Tamil News | Online Tamil News |
- விஜயகாந்த், பிரேமலதா மீது 49 வழக்குகள் வாபஸ் பெற்றால் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு?
- உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., - மகளிருக்கு 50 சதவீதம் வழங்க முடிவு
- உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனி பறிக்க... வியூகம்! பிற்பட்டோர், தலித் ஓட்டுகளை அள்ள அமித் ஷா திட்டம்
- ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., அமோகம்: திடீர் திருப்பமாக கூடுதல் இடங்களில் வெற்றி
- பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீண்டும்...கண்டுபிடிப்பு! டூகடத்தல்காரன் தீனதயாள் வீட்டில் தொடர்கிறது சோதனை
- காங்கிரசுக்கு எங்கும் பிரச்னை தான்!
- விமான சேவை துறையில் அதிரடி மாற்றம் மகிழ்ச்சி! பயணிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க முடிவு
- விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்
- 'சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சணம் இது தானா?'
| விஜயகாந்த், பிரேமலதா மீது 49 வழக்குகள் வாபஸ் பெற்றால் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு? Posted: 11 Jun 2016 08:46 AM PDT தமிழகத்தில், கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருந்தன. ஆனால், அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், கூட்டணிக் கட்சிகளை உதறி விட்டு, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றியது. கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 232 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, 134 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.இப்படி தொடர்ந்து, மூன்று தேர்தல்களிலும் ... |
| உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., - மகளிருக்கு 50 சதவீதம் வழங்க முடிவு Posted: 11 Jun 2016 08:49 AM PDT சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று, ஆட்சியை தக்கவைத்த அ.தி.மு.க., தலைமை, அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இம்முறை, 50 சதவீத பதவிகளை பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதால், பதவிகளை பிடிக்க, மகளிர் அணியில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் மொத்தம், 1.32 லட்சம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இவர்களின் பதவிக்காலம், அக்டோபரில் நிறைவு பெறுகிறது. எனவே, அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். கடந்த 2011ல், ஆட்சியை பிடித்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்றது. அனைத்து மாநகராட்சி களையும் பிடித்து, சாதனை ... |
| Posted: 11 Jun 2016 09:48 AM PDT புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ., தலைவர் அமித் ஷா, தனது வழக்கமான ராஜதந்திர, 'பார்முலாவை' இங்கேயும் செயல்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் மூலம், அங்கு வெற்றியை குவிக்க முடியும் என அக்கட்சி நம்புகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், அசாமில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அதன் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றியால் கிடைத்த உற்சாகத்துடன், தற்போது உத்தர பிரதேசத்தில், பா.ஜ., கவனத்தை ... |
| ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., அமோகம்: திடீர் திருப்பமாக கூடுதல் இடங்களில் வெற்றி Posted: 11 Jun 2016 10:58 AM PDT புதுடில்லி: ராஜ்யசபாவில் காலியாகும், 27 இடங்களுக்கு நடந்ததேர்தலில், ஜார்க்கண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், திடீர் திருப்பமாக, பா.ஜ., கூடுதல் வெற்றியை குவித்தது. ராஜ்யசபா எம்.பி.,க்கள், 57 பேரின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில், 30 பேர் போட்டியின்றி எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில், 27 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.கர்நாடகாவில், நான்கு இடங்களுக்கு, ஐந்து ... |
| Posted: 11 Jun 2016 11:03 AM PDT சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள சொகுசு பங்களா மற்றும் குடோனில், போலீசார் மீண்டும் சோதனையை துவக்கி உள்ளனர். நேற்று நடந்த சோதனையில், பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை உட்பட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச சிலை கடத்தல்:காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளி தீனதயாள், 83. இவன், சென்னை, ஆழ்வார்பேட்டை, 'முர்ரேஸ் கேட்' சாலையில் உள்ள வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ... |
| காங்கிரசுக்கு எங்கும் பிரச்னை தான்! Posted: 11 Jun 2016 11:18 AM PDT மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. எப்போது கட்சிக்கு பிரச்னை வந்தாலும், அதை மறைக்க, கட்சி தரப்பிலிருந்து கசிய விடப்படும் ஒரே செய்தி,- 'ராகுல் விரைவில் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்' என்பது தான்! நடந்து முடிந்த, சில மாநில சட்டசபை தேர்தலில் கிடைத்த தோல்வி ஒரு பக்கம் வாட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், மக்களோடு தொடர்பில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.காங்கிரசின் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான குருதாஸ் காமத், கட்சியிலிருந்து விலகி, ... |
| விமான சேவை துறையில் அதிரடி மாற்றம் மகிழ்ச்சி! பயணிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க முடிவு Posted: 11 Jun 2016 11:23 AM PDT விமான பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளில், பல்வேறு மாற்றங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது ஒரு காரணத்துக்காக, விமானம் ரத்து செய்யப்பட்டால், அதற்காக, பயணிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது உட்பட, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, டில்லியில் நேற்று, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: டிராவல் ஏஜன்டுகள், வெறும் பிரதிநிதிகள் மட்டுமே; எனவே, விமானப் பயணிகளின் டிக்கெட் ரத்து ... |
| விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம் Posted: 11 Jun 2016 11:26 AM PDT புதுடில்லி:கடன் தொகை திருப்பிச்செலுத்தாத வழக்கில், தற்போது பிரிட்டனில் தலைமறைவாக உள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, 1,411 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, அமலாக்க துறை, நேற்று அதிரடியாக முடக்கியது. கர்நாடகாவை சேர்ந்த, பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் விமான சேவை நிறுவனம் துவங்க, பல்வேறு வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அவற்றை திருப்பிச் செலுத்தா ததால், வங்கிகள், அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளன. இதனால், விஜய் மல்லையா, பிரிட்டனுக்கு தப்பியோடி தலைமறைவாக ... |
| 'சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சணம் இது தானா?' Posted: 11 Jun 2016 11:30 AM PDT சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: நேற்று காலையில் வந்த செய்திகளில், சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்டவை:* சென்னை ராயபுரத்தில், பட்டப் பகலில், 50 லட்சம் ரூபாய் நகை, பணம் கொள்ளை * வேளச்சேரி சூப்பர் மார்க்கெட்டில், 102 சவரன் நகை கொள்ளை * அண்ணா நகரில் கூலித் தொழிலாளி வீரையா அடித்துக் கொலை * கொடுங்கையூரில் கத்தி முனையில், ஆறு லட்சம் மதிப்புள்ள, 'விக்' கொள்ளை * |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 12,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |