Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆர்வம்! ஜெயலலிதா இன்று டில்லி வருகையால் பா.ஜ., தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க.,வை இழுக்க திட்டம்

Posted: 13 Jun 2016 09:41 AM PDT

தமிழகத்துக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசின் ஆதரவை பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி செல்கிறார்.

இந்த சந்திப்பின் மூலம் அ.தி.மு.க.,வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க, பா.ஜ., திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 320 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பா.ஜ.,வுக்கு, ராஜ்யசபாவில் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்ததால், மத்திய அரசு கொண்டு வந்த பல ...

'கட்சியின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்' : மோடி

Posted: 13 Jun 2016 10:01 AM PDT

அலகாபாத்,: பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்தது. கடைசி நாளான நேற்று, இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

வெறும் கோஷங்களை மட்டுமே மக்கள் விரும்பவில்லை. நாடு எப்படி வளர்ச்சி அடைகிறது என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மராட்டிய மன்னர் சிவாஜி, மிகப் பெரிய வெற்றிகளை பெற்றிருந்தபோதும், அதன் பலனை அவர் அனுபவிக்கவில்லை. அதே நேரத்தில், நாட்டில், கடந்த காலங்களில், அரசு அமைப்பதற்கான தகுதி இல்லாதவர்கள், அதனால் கிடைத்த பலன்களை மட்டுமே அனுபவித்தனர்.மத்தியில் ஆட்சியை அமைத்ததுடன், ...

குஜராத் அரசு அலுவலகங்கள் 'ஈயாடும்' 'ஆப்ஸ்' மூலம் சேவை அறிமுகமாகிறது

Posted: 13 Jun 2016 10:04 AM PDT

ஆமதாபாத்,: பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, அரசின் சேவைகளை இனி, மொபைல்போனில், 'ஆப்' மூலம் பெறலாம்.முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள குஜராத்தில், சுதந்திர தினமான, ஆகஸ்ட், 15ல், இந்த சேவை அறிமுகமாகிறது.

இது குறித்து மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் தனஞ்சய் திவிவேதி கூறியாதாவது:'டிஜிட்டல் குஜராத்' என்ற பெயரில், இந்த ஆப், ஆகஸ்ட், 15ல் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, 30 வகையான சேவைகளை பொதுமக்கள் தங்களுடைய மொபைல்பேனில் உள்ள இந்த, ஆப் மூலம் மிக சுலபமாக பெறலாம்.ஏற்கனவே, அரசின் பல சேவைகளை, ஆன் - லைன் மூலமாக ...

பொது இடங்களில் புகைத்தால் வழக்கு: தனிப்படை அமைக்க உத்தரவு

Posted: 13 Jun 2016 10:08 AM PDT

சென்னை,:பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளவும், தனிப்படை அமைக்கும்படி, தமிழக சுகாதார துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் தாக்கல் செய்த மனுபொது இடங்களில் புகை பிடிக்க, சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா, மருத்துவமனை, ஓட்டல், பூங்கா, நுாலகம், நீதிமன்றம் என, பொது இடங்களாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில், புகை பிடிக்க தடை உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் அருகில், புகையிலை பொருட்களை விற்பதற்கும் ...

சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி: கருணாநிதி எச்சரிக்கை

Posted: 13 Jun 2016 10:09 AM PDT

சென்னை: ''இந்தியை எதிர்த்து, கிளம்பிய கிளர்ச்சியை போல, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாகுவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:மீண்டும் தமிழகத்தில், சமஸ்கிருதம் தலைதுாக்குமா, வடமொழி நம் மீது படையெடுக்குமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலேஇருக்க வேண்டும். வடமொழி, ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, ...

கட்சியில் எத்தனை பதவிகள் காலி?: விஜயகாந்த் திடீர் கணக்கெடுப்பு

Posted: 13 Jun 2016 10:10 AM PDT

தே.மு.தி.க.,வில் காலியாக இருக்கும் பதவிகள் குறித்த கணக்கெடுப்பை, மாவட்ட வாரியாக விஜயகாந்த் துவங்கியுள்ளார்.

சட்டசபை தேர்தலில், ம.ந.கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, கட்சியின், 70 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். 30 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே, எஞ்சியுள்ளனர். இவர்களை, கட்சியில் தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில், விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, இரண்டு கட்டமாக மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, விஜயகாந்த் ...

இலவச காஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?

Posted: 13 Jun 2016 10:12 AM PDT

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு, இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் விரைவில் துவக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா' என்ற திட்டத்தை, மே மாதம் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 5 கோடி குடும்பங்களுக்கு, இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், 1.50 கோடி சிலிண்டர்கள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலைமுன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் ...

மாநில தேர்தல் கமிஷனின் :செயலிழந்த 'வெப்சைட்'

Posted: 13 Jun 2016 10:38 AM PDT

உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ள, மாநில தேர்தல் கமிஷன் இணையதளம் செயல் இழந்துள்ளது.தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

சென்னை கோயம்பேட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் மாநில தேர்தல் கமிஷன், தேர்தலை நடத்தவுள்ளது. மாநில தேர்தல் கமிஷனுக்கு, www.tnsec.tn.nic.in என்ற இணையதளம் உள்ளது.கடந்த, 2010ம் ஆண்டுக்கு முன் வரை இந்த இணையதளம், ஆங்கிலத்தில் இயங்கி வந்தது. 2011 உள்ளாட்சி தேர்தலுக்கு முன், தமிழில் செயல்பட துவங்கியது. உள்ளாட்சி தேர்தல்தொடர்பான விவரங்கள், சந்தேகங்களை, இந்த இணையதளம் மூலம் பலரும் தெரிந்து கொண்டனர்.ஆனால், ...

ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது ஓமர் மதீன்...ஆத்திரம்? புளோரிடா துப்பாக்கிச்சூடு குறித்து பகீர் தகவல்

Posted: 13 Jun 2016 12:52 PM PDT

ஒர்லாண்டோ,: அமெரிக்காவை அதிரவைக்கும் வகையில், இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பரபரப்பான பின்னணி குறித்து, முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்திய ஓமர், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான கோபத்தால், இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இதன் பின்னணியில், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றனவா என்றும் விசாரணை நடக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஒர்லாண்டோ பகுதியில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில், நேற்று முன்தினம் அதிகாலை வரை, ...

தெலுங்கானாவில் காலியாகும் காங்., கூடாரம்

Posted: 13 Jun 2016 02:15 PM PDT

ஐதராபாத்: தெலுங்கானாவில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைகின்றனர்.
முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, டி.ஆர்.எஸ்., எனப்படும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி உள்ள தெலுங்கானாவில், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., 21 தொகுதிகளில் வென்றது. அக்கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.,க்கள், ஏற்கனவே ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைந்து விட்டனர்.
இந்நிலையில், நலாகொண்டா தொகுதியின் காங்., - ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™