருஷமும் கோடைக்காலத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எனப்படும் சிறப்புத் திருவிழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் வரிசை, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்கின்றன.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 42 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர்

Posted: 14 Jun 2016 12:56 PM PDT

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து ஜூலை 11-ம் தேதி முதல் நடத்தப்படவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 42 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என்றார் எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் சி.ஏ. ராஜா ஸ்ரீதர்.

மாநிலத்தில் முதலிடம்: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவருக்குப் பாராட்டு

Posted: 14 Jun 2016 12:56 PM PDT

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பி. தருண்குமார் ஏப்ரல் 2016 அரசுத் தேர்வில் மெக்கட்ரானிக்ஸ் துறையில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சிப் பெற்றார்.

மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தின் மூலம் 160 பணிகள் நிறைவு

Posted: 14 Jun 2016 12:56 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவாதப் பொருள்களில் 160 வளர்ச்சிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

தஞ்சாவூரில் பசுமை விழிப்புணர்வுப் பேரணி

Posted: 14 Jun 2016 12:55 PM PDT

உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பசுமை விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவரிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

Posted: 14 Jun 2016 12:55 PM PDT

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை பெண் ஊராட்சித் தலைவரை கீழே தள்ளிவிட்டு தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

Posted: 14 Jun 2016 12:54 PM PDT

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

ரூ. 5 லட்சம் பான் மசாலா, குட்கா பறிமுதல்

Posted: 14 Jun 2016 12:52 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாக்காளர்களுக்கு எம்.எல்.ஏ. நன்றி

Posted: 14 Jun 2016 12:52 PM PDT

ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் அண்மையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இடி, மின்னலின்போது மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்த வேண்டாம்

Posted: 14 Jun 2016 12:51 PM PDT

இடி, மின்னலின்போது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நன்றி அறிவிப்பு கூட்டம்

Posted: 14 Jun 2016 12:51 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நார்த்தாமலை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் இனி நிற்காது

Posted: 14 Jun 2016 12:50 PM PDT

நிர்வாக காரணங்களால் இனி புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை, மற்றும் திண்டுக்கல் அருகேயுள்ள கருப்பட்டி ரயில் நிலையங்களில் சில பயணிகள் ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொற்குடையார் கோவில் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: ஒன்றியக் குழுத் தலைவர் உறுதி

Posted: 14 Jun 2016 12:50 PM PDT

அறந்தாங்கி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவர் பி.எம். பெரியசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

மூக்குடி ஊராட்சியில் புதிய நியாய விலைக் கடை தொடங்கப்படும்

Posted: 14 Jun 2016 12:49 PM PDT

அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்குடி ஊராட்சியில் புதிதாக நியாய விலைக் கடை தொடங்கப்படும் என்றார் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரெத்தினசபாபதி.

அறந்தாங்கியில் ஜூன் 15 மின் தடை

Posted: 14 Jun 2016 12:48 PM PDT

அறந்தாங்கி நகர் மற்றும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது.

குருதி கொடையாளர் விருது

Posted: 14 Jun 2016 12:48 PM PDT

நாகுடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதி கொடையாளர் தின விழாவில் அதிக முறை ரத்த தானம் செய்த தவ்ஹீத்  ஜமாஅத் அமைப்பை சேர்ந்த தாரிக் அகமதுக்கு விருது வழங்கப்பட்டது.

கல்லம்பட்டி பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கான பயிற்சி மையம்

Posted: 14 Jun 2016 12:47 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான பயிற்சி மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

"உலக அளவில் 10.8 கோடி யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளது'

Posted: 14 Jun 2016 12:47 PM PDT

உலக அளவில் இதுவரை 10.8 கோடி யூனிட் ரத்தம் கொடையாகப் பெறப்பட்டுள்ளது என்றார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் த. பரிமளதேவி.

பழுதடைந்த மின் கம்பங்களை சீரமைக்க ஒன்றியக் குழுவில் வலியுறுத்தல்

Posted: 14 Jun 2016 12:46 PM PDT

விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுகை மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள்: ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்: ஆட்சியர் 

Posted: 14 Jun 2016 12:46 PM PDT

புதுக்கோட்டையில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துத் துறையினரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி ஆய்வு

Posted: 14 Jun 2016 12:45 PM PDT

புதுக்கோட்டையில் 127 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை  தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 14 Jun 2016 12:45 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயற்கை வேளாண்மை செயல்விளக்கப் பயிற்சி

Posted: 14 Jun 2016 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் இயற்கை வழி வேளாண்மை குறித்த செயல்விளக்கப் பயற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் விடுதிகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2016 12:44 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்.

குன்னம் தொகுதியில் தேரோட்டம்: எம்எல்ஏ பங்கேற்க மக்கள் எதிர்ப்பு

Posted: 14 Jun 2016 12:43 PM PDT

பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்க குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு கிராம மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

அரியலூர் ஒன்றியக் கூட்டம்

Posted: 14 Jun 2016 12:43 PM PDT

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை பேருந்து நிலையத்தில் கழிவறை கட்ட கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:42 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டித் தருமாறு சோழன்குடி சமூக ஆர்வலர் எஸ்.எஸ். கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் அருகே மக்கள் குறைதீர்க் கூட்டம் புறக்கணிப்பு: பத்திரப் பதிவு அறைக்கு ஆட்சியர் பூட்டு

Posted: 14 Jun 2016 12:41 PM PDT

மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்பதை பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தவிர்த்து வந்ததால்,பத்திரப்பதிவு (நிர்வாகப் பிரிவு) அறைக்கு பூட்டு போட ஆட்சியர் உத்தரவிட்டார். சார் பதிவாளரின் வேண்டுகோளின் படி செவ்வாய்க்கிழமை மதியம் மீண்டும் திறக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 224 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 14 Jun 2016 12:41 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்)செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

ஜூன் 20, 21 தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் செயல்முறை தேர்வு

Posted: 14 Jun 2016 12:40 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அறிவியல் பாடத்துக்கான செய்முறை தேர்வில்  பள்ளி மாணவர்கள்,தனித்தேர்வர்கள் வரும் ஜூன் 20 திங்கள்கிழமை மற்றும் 21 செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு துணைத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நெல் கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

Posted: 14 Jun 2016 12:40 PM PDT

நெல்லுக்கான தொகை தராமல் தலைமறைவான நேரடி கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தா.பழூர் ஒன்றிய விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமாரிடம் மனு அளித்தனர்.

மொபெட் திருடிய இருவர் கைது

Posted: 14 Jun 2016 12:39 PM PDT

கரூரில் வீட்டு முன் இருந்த மொபெட்டை திருடிய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி, குளித்தலையில் ஜூன் 17-ல் அம்மா திட்ட முகாம்

Posted: 14 Jun 2016 12:39 PM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, குளித்தலையில் வரும் 17-ம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.

சாலை மைய தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதல்: 6 பேர் பலத்த காயம்

Posted: 14 Jun 2016 12:38 PM PDT

கரூரில் சாலையின் மையத் தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

புலியூர், வெள்ளியணையில் எம்எல்ஏ ஆய்வு

Posted: 14 Jun 2016 12:38 PM PDT

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி மற்றும் வெள்ளியணை ஊராட்சிப் பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். கீதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

வெள்ளியணை அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு

Posted: 14 Jun 2016 12:37 PM PDT

வெள்ளியணை அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

டிஎன்பிஎல் ஆலையில் உலக சுற்றுச்சூழல் தின விழா

Posted: 14 Jun 2016 12:37 PM PDT

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு: 157 மனுக்களுக்கு தீர்வு

Posted: 14 Jun 2016 12:36 PM PDT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 157 மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டது.

சுவர் இடிந்து தொழிலாளி சாவு: பொக்லைன் ஓட்டுநர் கைது; ஒப்பந்ததாரர் மீது வழக்கு

Posted: 14 Jun 2016 12:36 PM PDT

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொக்லைன் ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அனுமதியின்றி மதுவிற்ற பெண் கைது

Posted: 14 Jun 2016 12:35 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டி அருகே அனுமதியின்றி மதுவிற்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

திருப்புவனம் புதூர் ஸ்ரீபூமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

Posted: 14 Jun 2016 12:34 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் ஸ்ரீபூமாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேக விழா மற்றும் விளக்குப் பூஜை நடைபெற்றது.

வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:33 PM PDT

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் பீர்க்கலைக்காடு பேருந்து நிறுத்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபத்தில் கடல் அட்டையுடன் 4 மீனவர்கள் கைது

Posted: 14 Jun 2016 12:32 PM PDT

மண்டபம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகில் இருந்த கடல் அட்டையை, கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்து, மீனவர்கள் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் காட்சி பொருளாக உப்பு தண்ணீரை குடிநீராக்கும் இயந்திரம்

Posted: 14 Jun 2016 12:32 PM PDT

திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள உப்பு தண்ணீரை குடிநீராக்கும் இயந்திரம் பயனற்ற நிலையில் உள்ளது.

திருப்புவனம் அருகே பைக் மீது பேருந்து மோதல்: கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 14 Jun 2016 12:32 PM PDT

திருப்புவனம் அருகே திங்கள்கிழமை பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில்  சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

கவிதைக்குடியில் நியாய விலைக்கடை அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 14 Jun 2016 12:31 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கவிதைக்குடி கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க கோரி அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து மனு அளித்தனர்.

சான்று பெற்ற குறுதானிய பயிர்கள் விற்பனைக்கு தயார்: விதைச் சான்று உதவி இயக்குநர் தகவல்

Posted: 14 Jun 2016 12:31 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக குதிரைவாலி, வரகு மற்றும் சாமை ஆகிய குறு தானிய வகைப் பயிர்களின் சான்று பெற்ற விதைகள், 4 மெட்ரிக் டன் விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பதாக, விதைச் சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ். சேக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

காரைக்குடி சிவன் கோயிலில் ஜூன் 21 இல் அருணகிரிநாதர் விழா

Posted: 14 Jun 2016 12:30 PM PDT

காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் அருணகிரிநாதர் விழா ஜூன் 21ம்ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவோருக்கு அழகப்பா பல்கலை.யில் ஜூன் 17 இல் நேருக்கு நேர் நிகழ்ச்சி

Posted: 14 Jun 2016 12:30 PM PDT

ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் எழுத உள்ளோர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூன் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று, பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆற்றுப்படுத்தும் யோகா பயிற்சி

Posted: 14 Jun 2016 12:29 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மனவளக் கலை மன்றத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆற்றுப்படுத்தும் யோகா பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படைவீரர் குழந்தைகள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2016 12:29 PM PDT

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர் சாவு

Posted: 14 Jun 2016 12:28 PM PDT

விருதுநகர் தாதம்பட்டியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 14 Jun 2016 12:28 PM PDT

அருப்புக்கோட்டை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி

Posted: 14 Jun 2016 12:28 PM PDT

தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:27 PM PDT

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:27 PM PDT

சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேன் மோதி பால் வியாபாரி சாவு

Posted: 14 Jun 2016 12:26 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதியதில் பால் வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மல்லி பகுதியில் ஜூன் 18இல் மின்தடை

Posted: 14 Jun 2016 12:26 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லி பகுதியில் ஜூன் 18ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில் தாமதம்: பிளஸ்1 வகுப்புகள் தொடங்குவது எப்போது? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

Posted: 14 Jun 2016 12:25 PM PDT

பிளஸ்1 பாடப்புத்தகங்களை விரைவில் அச்சடித்து வழங்கி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சாலைப் பணியாளர்கள் பதவி உயர்வுக்கான புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:25 PM PDT

தமிழக நெடுஞ்சாலைதுறையில் சாலைப் பணியாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பதவி உயர்வுக்கான புதிய அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க பொது செயலாளர் மு. மாரிமுத்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சிவகாசியில் பந்தல் பொருள்கள் கடையில் தீ விபத்து

Posted: 14 Jun 2016 12:24 PM PDT

சிவகாசியில் உள்ள பந்தல் பொருள்கள் கடையில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை-தக்காளி விலை உயர்வு

Posted: 14 Jun 2016 12:24 PM PDT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு: பொக்லைன் ஓட்டுநர் கைது; ஒப்பந்ததாரர் மீது வழக்கு

Posted: 14 Jun 2016 12:23 PM PDT

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொக்லைன் ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேனி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புகைபிடித்த 5 பேர் கைது

Posted: 14 Jun 2016 12:23 PM PDT

தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புகை பிடித்த 5 பேரை க.விலக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 பேர் மீது வழக்கு

Posted: 14 Jun 2016 12:22 PM PDT

போடியில், செவ்வாய்க்கிழமை பள்ளி அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 கடைக்காரர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புற்று நோய் விழிப்புணர்வு: கொடைக்கானலில் மத்திய பிரதேச இளைஞர் பிரசாரம்

Posted: 14 Jun 2016 12:21 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடைக்கானலில் திங்கள்கிழமை புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

தேனி ஒன்றியத்தில் அடிப்படை வசதிக்கு ரூ.62.25 லட்சம் ஒதுக்கீடு

Posted: 14 Jun 2016 12:20 PM PDT

தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதி பணிகளுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.62.25 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒன்றியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்புத் துறையில் உறவை மேம்படுத்த இந்தியா, கானா முடிவு

Posted: 14 Jun 2016 12:20 PM PDT

பயங்கரவாதச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புத் துறையில் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவும், கானாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மீத்திறன் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு

Posted: 14 Jun 2016 12:20 PM PDT

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மீத்திறன் கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்:மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

Posted: 14 Jun 2016 12:19 PM PDT

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி, யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள் என்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

கொடைக்கானல் அருகே மர்மக் காய்ச்சலால் 4 பேர் பாதிப்பு

Posted: 14 Jun 2016 12:19 PM PDT

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் மர்மக் காய்ச்சலால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் நூதன போராட்டம்

Posted: 14 Jun 2016 12:19 PM PDT

வழக்குரைஞர்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி: தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் ஆதரவு

Posted: 14 Jun 2016 12:19 PM PDT

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 14 Jun 2016 12:18 PM PDT

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு  வழங்க கோரிக்கை

Posted: 14 Jun 2016 12:18 PM PDT

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தேனியில் ஜூன் 15  மின் தடை

Posted: 14 Jun 2016 12:18 PM PDT

தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் ச.மாறன் மணி தெரிவித்தார்.

உ.பி.யில் மக்கள் இடம்பெயர்வு விவகாரம்:நிலைப்பாட்டை மாற்றிய பாஜக எம்.பி.

Posted: 14 Jun 2016 12:17 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், கைரானா நகரைச் சேர்ந்த ஹிந்துக்கள் மதம் சார்ந்த பிரச்னைகளால் அந்த நகரைவிட்டு வெளியேறுவதாக குற்றம்சாட்டியிருந்த அந்தத் தொகுதியின் பாஜக எம்.பி. ஹுகும் சிங், தற்போது தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

புகைப்படக் கண்காட்சி

Posted: 14 Jun 2016 12:17 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட செல்லமந்தாடி கிராமத்தில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிலம் கிடைத்தால் தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்கத் தயார்:மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 14 Jun 2016 12:17 PM PDT

தமிழகத்தில் சுமார் 272 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோயில் திருவிழாவில் போலீஸார் மீது கல்வீச்சு: 10 பேர் கைது

Posted: 14 Jun 2016 12:17 PM PDT

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவி ல் ஏற்பட்ட மோதலில் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 10 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கொப்பரைத் தேங்காய் கொள்முதல் இன்று தொடக்கம்: ஆட்சியர்

Posted: 14 Jun 2016 12:16 PM PDT

அரசு ஆதார விலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து புதன்கிழமை முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Posted: 14 Jun 2016 12:16 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ளது. சட்டப் பேரவையில் திமுகவின் பலம் 89-ஆக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுச் செயல்பட உள்ளார்.

தேனியில் சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்

Posted: 14 Jun 2016 12:16 PM PDT

தேனி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளில் தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தி, இந்து எழுச்சி அமைப்பி னர் செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாடை கட்டி ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு:20 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத் தேர்ச்சி விகிதம்

Posted: 14 Jun 2016 12:16 PM PDT

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

போலி உயிர் உரம் விற்பனை: வேளாண் துறை சோதனை

Posted: 14 Jun 2016 12:15 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துக் கடைகளில் போலி உயிர் உரம் விற்பனை செய்யப்படுவது குறித்து மாவட்ட விவசாயத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

போடி ஐடிஐ மாணவர் சேர்க்கை: ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2016 12:15 PM PDT

போடி அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Jun 2016 12:15 PM PDT

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

அணுகுசாலை வசதி கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை

Posted: 14 Jun 2016 12:14 PM PDT

ரயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் அணுகுசாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோல்வியிலிருந்து மீளாத பிரதமர் மோடி அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறார்:கேஜரிவால் குற்றச்சாட்டு

Posted: 14 Jun 2016 12:14 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து இன்னமும் மீளாத காரணத்தால், பிரதமர் நரேந்திர மோடி அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

இயந்திரங்கள் பழுதால் பழனி நகராட்சியில் 28 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Posted: 14 Jun 2016 12:14 PM PDT

பழனி நகராட்சியில் மின் மோட்டார்கள் பழுது காரணமாக 28 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: 47 நக்ஸல்கள் சரண்

Posted: 14 Jun 2016 12:14 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த 47 தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் சரணடைந்தனர்.

ஸ்மிருதி இரானி - பிகார் அமைச்சர் சுட்டுரையில் கருத்து மோதல்

Posted: 14 Jun 2016 12:13 PM PDT

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், பிகார் மாநில கல்வித் துறை அமைச்சர் அசோக் செளதரிக்கும் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் சச்சின் சிலையை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ்

Posted: 14 Jun 2016 12:13 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நிறுவப்பட்டுள்ள சிலையை அகற்ற வேண்டும் என மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும்: பாரிக்கர்

Posted: 14 Jun 2016 12:12 PM PDT

வரும் ஆண்டுகளில் ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™