Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிகார் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி போலீஸில் சரண்
- தொழிலதிபரின் கிடங்கில் மீண்டும் சோதனை: ஆயிரம் ஆண்டு பழைமையான சிலைகள் பறிமுதல்: ஒரே நாளில் 50 சிலைகள் சிக்கின
- பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் அலாகாபாதில் இன்று தொடக்கம்
- விமானப் பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி
- பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகளில் விலைப் பட்டியலை வைக்க வேண்டும்
- ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை ஜூன் 26-இல் திறப்பு
- பாஜக தேசிய செயற்குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள்
- குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்
- ஆட்டோ மீது பேருந்து மோதல்: 5 பேர் சாவு
- கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு
- தெரு விளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
- உலக சுற்றுச்சூழல் தின விழா
- ராணிப்பேட்டையில் மக்கள் நீதிமன்றம் 28 விபத்து வழக்குகளுக்குத் தீர்வு
- தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை :அமைச்சர் தகவல்
- ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் அணையில் அமைச்சர்கள் குழு ஆய்வு
- அரக்கோணத்தில் நாளை கோட்ட அஞ்சல் குறைதீர் முகாம்
- ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் செந்தில் சுவாமி தரிசனம்
- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பெண் எம்எல்ஏ
- பனப்பாக்கம் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை
- தனியார் பள்ளியில் திருட்டு
- "மன்னார்குடி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும்'
- டெல்டா மாவட்ட வேளாண் பணிகளுக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கக் கோரிக்கை
- வேளாங்கண்ணி அருகே இரும்புக் குழாய் திருடிய 3 பேர் கைது
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாவு
- கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் கைது
- தகராறில் 7 பேர் காயம்
- ஜீவன் ரக்ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- மோட்டார் சைக்கிளிலிருந்துதவறி விழுந்தவர் சாவு
- ரஷிய தினம்: புதினுக்கு பிரணாப் வாழ்த்து
- ஆப்கனில் கடத்தப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்போம்: மம்தா
- மோசடி சீட்டு நிதி நிறுவனத்துக்கு விளம்பரம்: 4 நடிகர்களை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
- ஹிந்துக்களிடையே ஆண்மையின்மை அதிகரித்து விட்டது
- என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகுமா?
- மாநிலங்களவைத் தேர்தல் நேரத்தில் ஜார்க்கண்ட் எம்எல்ஏ கைது
- அலாகாபாதில் இன்று முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு
- ஹைதராபாத்: கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
- "ஜேஎன்யு நிகழ்ச்சி தொடர்பான விடியோ உண்மையானதுதான்'
- ஹரியாணா: பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை
- சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஒருவர் கைது
- அரசுப் பள்ளிகளைத் தத்தெடுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் அறிவுறுத்தல்
- யூரோ கோப்பை கால்பந்து: பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து வெற்றி
- மெஸ்ஸி ஹாட்ரிக்; காலிறுதியில் ஆர்ஜென்டீனா
- ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் சாய்னா
- ரியோ ஒலிம்பிக்: லியாண்டர் பயஸூடன் இணைந்து விளையாட போபண்ணா சம்மதம்
- இலங்கை 288-க்கு ஆல் அவுட்
- ஏடிபி சேலஞ்சர்: திவிஜ்-பூரவ் ஜோடி சாம்பியன்
- அறிமுகப் போட்டியில் ராகுல் சதம்; இந்தியா அபார வெற்றி
- பார்வை இழந்தவருக்கு மாற்றுக் கருவிழி மூலம் பார்வை
- ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
- தொழிலாளியை தாக்கியவர் கைது
- கார் மோதி தம்பதி காயம்
- திருச்செந்தூரில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றக் கோரிக்கை
- வழக்குரைஞர்கள் போராட்டம்: சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்புச் சுவர்அகற்றம்
- விளாத்திகுளம் பகுதியில் மது விற்பனை: 4 பேர் கைது
- ஜூன் 15 மின் தடை
- குளத்தூரை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயக்க கோரிக்கை
- ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்
- சாத்தான்குளம் ஒன்றியக் குழுக் கூட்டம்
- இன்லைன் ஸ்கேட்டிங் மூலம் காரை இழுத்து மாணவர் சாதனை
- ஸ்ரீவைகுண்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
- ஸ்ரீவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
- விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வழக்குகளில் ரூ. 1.09 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
- வத்திராயிருப்பு பகுதிக்கு கிடை மாடுகள் வருகை
- மனைவியை தாக்கிய கணவன் கைது
- திமுக - அதிமுக மோதல்: 2 பேர் காயம்
- சிவகாசியில் வீடு புகுந்து நகை திருட்டு
- பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு
- குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
- விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு:மக்கள் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது
- பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
- அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ரத்ததான முகாம்
- மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனித் திருவிழா தொடக்கம்
- மானாமதுரையில் ஜூன் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- தாய்லாந்து சாலை விபத்து: 11 பள்ளி ஆசிரியர்கள் பலி
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டு கொலை
- சவுடு மண் அள்ள அனுமதி தராததால் செங்கல் உற்பத்தி விலை அதிகரிப்பு
- ஆப்கனில் உள்ள தலிபான்களை அமெரிக்கா தாக்க வேண்டும்
- மீன் மார்க்கெட்டை ஏலம் விட எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்
- அனுமதியின்றி தயாரித்த பட்டாசு வெடிப்பு: ஒருவர் கைது
- மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
- பாமக மாநில துணைத் தலைவராக சிவகாசி பெண் நியமனம்
- தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு
- அறிஞர் அண்ணா விருது பெற்றவருக்கு ஆட்சியர் பாராட்டு
- குடிநீர், இருக்கை வசதிகள் இல்லாத திருவாடானை பேருந்து நிலையம்
- கீழக்கரையில் ஜமாபந்தி ஜூன் 15-இல் தொடக்கம்
- குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு
- சிரியாவில் மசூதி அருகே குண்டு வெடிப்பு
- 2 பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு
- தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு
- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை
- பயங்கரவாதத் தடுப்பு: வங்கதேசத்தில் 3,000 பேர் கைது
- "பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்'
- பயங்கரவாதிகளுடன் மோதல்: 6 ஆப்கன் காவலர்கள் பலி
- தூத்தூரில் அதிகாரிகளை சிறைபிடித்த மீனவர்கள்
- கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- ஜூன் 13 மின் தடை
- சின்னத்துறையில் தொடரும் கடல் சீற்றம்: 3 வீடுகள் சேதம்
- சொத்தவிளை கடற்கரையில் மூதாட்டி சடலம்
- பெண் வட்டாட்சியரிடம் தகராறு: ஊழியர் கைது
| பிகார் பிளஸ் 2 தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி போலீஸில் சரண் Posted: 11 Jun 2016 01:17 PM PDT பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான பிஷுன் ராய் கல்லூரியின் முதல்வர் பச்சா ராய், வைசாலி மாவட்டத்துகுள்பட்ட பகவான்பூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். |
| Posted: 11 Jun 2016 01:16 PM PDT சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் தீனதயாளனின் கிடங்கு உள்பட 2 இடங்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் ஆயிரம் ஆண்டு பழைமையான ஹொய்சாளர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் அலாகாபாதில் இன்று தொடக்கம் Posted: 11 Jun 2016 01:16 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதால், அந்நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. |
| விமானப் பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி Posted: 11 Jun 2016 01:13 PM PDT விமானப் பயணச் சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. |
| பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகளில் விலைப் பட்டியலை வைக்க வேண்டும் Posted: 11 Jun 2016 01:13 PM PDT பண்ணைப் பசுமை காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலைகளை, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தியுள்ளார். |
| ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை ஜூன் 26-இல் திறப்பு Posted: 11 Jun 2016 01:11 PM PDT உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கைக் கரையில் திருவள்ளுவரின் முழு உருவச் சிலை, வரும் 26-ஆம் தேதி நிறுவப்படுகிறது. |
| பாஜக தேசிய செயற்குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் Posted: 11 Jun 2016 01:09 PM PDT காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைந்த உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா, ஒடிஸா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங், அஸ்ஸாமின் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளிட்ட பல தலைவர்கள் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். |
| குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம் Posted: 11 Jun 2016 01:08 PM PDT தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்துள்ளார். |
| ஆட்டோ மீது பேருந்து மோதல்: 5 பேர் சாவு Posted: 11 Jun 2016 01:07 PM PDT வாணியம்பாடி அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பள்ளி மாணவி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 11 Jun 2016 01:07 PM PDT ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர், ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. |
| தெரு விளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம் Posted: 11 Jun 2016 01:05 PM PDT ஆம்பூர் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் தெரு விளக்குகள் எரியாததால், மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 11 Jun 2016 01:05 PM PDT பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ராணிப்பேட்டையில் மக்கள் நீதிமன்றம் 28 விபத்து வழக்குகளுக்குத் தீர்வு Posted: 11 Jun 2016 01:04 PM PDT ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 28 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. |
| தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை :அமைச்சர் தகவல் Posted: 11 Jun 2016 01:04 PM PDT தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன். |
| ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் அணையில் அமைச்சர்கள் குழு ஆய்வு Posted: 11 Jun 2016 01:03 PM PDT வாணியம்பாடி அருகே உள்ள ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் நீர்த் தேக்கத்தை சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பாக அமைச்சர்கள் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| அரக்கோணத்தில் நாளை கோட்ட அஞ்சல் குறைதீர் முகாம் Posted: 11 Jun 2016 01:02 PM PDT கோட்ட அளவிலான அஞசலக சேவை தொடர்பான குறை தீர் முகாம் திங்கள்கிழமை அரக்கோணத்தில் நடைபெற உள்ளது. |
| ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் செந்தில் சுவாமி தரிசனம் Posted: 11 Jun 2016 01:02 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில், சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். |
| வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பெண் எம்எல்ஏ Posted: 11 Jun 2016 01:02 PM PDT குடியாத்தம் நகரில் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தார். நகரில் உள்ள 26 வார்டுகளுக்கும் சென்று அவர் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அப்போது அதிமுக |
| பனப்பாக்கம் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை Posted: 11 Jun 2016 01:02 PM PDT காவேரிப்பாக்கம் அருகே பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில், தலை துண்டித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். |
| Posted: 11 Jun 2016 01:01 PM PDT அரக்கோணம் அருகே தனியார் உண்டு உறைவிடப் பள்ளியில் பூட்டு உடைத்து ரூ. 50,000 ரொக்கம், கண்காணிப்பு கேமராக்கள் திருடு போயின. |
| "மன்னார்குடி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும்' Posted: 11 Jun 2016 01:01 PM PDT மன்னார்குடி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் என்றார் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா. |
| டெல்டா மாவட்ட வேளாண் பணிகளுக்கு 600 மெகாவாட் மின்சாரம் வழங்கக் கோரிக்கை Posted: 11 Jun 2016 01:01 PM PDT டெல்டா மாவட்ட வேளாண் பணிகளுக்கு சிறப்பு ஏற்பாடாக 600 மெகாவாட் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| வேளாங்கண்ணி அருகே இரும்புக் குழாய் திருடிய 3 பேர் கைது Posted: 11 Jun 2016 01:01 PM PDT வேளாங்கண்ணி அருகே இரும்புக் குழாய்களைத் திருடியதாக 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணி, வண்டலூர் ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாவு Posted: 11 Jun 2016 01:00 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். |
| கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் கைது Posted: 11 Jun 2016 01:00 PM PDT மயிலாடுதுறை வட்டம், கொற்கை கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 11 Jun 2016 01:00 PM PDT உறவினர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஜீவன் ரக்ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 11 Jun 2016 12:59 PM PDT மனித உயிர்களை மீட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ஜீவன் ரக்ஷா விருதுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| மோட்டார் சைக்கிளிலிருந்துதவறி விழுந்தவர் சாவு Posted: 11 Jun 2016 12:59 PM PDT மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தார். |
| ரஷிய தினம்: புதினுக்கு பிரணாப் வாழ்த்து Posted: 11 Jun 2016 12:46 PM PDT ரஷிய தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| ஆப்கனில் கடத்தப்பட்ட பெண்ணை பத்திரமாக மீட்போம்: மம்தா Posted: 11 Jun 2016 12:45 PM PDT ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணான ஜூடித் டிசௌஸாவை பத்திரமாக மீட்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்தார். |
| மோசடி சீட்டு நிதி நிறுவனத்துக்கு விளம்பரம்: 4 நடிகர்களை கைது செய்ய பாஜக வலியுறுத்தல் Posted: 11 Jun 2016 12:44 PM PDT ரூ.230 கோடி மோசடிப் புகாருக்குள்ளான ஆஸ்கர் சீட்டு நிதி குழுமத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் திரைப்பட நடிகர்களாக இருந்து பிஜு ஜனதாதளத் தலைவர்களாக மாறிய சித்தாந்த் மொஹாபாத்ரா (பெர்ஹாம்பூர் எம்.பி.), அனுபவ் மொஹந்தி (மாநிலங்களவை எம்.பி.) ஆகாஷ் தாஸ் நாயக் (எம்எல்ஏ), தோற்றுப் போன எம்எல்ஏ வேட்பாளர் பப்பு பம்-பம் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| ஹிந்துக்களிடையே ஆண்மையின்மை அதிகரித்து விட்டது Posted: 11 Jun 2016 12:43 PM PDT ஹிந்துக்களிடையே ஆண்மையின்மை அதிகரித்து விட்டது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராகுமா? Posted: 11 Jun 2016 12:43 PM PDT அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பின் (என்எஸ்ஜி) உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறவுள்ளது. |
| மாநிலங்களவைத் தேர்தல் நேரத்தில் ஜார்க்கண்ட் எம்எல்ஏ கைது Posted: 11 Jun 2016 12:42 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சம்ரா லிண்டா கைது செய்யப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. |
| அலாகாபாதில் இன்று முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு Posted: 11 Jun 2016 12:41 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில், மத்திய அரசைக் கண்டித்து அங்கு முழு அடைப்பு பாராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. |
| ஹைதராபாத்: கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி Posted: 11 Jun 2016 12:40 PM PDT ஹைதராபாதில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
| "ஜேஎன்யு நிகழ்ச்சி தொடர்பான விடியோ உண்மையானதுதான்' Posted: 11 Jun 2016 12:40 PM PDT தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகள் உண்மையானவைதான் என்பது சிபிஐ ஆய்வுக்கூடத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. |
| ஹரியாணா: பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை Posted: 11 Jun 2016 12:38 PM PDT ஹரியாணா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஒருவர் கைது Posted: 11 Jun 2016 12:35 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணேவில், கடந்த 2013ஆம் ஆண்டு முற்போக்கு சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வீரேந்திரசிங் தாவ்டே என்பவரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். |
| அரசுப் பள்ளிகளைத் தத்தெடுங்கள்: எம்எல்ஏக்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் அறிவுறுத்தல் Posted: 11 Jun 2016 12:31 PM PDT ஜார்க்கண்டில் ஒவ்வொரு எம்எல்ஏவும் ஒரு அரசுப் பள்ளியையாவது தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுவர் தாஸ் அறிவுறுத்தினார். |
| யூரோ கோப்பை கால்பந்து: பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து வெற்றி Posted: 11 Jun 2016 12:27 PM PDT யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவைத் தோற்கடித்தது. |
| மெஸ்ஸி ஹாட்ரிக்; காலிறுதியில் ஆர்ஜென்டீனா Posted: 11 Jun 2016 12:27 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீன அணி 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. |
| ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் சாய்னா Posted: 11 Jun 2016 12:26 PM PDT ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| ரியோ ஒலிம்பிக்: லியாண்டர் பயஸூடன் இணைந்து விளையாட போபண்ணா சம்மதம் Posted: 11 Jun 2016 12:25 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸூடன் இணைந்து விளையாட ரோஹன் போபண்ணா சம்மதம் தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Jun 2016 12:22 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 95.1 ஓவர்களில் 288 ரன்களுக்கு சுருண்டது. |
| ஏடிபி சேலஞ்சர்: திவிஜ்-பூரவ் ஜோடி சாம்பியன் Posted: 11 Jun 2016 12:20 PM PDT பிரிட்டனின் சர்பிட்டன் நகரில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண்-பூரவ் ராஜா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. |
| அறிமுகப் போட்டியில் ராகுல் சதம்; இந்தியா அபார வெற்றி Posted: 11 Jun 2016 12:19 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது. |
| பார்வை இழந்தவருக்கு மாற்றுக் கருவிழி மூலம் பார்வை Posted: 11 Jun 2016 12:12 PM PDT திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கண் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு, மாற்றுக் கருவிழி சிகிச்சை மூலம் பார்வை கிடைத்தது. |
| ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 11 Jun 2016 12:12 PM PDT திருவாரூர் அருகே கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய ஆழ்குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| Posted: 11 Jun 2016 12:12 PM PDT திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை தொழிலாளியை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 11 Jun 2016 12:12 PM PDT திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை கார் மோதியதில் தம்பதி இருவர் காயமடைந்தனர். |
| திருச்செந்தூரில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றக் கோரிக்கை Posted: 11 Jun 2016 12:11 PM PDT திருச்செந்தூரில் பள்ளி மாணவர்கள், பக்தர்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமென தமிழக மாணவர் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| வழக்குரைஞர்கள் போராட்டம்: சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்புச் சுவர்அகற்றம் Posted: 11 Jun 2016 12:10 PM PDT சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம் காரணமாக நீதிமன்றம் கட்ட தேர்வு பெற்ற இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர் அப்புறப்படுத்தப்பட்டது. |
| விளாத்திகுளம் பகுதியில் மது விற்பனை: 4 பேர் கைது Posted: 11 Jun 2016 12:10 PM PDT விளாத்திகுளம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 96 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். |
| Posted: 11 Jun 2016 12:10 PM PDT தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குளத்தூரை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் இயக்க கோரிக்கை Posted: 11 Jun 2016 12:09 PM PDT தூத்துக்குடி - ராமேசுவரம் கிழக்கு கடற்கரைச் சாலை வழித்தடத்தில் குளத்தூரை மையமாகக் கொண்டு கூடுதலாக ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல் Posted: 11 Jun 2016 12:09 PM PDT தூத்துக்குடி மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. |
| சாத்தான்குளம் ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 11 Jun 2016 12:09 PM PDT சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. |
| இன்லைன் ஸ்கேட்டிங் மூலம் காரை இழுத்து மாணவர் சாதனை Posted: 11 Jun 2016 12:09 PM PDT கோவில்பட்டியில் 9ஆம் வகுப்பு மாணவர் இன்லைன் ஸ்கேட்டிங் மூலம் காரை 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்று சாதனை படைத்தார். |
| ஸ்ரீவைகுண்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 11 Jun 2016 12:08 PM PDT தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகம், கிருஷ்ணன்கோயில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியன சார்பில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் Posted: 11 Jun 2016 12:08 PM PDT குரும்பூர் சுற்றுவட்டார பகுதி கார் சாகுபடி நெற்பயிரை பாதுகாக்க, ஸ்ரீவைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தழிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jun 2016 12:07 PM PDT திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வழக்குகளில் ரூ. 1.09 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 11 Jun 2016 12:06 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 43 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1,09,48,000-க்கு உத்தரவு வழங்கப்பட்டது. |
| வத்திராயிருப்பு பகுதிக்கு கிடை மாடுகள் வருகை Posted: 11 Jun 2016 12:06 PM PDT மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த கிடை மாடுகள் மேய்ச்சலுக்காக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதிக்கு வந்துள்ளன. |
| Posted: 11 Jun 2016 12:06 PM PDT திருத்தங்கல்லில் மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருத்தங்கல் கே.கே.நகரில் வசிக்கும் கூலித்தொழிலாளி ராஜா(38). |
| திமுக - அதிமுக மோதல்: 2 பேர் காயம் Posted: 11 Jun 2016 12:06 PM PDT விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் அதிமுக நிர்வாகிகளை கத்தியால் குத்திய திமுக ஆதரவாளர்கள் 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். |
| சிவகாசியில் வீடு புகுந்து நகை திருட்டு Posted: 11 Jun 2016 12:05 PM PDT சிவகாசியில் கட்டடத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு Posted: 11 Jun 2016 12:05 PM PDT பாம்பன் ரயில் தூக்கு பாலம், ராமேசுவரம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தென் மத்திய ரயில்வே பாதுகாப்பு தணிக்கை அதிகாரி சாஹூ சனிக்கிழமை ஆய்வு நடத்தினார். |
| குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு Posted: 11 Jun 2016 12:05 PM PDT திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சர்வதேச குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். |
| விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு:மக்கள் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது Posted: 11 Jun 2016 12:04 PM PDT ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி விலக்கு சாலையில் வேன் மோதி பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. |
| Posted: 11 Jun 2016 12:04 PM PDT பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. |
| அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ரத்ததான முகாம் Posted: 11 Jun 2016 12:04 PM PDT பரமக்குடி அரசு தொழிற் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பரமக்குடியின் இந்திய மருத்துவக் கழகம் ஆகியன சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. |
| மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனித் திருவிழா தொடக்கம் Posted: 11 Jun 2016 12:03 PM PDT மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூர் ஸ்ரீ சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆனித் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குள்பட்ட |
| மானாமதுரையில் ஜூன் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 11 Jun 2016 12:03 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜூன் 14 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| தாய்லாந்து சாலை விபத்து: 11 பள்ளி ஆசிரியர்கள் பலி Posted: 11 Jun 2016 12:02 PM PDT தாய்லாந்தில் தனியார் தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான வேன் விபத்துக்குள்ளானதில் பள்ளி ஆசிரியர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
| ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டு கொலை Posted: 11 Jun 2016 12:01 PM PDT மெக்ஸிகோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| சவுடு மண் அள்ள அனுமதி தராததால் செங்கல் உற்பத்தி விலை அதிகரிப்பு Posted: 11 Jun 2016 12:01 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பட்டா நிலங்களில் சவுடு மண் அள்ள அனுமதி தராததால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| ஆப்கனில் உள்ள தலிபான்களை அமெரிக்கா தாக்க வேண்டும் Posted: 11 Jun 2016 12:01 PM PDT ஆப்கனிலிருந்து செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃப் கூறினார். |
| மீன் மார்க்கெட்டை ஏலம் விட எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் Posted: 11 Jun 2016 12:01 PM PDT விருதுநகரில் உள்ள மீன் மார்க்கெட் கட்டண வசூலை தனியாருக்கு ஏலம் விட எதிர்ப்புத் தெரிவித்து மீன் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். |
| அனுமதியின்றி தயாரித்த பட்டாசு வெடிப்பு: ஒருவர் கைது Posted: 11 Jun 2016 12:00 PM PDT சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் காந்திபாண்டியன்(35). இவர் அனுமதியின்றி தனது வீட்டில் சோல்சா வெடிகளை தயாரித்து, வீட்டின் மாடியில் காயவைத்துள்ளார். சனிக்கிழமை காலை காயவைத்த சோல்சா வெடிகள் திடீரென வெடித்தன. இதுகுறித்து கங்கர்செவல் கிராம நிர்வாக அதிகாரி |
| மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் Posted: 11 Jun 2016 12:00 PM PDT ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| பாமக மாநில துணைத் தலைவராக சிவகாசி பெண் நியமனம் Posted: 11 Jun 2016 12:00 PM PDT சிவகாசியைச் சேர்ந்த பெண் கவிஞர் ம.திலகபாமா பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு Posted: 11 Jun 2016 11:59 AM PDT தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். |
| அறிஞர் அண்ணா விருது பெற்றவருக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 11 Jun 2016 11:59 AM PDT சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது பெற்ற ராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பெர்னாடிட்டை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார். |
| குடிநீர், இருக்கை வசதிகள் இல்லாத திருவாடானை பேருந்து நிலையம் Posted: 11 Jun 2016 11:59 AM PDT திருவாடானையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில், இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். |
| கீழக்கரையில் ஜமாபந்தி ஜூன் 15-இல் தொடக்கம் Posted: 11 Jun 2016 11:58 AM PDT கீழக்கரை வட்டாட்சியர் எல்கைக்கு உள்பட்ட 26 கிராமங்களின் வருவாய்த் தீர்வாய கணக்குகளின் தணிக்கை, (ஜமாபந்தி) ஜூன் 15இல் தொடங்க இருப்பதாக வட்டாட்சியர் தர்மர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். |
| குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு Posted: 11 Jun 2016 11:58 AM PDT தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சிரியாவில் மசூதி அருகே குண்டு வெடிப்பு Posted: 11 Jun 2016 11:58 AM PDT சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள புகழ் பெற்ற மசூதிக்கு வெளியே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். |
| 2 பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு Posted: 11 Jun 2016 11:58 AM PDT சிவகங்கை அருகே சோழபுரத்தில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், சனிக்கிழமை ஒருவர் உயிழந்தார். |
| தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு Posted: 11 Jun 2016 11:57 AM PDT பிளஸ் 2 தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு திருப்பத்தூரில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை Posted: 11 Jun 2016 11:57 AM PDT சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களைத் தாக்கி ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். |
| பயங்கரவாதத் தடுப்பு: வங்கதேசத்தில் 3,000 பேர் கைது Posted: 11 Jun 2016 11:57 AM PDT வங்கதேசம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த இரு தினங்களாக எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கையில், இதுவரை 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம்' Posted: 11 Jun 2016 11:56 AM PDT பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார். |
| பயங்கரவாதிகளுடன் மோதல்: 6 ஆப்கன் காவலர்கள் பலி Posted: 11 Jun 2016 11:56 AM PDT ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் மாவட்ட காவல்துறை தலைவர் உள்பட 11 காவலர்கள் உயிரிழந்தனர். |
| தூத்தூரில் அதிகாரிகளை சிறைபிடித்த மீனவர்கள் Posted: 11 Jun 2016 11:56 AM PDT கடலரிப்பால் பாதிக்கப்பட்டு, தூத்தூர் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சின்னத்துறை மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வந்த வருவாய்த் துறை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 11 Jun 2016 11:56 AM PDT களியக்காவிளை அருகே லாரி மற்றும் ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 4,300 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| Posted: 11 Jun 2016 11:55 AM PDT பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 13) மின் தடை செய்யப்படுகிறது. |
| சின்னத்துறையில் தொடரும் கடல் சீற்றம்: 3 வீடுகள் சேதம் Posted: 11 Jun 2016 11:55 AM PDT சின்னத்துறை பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்தன. |
| சொத்தவிளை கடற்கரையில் மூதாட்டி சடலம் Posted: 11 Jun 2016 11:55 AM PDT சொத்தவிளை கடலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தார். நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளை கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலை மூதாட்டியின் சடலம் |
| பெண் வட்டாட்சியரிடம் தகராறு: ஊழியர் கைது Posted: 11 Jun 2016 11:54 AM PDT நாகர்கோவிலில் பெண் வட்டாட்சியரிடம் தகராறில் ஈடுபட்டதாக ஊழியர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |