Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…

Posted: 09 Jun 2016 02:15 PM PDT

ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்; பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத் தியாகம் செய்பவன்; காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்; மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து அயராது உழைப்பவன். எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் 'லோ லோ' என்று அலைபவன். இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய், முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ...

கொலையும் செய்வாள் பத்தினி

Posted: 09 Jun 2016 02:11 PM PDT

கொலையும் செய்வாள் பத்தினி கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ நடைமுறையில் காணும் உண்மை. தலைமுறையில் நடக்கும் வன்முறைகள் கவிதாயினிகள் சிலர் கருத்திலே கயவர்கள் ஆண்கள்தான் . கட்டியவளை தவிக்கவிட்டு புதியவளை பிடித்துக் கொள்கிறானாம் புதியவளும் பெண்தானே ! புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ? பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க ஆணை வம்பிற்கு இழுப்பதென் ? சின்னத் திரை நடிகையாம் கட்டியவன் ஒருவனிருக்க , மற்றவனை பதியாக்குகிறார் . எல்லாம் சொத்திற்காக ...

வாழ்க்கை பல நேரம் வீச்சு பரோட்டா மாதிரி...

Posted: 09 Jun 2016 02:08 PM PDT

@shammu_saffic வாழ்க்கை பல நேரம் வீச்சு பரோட்டா மாதிரி சாஃப்ட்டாவும், சில நேரம் கொத்து பரோட்டா மாதிரி கொத்திப் போட்டுட்டும் போய்டுது… – ———————————————— – @kanagu_v திருமண விருந்தில் தெரியாத மனிதர் கையுறை அணிந்து பரிமாறும் உணவில் தொலைந்து போகிறது, உண்பவரின் உறவுகளும், பழமை பழக்கவழக்கங்களும். – ———————————————- – @Bubbly_Girl__ உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்… பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்! – ———————————————— –

அம்பாளுக்கு ஐந்தெழுத்து

Posted: 09 Jun 2016 02:07 PM PDT

- சிவனை"நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் வணங்குகிறோம். - அதுபோல, அம்பாளுக்கும் "துர்க்கா' என்னும் சொல் பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்து மந்திரம்) விளங்குகிறது. த், உ,ர்,க்,ஆ ஆகிய ஐந்து எழுத்துகளின் சேர்க்கையே துர்க்கை. – துர்க்கா என்ற மந்திரத்தை ஜெபித்தால், எதிரிகளின் தொல்லை நீங்கி மன தைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு "அரண்' "கோட்டை' என்று பொருள். வழிபடும் அடியவர்களைக் கோட்டை போலச் சுற்றி பாதுகாக்கும் துர்கையை " துர்க்கா தேவீம் சரணம் ப்ரபத்யே' என்று வேதம் போற்றுகிறது. – ——————————- -தினமலர்- ...

வருங்கால சந்ததியையாவது வாழவிடு.

Posted: 09 Jun 2016 01:58 PM PDT

- ஏரியெல்லாம் வீட்டு மனையச்சி வீடெல்லாம் மழை நீராச்சி வீடெல்லாம் நீரென்று புலம்பும் மனிதா மழை தங்கும் இடத்தில் தான் மனை வாங்கினாய் மறந்தாயோ! – மழை வெள்ளத்தை சபிக்காதே தமிழா நீ திருடிய ஏரியையும் குளத்தையும் தேடியலையுது மழை நீர் கொட்டும் நீரை யெல்லாம் வைக்க இடமில்லாமல் கொடுத்து விட்டாய் கடலுக்கு மீண்டும் கன்னட நாட்டிடம் கையேந்துவாய் நீருக்கு – மூத்த குடி மூத்த குடி என்று மார்தட்டும் தமிழா முன்னோர் செய்ததெல்லாம் மூடிமறைத்தாய் அதன் பலன் நீர்க்காடாய் நகரங்கள் கல்லணை கட்டிய ...

முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்

Posted: 09 Jun 2016 01:56 PM PDT

- சாந்தஷீலா நாயர் சிவதாஸ் மீனா விஜயகுமார் பிரதீப் யாதவ் முதல்வர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அலுவலராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இப்போது, சிறப்புப் பணி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1973-ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சாந்தா ஷீலா நாயர். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மாநில உள்துறைச் செயலாளர், சென்னை ...

நமக்காக, நம் ஆட்சி!

Posted: 09 Jun 2016 01:55 PM PDT

-- இரவலரும் புரவலரும் இருந்தனர் மன்னராட்சியில் கொடை வள்ளலாய் இருந்தனர் மன்னர்களும் – கேட்க நன்றாகத் தானிருக்கிறது காலமும் மாறித்தான் விட்டது இன்று குடியாட்சி மக்களே குடியாட்சி! – நமக்காக, நம் ஆட்சி! யாசகம் எதற்கு? கொடையும் எதற்கு? யார் போடும் பிச்சையும் எதற்கு? – நம் உரிமைகளை எதற்கு யாசிக்க வேண்டும்? யாரிடம் யாசிக்க வேண்டும்? யோசிக்க மட்டும் வேண்டும் – யோசித்துச் செயல்பட வேண்டும்! – —————————— – கிரேஸ் பிரதிபா.வி, அட்லாண்டா

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Posted: 09 Jun 2016 01:54 PM PDT

- சென்னை: மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக செம்மொழி ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி பெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், ...

எனக்கு சிலுவையை கொடுத்துவிட்டு…

Posted: 09 Jun 2016 01:54 PM PDT

- என்னுடைய எல்லை என்று தெரிந்து கொண்டு தான் – நீ நுழைகிறாய் உன்னுடைய உடைமையை கவர்ந்திழுக்க நான் விழைகிறேன் – உனது தரப்பு நியாயத்தைச் சொல்ல நீ முயற்சிக்கிறாய் – உன்னால் இழந்தவற்றை நான் கணக்கிடுகிறேன் – ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே நீ செய்கிறாய் – எனக்கு சிலுவையை கொடுத்துவிட்டு நீ கிரீடத்தை அணிந்து கொள்கிறாய் – மோதுபவர்களை எதிர்த்து நிற்காமல் முதுகில் குத்தும் துரோக வரலாறு உன்னுடையது – இரக்கப்பட்டு ஆடைகளைக்கூட ஈந்துவிட்டு கெளபீனதாரியாகத் திரியும் வாழ்க்கை என்னுடையது. – —————————- – ...

வந்ததன் நோக்கம் என்ன?

Posted: 09 Jun 2016 01:53 PM PDT

- தந்தையே உயிர்ப்பைத் தந்தான்; தாயவள் ஊனைத் தந்தாள்; முந்தையன் உணர்வைத் தந்தான்; முழுவுரு மனிதன் என்னும் – விந்தையாய் மண்ணிற் சேர விளிக்கவோர் பெயரும் சேரும்; சொந்தமாய் ஏதும் அற்ற தொடர்கதை இரவல் வாழ்க்கை (1) – ஆவதன் கன்றாய் மாறி அருந்துவோம் இரவற் பாலை; பூவதைத் தொடரும் நெல்நாம் புசித்திடும் இரவற் சோறு; – பாவதில் நெய்த ஆடை பருத்தியின் இரவல் நூலால்; தேவைதான் வசிக்க வீடு, செய்வதும் மரம்மண் தானே (2) – கல்வியை யாரோ ஈவர், கருத்ததை சேர்த்துப் பார்ப்போம்; அல்லதும் நலமும் வாழ்வில் அடுத்தவர் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (164)

Posted: 09 Jun 2016 01:47 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!

Posted: 09 Jun 2016 01:46 PM PDT

– @Kounter_twitts சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க; அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க! – —————————————— – @thoatta பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க… நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு 'மருதநாயகம்' படம் கூட 15 நாளில் வரும்! – ——————————————- – இந்த ஓட்டல் சர்வர்களைப் போல ஆணாதிக்க வெறியர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எப்ப சாப்பிடப் போனாலும், பில்லை ஆண்கள் பக்கமே நீட்டுகிறார்கள். – – எழிற்கோ ...

பணம் மரத்துலதான காய்க்குது..?

Posted: 09 Jun 2016 01:41 PM PDT

– @i_am_v_jey பணத்தை அச்சடிக்க பேப்பர் மரக்கட்டைலருந்து கிடைக்குது. அந்த மரக்கட்டை மரத்துலருந்து கிடைக்குது. இப்ப சொல்லுங்க… பணம் மரத்துலதான காய்க்குது..? — ----------------------------------------------------------------------- – சத்திய சோதனை படித்துக்கொண்டிருக்கிறேன்: வைகோ‪ #‎ என்னடா‬ இது காந்திக்கு வந்த சோதனை! ------------------------------------------------------------- @thangamagan100 ''அண்ணே, ஒரு டீ போடுங்க..!'' ''சர்க்கரை கம்மியாவா..?'' ''இல்லே… தண்ணி கம்மியா!'' – ————————————-

அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

Posted: 09 Jun 2016 01:39 PM PDT

- சங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு ரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார். - தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிக பணம் வசூலித்தாலும் அங்கு குழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனைத் தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி ...

அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை

Posted: 09 Jun 2016 01:37 PM PDT

மத்திய குடிநீர் மற்றும் துாய்மை துறை கூடுதல் செயலர் சரஸ்வதி பிரசாத் அனைத்து மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்கூறியுள்ளதாவது: 'துாய்மை இந்தியா' திட்டம் நடைமுறையில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இத்திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகத்தின் கீழ் வரும் துறை அலுவலகங்கள் நடத்தும் விழாக்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ...

கேஸ்ட்ரிக் வலி

Posted: 09 Jun 2016 01:35 PM PDT

கடந்த 6 ஆண்டுகளாக அதிகமாக ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டதால் இப்பொழுது கேஸ்டிரிக் வலி வந்து விட்டது. இதற்கு தமிழ் வைத்தியம் ஏதாவது உண்டா? ஈகரையின்த நல்ல உள்ளங்களே, செய்து கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Posted: 09 Jun 2016 01:32 PM PDT


-

துர்க்கை அம்மன்

Posted: 09 Jun 2016 05:03 AM PDT

- துர்க்கை பார்வதி தேவியின் அவதாரம் எனலாம். துர்க்கை என்றால் "துன்பத்தை போக்குபவள் " – துன்பத்தை போக்கி இன்பத்தை தருபவள் நம் துர்க்கா . பத்து கைகளில் ஆயுதம் ஏந்தி ,சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சியைப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள் போதாது. – இப்ப துர்க்கை எப்படி அவதாரம் எடுத்தாங்கனு பாப்போமா ? – ஒரு சமயம் உலதத்தையே தன் கைக்குள் கொண்டு வர அசுரபலம் கொண்ட அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான்.சிவனோ தன்னை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கும் கருணைக் கடல் ஆயிற்றே ...

முல்லாவி கதை.

Posted: 08 Jun 2016 05:55 PM PDT

* '' ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அவர் தனது கண்களைத் திறந்து, " நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் " என்றார். கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? " என்று கேட்டார். அதற்கு அவர் " சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது ...

பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு

Posted: 08 Jun 2016 05:38 PM PDT

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. - கேரளாவில் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்ற கல்வி நிறுவனம் கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டப்பட்டது. - இந்த கட்டடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தம் ஹீபர் என்ற நிறவனத்துக்கு அளிக்கப்பட்டது. - கல்வி நிறுவனத்துக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய பணத்தை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™