Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உத்தரகண்டில் கட்சித் தாவல்: காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் இருவர் தகுதிநீக்கம்

Posted: 09 Jun 2016 01:10 PM PDT

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது, கடந்த மாதம் 10ஆம் தேதி (மே 10) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தங்களது கட்சிக்கு எதிராக வாக்களித்த பாஜக எம்எல்ஏ பீம்லால் ஆர்யா, காங்கிரஸ் எம்எல்ஏ ரேகா ஆர்யா ஆகியோரை தகுதிநீக்கம் செய்து, அந்த மாநில பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மிகைமின் மாநிலமானது தமிழகம்

Posted: 09 Jun 2016 01:08 PM PDT

மின்சார உற்பத்தியில் மிகைமின் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதனால், 2021-ஆம் ஆண்டு வரை மின்பற்றாக்குறை ஏற்படாத நிலை உருவாகியுள்ளது.

திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல்: உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு

Posted: 09 Jun 2016 01:05 PM PDT

திருப்பூரில் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி தொடர்பாக, விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் இல்லை: பினராயி விஜயன்

Posted: 09 Jun 2016 01:03 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாய முன்னணியின் கோரிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

சக நீதிபதியுடன் கருத்து வேறுபாடு: நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனி அமர்வுக்கு மாற்றம்

Posted: 09 Jun 2016 01:02 PM PDT

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் முரண்பட்ட வகையில் முடிவெடுத்ததால், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து தனி அமர்வுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டார்.

அரசு நிர்வாகப் பணிகளை நீதித் துறை கையில் எடுக்க முடியாது

Posted: 09 Jun 2016 12:53 PM PDT

"அரசு நிர்வாகத்தின் பணிகளை நீதித் துறை ஆற்ற முடியாது. இந்த இரண்டு அமைப்புகளின் சுதந்திரமும் பராமரிக்கப்பட வேண்டும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி

Posted: 09 Jun 2016 12:52 PM PDT

""முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்'' என்று கூறிய வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சியின் கருத்தால், ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அமளி ஏற்பட்டது.

ராஜஸ்தானில் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக முகாமில் மாற்றுக் கட்சி எம்எல்ஏக்கள்

Posted: 09 Jun 2016 12:52 PM PDT

ராஜஸ்தானில் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி, ஆளும் பாஜக சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாமில் தேசிய ஜமீன்தாரா கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

Posted: 09 Jun 2016 12:51 PM PDT

ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர். எம். மணிகண்டன் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.பின்னர் அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளரான பிறகு முதல் முறையாக ராமநாதபுரம் வந்த அமைச்சரை கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் நகர் எல்லையில் உற்சாகமாக வரவேற்றனர்.

விருப்பப்பட்டால் "ரயிலில் உணவு' திட்டம் அறிமுகம்

Posted: 09 Jun 2016 12:50 PM PDT

ரயில் பயணங்களின்போது விருப்பப்படுவோருக்கு மட்டும் உணவு வழங்கும் வகையிலான திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மானாமதுரையில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

Posted: 09 Jun 2016 12:50 PM PDT

மானாமதுரையில் வியாழக்கிழமை எம்.எல்.ஏ. அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன்: விஜயகாந்த்

Posted: 09 Jun 2016 12:50 PM PDT

தோல்வியைப் புறந்தள்ளி பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கமுதியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 09 Jun 2016 12:50 PM PDT

கமுதியில் வியாழக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் சாலை விபத்தில் பலி

Posted: 09 Jun 2016 12:50 PM PDT

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ

Posted: 09 Jun 2016 12:49 PM PDT

கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின் வயரில் உரசி தீப்பற்றி சேதமடைந்தது.

ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் கைது

Posted: 09 Jun 2016 12:49 PM PDT

கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஒடிஸாவில் 100 புதிய பாலங்கள்: நவீன் பட்நாயக் திறந்துவைத்தார்

Posted: 09 Jun 2016 12:49 PM PDT

"பிஜு சேது' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 100 புதிய பாலங்கள், குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் 75 புதிய திட்டங்களை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் வியாழக்கிழமை மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பள்ளியில் பசுமை விருது வழங்கும் விழா

Posted: 09 Jun 2016 12:48 PM PDT

காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பசுமை விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Posted: 09 Jun 2016 12:47 PM PDT

காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அன்ட் கிம் கல்லூரியில் வியாழக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

பைக்கில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை சாவு

Posted: 09 Jun 2016 12:46 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே வியாழக்கிழமை இரவு பைக் விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

மண்டபம் பேரூராட்சியில் தினசரி 60 கிலோ இயற்கை உரம் தயாரிப்பு: ஆட்சியர்

Posted: 09 Jun 2016 12:46 PM PDT

மண்டபம் பேரூராட்சியில் தினசரி 60கிலோ இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடம்பாகுடி கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 09 Jun 2016 12:46 PM PDT

திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர், பரிவார தெய்வ கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகைக்காக பெண் கொலை: இளைஞர் கைது

Posted: 09 Jun 2016 12:45 PM PDT

முதுகுளத்தூர் அருகே வியாபாரத்திற்கு சென்ற பெண் காணாமல் போன வழக்கில், நகைக்காக அவரைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அதிமுக மகளிரணி இணைச் செயலருக்கு வாழ்த்து

Posted: 09 Jun 2016 12:45 PM PDT

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கீர்த்திகாமுனியசாமி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பரமக்குடி நகர்மன்றத் தலைவராக இவர் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவரை மாநில மகளிரணி இணைச் செயலராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.கீர்த்திகாமுனியசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

Posted: 09 Jun 2016 12:44 PM PDT

திருப்புவனம் அருகே புதன்கிழமை வீட்டில் மின் பழுதை சரி செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பைக்குகள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 09 Jun 2016 12:44 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே வியாழக்கிழமை பைக்குகள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலநெட்டூர் கோயிலில் ஆனித் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 09 Jun 2016 12:44 PM PDT

மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை (ஜூன் 11) ஆனித் திருவிழா தொடங்குகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம்

Posted: 09 Jun 2016 12:43 PM PDT

தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அணுகுசாலைப் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

Posted: 09 Jun 2016 12:43 PM PDT

பரமக்குடி வைகை ஆற்றின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலையில் பள்ளிக்கூடம், கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

Posted: 09 Jun 2016 12:42 PM PDT

பரமக்குடியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் எம்.மணிகண்டன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

ஜூன் 17-இல் ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 09 Jun 2016 12:41 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் வரும் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பற்றி சேதம்

Posted: 09 Jun 2016 12:40 PM PDT

பாம்பன் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த அடைக்கலம் மகன் மரியலிட்டன். இவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றுவிட்டு  செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர். அதன் பின்னர் படகை பாம்பன் வடக்கு கடலில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த படகு புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் படகில் இருந்த மீன்பிடி வலைகள், டீசல் கேன்கள், குளிர்சாதனப் பெட்டி உள்பட 10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து மரியலிட்டன் அளித்த புகாரின் பேரில் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ராமேசுவரம் கோயிலில் ஜூன் 13இல் நடைகள் திறப்பு நேரம் மாற்றம்

Posted: 09 Jun 2016 12:39 PM PDT

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையொட்டி ஜூன் 13 ஆம் தேதி நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் செல்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

Posted: 09 Jun 2016 12:35 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சீ.ராஜேஷ்குமார்(30). இவரது மனைவி திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் ராக்காண்டி மகள்  முத்துராக்கு(27). ராஜேஷ்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியிடம் பிரச்னை செய்து வந்தாராம்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் சாவு

Posted: 09 Jun 2016 12:35 PM PDT

அருப்புக்கோட்டை மணிநகரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ்(72). இவர் வியாழக்கிழமை காலை அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி முன்பு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அருப்புக்கோட்டையை நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, சுந்தர்ராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்ட சுந்தர்ராஜ், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய காரை தேடி வருகின்றனர்.

நாளை பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம்

Posted: 09 Jun 2016 12:35 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டங்கள் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

ஆவியூர், முத்துராமலிங்கபுரம் பகுதிகளில் ஜூன் 10 மின்தடை

Posted: 09 Jun 2016 12:34 PM PDT

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.சோலையப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதன் காரணமாக கால 8 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆவியூர், காரியாபட்டி,புல்வாய்க்கரை, அரசகுளம், குரண்டி, மாங்குளம், கரிசல்குளம், கம்பிக்குடி, முஷ்டக்குறிச்சி,திம்மாபுரம், அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், முத்துராமலிங்கபுரம், கல்லூரணி, சவ்வாஸ்புரம், ஆலடிபட்டி, எம்,ரெட்டியாபட்டி, வீரசோழன், நரிக்குடி, பரளச்சி, பூலாங்கால், தும்முசின்னம்பட்டி, செட்டிகுளம், தெப்பலாக்கரை ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் சாவு

Posted: 09 Jun 2016 12:34 PM PDT

சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இரண்டு அறைகள் தரைமட்டமாகின.

கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 09 Jun 2016 12:33 PM PDT

மம்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகன் திராவிடலிங்கம் (42). இவரிடம் இதே இடத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2015 மே மாதம் ரூ.15 ஆயிரம் வாங்கினாராம். புதன்கிழமை இரவு கோயில் அருகே இருந்த மணிகண்டனிடம் திராவிடலிங்கம் பணத்தைக் கேட்டுள்ளார்.

பிரசவத்தின்போது சிறுநீர் பையில் காயம்: இரு மருத்துவர்கள் ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 09 Jun 2016 12:33 PM PDT

பிரசவத்தின்போது, பெண்ணின் சிறுநீர்ப் பையில் காயம் ஏற்படுத்திய அரசு மருத்துவர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் ரூ.65, 314 இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மனைவி மாயம்: கணவர் புகார்

Posted: 09 Jun 2016 12:32 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் மா.ராமராஜ்(30). இவரது மனைவி விஜயலட்சுமி (27). கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். புதன்கிழமையும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ராமராஜ் வீட்டில் இல்லாத நேரம் வெளியே சென்ற விஜயலட்சுமி இதுவரை வீடு திரும்பவில்லையாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராமராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர் கைது

Posted: 09 Jun 2016 12:32 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொத்தனார் மர்மச் சாவு

Posted: 09 Jun 2016 12:31 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், சந்திக்கிணற்றுத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் அர்ஜூனகுமார்(23). திருமணம் ஆகாத இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை மதியம் வீட்டை பூட்டி தூங்கியுள்ளார். மாலை கதவு திறக்கப்படாததைக் கண்டு ஜன்னல் வழியே பார்த்தபோது காதின் வழியே ரத்தம் வந்த நிலையில் அர்ஜூனகுமார் இறந்து கிடந்தார்.

ம.பி. மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பம்: இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிக்க வாய்ப்பு

Posted: 09 Jun 2016 12:31 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் சிறைக்கு சென்ற ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 09 Jun 2016 12:31 PM PDT

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(53). புதன்கிழமை இரவு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்றவர் வியாழக்கிழமை பிற்பகல் வரை வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜின் மகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கோவிந்தராஜ் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பந்தல்குடி காவல்துறையினர் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்னை காரணமாக கோவிந்தராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ராஜபாளையத்தில் ஜமாபந்தி

Posted: 09 Jun 2016 12:30 PM PDT

ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த  ஜமாபந்தி யில் 29 பேர் மனுக்கள் அளித்தனர்.

விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.12.44 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 09 Jun 2016 12:30 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் பலியானவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.12,44,500 இழப்பீடு வழங்க நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: பதான்கோட்டில் தீவிர பாதுகாப்பு

Posted: 09 Jun 2016 12:30 PM PDT

உளவுத் துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு: வீரபத்ர சிங்கிடம் சிபிஐ விசாரணை

Posted: 09 Jun 2016 12:29 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிடம் தில்லி சிபிஐ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

"திட்டமிட்டப்படி கர்நாடக மாநிலங்களவைத் தேர்தல்'

Posted: 09 Jun 2016 12:29 PM PDT

கர்நாடக மாநிலங்களவைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை; ஆகையால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

Posted: 09 Jun 2016 12:28 PM PDT

சாத்தூர் அரசு மருத்துவமனையில் சட்டபேரவை உறுப்பினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை

Posted: 09 Jun 2016 12:27 PM PDT

ராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

Posted: 09 Jun 2016 12:27 PM PDT

சாத்தூரில் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஒன்றியக் குழுத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். ஆணையர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.

கழிப்பறை கட்டியவர்களுக்கு மானியம் நிலுவை: பயனாளிகள் அதிருப்தி

Posted: 09 Jun 2016 12:26 PM PDT

விருதுநகர் நகராட்சிப் பகுதியில், 80 க்கும் மேற்பட்ட  தனிநபர் இல்லக் கழிப்பறைகளுக்கான மானியம் இதுவரை வழங்கப்படவில்லை.

குவைத்தில் பணி புரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Jun 2016 12:26 PM PDT

இந்திய தொலைத் தொடர்புத்துறையின், குவைத் திட்ட பணிகளில் பணி புரிய  வேலைவாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் செய்தவர்களையும் பேச்சாற்றலால் கவர்ந்த மோடி

Posted: 09 Jun 2016 12:26 PM PDT

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பேச்சாற்றல், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம் செய்த உறுப்பினர்களையும் கவர்ந்துவிட்டார்.

சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jun 2016 12:24 PM PDT

டீசல், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி விருதுநகரில் சிஐடியு சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாறுகால் வசதி இல்லாததால் விருதுநகரில் முக்கிய சாலைகள் சேதம்

Posted: 09 Jun 2016 12:24 PM PDT

விருதுநகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் வழிந்தோட வாறுகால் வசதி இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைகின்றன.

சிவகாசி

Posted: 09 Jun 2016 12:23 PM PDT

மோதல்: 28 பேர் மீது வழக்கு

Posted: 09 Jun 2016 12:23 PM PDT

சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தில் புதிய தமிழகம் மற்றும் ஜான்பாண்டியன் கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக திருத்தங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸார் ஒரு தரப்பில் சுரேஷ், சுப்புக்குட்டி உள்ளிட்ட 14 பேர் மீதும், மற்றொரு தரப்பில் பாண்டி, காளிராஜ் உள்ளிட்ட 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேராசிரியர்களின் ஊதிய திருத்த கோரிக்கையை ஆராயக் குழு

Posted: 09 Jun 2016 12:23 PM PDT

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஊதியத்தை திருத்தி அமைப்பது, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளைக் களைவது உள்ளிட்டவை குறித்து ஆராய, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உறுப்பினர் வி.எஸ்.செüஹான் தலைமையில் 5 நபர்களைக் கொண்ட குழு வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன விபத்து: தலைமை ஆசிரியைகள் காயம்

Posted: 09 Jun 2016 12:22 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு தலைமை ஆசிரியைகள், மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தனர்.

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த திண்டுக்கல் போக்குவரத்து போலீஸாருக்கு மீட்பு வாகனம் வழங்கப்படுமா?

Posted: 09 Jun 2016 12:22 PM PDT

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, திண்டுக்கல் போக்குவரத்துப் போலீஸாருக்கு மீட்பு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி காவலர் தற்கொலை

Posted: 09 Jun 2016 12:22 PM PDT

மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் வங்கி காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சைவ உணவகம் திறப்பு விழா

Posted: 09 Jun 2016 12:21 PM PDT

திண்டுக்கல் நகரின் பிரதான தொழில் நிறுவனமான தரணி குழுமத்தின் சார்பில் ரத்தினவிலாஸ் உயர்தர சைவ உணவகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இளைஞர்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு

Posted: 09 Jun 2016 12:21 PM PDT

இந்திய தொலை தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி: இந்திய தொலை தொடர்புத் துறையின் சார்பில் குவைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன.

நிலக்கோட்டை அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 09 Jun 2016 12:20 PM PDT

நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டியில் குடிநீர் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் 2ஆம் நாளாக வருவாய் தீர்வாயம்

Posted: 09 Jun 2016 12:20 PM PDT

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆம் நாளாக வியாழக்கிழமை வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

ஒத்திக்கு விட்ட கடையை திரும்ப கேட்டவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

Posted: 09 Jun 2016 12:20 PM PDT

சின்னமனூர் அருகே ஒத்திக்கு விட்ட கடையை திரும்ப கேட்டவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோபா அமெரிக்கா கால்பந்து ஹைதிக்கு எதிராக பிரேசில் அபார வெற்றி

Posted: 09 Jun 2016 12:19 PM PDT

கோபா அமெரிக்கா சென்டினரியோ கால்பந்துப் போட்டியில் ஹைதி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில் அணி.

ஜீ.வி.அன்னை மருத்துவமனை திறப்பு விழா

Posted: 09 Jun 2016 12:19 PM PDT

விளாப்பாக்கம் ஆரணி சாலையில் ஜீ.வி.அன்னை பல்துறை சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில் மோதியதில் ஒருவர் சாவு

Posted: 09 Jun 2016 12:18 PM PDT

அரக்கோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மின்வாரிய பணியாளர் மீது ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தனியார் பள்ளியில் திருட்டு

Posted: 09 Jun 2016 12:18 PM PDT

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளியில் ரூ. 1.72 லட்சம் திருடுபோனது.

அரசுப் பள்ளியில் கட்டாய நிதி வசூல்:மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை

Posted: 09 Jun 2016 12:18 PM PDT

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய நிதி வசூல் செய்தது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இந்தியாவில் 13 டெஸ்ட், 8 ஒருநாள், 3 டி20 போட்டிகள்

Posted: 09 Jun 2016 12:18 PM PDT

இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் இந்தியாவில் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள், 8 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இரு கிராமத்தினருக்கு இடையே மோதல்: 5 பேர் காயம்

Posted: 09 Jun 2016 12:17 PM PDT

ஆம்பூர் அருகே இரு கிராமத்தினருக்கு இடையே வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

8 அணிகளுடன் வருகிறது "தமிழ்நாடு பிரீமியர் லீக்'

Posted: 09 Jun 2016 12:17 PM PDT

ஐபிஎல் போட்டியைப் போன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் "தமிழ்நாடு பிரீமியர் லீக்' (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக என்.ஜி.பார்த்திபன் நியமனம்

Posted: 09 Jun 2016 12:17 PM PDT

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்திபனை முதல்வர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார்.

திருமண நிதியுதவி திட்டத்தில் முறைகேடு:ஒன்றிய குழுக் கூட்டத்தில் புகார்

Posted: 09 Jun 2016 12:17 PM PDT

திருமண நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கேரள விளையாட்டுத் துறையில் மோதல்: அமைச்சர் மீது அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றச்சாட்டு

Posted: 09 Jun 2016 12:17 PM PDT

கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் மீது கேரள விளையாட்டு கூட்டமைப்பு தலைவரும், முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

பிஎஃப்எல்}க்கு எதிராக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு

Posted: 09 Jun 2016 12:16 PM PDT

பிரீமியர் புட்சால் லீக் (பிஎஃப்எல்) கால்பந்து போட்டிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) எத்தனிப்பதாகத் தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜெர்மனி - இந்தியா இன்று மோதல்

Posted: 09 Jun 2016 12:15 PM PDT

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

தொடர் விபத்து குறித்து ஆய்வு நடந்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் விபத்து

Posted: 09 Jun 2016 12:15 PM PDT

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு மேம்பாலப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜிம்பாப்வே தொடர் முக்கியமான ஒன்று

Posted: 09 Jun 2016 12:15 PM PDT

"ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் எனக்கு முக்கியமான ஒன்று' என்று அந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மணீஷ் பாண்டே கூறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

Posted: 09 Jun 2016 12:12 PM PDT

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

கால்வாயில் மூதாட்டி சடலம்

Posted: 09 Jun 2016 12:11 PM PDT

காவேரிப்பாக்கம் அருகே கால்வாயில் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

செம்மரக் கட்டைகள் கடத்தல்: இரு கார்கள் பறிமுதல், ஒருவர் கைது

Posted: 09 Jun 2016 12:10 PM PDT

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி செம்மரக் கட்டைகளைக் கடத்தி வந்த இரு கார்களை தமிழக - ஆந்திர எல்லையில் ஆந்திர போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் கடை உரிம விவகாரம்:சிறப்பு விசாரணைக் குழு அமைக்க தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 09 Jun 2016 12:10 PM PDT

ரேஷன் கடை உரிம விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க தில்லி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக - ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் மோதல்

Posted: 09 Jun 2016 12:09 PM PDT

தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் பாஜக-ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஓ.பி. சர்மா இடைநீக்கத்துக்கு எதிரான மனு:தில்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை

Posted: 09 Jun 2016 12:09 PM PDT

தில்லி சட்டப்பேரவையின் இரண்டு கூட்டத்தொடர்களில் பங்கேற்க இயலாத வகையில் தன்னை இடைநீக்கம் செய்த பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஓ.பி. சர்மா தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் சாலை விபத்தில் பலி

Posted: 09 Jun 2016 12:08 PM PDT

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பொது கழிவறைகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க வடக்கு தில்லி மாநகராட்சி முடிவு

Posted: 09 Jun 2016 12:08 PM PDT

தனது ஆளுகைக்கு உள்பட்ட பொது கழிவறைகளின் பராமரிப்புப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க வடக்கு தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

"என்ஐஓஎஸ்' 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 09 Jun 2016 12:08 PM PDT

தேசிய திறந்தவெளி பள்ளி (என்ஐஓஎஸ்) மார்ச் - மே, 2016 பருவத்தில் நடத்திய 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வில் பாடவாரியாக 3,83,933 பேர் தேர்ச்சி (67.51%) பெற்றுள்ளனர்.

21 பார்லிமென்ட் செயலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்:தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 09 Jun 2016 12:07 PM PDT

தில்லி அரசுத் துறைகளில் பார்லிமென்ட் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

டென்மார்க் பயணி பாலியல் வழக்கு:ஐந்து குற்றவாளிகளுக்கு இன்று தண்டணை அறிவிப்பு

Posted: 09 Jun 2016 12:07 PM PDT

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைதான ஐந்து பேருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரத்தை தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விளையாட்டு மைதானங்களுக்கு பயன்படுத்துங்கள்:தேசிய பசுமைத் தீர்பாயம்

Posted: 09 Jun 2016 12:06 PM PDT

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையே விளையாட்டு மைதானங்களுக்கும், மெட்ரோ ரயில் மற்றும் டிடிசி பேருந்துகள் கழுவதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று தில்லி ஜல் போர்டுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சிறாரை இளைஞராக கருதும் உத்தரவுக்கு எதிராக மனு :சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கு

Posted: 09 Jun 2016 12:06 PM PDT

சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறாரை இளைஞராக கருதி வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற சிறுவர் நீதி வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீடற்றோர் குடில்களில் தங்க இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது:தில்லி முதல்வர் உத்தரவு

Posted: 09 Jun 2016 12:06 PM PDT

தில்லியில் வீடற்றோர் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்குவதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தில்லி அரசு ஓரிரு தினங்களில் முறைப்படி வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிட்ஸ் திரையரங்க வழக்கில் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 09 Jun 2016 12:05 PM PDT

"சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக கஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ரிட்ஸ் சினிமா நிர்வாகம் தொடுத்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் வடக்கு தில்லி மாநகராட்சி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புகையிலைத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு தடை: நீதி ஆயோக் கவலை

Posted: 09 Jun 2016 12:05 PM PDT

புகையிலைத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (டிஐபிபி) பரிந்துரை தொடர்பாக, நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) சில ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™