Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுவது... அம்பலம்! * உடனடியாக இழுத்து மூடும்படி கவுன்சில் கடும் எச்சரிக்கை

Posted: 12 Jun 2016 10:36 AM PDT

தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.

'இந்த பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள், அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிலும் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, ...

சர்ச்சையில் சிக்கியதால் கேரள அமைச்சர்களுக்கு... கடிவாளம்! : நடத்தை விதிகளை வெளியிட்டது மார்க்சிஸ்ட்

Posted: 12 Jun 2016 11:38 AM PDT

திருவனந்தபுரம்:பதவியேற்ற ஒரு சில வாரத்திலேயே, முதல்வர் உட்பட கேரள அமைச்சர்கள் பலரும் சர்ச்சையில் சிக்கியதால், மார்க்சிஸ்ட் மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

'தேவையில்லாத விஷயங்களை பேசக் கூடாது; தினமும் அலுவலகத்துக்கு வர வேண்டும்' என்பது உட்பட, அமைச்சர்களுக்கான பல்வேறு நடத்தை விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களுக்கு, கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில், கேரளாவில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்து, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி ...

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க காங்., முடிவு:ராஜ்யசபா தேர்தல் தோல்வி எதிரொலி

Posted: 12 Jun 2016 09:40 AM PDT

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில்,ராஜ்யசபா தேர்தலின்போது, 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க, அக்கட்சி முடிவு செய்து உள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,க்கள், 57 பேரின் பதவிக் காலம் முடிகிறது. இதில், பல மாநிலங்களில் இருந்து, 30 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மீதமுள்ள, 27 இடங்களுக்கு, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
இதில், திடீர் திருப்பமாக, 27 இடங்களில், 12 இடங்களை ...

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியது ரூ.34 லட்சம் கோடியா?

Posted: 12 Jun 2016 10:03 AM PDT

புதுடில்லி:இந்தியாவிலிருந்து, 34 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் கூறிய தகவல், 'அதிகளவில் மிகைப்படுத்தப்பட்டது' என, வருவாய் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, 'குளோபல் பினான்ஷியல் இன்டக்ரிடி' என்ற, ஆய்வு நிறுவனம், 2004 - 2013 ஆண்டுகளில், வளரும் நாடுகளிலிருந்து வெளியேறிய கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. இதில், இந்தியாவிலிருந்து மட்டும், 34 லட்சம் கோடி
ரூபாய் கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ...

இடியாப்ப சிக்கலில் டில்லி தமிழ்நாடு இல்லம் தலைநகர் அவலத்திற்கு தீர்வு காண்பாரா முதல்வர்?

Posted: 12 Jun 2016 12:37 PM PDT

டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நடந்த கையாடல் பிரச்னைக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டில்லியில், தமிழக அரசின் அடையாளமாக செயல்படும், நிர்வாக இயந்திரம்தான் தமிழ்நாடு இல்லம். இங்குள்ள வரவேற்பு பிரிவில், பல ஆண்டுகளாக, கோடிக்கணக்கான ரூபாய், கையாடல் செய்யப்பட்ட சம்பவம், சில மாதங்களுக்கு முன் அம்பலமானது.டெலிபோன் ஆப்பரேட்டராக பணிபுரியும், ஒரு ஊழியர், கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்ட பின், இந்த சம்பவம், வெளியில் தெரிந்தது. தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும், மேலும் 24 பேர் மீது புகார் ...

5 மாநில தேர்தல் வியூகம் பா.ஜ., செயற்குழுவில் முடிவு

Posted: 12 Jun 2016 11:12 AM PDT

அலகாபாத்:உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது குறித்து, அலகாபாத்தில் நடக்கும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், அசாமில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ., இந்த நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா மாநில சட்டசபைகளுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.இதில், முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை ...

குதிரை களவு போன பின் லாயத்தை பூட்டுவதா தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 12 Jun 2016 12:53 PM PDT

சென்னை:'வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது, குதிரை களவு போன பின் லாயத்தை இழுத்துப் பூட்டுவது போல உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தலைமை தேர்தல் கமிஷன் ஒரு உத்தரவு அனுப்பி இருக்கிறது. அதில், 'தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் பட்டியலை எடுத்து, வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்; அப்படி இறந்தவர்களின் பெயர்நீக்கப்படாமல் இருந்தால் அவற்றை உடனடியாக ...

கட்சியினரை சமாதானப்படுத்த விஜயகாந்த் சுற்றுப்பயணம்

Posted: 12 Jun 2016 01:00 PM PDT

மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை சந்திக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டு உள்ளார்.

கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தல் முதல், தே.மு.தி.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்திய சட்டசபை தேர்தலில் பெரும் சரிவை சந்தித்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் டிபாசிட்இழந்தனர்.இதனால், கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். தற்போதுள்ள நிர்வாகிகளும், மாற்று கட்சிகளுக்கு தாவுவதற்கு நேரம் பார்த்து வருகின்றனர். இதையறிந்து கவலை அடைந்துள்ள விஜயகாந்த்,அதைத் தடுக்க ...

ஸ்டாலினுடன் கருணாநிதி மோதல் புது அவதாரத்தின் பின்னணி

Posted: 12 Jun 2016 11:56 AM PDT

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, கருணாநிதி புது அவதாரம் எடுத்திருப்பதாகவும், அது பற்றிய பரபரப்பு பின்னணி தகவலும், தற்போது வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 'தி.மு.க., வெற்றி பெற்றால், கருணாநிதி தான் முதல்வர்' என்று சொல்லியே தேர்தலை சந்தித்தனர். ஆனால், தேர்தல் நெருக்கத்தில், ஸ்டாலி னுக்கு பின்புலமாக இயங்கிய, 'ஒன் மேன் குரூப்'பைச் சேர்ந்தவர்கள், இந்த பிரசாரத்தை முறி யடித்து, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என, பத்திரிகைகள் மூலம் பிரசாரம் ...

ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு ரூ.600 கோடி அபராதம்

Posted: 12 Jun 2016 02:22 PM PDT

புதுடில்லி: ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காத, ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு, 600 கோடி ரூபாய் அபராதத்தை, டில்லி அரசு விதித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்கு செயல்பட்டு வரும், ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு, டில்லி அரசு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறியதாவது: டில்லியில், 43 தனியார் மருத்துவமனைகளுக்கு, சில நிபந்தனைகளுடன் மிகவும் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1960 முதல், 1990 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™