Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திறந்த இருதய அறுவை சிகிச்சை முடிந்து நாடு திரும்புகின்றார் நவாஸ் ஷெரீஃப்

Posted:

இலண்டனில் திறந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டு பாகிஸ்தானுக்குத் திரும்புகின்றார் பிரதமர் நவாஸ் ஷெரீஃப். சுமார் ஒரு வார காலமாக இருதய சத்திர சிகிச்சைக்காக இலண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரீஃபுக்கு பல உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்த போதும் இந்தியப் பிரதமர் மோடியுடன் மாத்திரமே சிகிச்சை தொடங்க முன்னர் நவாஸ் ஷெரீஃப் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஃபோர்ப்ஸ் இன் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஏஞ்சலா மேர்கெல் முதலிடம்!

Posted:

தொடர்ந்து 6 வருடமாக ஜேர்மனின் அதிபர் பதவியில் இருக்கும் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இவ்வருடத்துக்கான சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார். மேர்கெல் எற்கனவே இவ்வருடத்துக்கான டைம்ஸின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Read more ...

யேமெனின் டாயிஸ் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் நகரங்களில் கிளர்ச்சியாளர் தாக்குதல்!

Posted:

மத்திய கிழக்கு நாடுகளான யேமென் மற்றும் துருக்கி ஆகியவற்றில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். யேமெனின் டாயிஸ் நகரில் ஈரான் நாட்டு ஷைட்டி கிளர்ச்ச்சியாளர்கள் 24 மணித்தியாலம் தொடர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஈடுபட்டதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Read more ...

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும்: அன்புமணி

Posted:

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் கூறியுள்ளனர். 


Read more ...

மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம்: தேர்தல் ஆணையம்

Posted:

மக்களவைத் தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. 


Read more ...

சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும்- சில கேள்விகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. 


Read more ...

காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted:

காணாமற்போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் வரைவுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 


Read more ...

பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளிலேயே இனி ஆயுதக் களஞ்சியங்கள்; ரணில் தெரிவிப்பு!

Posted:

பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த பகுதிகளைத் தெரிவு செய்து, அங்கு கொங்கிரீட் நிலக்கீழ் குழிகளை அமைத்து அவற்றுக்குள் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு மொழிக் கொள்கை: மனோ கணேசன்

Posted:

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தேசிய மொழிக் கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வரும் 25ஆம் திகதி கொழும்பில்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முப்படையினரின் மனநிலையில் பாதிப்பு; விசாரணை கோருகின்றார் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் மனநிலையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகம் முழுவதும் மழைக் கொட்டித் தீர்க்கிறது!

Posted:

தென்மேற்கு பருவ மழை கேரளாவில் நாளை துவங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மழைக் கொட்டித் தீர்க்கிறது. 


Read more ...

சிலைக் கடத்தல்: நிபுணர் குழுவின் ஆய்வை சுலபமாக்கினார் தீனதயாளன்!

Posted:

கடத்தல் சிலைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள வந்த நிபுணர் குழுவின் ஆய்வுகளை சுலபமாக்கி உள்ளார் கடத்தல் மன்னன் தீனதயாளன். 


Read more ...

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திகிறார் நரேந்திர மோடி!

Posted:

ஆறு நாட்கள் அரசு முறை சுற்று ப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கத்தார், சுவிச்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு, அமெரிக்கா சென்றுள்ளார். 


Read more ...

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் : விமர்சனம்

Posted:

 சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான்.


Read more ...

சூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா?

Posted:

எமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9  கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.


Read more ...

சுவிட்சர்லாந்தில் அனைவருக்கும் சம்பளம் என்ற கருத்து வாக்கெடுப்பு தோல்வி

Posted:

சுவிட்சர்லாந்தில் அண்மையில் அங்கு நிரந்தரமாக வாழ்பவர்கள் மற்றும் குடியேறி வருபவர்கள் என அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை பார்த்தாலும் பார்க்கா விடினும் மாதாந்தம் 2550  வருமானம் கிடைக்க வழி செய்யும் கருத்து வாக்கெடுப்பு நடைபெற்றது.  இதில் வேலை பார்க்காதவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாம் என்ற பிரிவில் அதிக சுவிஸ் மக்கள் வாக்களித்ததால் இது தோல்வியடைந்துள்ளது.


Read more ...

யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டிகளில் வெடி குண்டு தாக்குதல் நடத்த முயன்ற நபர் உக்ரைனில் கைது!

Posted:

யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டிகளில் வெடி குண்டு தாக்குதல் நடத்த முயன்ற நபர் உக்ரைனில் கைது!


Read more ...

உயிர்காக்கும் முக்கிய மருந்துகளின் விலைக் குறைப்பு:மத்திய அரசு

Posted:

உயிர்காக்கும் முக்கிய மருந்துகளின் விலையைக் குறைத்து அறிவித்து மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. தேசிய மருந்து ஆணையத்தின் பரிந்துரைக்கு ஏற்ப, நீரழிவு நோய், இதய நோய்,


Read more ...

சகாயம் ஐஏஎஸ் அறிக்கையை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை:நீதிமன்றம்

Posted:

சகாயம் ஐஏஎஸ் அறிக்கையை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை நடத்துவதுக் குறித்து தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™