Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஊத்துக்கோட்டை
- சர்வதேச லெவல் கிராசிங் தினம் அனுசரிப்பு
- திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி சாதனை
- லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்
- பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்கம் தொடங்கப்படுமா?
- சாலையோர பழக்கடை எரிப்பு
- திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா
- வீரராகவர் கோயிலில் ரூ. 1.63 லட்சத்துக்கு புடவைகள் ஏலம்
- ஆசிரியர்களை குறைகூறும் அதிகாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டனம்
- மாவட்ட நிர்வாகத்தினரின் அலட்சியம்: சடலத்துடன் இரண்டாவது முறையாக மக்கள் ரயில் மறியல்
- திருவாடானையில் மக்கள் நீதிமன்றம்
- சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு
- இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
- சாக்கை உய்யவந்தம்மன் கோயில் வைகாசி திருவிழாத் தேரோட்டம்
- கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் சாவு
- காட்டுப்பரமக்குடியில் தூய பதுவை அந்தோணியார் திருவிழா
- அழகன்குளம் ஸ்ரீதிருப்பதி பெருமாள் கோயிலில் ஜூன் 16 இல் வருஷாபிஷேகம்
- ராமநாதபுரம்
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்
- ராமேசுவரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
- திருவாடானை அருகே மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 7 பேர் கைது
- இளம்பெண்ணுக்கு கொடுமை: கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
- அருப்புக்கோட்டையில் திமுக நன்றி அறிவிப்புக் கூட்டம்
- முதலமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி
- "சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்'
- அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- விருதுநகரில் 2 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 711 மனுக்கள் அளிப்பு
- அடிப்படை வசதி இல்லாத மேலராஜகுலராமன் ஊராட்சி
- பட்டாசு மூலப்பொருள்கள் வைத்திருந்தவர் கைது
- அகதிகள் முகாம் வீடுகளில் திருடியவர் கைது
- கூமாபட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் விவசாயிகள் பாதிப்பு
- அனுமதியின்றி செல்வதைத் தடுக்க தாணிப்பாறையில் சுற்றுச் சுவர்அமைப்பு
- கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- பழனி அருகே தனியார் கயிறு திரிக்கும் ஆலையில் தீ
- மனைவி மீது தாக்குதல்: கணவர் கைது
- பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் சாவு
- வைகை அணையில் மூழ்கி இளைஞர் சாவு
- பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு
- வரதட்சணை கொடுமை: கணவர் கைது
- லாரி-அரசுப் பேருந்து மோதல்: 18 பேர் காயம்
- நூற்பாலை விடுதியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி: 2 இளம் பெண்கள் காயம்
- ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயர்வு
- பழனியில் குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரக் கேடு அபாயம்
- கூடங்குளத்தில் கூடி வராத முதல் அணு உலை
- வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கைப்பை பறிப்பு: 4 பேர் கைது
- சிறுதொழில் தொடங்க ரூ.25 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்
- காலியாகும் இடங்களை நிரப்பகால்நடை மருத்துவப் பல்கலை. புதிய திட்டம்
- பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம்
- தேனியில் சிஐடியு மாவட்ட மாநாடு
- திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமாக இருக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்
- விவசாயிகளுக்கான குறுந்தகவல் திட்டம் முடக்கம்
- கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படுமா?
- தென்மேற்கு பருவமழைச் சாரல் தொடக்கம்: நெல் நாற்றாங்கால் தயாரிப்பில் விவசாயிகள் மும்முரம்
- ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
- உள்ளாட்சிப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
- டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
- வீட்டில் இருந்த நகைகள் மாயம்
- உடன்குடி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
- காயல்பட்டினம் இக்ரா கல்வி உதவித் திட்டத்துக்கு நிதியுதவி
- உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
- காயல்பட்டினம் ஹாமிதிய்யாவில் மார்க்க விழா
- ரத்தம் - எய்ட்ஸ் - தீர்ப்பு!
- பெண்ணுக்கு சமுதாயத்தின் பாதுகாப்பு...
- பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
- தூத்துக்குடியில் 17இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
- வகுப்பறையும் ஆசிரியர்களும்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச கண் பரிசோதனை
- தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு
- தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த திமுக முடிவு
- கர்நாடகத்தில் 8 மஜத எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம்:பதவிப் பறிப்புக்கு பரிந்துரைக்கவும் தீர்மானம்
- தமிழக - கேரள எல்லையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: அர்ஜுன் சம்பத்
- சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பணி விரைவில் நிறைவடையும்: அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்
- ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- தக்கலையில் துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்கக் கூட்டம்
- போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தலை நடத்தியது இமாலயத் தவறு:தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு
- மாதவபுரம் சுயஉதவிக் குழுக்கள் ஆண்டு விழா
- புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை: முதல்வர் நாராயாணசாமி பேட்டி
- ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடித் திட்டம்: கொண்டுவர மீனவர் அமைப்பு வலியுறுத்தல்
- கருப்புப் பண மீட்பு:மோடி அரசின் செயல்பாட்டில் பாபா ராம்தேவ் அதிருப்தி
- உலக சுற்றுச்சூழல் தின விழா
- காங்கிரஸ் பொதுச் செயலர்களாக குலாம் நபி ஆஸாத், கமல்நாத் நியமனம்
- திற்பரப்பு அருவியில் வெள்ளம்: தடையை மீறி குளித்த சுற்றுலாப் பயணிகள்
- மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் அவசியம்:இன்டர்போலிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தல்
- அனந்தபுரி விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுமா?
- நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- கனிம வளக் கொள்ளைசெயற்கைக்கோள் மூலம் சுரங்கங்களைக் கண்காணிக்கத் திட்டம்
- மின்னல் பாய்ந்து பெண் காயம்
- தில்லியில் நாளை மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்:ஜிஎஸ்டி மாதிரி சட்டம் குறித்து ஆலோசனை
- மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் அதிகரிப்பு:காங்கிரஸ் கூட்டணியின் எண்ணிக்கை குறைந்தது
- பூ வியாபாரியை கொல்ல முயன்ற இளைஞர் கைது
- நாகர்கோவில்
- வர்த்தக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
- மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி: நிதீஷ் குமார் அறிவிப்பு
- கருப்புப் பணத்தின் அளவு: அமெரிக்க நிறுவன மதிப்பீடு மிகையானது:வருவாய் புலனாய்வுத் துறை தகவல்
- "தேர்தல் ஆணையர்களுக்கு அரசமைப்பு ரீதியில் சம பாதுகாப்பு உடனடி சாத்தியமில்லை'
- கடல் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.
- "என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவது குறித்து வியன்னா கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை'
- 23இல் கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பாக். கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டுக் கொலை: ஒருவர் கைது
| Posted: 12 Jun 2016 12:54 PM PDT |
| சர்வதேச லெவல் கிராசிங் தினம் அனுசரிப்பு Posted: 12 Jun 2016 12:54 PM PDT சர்வதேச லெவல் கிராசிங் தினத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வுப் பேரணி, லெவல் கிராசிங்கை கடந்து செல்பவர்களுக்கு துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி சாதனை Posted: 12 Jun 2016 12:53 PM PDT திருவள்ளூரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில், பள்ளி மாணவி டி.ஜெயஸ்ரீ 1,330 குறட்பாக்களையும் ஒப்பித்து சாதனை படைத்தார். |
| லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 12 Jun 2016 12:53 PM PDT கும்மிடிப்பூண்டி வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்கம் தொடங்கப்படுமா? Posted: 12 Jun 2016 12:51 PM PDT பாடியில் தொடங்கி திருநின்றவூர் வரை உள்ள சாலையை 6 வழிப் பாதையாக விரிவாக்கம் செய்ய கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதன் கிளைச் சாலைகள் முழுவதும் 400 அடி சாலைகளாக உருவாக்கப்பட்டும், இந்த திட்டம் மட்டும் கிடப்பில் போடப்பட்டது. |
| Posted: 12 Jun 2016 12:51 PM PDT முன் விரோதம் காரணமாக சாலையோரம் இருந்த பழக்கடையை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் கடை சாம்பலானது. |
| திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா Posted: 12 Jun 2016 12:51 PM PDT பட்டாபிராமபுரம் திரெளபதியம்மன் கோயில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வீரராகவர் கோயிலில் ரூ. 1.63 லட்சத்துக்கு புடவைகள் ஏலம் Posted: 12 Jun 2016 12:50 PM PDT திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவர் கோயிலில் தாயாருக்கு அளிக்கப்பட்ட புடவைகள் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டன. |
| ஆசிரியர்களை குறைகூறும் அதிகாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டனம் Posted: 12 Jun 2016 12:50 PM PDT நடந்து முடிந்த 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு, ஆசிரியர்களை குறைகூறும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| மாவட்ட நிர்வாகத்தினரின் அலட்சியம்: சடலத்துடன் இரண்டாவது முறையாக மக்கள் ரயில் மறியல் Posted: 12 Jun 2016 12:49 PM PDT மயானப் பாதை அமைத்துத் தருவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறி இறந்தவரின் சடலத்தை தண்டவாளத்தில் வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| திருவாடானையில் மக்கள் நீதிமன்றம் Posted: 12 Jun 2016 12:48 PM PDT திருவாடானை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ஒரு சிவில் வழக்கு, மூன்று ஜீவனாம்ச வழக்குகள், 2 கிரிமினல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கிறிஸ்டல் பபிதா மரக்கன்றை நட்டார். |
| சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 12 Jun 2016 12:48 PM PDT பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி Posted: 12 Jun 2016 12:48 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்தவரின் வாரிசுதாரர் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
| சாக்கை உய்யவந்தம்மன் கோயில் வைகாசி திருவிழாத் தேரோட்டம் Posted: 12 Jun 2016 12:47 PM PDT காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள சாக்கை அருள்மிகு உய்யவந்தம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் சாவு Posted: 12 Jun 2016 12:47 PM PDT ராமநாதபுரத்தில் பெண் ஒருவர் சனிக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். |
| காட்டுப்பரமக்குடியில் தூய பதுவை அந்தோணியார் திருவிழா Posted: 12 Jun 2016 12:46 PM PDT பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| அழகன்குளம் ஸ்ரீதிருப்பதி பெருமாள் கோயிலில் ஜூன் 16 இல் வருஷாபிஷேகம் Posted: 12 Jun 2016 12:46 PM PDT ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தில் உள்ள திருப்பதி பெருமாள் என்ற ஸ்ரீஆண்டாள் சமேத அருள்மிகு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் ஜூன் 16 ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. |
| Posted: 12 Jun 2016 12:45 PM PDT |
| ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் Posted: 12 Jun 2016 12:45 PM PDT தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், அதன் மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 12 Jun 2016 12:45 PM PDT தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் பள்ளி மாணவிகளின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியும், உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருவாடானை அருகே மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 7 பேர் கைது Posted: 12 Jun 2016 12:44 PM PDT திருவாடானை அருகே கிராமத்தில் மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| இளம்பெண்ணுக்கு கொடுமை: கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு Posted: 12 Jun 2016 12:44 PM PDT விருதுநகரில் இளம்பெண்ணுக்கு கொடுமை செய்ததாக கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| அருப்புக்கோட்டையில் திமுக நன்றி அறிவிப்புக் கூட்டம் Posted: 12 Jun 2016 12:43 PM PDT அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அருப்புக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் தமிழ்காந்தன், நகரச் செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| முதலமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் Posted: 12 Jun 2016 12:43 PM PDT முதலமைச்சர் விருது பெற தகுதியுடையவர்கள் ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி Posted: 12 Jun 2016 12:42 PM PDT ராஜபாளையம் பகுதியில் கோடை நெல் அறுவடை நடந்துவரும் நிலையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். |
| "சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்' Posted: 12 Jun 2016 12:42 PM PDT சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் என எழுத்தாளர் பொன்னீலன் கூறினார். |
| அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 12 Jun 2016 12:41 PM PDT மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, ஞாயிற்றுக்கிழமை ஊரக தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் பலர் இணைந்தனர். |
| விருதுநகரில் 2 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 711 மனுக்கள் அளிப்பு Posted: 12 Jun 2016 12:41 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். |
| அடிப்படை வசதி இல்லாத மேலராஜகுலராமன் ஊராட்சி Posted: 12 Jun 2016 12:41 PM PDT அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் மேலராஜகுலராமன் ஊராட்சி மக்கள் தவிப்பில் உள்ளனர். |
| பட்டாசு மூலப்பொருள்கள் வைத்திருந்தவர் கைது Posted: 12 Jun 2016 12:40 PM PDT விருதுநகர், வச்சகாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருள்கள் மற்றும் திரிகள் வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| அகதிகள் முகாம் வீடுகளில் திருடியவர் கைது Posted: 12 Jun 2016 12:40 PM PDT விருதுநகரில், ஆனைக்குட்டம் அகதிகள் முகாமில் பூட்டியிருந்த வீடுகளில் பணம் திருடியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| கூமாபட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் விவசாயிகள் பாதிப்பு Posted: 12 Jun 2016 12:39 PM PDT விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்கவேண்டியுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். |
| அனுமதியின்றி செல்வதைத் தடுக்க தாணிப்பாறையில் சுற்றுச் சுவர்அமைப்பு Posted: 12 Jun 2016 12:39 PM PDT தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி மலைப்பகுதிக்கு அனுமதியின்றி செல்வதைத் தடுக்க வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. |
| கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை Posted: 12 Jun 2016 12:39 PM PDT மழைக்காலம் தொடங்கும் முன் கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜபாளையம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| பழனி அருகே தனியார் கயிறு திரிக்கும் ஆலையில் தீ Posted: 12 Jun 2016 12:38 PM PDT பழனியை அருகே தனியார் கயிறு திரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தேங்காய்மட்டைகள், மஞ்சிகள் எரிந்து சாம்பலாயின. |
| மனைவி மீது தாக்குதல்: கணவர் கைது Posted: 12 Jun 2016 12:37 PM PDT கடமலைக்குண்டு அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் சாவு Posted: 12 Jun 2016 12:37 PM PDT பழனி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்து அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தின் பின்புற டயரின் கீழ் கோதைமங்கலம் சின்னக்காலனி தெருவை சேர்ந்த நடராஜ் மகன் சுப்ரமணி(40) படுத்து உறங்கியுள்ளார். இதை கவனிக்காமல் பேருந்தை பின்னோக்கி ஓட்டுநர் நகர்த்தியுள்ளார். இதில் சுப்ரமணி டயரில் சிக்கி நசுங்கி இறந்து போனார். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் அண்ணாத்துரை மீது பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| வைகை அணையில் மூழ்கி இளைஞர் சாவு Posted: 12 Jun 2016 12:37 PM PDT வைகை அணை நீர்த் தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. |
| Posted: 12 Jun 2016 12:36 PM PDT நத்தம் அருகே சனிக்கிழமை பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மணப்பாறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 12 Jun 2016 12:36 PM PDT பெரியகுளத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| லாரி-அரசுப் பேருந்து மோதல்: 18 பேர் காயம் Posted: 12 Jun 2016 12:35 PM PDT பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 18 பேர் காயமடைந்தனர். |
| நூற்பாலை விடுதியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி: 2 இளம் பெண்கள் காயம் Posted: 12 Jun 2016 12:34 PM PDT திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நூற்பாலை விடுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தப்பிச் செல்ல முயன்ற 2 இளம் பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். |
| ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயர்வு Posted: 12 Jun 2016 12:34 PM PDT ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயர்ந்துள்ளது. |
| பழனியில் குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரக் கேடு அபாயம் Posted: 12 Jun 2016 12:33 PM PDT பழனியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| கூடங்குளத்தில் கூடி வராத முதல் அணு உலை Posted: 12 Jun 2016 12:33 PM PDT கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளில் முதல் உலை குறித்தே பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், கூடுதல் உலைகள் சாத்தியமாகுமா என்ற கேள்வியும் நீடித்து வருகிறது. |
| வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கைப்பை பறிப்பு: 4 பேர் கைது Posted: 12 Jun 2016 12:33 PM PDT குமுளி மலைச் சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய 4 பேரை லோயர்கேம்ப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சிறுதொழில் தொடங்க ரூ.25 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி: திண்டுக்கல் ஆட்சியர் தகவல் Posted: 12 Jun 2016 12:32 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரையில் கடனுதவி பெறலாம். |
| காலியாகும் இடங்களை நிரப்பகால்நடை மருத்துவப் பல்கலை. புதிய திட்டம் Posted: 12 Jun 2016 12:32 PM PDT கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் ஆண்டுதோறும் அதைக் கைவிட்டு வேறு படிப்புகளுக்குச் செல்வதால், காலியாகும் இடங்களை நிரப்ப தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. |
| பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் Posted: 12 Jun 2016 12:31 PM PDT பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். |
| தேனியில் சிஐடியு மாவட்ட மாநாடு Posted: 12 Jun 2016 12:31 PM PDT தேனியில் இந்திய தொழிற் சங்க மையத்தின்(சிஐடியு) மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. |
| Posted: 12 Jun 2016 12:30 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமானவையாக இருக்க வேண்டும் என அமைச்சர் சீனிவாசன், அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினார். |
| விவசாயிகளுக்கான குறுந்தகவல் திட்டம் முடக்கம் Posted: 12 Jun 2016 12:30 PM PDT வேளாண் பொருள்களின் விலை நிலவரம், அதன் சாகுபடி தொடங்கும் நேரம் போன்ற பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கு, வேளாண் விற்பனைத் துறை மூலமாக அளிக்கப்பட்டு வந்த குறுந்தகவல் வசதி கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. |
| கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படுமா? Posted: 12 Jun 2016 12:30 PM PDT கோவை: கோவையில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஏற்பட்டு வரும் காலதாமதத்தால் பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். |
| தென்மேற்கு பருவமழைச் சாரல் தொடக்கம்: நெல் நாற்றாங்கால் தயாரிப்பில் விவசாயிகள் மும்முரம் Posted: 12 Jun 2016 12:29 PM PDT கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தென்மேற்கு பருவமழை சாரல் தொடங்கியுள்ளதால், முதல் போக நெல் சாகுபடிக்கு நாற்றாங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். |
| ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் பயிற்சி முகாம் Posted: 12 Jun 2016 12:28 PM PDT இந்திய ஆட்சிப் பணி வேலை வாய்ப்பு பயிற்சிக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் ஞாயற்றுக்கிழமை ஒக்கலிகர் இளைஞர் நலப் பேரவையின் சார்பில் கம்பத்தில் நடைபெற்றது. |
| உள்ளாட்சிப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் Posted: 12 Jun 2016 12:28 PM PDT மூன்றாண்டுகள் நிறைவடைந்த உள்ளாட்சித்துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு Posted: 12 Jun 2016 12:27 PM PDT கயத்தாறையடுத்த வடக்கு இலந்தகுளத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 12 Jun 2016 12:27 PM PDT கோவில்பட்டி அருகே வீட்டில் வைத்திருந்த ஐந்தே கால் பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| உடன்குடி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு Posted: 12 Jun 2016 12:23 PM PDT உடன்குடி பகுதியில் உள்ள உரக் கடைகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| காயல்பட்டினம் இக்ரா கல்வி உதவித் திட்டத்துக்கு நிதியுதவி Posted: 12 Jun 2016 12:23 PM PDT காயல்பட்டினம் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ரா கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. |
| உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் Posted: 12 Jun 2016 12:23 PM PDT தூத்துக்குடி மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. |
| காயல்பட்டினம் ஹாமிதிய்யாவில் மார்க்க விழா Posted: 12 Jun 2016 12:22 PM PDT காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் மார்க்க விழா மூன்று தினங்கள் நடைபெற்றது. |
| Posted: 12 Jun 2016 12:21 PM PDT இருபது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை அடுத்த கல்யாண் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடத்தப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தத்தில் "எய்ட்ஸ்' தொற்று இருந்திருக்கிறது. அந்தப் பெண்மணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் எதிர்பாராத தீர்ப்பை வழங்கி இருக்கிறது. |
| பெண்ணுக்கு சமுதாயத்தின் பாதுகாப்பு... Posted: 12 Jun 2016 12:20 PM PDT பெண்களால் வீடும், சமூகமும், நாடும், உலகும் முன்னேறுவது இன்றைய நிலை. இப்படி தன்னையும், உறவையும், ஊரையும் முன்னேற்ற பெண்கள் இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளவும் வெற்றிபெறவும் வல்லமை பெற்றதால் தான் பெண் சக்தியானாள். |
| பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் Posted: 12 Jun 2016 12:20 PM PDT நாசரேத் அருகே உள்ள மூலக்கரை து.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. |
| தூத்துக்குடியில் 17இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் Posted: 12 Jun 2016 12:20 PM PDT சுயதொழில் தொடங்க விரும்புவோர், தூத்துக்குடியில் ஜூன் 17 ஆம் தேதி நடைபெறும் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 12 Jun 2016 12:20 PM PDT குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பாடங்களை நன்கு கற்றுத் தேர்வதற்காக மட்டுமல்ல, மற்ற மனிதர்களிடம் நல்ல அணுகுமுறையுடன் பழகுதல், பிறர்க்கு உதவி செய்தல், அன்பு பாராட்டுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற முக்கியமான காரணங்களுக்காகவும்தான். |
| முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச கண் பரிசோதனை Posted: 12 Jun 2016 12:19 PM PDT கோவில்பட்டி சுபா நகர் முன்னாள் ராணுவ வீரர் உணவக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஓய்வூதிய கடன் குறித்த ஆலோசனை முகாம் நடைபெற்றது. |
| தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு Posted: 12 Jun 2016 12:19 PM PDT தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர். |
| தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த திமுக முடிவு Posted: 12 Jun 2016 12:18 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 12 Jun 2016 12:18 PM PDT கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சிமாறி வாக்களித்த மதச் சார்பற்ற ஜனதா தள (மஜத) எம்எல்ஏக்கள் 8 பேரை இடைநீக்கம் செய்வதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் எம்எல்ஏ பதவியைப் பறிக்கவும் பேரவைத் தலைவரிடம் பரிந்துரை செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தமிழக - கேரள எல்லையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: அர்ஜுன் சம்பத் Posted: 12 Jun 2016 12:18 PM PDT சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு நெறிமுறைகளில் நீதிமன்றமோ, அரசோ தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக - கேரள எல்லையில் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் அர்ஜுன் சம்பத். |
| Posted: 12 Jun 2016 12:17 PM PDT சாத்தான்குளத்தில் நடைபெற்று வரும் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை பணியானது இன்னும் 2 மாதத்தில் நிறைவடையும் என அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 12 Jun 2016 12:17 PM PDT பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்த ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| தக்கலையில் துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்கக் கூட்டம் Posted: 12 Jun 2016 12:16 PM PDT குமரி மாவட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்கக் கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சுடலை தலைமை வகித்தார். செயலர் குமார், பொருளாளர் ஆபேல், துணைத் தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
| Posted: 12 Jun 2016 12:16 PM PDT போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தியது இமாலயத் தவறு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். |
| மாதவபுரம் சுயஉதவிக் குழுக்கள் ஆண்டு விழா Posted: 12 Jun 2016 12:15 PM PDT மாதவபுரம் எம்.பி.எம். சுயஉதவிக் குழுக்கள் ஆண்டு விழா மாதவராயர் பாலர் பள்ளி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. |
| புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை: முதல்வர் நாராயாணசாமி பேட்டி Posted: 12 Jun 2016 12:15 PM PDT புதுச்சேரியில் மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கு சாத்தியமில்லை என்று அந்த மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார். |
| ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடித் திட்டம்: கொண்டுவர மீனவர் அமைப்பு வலியுறுத்தல் Posted: 12 Jun 2016 12:15 PM PDT ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடித் திட்டம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| கருப்புப் பண மீட்பு:மோடி அரசின் செயல்பாட்டில் பாபா ராம்தேவ் அதிருப்தி Posted: 12 Jun 2016 12:15 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், மத்தியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மந்த கதியில் செயல்படுவதற்கு யோகா குரு பாபா ராம்தேவ் அதிருப்தி தெரிவித்தார். |
| Posted: 12 Jun 2016 12:14 PM PDT தமிழக வனத் துறை கன்னியாகுமரி கோட்டம், பார்வதிபுரம் பைரவி பவுண்டேஷன், தேரூர் பேரூராட்சி ஆகியன சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. |
| காங்கிரஸ் பொதுச் செயலர்களாக குலாம் நபி ஆஸாத், கமல்நாத் நியமனம் Posted: 12 Jun 2016 12:14 PM PDT உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பு வகிக்கும் தேசியப் பொதுச் செயலர்களாக, முறையே மத்திய முன்னாள் அமைச்சர்கள் குலாம் நபி ஆஸாதும், கமல்நாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| திற்பரப்பு அருவியில் வெள்ளம்: தடையை மீறி குளித்த சுற்றுலாப் பயணிகள் Posted: 12 Jun 2016 12:13 PM PDT குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி, ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். |
| மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் அவசியம்:இன்டர்போலிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தல் Posted: 12 Jun 2016 12:12 PM PDT பிரிட்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பது அவசியம் என்று இன்டர்போல் அமைப்பிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. |
| அனந்தபுரி விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுமா? Posted: 12 Jun 2016 12:12 PM PDT திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயிலை அதிவிரைவு ரயிலாக இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது. |
| நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Posted: 12 Jun 2016 12:12 PM PDT மார்ஷல் ஏ. நேசமணியின் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தார். |
| கனிம வளக் கொள்ளைசெயற்கைக்கோள் மூலம் சுரங்கங்களைக் கண்காணிக்கத் திட்டம் Posted: 12 Jun 2016 12:12 PM PDT கனிம வளக் கொள்ளையைத் தடுக்க நவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய செயற்கைக்கோளின் துணையுடன் கனிம வளச் சுரங்கங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| Posted: 12 Jun 2016 12:11 PM PDT மார்த்தாண்டம் அருகே மின்னல் பாய்ந்து பெண் பலத்த காயமடைந்தார். |
| தில்லியில் நாளை மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்:ஜிஎஸ்டி மாதிரி சட்டம் குறித்து ஆலோசனை Posted: 12 Jun 2016 12:11 PM PDT சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மாதிரி சட்டம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. |
| மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் அதிகரிப்பு:காங்கிரஸ் கூட்டணியின் எண்ணிக்கை குறைந்தது Posted: 12 Jun 2016 12:11 PM PDT மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 71ஆகக் குறைந்துள்ளது. |
| பூ வியாபாரியை கொல்ல முயன்ற இளைஞர் கைது Posted: 12 Jun 2016 12:11 PM PDT பூ வியாபாரியை கொல்ல முயன்றதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 12 Jun 2016 12:10 PM PDT |
| வர்த்தக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Jun 2016 12:10 PM PDT குமரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி: நிதீஷ் குமார் அறிவிப்பு Posted: 12 Jun 2016 12:10 PM PDT பிகாரில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் குழந்தைத் தொழிலாளர் கண்காணிப்புத் திட்டத்தை அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் தொடங்கி வைத்தார். மேலும், அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார். |
| கருப்புப் பணத்தின் அளவு: அமெரிக்க நிறுவன மதிப்பீடு மிகையானது:வருவாய் புலனாய்வுத் துறை தகவல் Posted: 12 Jun 2016 12:09 PM PDT "இந்தியாவில் இருந்து ரூ.34 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் அளித்திருக்கும் தகவல் மிகைப்படுத்தப்பட்டது'' என்று மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. |
| "தேர்தல் ஆணையர்களுக்கு அரசமைப்பு ரீதியில் சம பாதுகாப்பு உடனடி சாத்தியமில்லை' Posted: 12 Jun 2016 12:08 PM PDT ""தேர்தல் ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் (தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள்) சம அளவிலான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வாய்ப்பில்லை'' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
| கடல் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. Posted: 12 Jun 2016 12:08 PM PDT குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். |
| "என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவது குறித்து வியன்னா கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை' Posted: 12 Jun 2016 12:08 PM PDT அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வது குறித்து வியன்னா கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. |
| 23இல் கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 12 Jun 2016 12:07 PM PDT கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. |
| பாக். கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டுக் கொலை: ஒருவர் கைது Posted: 12 Jun 2016 12:07 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற 2 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனர். அப்போது, மற்றொரு பாகிஸ்தானியர் காயங்களுடன் பிடிபட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |