Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கரியாப்பட்டினம் வரை அரசுப் பேருந்து: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 08 Jun 2016 01:19 PM PDT

ஓரடியம்புலம் வழியாக தலைஞாயிறு முதல் கரியாப்பட்டினம் வரை அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

Posted: 08 Jun 2016 01:18 PM PDT

சீர்காழி அருகே எலக்ட்ரீசியன் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அரசுப் பேருந்து மோதி கார் சேதம்

Posted: 08 Jun 2016 01:18 PM PDT

நாகையில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்து அருகே சென்ற கார் மீது மோதியதில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் குளம், வாய்க்கால்கள் தூர்வாரப்படும்: ஒன்றியக்குழுத் தலைவர் தகவல்

Posted: 08 Jun 2016 01:18 PM PDT

மன்னார்குடி ஒன்றியத்துக்குள்பட்ட குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் என்று ஒன்றியக்குழுத் தலைவர் த. உதயகுமாரி தமிழ்கண்ணன் கூறினார்.

விழுப்புரத்துக்கு 1,200 டன் சன்னரக அரிசி

Posted: 08 Jun 2016 01:17 PM PDT

நீடாமங்கலத்திலிருந்து  விழுப்புரத்துக்கு 1,200 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

ஜூன் 11 - இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

Posted: 08 Jun 2016 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 11 ஆம் தேதி பொது விநியோகத் திட்டத்தில் குறைதீர் கூட்டம்  நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

கார் மோதி இளைஞர் சாவு

Posted: 08 Jun 2016 01:15 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

முதியோர் உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

Posted: 08 Jun 2016 01:15 PM PDT

மூன்று மாதங்களாக  நிலுவையில் உள்ள முதியோர் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

"தூய்மை இந்தியா' திட்டத்தில் ஆர்வம்: மனைவியின் நகையை அடகு வைத்து கழிப்பறை கட்டிய கூலித் தொழிலாளி!

Posted: 08 Jun 2016 12:59 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், டங்கர்பூர் மாவட்டத்தில் "தூய்மை இந்தியா' திட்டத்தில் ஆர்வம் கொண்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், தான் வளர்த்து வந்த ஆட்டை விற்றும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் தனது இல்லத்தில் கழிப்பறை கட்டியுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்: 5 இந்திய வம்சாவளியினர் போட்டி

Posted: 08 Jun 2016 12:58 PM PDT

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் பெண்கள்.

பிகார் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு புகார்: பள்ளிக் கல்வி வாரியத் தலைவர் ராஜிநாமா

Posted: 08 Jun 2016 12:58 PM PDT

பிகாரில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த மாநில பள்ளிக் கல்வி வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: கேரளத்தில் ஒருவர் சாவு

Posted: 08 Jun 2016 12:57 PM PDT

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கியது. இடுக்கி மாவட்டத்தில் அன்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவு விற்பனை தொடக்கம்

Posted: 08 Jun 2016 12:56 PM PDT

ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு விற்பனை செய்யும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

சாத்வி பிராச்சியின் பேச்சால் காஷ்மீர் மேலவையில் அமளி

Posted: 08 Jun 2016 12:56 PM PDT

""முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்'' என்று கூறிய வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சியின் கருத்தால், ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவையில் புதன்கிழமை அமளி ஏற்பட்டது.

இந்தியத் தயாரிப்பு பொருட்களுக்கு வளர்ந்த நாடுகளின் சந்தைகள் திறக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

Posted: 08 Jun 2016 12:55 PM PDT

இந்தியத் தயாரிப்புப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது சந்தைகளை திறந்து விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

மூன்றாவது ஒருநாள் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

Posted: 08 Jun 2016 12:50 PM PDT

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷரபோவா 2 ஆண்டுகள் இடைநீக்கம்

Posted: 08 Jun 2016 12:46 PM PDT

மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு புதன்கிழமை அறிவித்தது.

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

Posted: 08 Jun 2016 12:46 PM PDT

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா

Posted: 08 Jun 2016 12:45 PM PDT

கோபா அமெரிக்கா சென்டினரியோ கால்பந்துப் போட்டியில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முதல் அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது கொலம்பியா அணி.

துளிகள்...

Posted: 08 Jun 2016 12:44 PM PDT

வரும் நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சிதம்பராபுரத்தில் அபாய நிலையில் பயணியர் நிழற்கூடம்

Posted: 08 Jun 2016 12:44 PM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பயணியர் நிழற்கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊக்கமருந்து சோதனையில் ரஷிய வீராங்கனைகள் தோல்வி

Posted: 08 Jun 2016 12:44 PM PDT

கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரு ரஷிய பளுதூக்கும் வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு: போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்

Posted: 08 Jun 2016 12:43 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கான பந்தயத்தில் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் இணைந்துள்ளார்.

8 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 08 Jun 2016 12:42 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கோவில்பட்டி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Posted: 08 Jun 2016 12:42 PM PDT

கோவில்பட்டி ஸ்ரீகரா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

காயல்பட்டினத்தில் மகளிர் பாடசாலை ஆண்டு விழா

Posted: 08 Jun 2016 12:41 PM PDT

காயல்பட்டினத்தில் மகளிர் பாடசாலை ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

நாசரேத் பள்ளி, கல்லூரியில் சுற்றுச்சூழல் தினம்

Posted: 08 Jun 2016 12:41 PM PDT

நாசரேத் பள்ளி மற்றும் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

வல்லநாடு மருத்துவமனைக்கு பரிசு

Posted: 08 Jun 2016 12:41 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அளவில் 2016 ஆம் ஆண்டில் சிறந்த காசநோய் பிரிவாக தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லநாடு மருத்துவமனை காசநோய் பிரிவுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்த மாணவிகள்

Posted: 08 Jun 2016 12:40 PM PDT

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மீன்வளக் கல்லூரி மாணவிகள் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

திறனாய்வுத் தேர்வில் தூத்துக்குடி மாணவி தேர்ச்சி

Posted: 08 Jun 2016 12:40 PM PDT

தேசிய திறனாய்வுத் தேர்வில் தூத்துக்குடி மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.

தனியார் பள்ளி வாகனம் மோதி காவலாளி சாவு

Posted: 08 Jun 2016 12:39 PM PDT

தூத்துக்குடி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற காவலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

அரசுப் பேருந்து திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி

Posted: 08 Jun 2016 12:39 PM PDT

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு நாசரேத், காயாமொழி வழியாக செல்லும் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Posted: 08 Jun 2016 12:38 PM PDT

தூத்துக்குடியில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஊருணியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Posted: 08 Jun 2016 12:38 PM PDT

கோவில்பட்டி அருகே ஊருணியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

படுக்கப்பத்தில் மாற்றுப் பள்ளி இணைப்பு மையம் தொடக்கம்

Posted: 08 Jun 2016 12:37 PM PDT

சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்தில் இடைநின்ற மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் மாற்றுப் பள்ளி இணைப்பு மையம் தொடங்கப்பட்டது.

முதலூரில் முப்பெரும் விழா

Posted: 08 Jun 2016 12:37 PM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் திமுக தலைவர் கருணாநிதி 93 ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கொடியேற்று விழா, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழகத்தில் ஜெயலலிதாவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும்: நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.

Posted: 08 Jun 2016 12:36 PM PDT

தமிழகத்தில் ஜெயலலிதாவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும் என திருச்செந்தூரில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

குமரியில் 3ஆவது நாளாக கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து பாதிப்பு

Posted: 08 Jun 2016 12:36 PM PDT

கன்னியாகுமரியில் 3ஆவது நாளாக புதன்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 08 Jun 2016 12:35 PM PDT

இயற்கை இடர்பாடுகள் நேரிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

குமரி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஜூன் 15 முதல் மீன்பிடித் தடைக்காலம்

Posted: 08 Jun 2016 12:35 PM PDT

கன்னியாகுமரி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஜூன் 15 ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது.

குமிட்டிவிளையில் நற்பணி மன்ற விழா

Posted: 08 Jun 2016 12:34 PM PDT

மார்த்தாண்டம் அருகேயுள்ள குமிட்டிவிளை இளம் தென்றல் நற்பணி மன்றத்தின் 16 ஆவது ஆண்டுவிழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

பிறந்த நாளில் ஒரு மரம் நடுவோம் திட்டம்: படந்தாலுமூடு பள்ளியில் இலவச மரக்கன்று வழங்கல்

Posted: 08 Jun 2016 12:34 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயற்கையை காப்பாற்ற பிறந்த நாளில் ஒரு மரம் நடுவோம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Posted: 08 Jun 2016 12:33 PM PDT

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு பிஎஸ்என்எல் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

தலைவர்களின் சிலைக்கு இன்று  மாலை அணிவிப்பு

Posted: 08 Jun 2016 12:33 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினரும், வழக்குரைஞருமான ஏ.விஜயகுமார் நாகர்கோவிலில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவிக்கிறார்.

நாகர்கோவில்

Posted: 08 Jun 2016 12:32 PM PDT

குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு

Posted: 08 Jun 2016 12:32 PM PDT

களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற பாத்திமாநகர், குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.

ரேஷன் கடையை உடைத்து திருட்டு

Posted: 08 Jun 2016 12:31 PM PDT

புதுக்கடை அருகே செவ்வாய்க்கிழமை ரேஷன் கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

"உட்தா பஞ்சாப்' பட விவகாரத்தில் தலையிட முடியாது: மத்திய அரசு

Posted: 08 Jun 2016 12:29 PM PDT

"உட்தா பஞ்சாப்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்று மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொகுதி வழிநடத்துநர்கள் நியமனம்

Posted: 08 Jun 2016 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  வட்டார வாரியாக தொகுதி வழி நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பிரதமரின் உடனடி நடவடிக்கையால் ஆறு வயது சிறுமிக்கு இதய அறுவைச் சிகிச்சை

Posted: 08 Jun 2016 12:28 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் உடனடி நடவடிக்கையின் விளைவாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் பாதிப்பு: மீனவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

Posted: 08 Jun 2016 12:28 PM PDT

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதிகளை கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் புதன்கிழமை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கல்வி மேம்பாட்டுக்கான யோசனைகளை முழுமையாக அனுமதிக்க வேண்டும்

Posted: 08 Jun 2016 12:27 PM PDT

கல்வி மேம்பாட்டுக்கான யோசனைகளை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

ராமநாதபுரம்

Posted: 08 Jun 2016 12:27 PM PDT

ராமநாதபுரத்தில் அஞ்சல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Posted: 08 Jun 2016 12:27 PM PDT

ாமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் மற்றும் 2ஆவது ஆண்டு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மும்பையில் கட்டடம் இடிந்து 2 பேர் பலி

Posted: 08 Jun 2016 12:26 PM PDT

மும்பையில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு மும்பையில் உள்ள பந்தர்கார் பகுதியில் 70 ஆண்டுகள் பழைமையான கட்டடம் இருந்தது.

திருப்பத்தூரில் வாகனம் மோதி பெண் சாவு

Posted: 08 Jun 2016 12:26 PM PDT

திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் உயிரிழந்தார்.

மானாமதுரை ஸ்ரீசுந்தரவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 08 Jun 2016 12:26 PM PDT

மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள ஸ்ரீசுந்தரவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடையில் பணம் திருட்டு

Posted: 08 Jun 2016 12:25 PM PDT

ராமேசுவரம் ஜல்லிமலை  பகுதியில் வசித்துவருபவர் முருகன். இவர் ராமேசுவரம் வர்த்தகன் தெருவில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். புதன்கிழமை காலை இவர் கடையைத் திறந்தபோது, கடையில் உள்ள பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

ஜூன் 14 இல் ராமநாதபுரத்தில் இலவச பால்க்காளான் வளர்ப்பு பயிற்சி

Posted: 08 Jun 2016 12:25 PM PDT

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதி இலவச பால்க்காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் சாலை மறியல்: செய்தவர்கள் மீது வழக்கு

Posted: 08 Jun 2016 12:24 PM PDT

ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியல் செய்தவர்கள் மீது நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 08 Jun 2016 12:24 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மீனவரைக் கொலை செய்த மற்றொரு மீனவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

பலத்த சூறாவளி: கடலுக்கு சென்ற மீனவர்களின் எண்ணிக்கை குறைவு

Posted: 08 Jun 2016 12:23 PM PDT

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் ராமேசுவரம் பகுதியிலிருந்து குறைந்த அளவிலான மீனவர்களே புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.

ராமேசுவரம் வில்லூண்டி தீர்த்தத்தில் நீராட நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

Posted: 08 Jun 2016 12:23 PM PDT

ராமேசுவரம் வில்லூண்டி தீர்த்தத்தில் பக்தர்கள் தீர்த்தமாட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் புதன்கிழமை ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

காரைக்குடியில் ஜூன் 19 இல் இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு

Posted: 08 Jun 2016 12:22 PM PDT

புதுதில்லி சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் யுஜிசி சார்பில் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்குடி செக்ரி மையம் சார்பில் 7 இடங்களில் தேர்வு எழுது வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக கொடியேற்று விழா

Posted: 08 Jun 2016 12:22 PM PDT

இளையான்குடி கிழக்கு ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் சிறுபாலை, கோட்டையூரில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதன்கிழமை கட்சி கொடியேற்று விழா கூட்டங்கள் நடைபெற்றன.

தனியார் கல்லூரி விதிமீறல் தொடர்பான வழக்கு: திக்விஜய் சிங்கின் வாக்குமூலம் பதிவு

Posted: 08 Jun 2016 12:21 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விதிமுறைகளுக்கு புறம்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற விவகாரத்தில், அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை பலமடங்கு குறைத்தது தொடர்பான வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான திக்விஜய் சிங், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸôர் முன்பு புதன்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சவூதியில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் சடலம் ராமநாதபுரம் வந்தது

Posted: 08 Jun 2016 12:21 PM PDT

சவூதியில் கார் விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் சடலம், அமைச்சரின் முயற்சியால் உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக அதிகரிப்பு

Posted: 08 Jun 2016 12:21 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தின் இணைப்புக்கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டு முதல் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை வரம்பு 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார்.

துப்பரவுப்பணியை மேம்படுத்த வேண்டும்: சிவகாசி நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 08 Jun 2016 12:21 PM PDT

சிவகாசி நகராட்சிப் பகுதிகளில் துப்பரவுப்பணியை மேம்படுத்த வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கத்தார் நாட்டு சிறையில் உள்ள கணவரை மீட்டுத் தர கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 08 Jun 2016 12:20 PM PDT

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கணவரை மீட்டுத் தர கோரி அவரது மனைவி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் புதன்கிழமை மனு அளித்தார்.

ஊராட்சிப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்தவர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க மறுப்பு

Posted: 08 Jun 2016 12:19 PM PDT

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியரை 9-ம் வகுப்பில் சேர்க்க அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிவகாசியில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 08 Jun 2016 12:19 PM PDT

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா தொடக்கி வைத்தார். பாரைப்பட்டி, சித்துராஜபுரம், பெரியபொட்டல்பட்டி, பூலாஊரணி, விளாம்பட்டி, சிங்கம்பட்டி, ஊராம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் தங்களது மனுவினை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாஸ்கரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புறநகர் பகுதியில் ஜூன் 10 மின்தடை

Posted: 08 Jun 2016 12:18 PM PDT

விருதுநகர் அருகே உள்ள துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 10)  ஆர்.ஆர்.நகர், துலுக்கபட்டி, வச்சக்காரப்பட்டி, இ.முத்துலிங்கபுரம், அம்மாபட்டி, மேல சின்னையாபுரம், சங்கரலிங்கபுரம், ஒண்டிப்புலி நாயக்கனூர், வாடியூர், முதலிபட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர் ஆகிய ஊர்களில் காலை முதல் மாலை வை மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக செயற்பொறியாளர்  தி.திருப்பதி தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை கம்பன் கழகக் கூட்டம்

Posted: 08 Jun 2016 12:18 PM PDT

அருப்புக்கோட்டை ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் கோயில் சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் கம்பன் கழக 317-ஆவது சொற்பொழிவுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கம்பன் கழகப் புரவலரும் தொழிலதிபருமான டி.ஆர்.தினகரனின் முன்னிலை வகித்தார். ஸ்ரீசத்யசாயி சேவா சமிதியின் பஜனையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அருட்கவிஞர் காசி வரவேற்புரையாற்றினார். ராமாயணத்தில் திருவடிச்சிறப்பு எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வெ.முருகேச பாண்டியன் சொற்பொழிவாற்றினார். இணைச்செயலர் கண.கணேசன் நன்றி கூறினார்.

களத்தொகுதி வழி நடத்துநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Posted: 08 Jun 2016 12:18 PM PDT

தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் தாற்காலிக களத்தொகுதி வழி நடத்துநர் பதவிகளுக்கு தகுதியானவர்கள், ஜூன் 10 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

Posted: 08 Jun 2016 12:17 PM PDT

விருதுநகர் நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் தாற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக ஆணையாளர் ( பொறுப்பு ) மோகன் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜூன் 16-க்கு தள்ளிவைப்பு

Posted: 08 Jun 2016 12:17 PM PDT

சத்திரப்பட்டி நெசவாளருக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜூன் 16க்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய பேச்சுவார்த்தைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போவதாக தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 08 Jun 2016 12:16 PM PDT

சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள பாரைப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகக்கனி(59). இவர் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 20-ஆம் தேதி தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஜூன் 6 ஆம் தேதி பாரைப்பட்டி வந்தாராம்.

பண மோசடி: தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு

Posted: 08 Jun 2016 12:16 PM PDT

சிவகாசியில் பணத்தை மோசடி செய்து விட்டதாக தனியார் நிறுவன ஊழியர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகியைத் தாக்கிய 5 பேர் கைது

Posted: 08 Jun 2016 12:15 PM PDT

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கோயில் நிர்வாகியை தாக்கிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மனைவிக்கு துன்புறுத்தல்: முதல்நிலை காவலர் மீது வழக்கு

Posted: 08 Jun 2016 12:15 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் ஆதித்தன். இவர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (36). ஆதித்தன் தனது மகளையும் ஹேமலதாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றி, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

விருதுநகர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 22 பள்ளிகள் பட்டியல் அறிவிப்பு

Posted: 08 Jun 2016 12:15 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்படும் 22 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜமாபந்தி

Posted: 08 Jun 2016 12:14 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஆட்சியர் வெ.ராஜாராமன் தலைமையில் புதன்கிழமை ஜமாபந்தி (கிராம வருவாய் தீர்வாயம்) நடைபெற்றது.

வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் மோசடி

Posted: 08 Jun 2016 12:14 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று ரூ.22, 500 மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ராஜபாளையம் அருகே காய்த்துக் குலுங்கும் பலா

Posted: 08 Jun 2016 12:13 PM PDT

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது பலாப் பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குகின்றன.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு கட்டணம்: நோயாளிகள் அதிருப்தி

Posted: 08 Jun 2016 12:13 PM PDT

விருதுநகர் அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு நோயாளிகளிடம் பண வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குழந்தை திருமணத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 08 Jun 2016 12:12 PM PDT

தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்துக்கு இடைக் காலத் தடை விதித்து புதன்கிழமை தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 08 Jun 2016 12:12 PM PDT

ஆண்டிபட்டி அருகே 2 சிறுமிகளின் திருமணத்தை சைல்டுலைன் அமைப்பினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல்: எகிப்து விமானம் அவசரத் தரையிறக்கம்

Posted: 08 Jun 2016 12:12 PM PDT

எகிப்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த நாட்டு எகிப்து ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

கொடைக்கானலில் ஜூன் 9 மின் தடை

Posted: 08 Jun 2016 12:11 PM PDT

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு பகுதிகளில் ஜூன் 10 மின்தடை

Posted: 08 Jun 2016 12:11 PM PDT

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன்10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று உதவிசெயற்பொறியாளர் ஜே.விஜய் தெரிவித்துள்ளார்.

சிரியா அரசுப் படை தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி

Posted: 08 Jun 2016 12:11 PM PDT

சிரியாவின் அலெப்போ நகரில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் புதன்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

ஃபலூஜா நகருக்குள் மேலும் முன்னேறியது இராக் ராணுவம்

Posted: 08 Jun 2016 12:10 PM PDT

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலூஜா நகருக்குள் நுழைந்த அந்த நாட்டு ராணுவம், நகரின் மையப் பகுதியை நோக்கி மேலும் முன்னேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி துணை தலைவரை தாக்கியவர் கைது

Posted: 08 Jun 2016 12:10 PM PDT

கடமலைக்குண்டு ஊராட்சி துணைத் தலைவராக இருப்பவர் தங்கம்(34). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த மாஸ்டர் செல்வம் (30) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. புதன்கிழமை கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியில் தங்கம் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மாஸ்டர் செல்வம் தங்கத்தை தாக்கியதாக  கூறப்படுகிறது.

ஒரே நாளில் 4 வீடுகளில் திருட்டு

Posted: 08 Jun 2016 12:10 PM PDT

கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியான கம்பம் நடராஜன் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெகநாதன் (52). இவரது வீட்டிலிருந்து 2 பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலு, ரூ.31 ஆயிரம் திருடப்பட்டது. இதே போல் சண்முகவள்ளி (56) என்பவரது வீட்டிலிருந்த கேமிரா, ஆரோக்கியசெல்வி என்பவரது வீட்டிலிருந்த வீட்டுப் பட்டா மற்றும் நாகலட்சுமி என்பவரது வீட்டிலிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி

Posted: 08 Jun 2016 12:09 PM PDT

அமெரிக்காவில் முக்கியக் கட்சி சார்பிலான முதல் பெண் அதிபர் வேட்பாளராகி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் சாதனை படைத்துள்ளார்.

களப் பகுதி வழிநடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 08 Jun 2016 12:09 PM PDT

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள மேல்மங்கலம், சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம், எரசக்கநாயக்கனூர், கம்பம் ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மகளிர் திட்டம் சார்பில் தாற்காலிக, தினக் கூலி அடிப்படையில் களப் பகுதி வழிநடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். களப்பகுதி வழிநடத்துநர் பணிக்கு மாத மதிப்பூதியம் மற்றும் பயணப்படி உள்பட ரூ.7,500 வழங்கப்படும்.

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 08 Jun 2016 12:09 PM PDT

காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் 2016- 17 கல்வியாண்டுக்கானஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 10 முதல் நடைபெறகிறது.

அமெரிக்கா  ஐ.எஸ். அனுதாபிக்கு 12 ஆண்டுகள் சிறை

Posted: 08 Jun 2016 12:09 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைந்து சண்டையிடுவதற்காக சிரியா செல்ல முயற்சித்த அமெரிக்க இளைஞருக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொடைரோடு அருகே கிணற்றில் சடலமாக மிதந்த லாரி ஓட்டுநர்: போலீஸ் விசாரணை

Posted: 08 Jun 2016 12:08 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சாலையோர கிணற்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சடலமாக மிதந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™