Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாராளுமன்றச் செயலகங்களில் வேலைவாய்ப்புகள்!
- தோட்டக்கலை: சம்பாதியுங்கள் லட்சம் லட்சமாய்!
- முதல் பார்வை
- சென்னை
- "5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்'
- 4 கடைகளுக்கு சீல் வைப்பு
- பயிர்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கொல்வதற்கு எதிர்ப்பு
- டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் விவரங்கள் தாக்கல்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
- 7 பேரை ஏமாற்றி திருமணம்: பெண் கைது
- வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
- அதிசய சொம்பு தருவதாக ஒரு லட்ச ரூபாய் மோசடி:5 பேர் கைது
- கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு:ஜூன் 30இல் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி விசாரணை
- "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் வழிவகுக்கும்'
- மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
- முடிமாற்று சிகிச்சையில் மருத்துவர் இறந்தது குறித்து முழுமையான விசாரணை வேண்டும்:டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
- 2015-இல் பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் என்ன?கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
- கடத்தல் தங்கத்தால் விற்பனை பாதிப்பு:தங்கநகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தகவல்
- தொழிலதிபர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் சாவு
- ஆர்.டி.ஐ. ஆர்வலர் கொலை வழக்கு:கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது
- பெங்களூரு பாஜக அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி நெல்லையில் கைது
- 2 வாரங்களில் "டான்செட்' தேர்வு முடிவுகள்: சேர்க்கைக்கு தனி விண்ணப்பம்
- விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு
- மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
- மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரிகளில் தாமதமாகும் முதலாண்டு மாணவர் சேர்க்கை:பட்டியல் வெளியிடக் கோரிக்கை
- சிலை கடத்தல் வழக்கு: அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்
- உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி
- கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமரை வலியுறுத்த வேண்டும்:முதல்வருக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
- காலமானார் டாக்டர் ஆர்.சாரதா
- முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்
- ஜூலை 11- முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: எஸ்ஆர்எம்யூ
- ஒசூர் நில அளவையர் கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர் தற்கொலை?கட்செவி அஞ்சல் மூலம் தகவல்
- நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு 3 பேரை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
- ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்:மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
- தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு
- திறனாய்வுத் தேர்வு: உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவி சிறப்பிடம்
- முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- தூத்துக்குடி மாவட்டத்துக்கு கார் சாகுபடி தண்ணீர் திறக்க திமுக வலியுறுத்தல்
- வருஷாபிஷேகம்
- அனுமதியின்றி செயல்படும் 11 பள்ளிகளை மூட நடவடிக்கை: ஆட்சியர்
- நாசரேத் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- உடன்குடியில் ரமலான் நோன்பு திறப்பு
- வேம்பார், கீழவைப்பார் கடற்கரைகளில் தூண்டில் வளைவு பாலப் பணிகளில் தொய்வு
- தூத்துக்குடியில் தனியார் பேருந்து மோதி வியாபாரி சாவு
- பெண்ணை மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது
- கோவில்பட்டி
- ஓய்வூதியர்கள் 20-க்குள் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்
- ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்
- வேலை உறுதித் திட்ட ஊதியம் கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் முற்றுகை
- காயல்பட்டினத்தில் கல்வித்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- தூத்துக்குடியில் வியாபாரியைத் தாக்கி ரூ. 5.25 லட்சம் பறிப்பு
- கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நாளைமுதல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்
- விபத்தில் மூதாட்டி சாவு
- குமரியில் அரிய வகை சங்கு, பவளப் பாறைகள் பறிமுதல்: 3 பேர் கைது
- சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்கக் கூடாது: ஆட்சியர் அறிவுரை
- உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தக் கோரி மனு
- 60 வீடுகள் இடிந்தன
- கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்: பள்ளியில் தஞ்சமடைந்த மீனவர்கள்: பங்குத்தந்தையர், எம்எல்ஏ ஆலோசனை
- மோதலும் முடிவும்!
- சோறு நிதந்தேட மட்டுமா கல்வி?
- தொழில்நுட்பமும் பாதுகாப்பும்
- பாஜக தொண்டர்களுக்கு மோடியின் 7 மந்திரங்கள்
- ஜூன் 18-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்
- சம்ஸ்கிருதத்தைத் திணித்தால் கிளர்ச்சி: கருணாநிதி
- நாடு முழுவதும் 1.62 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கம்
- பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை சிறப்புக் குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்:அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- என்எஸ்ஜியில் உறுப்பினராகும் தகுதி இந்தியாவை விட எங்களுக்கே அதிகமுள்ளது:பாகிஸ்தான்
- "இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் அதிகம்'
- பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி முறைகேடு:அமலாக்கத் துறை, வருமான வரித்துறை விசாரணை
- ஹரியாணா மாநிலங்களவைத் தேர்தல் குளறுபடி: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
- "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்'மன்மோகன் சிங் பற்றிய நூல் திரைப்படமாகிறது!
- கர்நாடகத்தில் இருந்த 2 சொத்துகளை விஜய் மல்லையா ரகசியமாக விற்றார்? அமலாக்கத்துறை விசரணை
- நாட்டை விட்டு வெளியேறுமாறு 10 சீனர்களுக்கு ஒடிஸா அரசு நோட்டீஸ்
- மதுரா கலவரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
- பஞ்சாபில் போதைப்பொருளை ஒழிக்க புதிய சட்டம்:ராகுல்காந்தி உறுதி
- ரஷிய அதிபர் புதினுடன் மோடி தொலைபேசியில் பேச்சு
- குஜராத் கலவர வழக்கு: தண்டனை விவரம் ஜூன் 17-இல் அறிவிப்பு
- சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
- 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?தில்லி அரசின் மசோதாவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்
- காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
- "உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட நீதிமன்றம் உத்தரவு
- தொடரை வென்றது இந்தியா :8 விக்கெட்டுகளில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
- பயஸின் ராக்கெட் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் தோனியின் கையுறை, கால் காப்புக்கு ரூ.1 லட்சம்
- மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே வெள்ளத்தில் மூழ்கி இறந்த கேரள இளைஞரின் சடலம் மீட்பு
- குமரி சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு
- கன்னியாகுமரி
- விராட் கோலியைப் போன்று ஆக்ரோஷமாக செயல்பட விரும்புகிறேன்
- ஆளூர் பகுதியில் ஜூன் 15 மின்தடை
- கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் வெளியேற்றம்
- 142 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- யூரோ கோப்பை: ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி
- கனடா கிராண்ட்ப்ரீ ஹாமில்டன் வெற்றி
- இங்கிலாந்து-இலங்கை 3-ஆவது டெஸ்ட் டிரா
- நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம்
- விசாகப்பட்டினம் அருகே கன்டெய்னரைப் பயன்படுத்தி நவீன திரையரங்கம்
- அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 15 லட்சம் நன்கொடை
- சிங்கப்பூர்:8 டன் தந்தம் அழிப்பு
- நெமிலி பாலா பீடத்தில் குறுந்தகடு வெளியீட்டு விழா
| பாராளுமன்றச் செயலகங்களில் வேலைவாய்ப்புகள்! Posted: 14 Jun 2016 07:35 AM PDT பாராளுமன்றச் செயலகங்களில் பலவிதமான பதவிகள் எப்போதும் காத்திருக்கின்றன'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவர் மேலும் கூறியது: |
| தோட்டக்கலை: சம்பாதியுங்கள் லட்சம் லட்சமாய்! Posted: 14 Jun 2016 07:29 AM PDT பெரிய வீடுகள், அலுவலகங்கள், மால்கள் போன்றவற்றின் முன்புறத்தை இயற்கையான மரம், செடி, கொடிகளால் அழகு செய்கின்றனர். |
| Posted: 13 Jun 2016 02:43 PM PDT |
| Posted: 13 Jun 2016 02:42 PM PDT |
| "5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்' Posted: 13 Jun 2016 02:42 PM PDT 2020-ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் 5வது தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தால் வியக்கத்தக்க முன்னேற்றம் உருவாகும் என்று மத்திய மின்காந்தவியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி பி.ஹனுமந்தராவ் கூறினார். |
| Posted: 13 Jun 2016 02:41 PM PDT சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிலுவைத் தொகையைச் செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. |
| பயிர்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கொல்வதற்கு எதிர்ப்பு Posted: 13 Jun 2016 02:40 PM PDT விவசாய நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் வன விலங்குகள் குறித்த விவரங்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், அதன் அடிப்படையில் சில விலங்குகளைக் கொல்ல அனுமதி அளித்துள்ளது. |
| டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் விவரங்கள் தாக்கல்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி Posted: 13 Jun 2016 02:39 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்கள் 11 பேரின் தன் விவரக் குறிப்புகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்வதாக தமிழக அரசு உறுதி அளித்தது. |
| 7 பேரை ஏமாற்றி திருமணம்: பெண் கைது Posted: 13 Jun 2016 02:39 PM PDT தாராபுரத்தில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம் பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு Posted: 13 Jun 2016 02:38 PM PDT திரைப்படப் பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அதிசய சொம்பு தருவதாக ஒரு லட்ச ரூபாய் மோசடி:5 பேர் கைது Posted: 13 Jun 2016 02:38 PM PDT செல்வம் கொழிக்கும் "அதிசய சொம்பு' தருவதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய 5 பேரை தருமபுரி போலீஸார் கைது செய்தனர். |
| கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு:ஜூன் 30இல் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி விசாரணை Posted: 13 Jun 2016 02:38 PM PDT கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூன் 30-ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் வழிவகுக்கும்' Posted: 13 Jun 2016 02:37 PM PDT அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் வழிவகுக்கும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி தெரிவித்தார். |
| மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் Posted: 13 Jun 2016 02:37 PM PDT மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். |
| Posted: 13 Jun 2016 02:36 PM PDT முடிமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட, பயிற்சி மருத்துவர் சந்தோஷ்குமார் இறந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார். |
| 2015-இல் பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் என்ன?கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு Posted: 13 Jun 2016 02:36 PM PDT பொறியியல் படிப்பில் 2013-இல் 5 கல்லூரிகளும், 2014-இல் 19 கல்லூரிகளும் ஒற்றை இலக்கத்திலேயே தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தன. இந்த நிலையில், 2015-ஆம் ஆண்டில் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை தெரிந்துகொள்ளும் ஆவல் கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. |
| கடத்தல் தங்கத்தால் விற்பனை பாதிப்பு:தங்கநகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தகவல் Posted: 13 Jun 2016 02:35 PM PDT இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் தங்கத்தால், உள்நாட்டு விற்பனையில் பாதிப்பு ஏற்படுவதாக விலையுயர்ந்த கற்கள், நகைகளுக்கான அகில இந்திய கூட்டமைப்பினர் தெரிவித்தனர். |
| தொழிலதிபர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 13 Jun 2016 02:35 PM PDT தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் சாவு Posted: 13 Jun 2016 02:35 PM PDT மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். |
| ஆர்.டி.ஐ. ஆர்வலர் கொலை வழக்கு:கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது Posted: 13 Jun 2016 02:34 PM PDT ஆர்.டி.ஐ. ஆர்வலர் கொலை வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். |
| பெங்களூரு பாஜக அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி நெல்லையில் கைது Posted: 13 Jun 2016 02:34 PM PDT பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு அருகே கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார். |
| 2 வாரங்களில் "டான்செட்' தேர்வு முடிவுகள்: சேர்க்கைக்கு தனி விண்ணப்பம் Posted: 13 Jun 2016 02:34 PM PDT முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு Posted: 13 Jun 2016 02:34 PM PDT விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் விவசாயி ரவி நயினார் போட்டியிடுவார் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறினார். |
| Posted: 13 Jun 2016 02:33 PM PDT சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் Posted: 13 Jun 2016 02:33 PM PDT தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் வி.பிரபாகரன் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. |
| மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரிகளில் தாமதமாகும் முதலாண்டு மாணவர் சேர்க்கை:பட்டியல் வெளியிடக் கோரிக்கை Posted: 13 Jun 2016 02:32 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரிகளில் முதலாண்டு மாணவர் சேர்க்கை தாமதமாவதாகவும், இதனால் அந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மாதமே தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. |
| சிலை கடத்தல் வழக்கு: அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர் Posted: 13 Jun 2016 01:22 PM PDT சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. |
| உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி Posted: 13 Jun 2016 01:21 PM PDT உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். |
| Posted: 13 Jun 2016 01:20 PM PDT தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை நேரில் சந்திக்கும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 13 Jun 2016 01:20 PM PDT சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சாரதா (84) திங்கள்கிழமை (ஜூன் 13) காலமானார். |
| முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் Posted: 13 Jun 2016 01:19 PM PDT முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| ஜூலை 11- முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: எஸ்ஆர்எம்யூ Posted: 13 Jun 2016 01:19 PM PDT ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவது உறுதி என்றார் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என். கண்ணையா. |
| ஒசூர் நில அளவையர் கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர் தற்கொலை?கட்செவி அஞ்சல் மூலம் தகவல் Posted: 13 Jun 2016 01:18 PM PDT ஒசூர் நில அளவையர் குவளைச் செழியன் கொலை வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டுவரும் இக்ரமுல்லா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கட்செவி அஞ்சல் (வாஸ்ட் அப்) மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 13 Jun 2016 01:18 PM PDT நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்:மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 13 Jun 2016 01:18 PM PDT ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு Posted: 13 Jun 2016 12:54 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வந்த பழமை வாய்ந்த புனித அந்தோணியார் திருத்தல திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது. இதில், ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். |
| திறனாய்வுத் தேர்வு: உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவி சிறப்பிடம் Posted: 13 Jun 2016 12:53 PM PDT தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். |
| முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 13 Jun 2016 12:53 PM PDT முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, உயிரிழந்த மீனவரின் மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| தூத்துக்குடி மாவட்டத்துக்கு கார் சாகுபடி தண்ணீர் திறக்க திமுக வலியுறுத்தல் Posted: 13 Jun 2016 12:52 PM PDT அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்ட கார் சாகுபடிக்கான அனுமதியை வழங்கி உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாநில திமுக இளைஞரணி துணைச் செயலர் எஸ்.ஜோயல் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 13 Jun 2016 12:52 PM PDT ஆத்தூர் அருகிலுள்ள வரண்டியவேல் கசங்காத்தப் பெருமாள் அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
| அனுமதியின்றி செயல்படும் 11 பள்ளிகளை மூட நடவடிக்கை: ஆட்சியர் Posted: 13 Jun 2016 12:52 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 11 பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார். |
| நாசரேத் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 13 Jun 2016 12:51 PM PDT நாசரேத் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா 3நாள்கள் நடைபெற்றன. |
| உடன்குடியில் ரமலான் நோன்பு திறப்பு Posted: 13 Jun 2016 12:51 PM PDT உடன்குடி சந்தையடித் தெருவில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். |
| வேம்பார், கீழவைப்பார் கடற்கரைகளில் தூண்டில் வளைவு பாலப் பணிகளில் தொய்வு Posted: 13 Jun 2016 12:50 PM PDT விளாத்திகுளம் அருகே வேம்பார், கீழவைப்பார் மீனவ கிராமங்களில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகள், நிதியில்லாமல் தொடக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. |
| தூத்துக்குடியில் தனியார் பேருந்து மோதி வியாபாரி சாவு Posted: 13 Jun 2016 12:50 PM PDT தூத்துக்குடியில் திங்கள்கிழமை சைக்கிளில் சென்ற வியாபாரி தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். |
| பெண்ணை மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 13 Jun 2016 12:49 PM PDT சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 13 Jun 2016 12:49 PM PDT |
| ஓய்வூதியர்கள் 20-க்குள் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும் Posted: 13 Jun 2016 12:49 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் Posted: 13 Jun 2016 12:48 PM PDT கடலையூரில் பள்ளி ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வேலை உறுதித் திட்ட ஊதியம் கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை Posted: 13 Jun 2016 12:48 PM PDT மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். |
| தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் முற்றுகை Posted: 13 Jun 2016 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| காயல்பட்டினத்தில் கல்வித்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் Posted: 13 Jun 2016 12:47 PM PDT காயல்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட மழலையர் பள்ளியை ஆய்வு செய்ய வந்த கல்வித்துறை அதிகாரிகளை மாணவ, மாணவியரும் அவர்களது பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| தூத்துக்குடியில் வியாபாரியைத் தாக்கி ரூ. 5.25 லட்சம் பறிப்பு Posted: 13 Jun 2016 12:46 PM PDT தூத்துக்குடியில் திங்கள்கிழமை வியாபாரியைத் தாக்கி அவரிடம் இருந்த ரூ. 5.25 லட்சத்தைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நாளைமுதல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் Posted: 13 Jun 2016 12:46 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 15) முதல் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடங்குகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Jun 2016 12:45 PM PDT குமரி மாவட்டம், கல்லுக்கூட்டம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| குமரியில் அரிய வகை சங்கு, பவளப் பாறைகள் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 13 Jun 2016 12:45 PM PDT கன்னியாகுமரியில் அரியவகை சங்கு மற்றும் பவளப்பாறைகள் விற்பனை செய்த 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்கக் கூடாது: ஆட்சியர் அறிவுரை Posted: 13 Jun 2016 12:44 PM PDT மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிக்கக் கூடாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கூறினார். |
| உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தக் கோரி மனு Posted: 13 Jun 2016 12:44 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 13 Jun 2016 12:43 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் இதுவரை 60 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. |
| கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்: பள்ளியில் தஞ்சமடைந்த மீனவர்கள்: பங்குத்தந்தையர், எம்எல்ஏ ஆலோசனை Posted: 13 Jun 2016 12:43 PM PDT இரவிபுத்தன்துறையில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்த மீனவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். |
| Posted: 13 Jun 2016 12:33 PM PDT புதிய மோட்டார் வாகனங்களின் தரம், உறுதி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச புதிய வாகனங்கள் மதிப்பீட்டு அமைப்பு (ஜி.என்.சி.ஏ.பி.) என்கிற சுதந்திரமான அமைப்பு செயல்படுகிறது. |
| Posted: 13 Jun 2016 12:33 PM PDT சுதந்திரப் போராட்டத்தின்போது, மாணவர்களை கல்விச் சாலைகளை பகிஷ்கரிக்க அறைகூவல் விடுத்தனர் காந்திஜியும் மற்றத் தலைவர்களும். அதனை ஏற்று கல்விக் கூடங்களை மாணவர்கள் பகிஷ்கரித்தனர். தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கு கொண்டனர். |
| Posted: 13 Jun 2016 12:31 PM PDT இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் 'ஸ்ட்ரீட் வியூ' எனப்படும் செயலியின் சேவையை செயல்படுத்துவதற்கு பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருப்பதற்கு வரவேற்பு கிடைத்துள்ள வேளையில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் சேவையைத் தடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது. |
| பாஜக தொண்டர்களுக்கு மோடியின் 7 மந்திரங்கள் Posted: 13 Jun 2016 12:27 PM PDT நாடு முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற 7 மந்திரங்களைப் பின்பற்றுமாறு பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். |
| ஜூன் 18-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம் Posted: 13 Jun 2016 12:25 PM PDT அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| சம்ஸ்கிருதத்தைத் திணித்தால் கிளர்ச்சி: கருணாநிதி Posted: 13 Jun 2016 12:23 PM PDT சம்ஸ்கிருத மொழியைத் திணித்தால், தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் கருணாநிதி பேசியது:- |
| நாடு முழுவதும் 1.62 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கம் Posted: 13 Jun 2016 12:23 PM PDT நாடு முழுவதும் 1.62 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
| Posted: 13 Jun 2016 12:23 PM PDT பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| என்எஸ்ஜியில் உறுப்பினராகும் தகுதி இந்தியாவை விட எங்களுக்கே அதிகமுள்ளது:பாகிஸ்தான் Posted: 13 Jun 2016 12:22 PM PDT அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் தகுதி, இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
| "இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் அதிகம்' Posted: 13 Jun 2016 12:21 PM PDT இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. |
| பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் ரூ.1,000 கோடி முறைகேடு:அமலாக்கத் துறை, வருமான வரித்துறை விசாரணை Posted: 13 Jun 2016 12:20 PM PDT இந்தியாவில் இருந்து ஈரானுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்ததில் ரூ.1,000 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தவுள்ளன. |
| ஹரியாணா மாநிலங்களவைத் தேர்தல் குளறுபடி: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம் Posted: 13 Jun 2016 12:20 PM PDT ஹரியாணாவில், மாநிலங்களவைக்கு இரண்டு எம்.பி.க்களை அனுப்பி வைப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் |
| "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்'மன்மோகன் சிங் பற்றிய நூல் திரைப்படமாகிறது! Posted: 13 Jun 2016 12:18 PM PDT முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற நூல், விரைவில் திரைப்படமாகிறது. |
| கர்நாடகத்தில் இருந்த 2 சொத்துகளை விஜய் மல்லையா ரகசியமாக விற்றார்? அமலாக்கத்துறை விசரணை Posted: 13 Jun 2016 12:17 PM PDT கர்நாடக மாநிலத்தில் தனது 2 சொத்துகளை தொழிலதிபர் விஜய் மல்லையா ரகசியமாக விற்பனை செய்தது விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
| நாட்டை விட்டு வெளியேறுமாறு 10 சீனர்களுக்கு ஒடிஸா அரசு நோட்டீஸ் Posted: 13 Jun 2016 12:17 PM PDT நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு 10 சீனர்களுக்கு ஒடிஸா அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. |
| மதுரா கலவரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி Posted: 13 Jun 2016 12:16 PM PDT மதுரா கலவரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. |
| பஞ்சாபில் போதைப்பொருளை ஒழிக்க புதிய சட்டம்:ராகுல்காந்தி உறுதி Posted: 13 Jun 2016 12:15 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். |
| ரஷிய அதிபர் புதினுடன் மோடி தொலைபேசியில் பேச்சு Posted: 13 Jun 2016 12:14 PM PDT ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். |
| குஜராத் கலவர வழக்கு: தண்டனை விவரம் ஜூன் 17-இல் அறிவிப்பு Posted: 13 Jun 2016 12:14 PM PDT குஜராத் மாநிலம், குல்பர்க் குடியிருப்பு (சொûஸட்டி) வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 24 பேருக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. |
| சமாஜவாதி கட்சியிலிருந்து 4 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் Posted: 13 Jun 2016 12:13 PM PDT உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?தில்லி அரசின் மசோதாவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் Posted: 13 Jun 2016 12:13 PM PDT ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேர், சட்டப்பேரவைச் செயலர்களாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் தில்லி அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்த எம்எல்ஏக்களின் உறுப்பினர் பதவி கேள்விக்குறியாகியுள்ளது. |
| காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை Posted: 13 Jun 2016 12:12 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். |
| "உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Jun 2016 12:12 PM PDT "உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை "ஏ' சான்றிதழ், சில திருத்தங்கள் ஆகியவற்றுடன் வெளியிடுவதற்கு அனுமதிக்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு (சிபிஎஃப்சி) மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| தொடரை வென்றது இந்தியா :8 விக்கெட்டுகளில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது Posted: 13 Jun 2016 12:11 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. |
| பயஸின் ராக்கெட் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் தோனியின் கையுறை, கால் காப்புக்கு ரூ.1 லட்சம் Posted: 13 Jun 2016 12:10 PM PDT இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் ராக்கெட் (டென்னிஸ் பேட்) ரூ.1.5 லட்சத்துக்கும், இந்திய கேப்டன் தோனியின் கையுறை, கால் காப்பு ஆகியவை ரூ.1 லட்சத்துக்கும் ஏலம் போனது. |
| மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே வெள்ளத்தில் மூழ்கி இறந்த கேரள இளைஞரின் சடலம் மீட்பு Posted: 13 Jun 2016 12:10 PM PDT குமரி மாவட்டத்தில், மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு சுற்றுலா வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார். |
| குமரி சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு Posted: 13 Jun 2016 12:09 PM PDT கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Jun 2016 12:09 PM PDT |
| விராட் கோலியைப் போன்று ஆக்ரோஷமாக செயல்பட விரும்புகிறேன் Posted: 13 Jun 2016 12:09 PM PDT இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் போன்று ஆக்ரோஷமாக செயல்பட விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்துள்ளார். |
| ஆளூர் பகுதியில் ஜூன் 15 மின்தடை Posted: 13 Jun 2016 12:09 PM PDT ஆளூர் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (விநியோகம்) சங்கரநாராயணபிள்ளை தெரிவித்துள்ளார். |
| கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் வெளியேற்றம் Posted: 13 Jun 2016 12:08 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இதனால் காலிறுதி வாய்ப்பை இழந்த அந்த அணி, போட்டியிலிருந்து வெளியேறியது. |
| 142 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 13 Jun 2016 12:08 PM PDT நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 142 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார். |
| யூரோ கோப்பை: ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி Posted: 13 Jun 2016 12:07 PM PDT யூரோ கோப்பை கால்பந்து போட்டியை உலக சாம்பியன் ஜெர்மனி, நடப்பு சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றியோடு தொடங்கியுள்ளன. |
| கனடா கிராண்ட்ப்ரீ ஹாமில்டன் வெற்றி Posted: 13 Jun 2016 12:06 PM PDT கனடா கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார். |
| இங்கிலாந்து-இலங்கை 3-ஆவது டெஸ்ட் டிரா Posted: 13 Jun 2016 12:05 PM PDT இங்கிலாந்து-இலங்கை இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. |
| நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம் Posted: 13 Jun 2016 12:05 PM PDT நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் மீனாதேவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விசாகப்பட்டினம் அருகே கன்டெய்னரைப் பயன்படுத்தி நவீன திரையரங்கம் Posted: 13 Jun 2016 12:04 PM PDT விசாகப்பட்டினம் அருகே ரூ. 25 லட்சத்தில் சரக்குப் பெட்டகத்தைப் (கன்டெய்னர்) பயன்படுத்தி, நவீனத் திரையரங்கை ஏற்படுத்தி வருகின்றனர். |
| அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 15 லட்சம் நன்கொடை Posted: 13 Jun 2016 12:04 PM PDT திருமலை ஏழுமலையானின் அறக்கட்டளைகளுக்கு ரூ. 15 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. |
| சிங்கப்பூர்:8 டன் தந்தம் அழிப்பு Posted: 13 Jun 2016 12:04 PM PDT சிங்கப்பூரில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 8 டன் தந்தங்களை அந்த நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனர். |
| நெமிலி பாலா பீடத்தில் குறுந்தகடு வெளியீட்டு விழா Posted: 13 Jun 2016 12:04 PM PDT அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் புதிய குறுந்தகடு வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெறறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |