Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தில்லி அரசில் வேலை

Posted: 07 Jun 2016 06:49 AM PDT

பணி: Guest Educational and vocational Guidance counselors

தேர்தல் சீர்திருத்தத்தை உறுதிப்படுத்த சட்டத்திருத்தம்

Posted: 06 Jun 2016 01:11 PM PDT

தேர்தலில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை கிடைக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அவசியமில்லை

Posted: 06 Jun 2016 01:10 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

நெல்லையில் யுவராஜுக்கு கூடுதல் பாதுகாப்பு: தங்கும் இடமும் மாற்றம்

Posted: 06 Jun 2016 01:10 PM PDT

நீதிமன்ற உத்தரவுப்படி திருநெல்வேலியில் கையெழுத்திட்டு வரும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்:ஆசிரியைக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted: 06 Jun 2016 01:10 PM PDT

போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த வழக்கில் ஆசிரியைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து அரியலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

இளம்பெண், குழந்தையுடன் மாயம்

Posted: 06 Jun 2016 01:09 PM PDT

மும்பையில் இருந்து ஈரோட்டுக்கு உறவினர் வீட்டுக்கு வந்த இளம்பெண், தனது குழந்தையுடன் மாயமான சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடைத்தரகர் இல்லாத இந்தியா!

Posted: 06 Jun 2016 12:22 PM PDT

கவர்ச்சிகரமான பெயர்களில் புதிய புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு இந்திரா காந்தி. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அறிவித்திருக்கும் எல்லா திட்டங்களும் முழுமையான செயல்பாட்டுக்கு வராவிட்டாலும், சில திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

இது உண்மையான மாற்றமே...

Posted: 06 Jun 2016 12:21 PM PDT

மாறிமாறிப் பலரும் மாற்றம் வரும் என்று பேசினார்கள். அந்த மாற்றுச்சிந்தைக்கு மாறான மாற்றம் நிகழ்ந்துவிட்டது. பழைய நிலையே "புதிய மாற்று' ஆனது.

வாழும் எண்ணம் பவித்திரமானது!

Posted: 06 Jun 2016 12:20 PM PDT

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் பொதுவாகக் கேட்கிற கேள்வி: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? நான் உயிரோடு, துடிப்பாக இருக்க விரும்புகிறேன்  என்று யாராவது சொல்லியிருப்பர்களா தெரியாது! சொன்னால், அது ஏனோதானோ பதிலாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. காரணம், அதில் அவர்களது அடுத்த  30, 40 ஆண்டு வாழ்க்கைச் சுருக்கமே, அணுகுமுறையே அடங்கிவிட வாய்ப்பிருக்கிறது.

வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் :ஜேட்லி உறுதி

Posted: 06 Jun 2016 12:19 PM PDT

வாராக் கடன்களை வசூலிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியுதவியும் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார்.

பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை

Posted: 06 Jun 2016 12:18 PM PDT

""நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்; பிரதமராக வேண்டும் என்று கனவில் கூட நான் ஆசைப்பட்டது இல்லை'' என்று பிகார் மாநிலத்தின் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்தார்.

அதிமுக, பாஜக இடையே மறைமுக உறவு இல்லை

Posted: 06 Jun 2016 12:17 PM PDT

அதிமுகவுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக உறவு எதுவும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக  துணைநிலை ஆளுநர், பிரதமர் காரணம்:தில்லி முதல்வர் கேஜரிவால் குற்றச்சாட்டு

Posted: 06 Jun 2016 12:17 PM PDT

தில்லியில் சட்டம்-ஒழுங்கு மோசமடைய துணைநிலை ஆளுநரும்,  பிரதமருமே காரணம் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தில் ரூ1,200 கோடி அன்னியச் செலாவணி முறைகேடு:அமலாக்கத் துறை நோட்டீஸ்

Posted: 06 Jun 2016 12:16 PM PDT

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தில் அன்னியச் செலாவணி விதிகளை ரூ.1,200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

100 யூனிட் இலவச மின் கட்டணச் சலுகை எப்போது கிடைக்கும்? மின் வாரியம் விளக்கம்

Posted: 06 Jun 2016 12:16 PM PDT

  தமிழக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான கட்டணச் சலுகை எப்போது முதல் அமலாகும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பண பலத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரம்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Posted: 06 Jun 2016 12:15 PM PDT

தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்த உடனேயே அந்தத் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மல்லையாவுக்கு எதிரான வழக்கு: ஜூலை 5-க்கு ஒத்திவைப்பு

Posted: 06 Jun 2016 12:14 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான காசோலை மோசடி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஹைதராபாத் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கான தண்டனை விவரம் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அமைதிப் பேச்சுக்கான வாய்ப்பை இந்தியா தரவில்லை:பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted: 06 Jun 2016 12:14 PM PDT

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை இந்தியா ஒருபோதும் அளிக்காதபோது, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் பாகிஸ்தானுக்கு இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

குல்பர்க் சொஸைட்டி கலவர வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க அரசுத் தரப்பு கோரிக்கை

Posted: 06 Jun 2016 12:13 PM PDT

குஜராத் மாநிலம், ஆமதாபாதின் குல்பர்க் சொûஸட்டி பகுதியில், கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 24 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வலியுறுத்தியது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு:4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Posted: 06 Jun 2016 12:13 PM PDT

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மதுரா கலவரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு:இன்று விசாரணை

Posted: 06 Jun 2016 12:12 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நேரிட்ட கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டுள்ளது.

மோடி-ஒபாமா இன்று சந்திப்பு:வெள்ளை மாளிகையில் மதிய விருந்து

Posted: 06 Jun 2016 12:11 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7)   சந்தித்துப் பேசுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு, மோடிக்கு மதிய விருந்து அளித்து ஒபாமா கெளரவிக்கிறார்.

மகாத்மா காந்தி கொலை: புதிய விசாரணை ஆணையம் அமைக்கக்கோரும் மனு தள்ளுபடி:மும்பை உயர் நீதிமன்றம்

Posted: 06 Jun 2016 12:10 PM PDT

தேசப் பிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க புதிய விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

வீரப்பனைக் கொன்றது எப்படி?: புத்தகம் எழுதுகிறார் கே.விஜயகுமார்

Posted: 06 Jun 2016 12:10 PM PDT

சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்றது எப்படி? என்பது குறித்து புத்தகம் எழுதி வருகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்.

தங்கக் கடத்தல் வழக்குகேரள உயர் நீதிமன்ற நீதிபதியிடம் ரூ.25 லட்சம் பேரம்

Posted: 06 Jun 2016 12:09 PM PDT

தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கேரள உயர் நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவர், தன்னிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதையடுத்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து கேரள உயர் நீதிமன்ற அமர்வு விலகிக் கொண்டது.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி

Posted: 06 Jun 2016 12:07 PM PDT

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது.

ரியோ ஒலிம்பிக்: போபண்ணா தகுதி

Posted: 06 Jun 2016 12:07 PM PDT

இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுள்ளார்.

தேசிய படகுப் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

Posted: 06 Jun 2016 12:06 PM PDT

தேசிய அளவிலான சப்-ஜூனியர் படகுப் போட்டி சென்னையில்  புதன்கிழமை (ஜூன் 8) தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி மின்னொளியில் நடைபெறுகிறது. படகுப் போட்டி மின்னொளியில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மாநில கூடைப் பந்து போட்டி சென்னை அணி சாம்பியன்

Posted: 06 Jun 2016 12:05 PM PDT

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அரசு சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் வென்றது

சுஷில் குமாரின் ஒலிம்பிக் கனவு கலைந்தது

Posted: 06 Jun 2016 12:03 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் யார் பங்கேற்பது என்பதை முடிவு செய்ய தனக்கும், நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசு விளையாட்டு விடுதிகளில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை:ஜூன் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது

Posted: 06 Jun 2016 12:01 PM PDT

தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்து சாம்ராஜ்ய தின கொண்டாட்டம்

Posted: 06 Jun 2016 12:01 PM PDT

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து சாம்ராஜ்ய தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் பற்றாக்குறை: சாத்தான்குளம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு

Posted: 06 Jun 2016 12:01 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாத்தான்குளம் பகுதிக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குறைந்தளவே தண்ணீர் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மணிமுத்தாறு அணையிலிருந்து குடிநீருக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுமுகனேரியில் கண் சிகிச்சை முகாம்

Posted: 06 Jun 2016 12:00 PM PDT

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் ஆறுமுகனேரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

Posted: 06 Jun 2016 12:00 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இளம் மொட்டுக்கள் திட்ட 5 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி  புதியம்புத்தூரில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம்

Posted: 06 Jun 2016 11:59 AM PDT

ஆத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை சார்பில் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம் நடைபெற்றது.

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்:பிரான்ஸ் அதிபர் கவலை

Posted: 06 Jun 2016 11:59 AM PDT

பிரான்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறினார்.

அன்புவனத்தில் இலவச மருத்துவ முகாம்

Posted: 06 Jun 2016 11:59 AM PDT

சாமிதோப்பு அன்புவனத்தில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சூறாவளியால் சேதமடைந்த வாழை, வெற்றிலை விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

Posted: 06 Jun 2016 11:58 AM PDT

ஆத்தூர், தென்திருப்பேரை பகுதிகளில் சூறாவளி காற்றினால் சேதமடைந்த வாழை மற்றும் வெற்றிலை கொடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவக் கிடங்கில் தீ: இலங்கையில் வீரர் பலி

Posted: 06 Jun 2016 11:58 AM PDT

  இலங்கையில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் வீரர் உயிரிழந்தார்.

முதியோர், விதவை உதவித் தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Posted: 06 Jun 2016 11:57 AM PDT

முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி

Posted: 06 Jun 2016 11:57 AM PDT

துருக்கியில் பள்ளிக் குழந்தைகள் சுற்றுலா சென்ற பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இலுப்பையூரணி புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா

Posted: 06 Jun 2016 11:57 AM PDT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில்  புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா மற்றும் திருப்பலி,அசன விருந்து ஆகியன நடைபெற்றது.

"ஃபலூஜாவைவிட்டு வெளியேற முயற்சிக்கும் பொதுமக்கள் மீது ஐ.எஸ். தாக்குதல்'இராக்கில் பலர் பலி?

Posted: 06 Jun 2016 11:57 AM PDT

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலூஜா நகரை அரசுப் படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்கின்றனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

"அரசு இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்'

Posted: 06 Jun 2016 11:57 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரபுரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 06 Jun 2016 11:56 AM PDT

சாத்தான்குளம்  அருகே குண்டும், குழிகளான பண்டாரபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காகிதத்தைப் போல் சுருட்டி, மடக்கக் கூடிய கணினிதென் கொரிய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 06 Jun 2016 11:56 AM PDT

காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கோவில்பட்டியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

Posted: 06 Jun 2016 11:56 AM PDT

கோவில்பட்டியில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை முதல் 2 நாள்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதம்: மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 06 Jun 2016 11:55 AM PDT

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அடீபுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அகில இந்திய கூடைப்பந்து: ஓஎன்ஜிசி அணி வெற்றி: பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தெற்கு ரயில்வே

Posted: 06 Jun 2016 11:55 AM PDT

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி கூடைப்பந்து போட்டியில், நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டேராடூன் ஓஎன்ஜிசி அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆப்கன் தாக்குதலில் செய்தியாளர், மொழிபெயர்ப்பாளர் பலி

Posted: 06 Jun 2016 11:55 AM PDT

ஆப்கானிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், அவர்களுடன் சென்ற செய்தியாளர் டேவிட் கில்கீ (50), அவரது மொழிபெயர்ப்பாளர் ஜபிஹுல்லா தமன்னா பலியாகினர்.

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ஜூன் 9இல் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 06 Jun 2016 11:55 AM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கும் பணி ஜூன் 9ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு

Posted: 06 Jun 2016 11:54 AM PDT

கோவில்பட்டியில் வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பொறியியல் பொருள்கள் ஏற்றுமதியில் வீழ்ச்சி

Posted: 06 Jun 2016 11:54 AM PDT

சீனா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய முக்கிய  நாடுகளுக்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி சென்ற ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சி கண்டது என பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.) தெரிவித்துள்ளது.

செட்டியாபத்து கோயில் பணியாளரைத் தாக்கியதாக அறங்காவலர்கள் மீது வழக்கு

Posted: 06 Jun 2016 11:54 AM PDT

உடன்குடி அருகே செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் பணியாளரைத் தாக்கியதாக கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இருவர் உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு: அரசு தீவிர ஆலோசனை

Posted: 06 Jun 2016 11:53 AM PDT

விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது உள்ளிட்ட கொள்கை முடிவுகள் எடுப்பது தொடர்பான உயர்மட்ட ஆலோசனையை மத்திய அரசு திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை

Posted: 06 Jun 2016 11:53 AM PDT

தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவுப் பணியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

காயல்பட்டினத்தில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்

Posted: 06 Jun 2016 11:53 AM PDT

காயல்பட்டினத்தில் ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை(ஜூன் 7) தொடங்கு வதாக நகர உலமாக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குவைத் நாட்டில் தவிக்கும் 11 மீனவர்களை மீட்கக் கோரி மனு

Posted: 06 Jun 2016 11:50 AM PDT

குவைத் நாட்டில் பொய்வழக்கில் சிக்கி தவித்து வரும் 11 மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாணிடம் உறவினர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தக்கலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Posted: 06 Jun 2016 11:50 AM PDT

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு  மனிதச்சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

வீட்டுக்கு பாதை வசதி கேட்டு ஆட்சியரிடம் பள்ளிச் சிறுமி மனு

Posted: 06 Jun 2016 11:50 AM PDT

வீட்டுக்கு பாதை வசதி செய்து தரக் கோரி பள்ளிச்சிறுமி குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாணிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

கோட்டாறு ஆயுர்வேத கல்லூரியில் இந்திய மருத்துவத் துறை ஆணையர் ஆய்வு

Posted: 06 Jun 2016 11:49 AM PDT

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவிலில் ஆதார் அட்டை பெற அலை மோதிய கூட்டம்

Posted: 06 Jun 2016 11:49 AM PDT

நாகர்கோவிலில் ஆதார் அட்டை பெறுவதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை அதிக அளவில் பொதுமக்கள் கூடினர்.

உ.பி. மாநிலத்தில் மூன்று 660 மெகாவாட் அலகுகள்:85 நாள்களுக்குள் இயக்கி வைத்து  பி.எச்.இ.எல். சாதனை

Posted: 06 Jun 2016 11:48 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 660 மெகாவாட் அலகுகளை 85 நாள்களுக்குள் இயக்கி வைத்து பி.எச்.இ.எல். நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

கருகும் பயிரைக் காப்பாற்ற பேச்சிப்பாறை அணையை திறக்க வேண்டும்: விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை

Posted: 06 Jun 2016 11:48 AM PDT

குமரி மாவட்டத்தில் கருகும் பயிரைக் காப்பாற்ற பேச்சிப்பாறை அணை தண்ணீரை திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளார்.

படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொய்வு

Posted: 06 Jun 2016 11:47 AM PDT

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடியில் போதிய பணியாளர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிவு

Posted: 06 Jun 2016 11:47 AM PDT

சாதகமற்ற நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்தது.

சுகாதாரமான குடிநீர் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Posted: 06 Jun 2016 11:47 AM PDT

நாகர்கோவில் நகரில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்  சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

சாமிதோப்பில் வைகாசித் தேரோட்டம்:திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 06 Jun 2016 11:46 AM PDT

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்றனர்.

குமரியில் இயங்கி வரும் பெண்கள், குழந்தைகள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர்

Posted: 06 Jun 2016 11:46 AM PDT

குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளை உடனடியாக பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ. 34 கோடியில் குறுவை திட்டம்:மாநில வேளாண் ஆணையர் தகவல்

Posted: 06 Jun 2016 11:46 AM PDT

திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ள ரூ. 34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநில வேளாண்மைத்துறை ஆணையர் எம். ராஜேந்திரன் கூறினார்.

விளவங்கோடு தொகுதியில் ரூ. 15 கோடியில் நெடுஞ்சாலைப் பணிகள்: விஜயதரணி எம்.எல்.ஏ தகவல்

Posted: 06 Jun 2016 11:45 AM PDT

விளவங்கோடு தொகுதியில் ரூ.15 கோடியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் விஜயதரணி எம்.எல்.ஏ.

ஆரல்வாய்மொழி அருகே வேன்கள் மோதல்: ஓட்டுநர் காயம்

Posted: 06 Jun 2016 11:45 AM PDT

ஆரல்வாய்மொழி அருகே இரு வேன்கள் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

பிரீமியர் பட்ஸல் லீக் இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்:ஏ.ஆர். ரஹ்மான் நம்பிக்கை

Posted: 06 Jun 2016 11:45 AM PDT

இந்தியாவில் தொடங்கப்படவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் உள் அரங்க கால்பந்துத் தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுசீந்திரத்தில் தள்ளுவண்டிகள் தீ வைத்து எரிப்பு

Posted: 06 Jun 2016 11:45 AM PDT

சுசீந்திரத்தில் தள்ளுவண்டிகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

என்.ஐ. கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்பு

Posted: 06 Jun 2016 11:44 AM PDT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய முதல்வராக நாகர்கோவில் இந்துக் கல்லுரி முன்னாள் முதல்வர்  எஸ். பெருமாள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

Posted: 06 Jun 2016 11:44 AM PDT

குமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம், தக்கலையில்  நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில்வாகன நிறுத்துமிட மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தம்

Posted: 06 Jun 2016 11:43 AM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வாகன நிறுத்துமிட மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில்

Posted: 06 Jun 2016 11:43 AM PDT

கோடை விடுமுறை நிறைவு: சுற்றுலாத் தலங்களில் கூட்டம் குறைந்தது

Posted: 06 Jun 2016 11:43 AM PDT

கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

நாகர்கோவிலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 06 Jun 2016 11:42 AM PDT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர், மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

"தூய்மை இந்தியா' பயிற்சி திட்டத்துக்கு தூதராக நடிகை நியமனம்

Posted: 06 Jun 2016 11:42 AM PDT

தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 06 Jun 2016 11:42 AM PDT

அம்பத்தூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

Posted: 06 Jun 2016 11:41 AM PDT

கும்மிடிப்பூண்டி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

என்ஜிடி இறுதி எச்சரிக்கை எதிரொலி:ரூ. 4.75 கோடி இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது "வாழும் கலை அமைப்பு'

Posted: 06 Jun 2016 11:41 AM PDT

யமுனை நதிக்கரை பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலக கலாசார திருவிழாவால், சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்பட்டதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி ரூ. 4.75 கோடி இழப்பீட்டுத் தொகையை தில்லி வளர்ச்சி ஆணையத்திடம் விழா ஏற்பாட்டாளரான "வாழும் கலை அமைப்பு' செலுத்தியுள்ளது.

தூங்கிய பெண்ணிடம் நகைப் பறிப்பு

Posted: 06 Jun 2016 11:40 AM PDT

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டு வாசலில் தூங்கிய பெண்ணின் கழுத்திலிருந்த நான்கரை பவுன் நகையை மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

யானைகளை விரட்டச் சென்ற 2 வன ஊழியர்கள் படுகாயம்

Posted: 06 Jun 2016 11:40 AM PDT

ஒசூர் அருகே முகாமிட்டுள்ள 7 யானைகளை காட்டுக்குள் விரட்ட சென்ற 2 வன ஊழியர்கள் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.

மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு

Posted: 06 Jun 2016 11:40 AM PDT

ஒரகடம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இறந்தார்.

போர் ஊர்தி ஆராய்ச்சி நிலையத்தில் தூய்மை இயக்க வார விழா

Posted: 06 Jun 2016 11:39 AM PDT

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், ஆவடியில் இயங்கி வரும் போர் ஊர்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் தூய்மை இயக்க வார விழா நடைபெற்றது.

திருவள்ளூரில் சாலைப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ

Posted: 06 Jun 2016 11:39 AM PDT

திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி முடிவடைந்த இடங்களில் சாலைப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கூறினார்.

அம்மா கைப்பேசி பயன்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 06 Jun 2016 11:38 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட அம்மா கைப்பேசியின் பயன்பாடுகளையும், கிராம வறுமை ஓழிப்புச் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அண்மையில் ஆய்வு செய்தார்.

ஜமாபந்தியில் 60 மனுக்கள்

Posted: 06 Jun 2016 11:38 AM PDT

மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

Posted: 06 Jun 2016 11:37 AM PDT

செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ

Posted: 06 Jun 2016 11:37 AM PDT

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தொகுதி வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jun 2016 11:36 AM PDT

தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

குறைதீர் கூட்டத்தில் 327 மனுக்கள் அளிப்பு

Posted: 06 Jun 2016 11:36 AM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 327 மனுக்கள் பெறப்பட்டன.

திருமலையில் குறையாத பக்தர்கள் கூட்டம்

Posted: 06 Jun 2016 11:35 AM PDT

திருமலையில் பக்தர்கள் வருகை மே மாதம் முடிந்த பிறகும் குறையவில்லை.

ஒரு கோடியை எட்டிய லட்டு விற்பனை

Posted: 06 Jun 2016 11:35 AM PDT

ஏழுமலையான் லட்டுப் பிரசாத விற்பனை ஒரு கோடியை எட்டியுள்ளது.

கொம்பு முளைத்த அதிசய மாம்பழம்

Posted: 06 Jun 2016 11:35 AM PDT

ஆந்திரத்தில் ஒரு மாம்பழத்துக்கு கொம்பு முளைத்துள்ளது.

மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு: குடியிருப்பு பகுதிகளில் புகுந்த கடல்நீர்

Posted: 06 Jun 2016 11:35 AM PDT

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் குடியிருப்புப் பகுதி வரை கடல்நீர் உட்புகுந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™