ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எல்லாவித வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தேன்!
- சில முக்கிய மருத்துவ டிப்ஸ் !
- எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்?
- கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
- ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!
- நியூயார்க் அருங்காட்சியகத்தில் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் ஓவியம்
- அறிவுத்திறனும், உடல் பலமும்..!
- சென்னையில் நிலம் வாங்கி புலம்பும் சிங்கப்பூர் தமிழர்கள்: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்
- சிட்டுக்குருவி லேகியம்…!
- துண்டு – கவிதை
- ரசம் போன கண்ணாடியும் அழகாய்க் காட்டுகிறது ..!
- பஞ்சம் – கவிதை
- ‘ஒரு ஒளியால் மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது.’ சூர்யா
- 40 மணி நேரம் தொடர் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை
- தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு!
- புறக்கணிப்பு: – கோ. மன்றவாணன்
- என்னை பற்றி என்னிடம் இருந்து .......
- ஆளில்லா சிறிய ரக விமானத்தால் ஒரு மணி நேரம் மூடப்பட்ட துபாய் விமான நிலையம்
- தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
- 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு பயிற்சியாளர் மீது வழக்கு தொடர்ந்தார் சில்வர்ஸ்டார் ஸ்டோலன்
- காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- இந்த பூவின் பெயர் என்ன
- புத்தகங்களுக்கு சங்கிலி!
- ஜப்பான் டாய்லெட்டுக்கு மவுசு!
- ஆப்ரிக்கா புறப்படுகிறார் ஜனாதிபதி
- சினி துளிகள்!
- அறிமுகம் -கிருஷ்ணன் ஆறுமுகம்
- ஊனம்...
- நாயும் பூனையும் ஜென்மப்பகை ஏன் என்று இப்போ புரியுதா? :)
- என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)
- 300 ஆண்டுகளுக்கு பின்பன்னிரு ரிஷபாரூட காட்சி !
- ஹைக்கூ: அவளைத் தொட வேண்டிய இடம்
- நள்ளிரவுல நகை வாங்கப் போவியா?!
- அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை
- இஞ்சி சாதம்
- கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 4
- ஜாக்கிரதை ! - 'சென்னைஸ் அமிர்தா' !!
- மேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
- கதாபாத்திரத்துக்காக டாப்ஸி வரைந்த நிஜ டாட்டூ
- புறக்கணிப்பு: பிரபாவதி வீரமுத்து
- உன்னைச் சொல்லிக் குற்றமில்லை…
- ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு
- என்.எஸ்.ஜி-யில் இந்தியா சேருவதில் சிக்கல் : வியன்னா மாநாட்டில் விவாதிக்கவில்லை என சீனா தகவல்
- வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்
- சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
| எல்லாவித வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தேன்! Posted: 13 Jun 2016 01:25 PM PDT சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்.... * கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும். * வயிற்றில், ... |
| Posted: 13 Jun 2016 01:22 PM PDT கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் கைகால் வீக்கம், உடல் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும். பொன்மேனி தரும் குப்பைமேனி: குப்பை மேனி இலையையும், ... |
| எதனோடு எந்தெந்த உணவு பொருள்களை உண்பதை தவிர்க்க வேண்டும்? Posted: 13 Jun 2016 01:20 PM PDT 1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. 3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும். 4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. 5. மீன், கருவாடு சாப்பிட்ட ... |
| கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? Posted: 13 Jun 2016 01:19 PM PDT கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது. மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். ... |
| ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்ஷய்குமாருக்கு அதிக சம்பளம்! Posted: 13 Jun 2016 01:14 PM PDT நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வரும் படம் 2.0. இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. அதன்பின் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ... |
| நியூயார்க் அருங்காட்சியகத்தில் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் ஓவியம் Posted: 13 Jun 2016 01:07 PM PDT - நியூயார்க்: அமெரிக்கா, நியூயார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில், கோவர்த்தனகிரியை ஏந்திய கிருஷ்ணர் ஓவியம் வைக்கப்பட உள்ளது .உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் இம்மாதம் 14ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ள தெய்வீக இன்பம் என்ற தலைப்பிலான கண்காட்சியில், பல்வேறு இந்து கடவுளர்களின் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. 16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசர்களின் அரசவையை அலங்கரித்த 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இந்த கண்காட்சியில் ... |
| அறிவுத்திறனும், உடல் பலமும்..! Posted: 13 Jun 2016 01:00 PM PDT ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார். - இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை. - ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் ... |
| சென்னையில் நிலம் வாங்கி புலம்பும் சிங்கப்பூர் தமிழர்கள்: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் Posted: 13 Jun 2016 12:59 PM PDT சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பலரும் தங்களின் சொந்த மண்ணான தமிழகத்தில் காணி நிலமாவது இருக்க வேண்டுமென சென்டிமென்ட்டாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்யும் முதலீடு, எதிர்காலத்தில் நல்ல பலன் தரும் விதமாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக சென்னையில் நிலம், வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். அப்படி, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் 33 பேர், அந்நாட்டை சேர்ந்த கேஎம்ஜிஎம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் கடந்த 2008 முதல் 2011ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ... |
| Posted: 13 Jun 2016 12:58 PM PDT - வயிறு சரியில்லாத தலைவர்கிட்டே, குழந்தைக்கு பேர் வைக்க சொன்னது தப்பா போச்சு..! – ஏன் என்னாச்சு..? – பேதிகா'னு பேர் வெச்சிட்டாரு…!! – சி.சாமிநாதன் – ————————————— - - --------------- |
| Posted: 13 Jun 2016 12:58 PM PDT மேட்டிமையாய்த் தோளிலும்பணிவாய் இடுப்பிலும் கரைகளை மாற்றி கட்சி சார்பாய் ஆக்கி வியர்வை வாசமும் வெத்திலைக் காவியும் சுமந்து குழந்தையின் மூக்கு சிந்தியும் இயலாமையின் கண்ணீரும் கலந்து வானம் பொய்க்கையில் தலையிலும் வருத்தும் மனைவி விசும்பலிலும் பழுப்பேறி அவ்வப்போது தலையணையும் யதார்த்தம் மூடிமறைக்கும் போர்வையுமாய். வெய்யில் உறைத்தாலோ திருவிழா வந்தாலோ தலைப்பாக்கட்டாய் மாறும் கௌரவப் போர்வைத் துண்டு. – ————————- – தேனம்மை லெக்ஷ்மணன். tamilmurasu australia |
| ரசம் போன கண்ணாடியும் அழகாய்க் காட்டுகிறது ..! Posted: 13 Jun 2016 12:57 PM PDT --- என் வீட்டு ரசம் போன கண்ணாடியும் அழகாய்க் காட்டுகிறது என்னை உன்னை பார்த்ததிலிருந்து! – பூக்கள் வாசிக்கும் புத்தகம் உன் புன்னகை! – பட்டாம்பூச்சிகள் உட்கார ஆசைப்படும் ஒற்றை ரோஜா உன் இதழ்! – ————— கவிஞர் அண்ணாமலை குமுதம் |
| Posted: 13 Jun 2016 12:55 PM PDT - பஞ்சம்! கட்சிகளுக்கும், காட்சிகளுக்கும் பஞ்சமில்லை இந்த நாட்டில்! – அடைமொழி தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் பஞ்சமில்லை! – கொடிகளுக்கும் செலவு செய்ய கோடிகளுக்கும் பஞ்சமில்லை! – விளம்பரங்களுக்கும் கலவரங்களுக்கும் பஞ்சமில்லை! – தொண்டர்களுக்கும் அடித்துக் கொள்ளும் குண்டர்களுக்கும் பஞ்சமில்லை! – கூட்டங்களுக்கும் கூட்டி வரும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! – ஊற்றிக் கொடுக்க மதுவிற்கும் உண்டு மகிழ பிரியாணிக்கும் பஞ்சமில்லை! – முழக்கத்திற்கும் ஒருவரை ஒருவர் ஏசும் சவால்களுக்கும் ... |
| ‘ஒரு ஒளியால் மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது.’ சூர்யா Posted: 13 Jun 2016 12:54 PM PDT - - ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை கௌரவித்து வருகிறார் நடிகர் சிவகுமார். கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை தனது அறக் கட்டளை மூலம் செய்து வரும் இவர். தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டிற்கான 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' தனது 37ஆம் ஆண்டிற்கான நிகழ்வை நடத்தியது. இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது… "இங்கே ... |
| 40 மணி நேரம் தொடர் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை Posted: 13 Jun 2016 12:51 PM PDT மஹாயோகம் யோகப் பயிற்சி அமைப்பு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா சனங்களை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைக்கப் பட்டுள்ளது. சர்வதேச யோக தினம் ஜூன் 21-ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மஹாமகரிஷி அறக் கட்டளை, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து 40 மணி நேரம் நடைபெற்ற யோகசான நிகழ்வுகள் நேற்று இரவு 11.37 மணியளவில் நிறை வடைந்தது. இதுகுறித்து, மஹாயோகம் ... |
| தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு! Posted: 13 Jun 2016 12:49 PM PDT - - – மீண்டும் காமெடியனான போதும், தன் கெத்தை விடவில்லை வடிவேலு. 'காமெடியன் என்றாலும், படம் முழுக்க கதாநாயகனுடன் தான் பயணிக்க வேண்டும்…' என்று சொல்பவர், தனக்கும், தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அவருக்கும் கதாநாயகனுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கின்றனர், தயாரிப்பாளர்கள். அதேசமயம், 'மீண்டும் காமெடியனாக இறங்கி வந்த போதும், சம்பள விஷயத்தில் இன்னும் கதாநாயகனாகத்தான் இருக்கிறார்…' என்று புலம்புகின்றனர். – ———————————– — சினிமாபொன்னையா |
| Posted: 13 Jun 2016 12:46 PM PDT தாமதமாக வரும் தொடர்வண்டிக்காகக் காத்துக் கிடக்கிறது ஒரு கூட்டம் – குறுந்தேவதை போல் குழந்தை ஒன்று மடிதாவி மடிதாவிச் செல்கிறது மடிதோறும் – அங்கு உயிர்கொண்டு உலா வந்தது கொஞ்சல் இலக்கியம் – அருகே…. துவைத்தால் கிழிந்துவிடும் அழுக்குடையோடு இரு பெண்குழந்தைகள் – அந்த முகங்களில் பாரத மாதாவின் பரிதாபக் கோலம் – அந்தக் குழந்தைகளைப் பார்ப்பதே தீட்டு என குறுக்குச் சந்துக்குள் நுழைந்து ஓடின அங்கிருந்த அத்தனை விழிகளும் – —————————– |
| என்னை பற்றி என்னிடம் இருந்து ....... Posted: 13 Jun 2016 12:45 PM PDT பெயர்:மு.அருண்குமார் சொந்த ஊர்:வினோபா நகர், ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் . ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் உலவும் போது கண்டேன். பொழுதுபோக்கு: தமிழ் புத்தகங்கள் படிப்பது . தொழில்: கருவிமயமாக்கல் பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: ஒரு சிறந்த தமிழனாக வாழ துடிக்கும் சாதாரண மனிதன்........ |
| ஆளில்லா சிறிய ரக விமானத்தால் ஒரு மணி நேரம் மூடப்பட்ட துபாய் விமான நிலையம் Posted: 13 Jun 2016 12:44 PM PDT - துபாய் விமான நிலைய பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானம் (drone) ஒன்று பறந்ததால் விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டது. – எப்பொழுதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் துபாய் சர்வதசே விமான நிலைய வான்வெளியில் சனிக்கிழமை ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதானால் விமான நிலையம் 69 நிமிடங்கள் மூடப்பட்டது. – பின்னர் மதியம் 12. 45 மணிக்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆளில்லா சிறிய ரக விமானங்களால் துபாயில் விமான சேவை பாதிக்கப்படுவது இது முதல் ... |
| தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம் Posted: 13 Jun 2016 12:37 PM PDT - புது தில்லி: காக்கா முட்டை.. சிறுவர்கள் இருவரை பீட்ஸா கடைக்குள் விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படம். அந்த திரைப்படத்தில் வரும் சம்பவத்தை போன்று நிஜமாகவே தில்லியில் ஒரு சம்பவம் நடைபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டேரூடானைச் சேர்ந்த எழுத்தாளர் சோனாலி ஷெட்டி. இவர் தனது கணவர் பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (ஜூன் 11) தில்லியில் தெருவோரும் வசிக்கும் எட்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு, தில்லி ஜன்பத் பகுதியில் உள்ள சிவ சாகர் உணவகத்துக்குச் சென்றார். அப்போது ... |
| 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு பயிற்சியாளர் மீது வழக்கு தொடர்ந்தார் சில்வர்ஸ்டார் ஸ்டோலன் Posted: 13 Jun 2016 12:32 PM PDT - — ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன். – இவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 'ரியாலிட்டி ஷோ' நடத்த முடிவு செய்திருந்தார். . இந்த நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி உதவியாளர் ராபர்ட்பிளட்சர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். – இதற்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. – இந்நிலையில் இந்த ரியாலிட்டி ஷோ முழுக்க முழுக்க நான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்ச்சி. எனது சிந்தனையில் உருவானவற்றை எனது உதவியாளர் திருடி தனது நிகழ்ச்சிபோல நடத்தி ... |
| காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி Posted: 13 Jun 2016 12:29 PM PDT ஹாங்காங்: சீனாவில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறினார் ஒரு பெண். 20 வயதான இந்த அரவாணி, கடந்த ஆண்டு தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக ஹாங்காங் திருமண பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார். ஆனால், பிறப்பு சான்றிதழில் ஆண் என இருந்ததால் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என பதிவாளர் மறுத்தார். ஹாங்காங் சட்டப்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே, ஆணாக பிறந்து பெண்ணாக மாறினாலும் அவர் ஆணாகவே கருதப்படுவதால்தான் இந்த சிக்கல். காதலரை மணக்க வேண்டும் என்ற உறுதியுடன் ... |
| 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 13 Jun 2016 12:24 PM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| Posted: 13 Jun 2016 12:24 PM PDT என் வீட்டில் இந்த செடியை வளர்கின்றேன் எங்கோ நர்சரியில் வாங்கியது. எனக்கு பெயர்ந்த தெரியாது .இந்த பூவின் பெயர் என்ன தெரிந்தால் சொல்லுங்களேன் , |
| Posted: 13 Jun 2016 12:21 PM PDT - உலகின் மிக பழமை வாய்ந்த நூலகமாக, இங்கிலாந்தில், மான்செஸ்டரில் உள்ள சிதாம் என்ற நூலகம் கருதப்படுகிறது. இந்நூலகம், கடந்த, 1653ல் ஹெம்பெரி சிதாம் என்பவரால், நிறுவப்பட்டது. பலவித புத்தகங்கள் இதில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில புத்தகங்கள் மெல்லிய இரும்பு சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளதை, எல்லாரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். சங்கிலி போட்டிருந்தாலும், இந்த புத்தகங்களை எடுத்து, படிக்க முடியுமாம்! – —————————————- – ஜோல்னாபையன். |
| Posted: 13 Jun 2016 12:21 PM PDT - சீனாவிலிருந்து, ஜப்பானுக்கு வரும் பயணிகள், ஜப்பானில் தயாராகும் விதவிதமான, அதி நவீன டாய்லெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்கு, சுங்க வரி வசூலிப்பதில்லை, ஜப்பான் அரசு. மேலும், வெளிநாட்டு பயணிகளை கவர, அதிநவீன டாய்லெட்டுகளை வரிசையாக வைத்து, விற்பனையில் சாதனை படைக்கின்றனர். நமக்கு தெரிந்தவர்கள் யாராவது ஜப்பானுக்குச் சென்றால், நாமும் ஒரு டாய்லெட் வாங்கி வரச் சொல்லலாமா? – ——————————— — ஜோல்னாபையன். |
| ஆப்ரிக்கா புறப்படுகிறார் ஜனாதிபதி Posted: 13 Jun 2016 12:20 PM PDT புதுடில்லி: - - 6 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ( 12 ம் தேதி ) ஆப்ரிக்கா புறப்படுகிறார். இதன் மூலம் இரு நாட்டு உறவு வலுப்பட மேலும் வழிவகுக்கும் . கானா, நமீபியா . ஐவரிகோஸ்ட் ஆப்ரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரணாப் முகர்ஜி செல்கிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ஆப்ரிக்க நாடுகளின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்பில் விசா விவகாரம் மற்றும் தொழில் வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையொப்பமிடுகிறார். ... |
| Posted: 13 Jun 2016 12:17 PM PDT ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்! – - கமல் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகி வரும், சபாஷ் நாயுடு என்ற படத்தில், கமலுக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க, இவர்களின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மனு நாராயணன், ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார். – — எலீசா – ———————————- |
| Posted: 13 Jun 2016 12:15 PM PDT பெயர்:கிருஷ்ணன் ஆறுமுகம் சொந்த ஊர்:கரூர் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இனைய தேடலின் போது பொழுதுபோக்கு:இணையத்தில் உலவுவது தொழில்:தனியார் தொலைதொடர்பு அதிகாரி மேலும் என்னைப் பற்றி:*ஒரு சாதாரண மனிதன்*, |
| Posted: 13 Jun 2016 12:11 PM PDT சரக்கடித்து விட்டு சரக்குந்து ஓட்டி என் வாழ்வையே சாரம் இல்லாமல் செய்து விட்ட முகம் தெரியா சகோதரனே!! நான் உன்னை சாடுவதா? இல்லை சாராய கடையை திறந்து வைத்திருக்கும் அரசை சாடுவதா? ஓய்வறியா ஓடிக்கொண்டே உழைத்த என்னை ஒன்றுமில்லாமல் செய்து விட்டாயே? தத்தித்தவழும் மழலையைப்போல் என் கால்கள் தவழ்ந்தாலும் மனம் என்னவோ முழு மனிதன் தானே! உடலின் வலி என்னவோ மாத்திரைகளால் மாயமாய் போய்விடும்! மனதின் வலியை வார்த்தைகளால் அல்ல கண்ணீரால் கடக்கின்றேன்?! ... |
| நாயும் பூனையும் ஜென்மப்பகை ஏன் என்று இப்போ புரியுதா? :) Posted: 13 Jun 2016 12:10 PM PDT பொள்ளாச்சி என்னும் ஊரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களிடம் நாயும், பூனையும் இருந்தது. அதை மிகவும் அன்போடு வளர்த்து வந்தனர். ஒருநாள்- கார்த்திக் தன் மோதிரத்தை விற்று விட முடிவு செய்தார். அதை விற்றால்தான் சாப்பாடு என்ற நிலை. ஆற்றைக் கடந்து பக்கத்து ஊருக்குச் சென்று அங்குள்ள செல்வந்தர் ஒருவரிடம் மோதிரத்தை ஒப்படைத்துவிட்டார். நட்சத்திரம் போல் மின்னிய அந்த மோதிரத்தைக் கண்டதும், அந்தச் செல்வந்தரும் மயங்கித்தான் போனார். கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, மோதிரத்தை பாதுகாப்பான ... |
| என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) Posted: 13 Jun 2016 10:03 AM PDT தேவையான பொருட்கள் சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட் கோஸ்…………………………………..2 கப் வெங்காயம் நறுக்கியது……………2 கப் பூண்டுபல்………………………………..10 பல் உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்………………………10 கொத்தமல்லி தழை…………………………..1/2 கப் அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன் கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணை………………………………………75 கிராம் செய்முறை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும் நூடுல்ஸை ... |
| 300 ஆண்டுகளுக்கு பின்பன்னிரு ரிஷபாரூட காட்சி ! Posted: 13 Jun 2016 09:58 AM PDT மயிலாடுதுறை;திருநாங்கூரில், 300 ஆண்டுகளுக்கு பின், பன்னிரு ரிஷபாரூட காட்சி திருவிழா நடந்தது.நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருநாங்கூர் கிராமத்தை சுற்றி, பாடல் பெற்ற, பழமை வாய்ந்த, 12 சிவாலயங்கள் அமைந்துள்ளன. திருநாங்கூரில், மதங்க மகரிஷியின் மகளாக மாதங்கினி என்ற பெயரில் அம்மன் பிறந்ததாகவும், அவரை இறைவன் திருமணம் புரிந்து, மதங்க மகரிஷிக்கு, பன்னிரு மூர்த்திகளும் திருமண கோலத்தில், ரிஷப வாகனத்தில் காட்சி அளித்ததாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வைபவத்தை நினைவுகூரும் வகையில், 12 சிவாலயங்களில் ... |
| ஹைக்கூ: அவளைத் தொட வேண்டிய இடம் Posted: 13 Jun 2016 09:55 AM PDT - உயர் வேக தகவற்பரிமாற்றம் பேச்சு வன்மையின் உச்சக்கட்டம் நான்கு விழிகளின் சந்திப்பில் அறிவைப் புறந்தள்ளும் ஆசையை நிறைவேற்றும் கற்பனை முயற்ச்சிகளின் தொடர்ச்சி தடைகள் நிறைந்த பயணம் வாழ்க்கை மக்களை வழி நடத்துபவனல்ல மக்கள் வழி செல்பவன் தலைவன் ஐயங்கள் துரோகிகள் தயக்கங்கள் காட்டிக் கொடுப்போர் வாழ்க்கைப் போர் தேடி என்றும் வராதது உருவாக்கப்பட வேண்டியது வாய்ப்புக்கள் இடம் பிடிக்க அவளைத் தொட வேண்டிய இடம் இதயம் - ------------------------------------ --வேல்தர்மா |
| நள்ளிரவுல நகை வாங்கப் போவியா?! Posted: 13 Jun 2016 09:49 AM PDT - அதிகாரிகள்: நள்ளிரவுல டிபன் வாங்கப் போவியா? மக்கள்: இல்லீங்க, போக மாட்டேன்! அதிகாரிகள்: நள்ளிரவுல காய்கறி வாங்கப் போவியா? மக்கள்: அது எப்படிங்க? அதிகாரிகள்: நள்ளிரவுல நகை வாங்கப் போவியா? மக்கள்: நான் பகல்லயே போகமாட்டேன்! அதிகாரிகள்: நள்ளிரவுல துணிமணி வாங்கப் போவியா? மக்கள்: ச்சேச்சே, போக மாட்டேன்! அதிகாரிகள்: நள்ளிரவுல மொபைலுக்கு ரீசார்ஜ் பண்ணப் போவியா? மக்கள்: அட, இல்லங்க… போகமாட்டேன்! அதிகாரிகள்: நள்ளிரவுல உன் வண்டிக்கு பெட்ரோல், டீசல் போடப் போவியா? மக்கள்: ... |
| அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை Posted: 13 Jun 2016 09:37 AM PDT நியூயார்க் அமெரிக்க பிரபல பாடகி கிரிஸ்டினா கிரிம்மி ப்ளோரொடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 22வயது அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி , ஆர்லாண்டோவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மியை சுட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை கிரிம்மியின் ... |
| Posted: 13 Jun 2016 09:35 AM PDT சீதள உடம்புக்காரர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சளித் தொல்லையை அறவே நாளாவட்டத்தில் ஒழித்து உடம்பை மந்தமான நிலையிலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் குணம் இதற்கு உண்டு. மேலும் ஜீரணத்தை மேம்படுத்தி, உடம்பையும் 'சிக்'கென வைக்கும் ஆற்றலும் உண்டு. தேவையானவை: பச்சரிசி - 250 கிராம் இஞ்சித் துண்டு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 4 வெல்லம் - கோலி அளவு புளிக் கரைசல் 1/4 கப் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கடுகு ... |
| Posted: 13 Jun 2016 09:33 AM PDT வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ வானைஒரு மான்தாவுமோ வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய மலையைஓர் ஈச்சிறகினால் துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண்ஒரு துரும்பினால் துண்டமாமோ சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை தோயுமோ இல்லைஅதுபோல் அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர் அடிமலர் முடிக்கணிந்தோர்க் கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத் தற்பமும்வி கற்பம்உறுமோ தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. சைவமரபில் ... |
| ஜாக்கிரதை ! - 'சென்னைஸ் அமிர்தா' !! Posted: 13 Jun 2016 09:26 AM PDT A forward only-but very serious implications! முன்குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெறும் உரையாடல்கள் அனைத்தும் உண்மையே. எங்கும் வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவோ, வெற்று பரபரப்புக்காகவோ சொல்லாத/இல்லாத விஷயத்தை எழுதவில்லை. அனைத்தும் ஒரு நிருபரின் நேரடி அனுபவமே! ✍) எங்கு திரும்பினாலும் 'Dக்கு முன்னால E என்ற' சென்னைஸ் அமிர்தாவின் விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. 'சென்னைஸ் அமிர்தாவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தால் 100% வேலை உறுதி. படிக்கும்போதே பத்தாயிரம் வரை சம்பளம், பட்டம் பெற்ற பின்னர் ஃபாரினில் வேலை' ... |
| மேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்! Posted: 13 Jun 2016 09:11 AM PDT - நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசுடன், ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமானவர், மேகா ஆகாஷ். இரண்டு ஆண்டுகளாகியும் அப்படம் வெளிவராத நிலையில், தற்போது, கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாகி விட்டார். இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவர், ஒரு பக்க கதை படத்தை அடுத்து, சில சிறிய படங்களில் நடிக்கயிருந்தவர், தற்போது அப்படங்களுக்கு வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். அடுத்தபடியாக, மேல்தட்டு கதாநாயகர்களுடன் நடிக்க, தூது ... |
| கதாபாத்திரத்துக்காக டாப்ஸி வரைந்த நிஜ டாட்டூ Posted: 13 Jun 2016 07:58 AM PDT - திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலர் கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தங்களுக்கு பிடித்தவகையில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இது நிரந்தரமாக இருக்கும்படி வரையப்படுகிறது. படங்களில் மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கும்போது தேவைக்கு ஏற்ப தற்காலிக டாட்டூக்கள் வரைந்துகொண்டு காட்சிக்கு பிறகு அதை அழித்து விடுகின்றனர். தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார் டாப்ஸி. அங்கொன்று இங்கொன்றுமாக இந்தியில் நடிக்க வாய்ப்பு ... |
| புறக்கணிப்பு: பிரபாவதி வீரமுத்து Posted: 13 Jun 2016 07:56 AM PDT - வயதை புதைக்கும் மனது வேண்டும் – அடடா சொல்லடா – உதயமாகா ஞாயிறு உலகை இருளாக்கும் திங்கள் பெண்ணே யார் தான் உன்னை இங்கு புகழும்(ஏற்கும்) – சொல்லடா இன்னும் தான் மெல்லடா – திறக்காத கதிர்கள் வாழ்க்கை கருகும் மறக்காத வலிகள் ஈழம் சொல்லும் – தோற்றத்தின் மாற்றம் வெறுப்பை உமிழும் – பட்ட மரத்தில் பார்வை விழுவதே இல்லை – பாத்திரத்தில் நேத்திரம் பதிவதே இல்லை – நிறம் பதமாய் உதறி தள்ளுகிறது இருளை – வாசமில்லா காகித பூ யார் சூடிடுவார் தேய்பிறை நிலவை யார் ரசித்திடுவார் – ————————— கவிதை ... |
| Posted: 13 Jun 2016 07:53 AM PDT படம்: குலமகள் ராதை, 1963 பாடலாசிரியர்: கண்ணதாசன். இசை: கே.வி. மகாதேவன் பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன் நடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி, தேவிகா – ———————————- – உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை நினைத்து வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை (உன்னைச் சொல்லி) உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி (உன்னைச் ... |
| ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு Posted: 13 Jun 2016 06:33 AM PDT சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் செயற்குழு கூட்டம் வருகிற 18 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பிவைக்கப்படும். ... |
| என்.எஸ்.ஜி-யில் இந்தியா சேருவதில் சிக்கல் : வியன்னா மாநாட்டில் விவாதிக்கவில்லை என சீனா தகவல் Posted: 13 Jun 2016 02:52 AM PDT - அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பது குறித்து வியன்னா மாநாட்டில் எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என சீனா தெரிவித்துள்ளது. - 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இணைவதற்கு இந்தியா தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஆதரவி தெரிவித்தனர். ஆனால் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. - கடந்த ... |
| வெற்றி தேவி – ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் Posted: 13 Jun 2016 02:17 AM PDT - ஜூன், 13 ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் ---- மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான். பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு. அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள், ஜெனகை மாரியம்மன். ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் பிறந்தவர், பரசுராமர். தன் கணவர் செய்யும் பூஜைக்காக, ... |
| சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 13 Jun 2016 12:42 AM PDT - ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். - இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில், வாழ்த்துக்கள் சாய்னா. பிரம்மாண்டமான வெற்றி. உங்களது விளையாட்டு சாதனையை நினைத்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது என வாழ்த்து தெரிவித்துள்ளார். - ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
நர்சரியில் வாங்கியது. எனக்கு பெயர்ந்த தெரியாது .இந்த பூவின் பெயர் என்ன தெரிந்தால் சொல்லுங்களேன் ,