Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிவகங்கை மாவட்ட மின் நுகர்வோர் அரசு இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு
- கோயில் கட்டுவதில் இரு கிராமங்கள் இடையே பிரச்னை:போலீஸார் சமரசம்
- சிங்கம்புணரி சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடம் திறக்கப்படுமா?
- வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி
- மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருப்பணி: அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு
- ராமநாதபுரம்
- சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிமுக, திமுக விளம்பர பதாகைகள்
- இளையான்குடியில் திமுக கொடியேற்று விழா
- குறி சொல்பவர் தூக்கிட்டு தற்கொலை
- தீக்குளித்து பெண் தற்கொலை
- ராஜபாளையம் பகுதி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை
- ஒன்றிய அலுவலக ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு
- சம உரிமைக் கல்வி பயிற்சி முகாம்
- மனைவி புகார்: கணவர் கைது
- அருப்புக்கோட்டை
- சிவகாசி கல்லூரிக்கு "பி' தரச்சான்று
- பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
- இணையவழி ஊடகங்களுக்கும் தணிக்கை: ஏ.பி.சி.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி கவிழ்ந்து கிளீனர் சாவு
- நீர்த்தேக்கத்தில் மூழ்கி மதுரையைச் சேர்ந்தவர் சாவு
- கோயில் வருமானத்தை கோயிலுக்கே பயன்படுத்த வலியுறுத்தி ஜூலை 17-இல் ஆர்ப்பாட்டம்
- கொடைக்கானலில் கபடிப் போட்டி
- மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சாவு
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
- பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை
- மக்களின் நம்பிக்கையை தீர்ப்புகள் மூலம் நீதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி
- மாநில கூடைப் பந்து போட்டி: சென்னை சத்யபாமா அணிக்கு 2ஆவது வெற்றி
- கோயில் வருமானத்தை கோயிலுக்கே பயன்படுத்த வலியுறுத்தி ஜூலை 17இல் ஆர்ப்பாட்டம்
- மக்கள் நலக் கூட்டணியில் தமாகா நீடிக்குமா?
- காவல் சார்பு- ஆய்வாளர் மீது பாட்டில் வீச்சு: ஒருவர் கைது
- லாரி- மொபட் மோதல்: சிறுவன் சாவு
- பூசாரி தற்கொலை வழக்கு: புகார் கடிதத்தின் நகல்களை தாக்கல் செய்ய எதிர்ப்பு
- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்த மலர்களை களையெடுக்கும் பணி தீவிரம்
- தில்லியில் 42.9 டிகிரி வெயில்
- தில்லி பேரவைத் துணைத் தலைவர் பந்தனா குமாரி ராஜிநாமா ஏற்பு
- டிடிஏ மைதானங்களில் திருமண நிகழ்வை ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு
- நோயாளிகளை தத்தெடுக்கும் திட்டம்: எய்ம்ஸ் அறிமுகம்
- மாநகராட்சி அதிகாரியின் வீட்டில் இருந்து ரூ. 26 லட்சம் பறிமுதல் செய்தது சிபிஐ
- ஆங்கிலத்தில் சரளமாக பேச காவல் துறை "பிசிஆர்' வாகன காவலர்களுக்குப் பயிற்சி
- தில்லியில் சட்டவிரோத சிறுநீரக பரிமாற்றம்: சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் தீவிரம்
- ஹைதராபாதில் சிகிச்சை முடிந்து அமைச்சர் கோபால் ராய் தில்லி திரும்பினார்
- மதுரா கலவரம் நீதி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
- "என்ஐஓஎஸ்' பிளஸ் -2 வகுப்பு தேர்வு முடிவு நாளை அறிவிப்பு
- சாலை விபத்தில் 6 பேர் சாவு
- பொம்மை கார் வாங்கிய போது வாக்குவாதம்: நால்வர் மீது தாக்குதல்
- கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நைஜீரிய பெண் கைது
- புது தில்லி
- கள்ளத் துப்பாக்கிகள் விற்றவர் கைது: 27 துப்பாக்கிகள் பறிமுதல்
- வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம்
- 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் பழனி அங்கன்வாடி பணியாளர்கள் அவதி
- தேனி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
- நிலக்கோட்டை பகுதி புன்செய் நிலங்களை பாதுகாக்க நிலத்தடி நீர் மேம்படுத்தப்படுமா?
- திண்டுக்கல் அருகே கார் மீது மணல் லாரி மோதி கணவன்- மனைவி சாவு: நெல்லையைச் சேர்ந்தவர்கள்
- காவல்துறை சார்பில் புகார்கள் மீது தீர்வு காணும் முகாம்
- உளவுப்பிரிவுக்கு புதிய எஸ்.பி.
- இந்திய மீனவர்கள் 19 பேரை மீட்க உதவுங்கள்: மத்திய அரசிடம் கேரளம் வலியுறுத்தல்
- உலக மணல் சிற்பப் போட்டி: சுதர்சன் பட்நாயக்குக்கு தங்கம்
- ஒடிஸா: அவசரமாக இறக்கப்பட்ட விமானம்
- சிறுநீரக மோசடி விவகாரம்: சென்னையில் தில்லி போலீஸ் சோதனை
- வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம்!
- நில ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: கேரள முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு
- என்ஐஏ தலைவரின் கருத்து: பிரதமர் விளக்கமளிக்க திக்விஜய் சிங் வலியுறுத்தல்
- ஆந்திரத்தில் 2 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்
- கர்நாடக அரசின் எச்சரிக்கை எதிரொலி: போராட்டத்தைக் கைவிட்ட போலீஸார்
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்: 2 போலீஸார் பலி
- சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு
- வெடி விபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளர் கைது
- பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவர் மீது வழக்குப் பதிவு
- மதுக்கடையை அகற்ற கோரிக்கை
- மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மாணவி லாரி மோதி சாவு
- கருணாநிதி பிறந்த நாள் விழா
- காணாமல் போன மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
- வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- தீ விபத்து: வீடு எரிந்து சேதம்
- மரம் சாய்ந்து மின்மாற்றி சேதம்
- வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 பேர் சாவு
- வெறி நாய்கள் கடித்து 6 ஆடுகள் சாவு
- எங்கள் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு இடம் கிடையாது
- குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி
- களியங்காட்டில் இன்று யோகா தினம் கடைப்பிடிப்பு
- கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்கள் இயக்காமல் குமரி புறக்கணிப்பு: ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு
- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
- கேரளத்துக்கு பாறைப் பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவர் கைது
- டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகை
- நாகர்கோவில்
- நாகர்கோவில் நகர குடிநீர் விநியோகிக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
- கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை
- சாமிதோப்பு பதியில் அகிலத்திரட்டு பாராயண நூல் வெளியீடு
- கண்ணுமாமூட்டில் பழங்குடியினர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- விடுமுறை நாள்களிலும் அரசு இ-சேவை மையங்கள் இயங்கும்: ஆட்சியர் தகவல்
- ஓட்டுநர் உரிமத்தில் தமிழ் புறக்கணிப்பு: முதல்வருக்கு குளச்சல் எம்.எல்.ஏ. மனு
- தேசிய கூடைப்பந்து: கேரள மின்வாரிய அணிகள் வெற்றி
- ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஜூன் 9இல் ஜமாபந்தி துவக்கம்
- உடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை இயக்கக் கோரிக்கை
- பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருஷாபிஷேகம்
- பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து மாணவர்கள், ஓட்டுநர் உள்பட 13 பேர் பலத்த காயம்
- தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்
- விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
- திருச்செந்தூரில் பள்ளி வாகனங்களில் ஆய்வு
| சிவகங்கை மாவட்ட மின் நுகர்வோர் அரசு இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு Posted: 04 Jun 2016 12:58 PM PDT சிவகங்கை மாவட்ட மின் நுகர்வோர் அரசு இ-சேவை மையங்களில் மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| கோயில் கட்டுவதில் இரு கிராமங்கள் இடையே பிரச்னை:போலீஸார் சமரசம் Posted: 04 Jun 2016 12:58 PM PDT திருவாடானை அருகே கோயில் கட்டுவதில் இரு கிராமத்தினருக்கிடையே பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் இரு கிராம மக்களையும் சமரசம் செய்தனர். |
| சிங்கம்புணரி சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடம் திறக்கப்படுமா? Posted: 04 Jun 2016 12:58 PM PDT சிங்கம்புணரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். |
| வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி Posted: 04 Jun 2016 12:58 PM PDT திருவாடானை தாலுகா எஸ். பி. பட்டிணம் அருகே மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுந்தராஜன் மகன் வெங்கடேசன் (46). இவர் வெள்ளிக்கிழமை மாலை பக்கத்து கிராமத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். |
| மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருப்பணி: அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு Posted: 04 Jun 2016 12:58 PM PDT மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் நடராஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 04 Jun 2016 12:58 PM PDT |
| சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிமுக, திமுக விளம்பர பதாகைகள் Posted: 04 Jun 2016 12:58 PM PDT திருவாடானை, தொண்டி நகர் பகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவினரின் விளம்பர பதாகைகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. |
| இளையான்குடியில் திமுக கொடியேற்று விழா Posted: 04 Jun 2016 12:58 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இளையான்குடியில் சனிக்கிழமை அக்கட்சியினர் திமுக கொடிகளை ஏற்றி வைத்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் வழங்கினர். இளையான்குடி ஆரிப்நகர், கீழாயூர்காலணி, கண்மாய்க்கரை, பஜார் உள்ளிட்ட பல இடங்களில் திமுக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. இங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் வழங்கப்பட்டன. ரகுமானியா பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், நகரச் செயலாளர் நஜூமுதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் முகமது, முன்னாள் மாவட்ட இளைஞரணி முருகானந்தம், விவசாய அணி நிர்வாகி காளிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் செல்லச்சாமி, பெரியசாமி, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
| குறி சொல்பவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 04 Jun 2016 12:51 PM PDT சிவகாசி அருகே குறி சொல்பவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 04 Jun 2016 12:48 PM PDT ராஜபாளையத்தில் சனிக்கிழமை குடும்பப் பிரச்னையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| ராஜபாளையம் பகுதி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை Posted: 04 Jun 2016 12:47 PM PDT ராஜபாளையம் பகுதியில் உள்ள அண்ணா நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஒன்றிய அலுவலக ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு Posted: 04 Jun 2016 12:47 PM PDT விருதுநகர் அருகே சனிக்கிழமை ஒன்றிய அலுவலக ஊழியரிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சம உரிமைக் கல்வி பயிற்சி முகாம் Posted: 04 Jun 2016 12:47 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் பெண்களுக்கான சம உரிமைக் கல்வி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Jun 2016 12:47 PM PDT ராஜபாளையத்தில் மனைவி புகாரால் போலீஸார் கணவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 04 Jun 2016 12:47 PM PDT |
| சிவகாசி கல்லூரிக்கு "பி' தரச்சான்று Posted: 04 Jun 2016 12:47 PM PDT சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரிக்கு "பி' தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. |
| பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு Posted: 04 Jun 2016 12:35 PM PDT பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பேர்மென்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
| இணையவழி ஊடகங்களுக்கும் தணிக்கை: ஏ.பி.சி. Posted: 04 Jun 2016 12:35 PM PDT பத்திரிகை விற்பனைகளை தணிக்கை செய்வது போல இணைய வழி ஊடகங்களின் பயன்பாடு குறித்தும் தணிக்கை ஆய்வு செய்யப்படும் என இந்தியப் பத்திரிகைத் தணிக்கை அமைப்பு (ஏ.பி.சி) தெரிவித்துள்ளது. |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி கவிழ்ந்து கிளீனர் சாவு Posted: 04 Jun 2016 12:34 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு லாரி கவிழ்ந்ததில், கிளீனர் உயிரிழந்தார். லாரி ஒட்டுநர் பலத்த காயமடைந்தார். |
| நீர்த்தேக்கத்தில் மூழ்கி மதுரையைச் சேர்ந்தவர் சாவு Posted: 04 Jun 2016 12:34 PM PDT ஆத்தூர் நீர்த்தேகத்தில் குளிக்கச் சென்ற மதுரை ஆடிட்டரின் உதவியாளர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார். |
| கோயில் வருமானத்தை கோயிலுக்கே பயன்படுத்த வலியுறுத்தி ஜூலை 17-இல் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2016 12:34 PM PDT ஹிந்துக் கோயில்களின் வருவாயை கோயில்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஜூலை 17-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ராம.கோபாலன் தெரிவித்தார். |
| Posted: 04 Jun 2016 12:33 PM PDT கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் சனிக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சாவு Posted: 04 Jun 2016 12:33 PM PDT திண்டுக்கல் அடுத்துள்ள மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ம.பழனிச்சாமி (45). இவர் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினராவார். |
| திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு Posted: 04 Jun 2016 12:32 PM PDT திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக த.ந.ஹரிஹரன் சனிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். |
| பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை Posted: 04 Jun 2016 12:32 PM PDT பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். |
| மக்களின் நம்பிக்கையை தீர்ப்புகள் மூலம் நீதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி Posted: 04 Jun 2016 12:32 PM PDT நீதிமன்றத்தை அணுகினால் நியாயம் கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை தீர்ப்புகள் மூலம் நீதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி தெரிவித்தார். |
| மாநில கூடைப் பந்து போட்டி: சென்னை சத்யபாமா அணிக்கு 2ஆவது வெற்றி Posted: 04 Jun 2016 12:31 PM PDT திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் மாநில கூடைப்பந்துப் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டத்தில் 1 புள்ளி வித்தியாசத்தில் சென்னை சத்யபாமா பல்கலை. அணி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. |
| கோயில் வருமானத்தை கோயிலுக்கே பயன்படுத்த வலியுறுத்தி ஜூலை 17இல் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2016 12:31 PM PDT இந்துக் கோயில்களின் வருமானத்தை கோயில்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஜூலை 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் ராம.கோபாலன் தெரிவித்தார். |
| மக்கள் நலக் கூட்டணியில் தமாகா நீடிக்குமா? Posted: 04 Jun 2016 12:31 PM PDT மக்கள் நலக் கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீடிக்குமா? என்பது குறித்து ஜூன் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
| காவல் சார்பு- ஆய்வாளர் மீது பாட்டில் வீச்சு: ஒருவர் கைது Posted: 04 Jun 2016 12:29 PM PDT தேனி அல்லிநகரத்தில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு- ஆய்வாளர் மீது பாட்டில் வீசி தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| லாரி- மொபட் மோதல்: சிறுவன் சாவு Posted: 04 Jun 2016 12:29 PM PDT திண்டுக்கல்லை அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் சிவசங்கர் (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தார். திண்டுக்கல் அடுத்துள்ள ராஜாக்கப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரஞ்சித் (29). சிவசங்கரும், ரஞ்சித்தும், மொபட்டில் திருச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலையை நோக்கி சனிக்கிழமை வந்துள்ளனர்.அப்போது திருச்சி- திண்டுக்கல் சாலையில் வந்த லாரியும் மொபட்டும் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே சிவசங்கர் உயிரிழந்தார். ரஞ்சித் கீழே குதித்து தப்பினார். தாடிக்கொம்பு போலீஸார் விசாரிக்கின்றனர். |
| பூசாரி தற்கொலை வழக்கு: புகார் கடிதத்தின் நகல்களை தாக்கல் செய்ய எதிர்ப்பு Posted: 04 Jun 2016 12:28 PM PDT பெரியகுளம் பூசாரி தற்கொலை வழக்கில், தேனி மாவட்ட எஸ்பியிடம் அளிக்கப்பட்ட புகார் கடிதத்தின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. |
| கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்த மலர்களை களையெடுக்கும் பணி தீவிரம் Posted: 04 Jun 2016 12:28 PM PDT கொடைக்கானலில் மழை பெய்து வருவதையடுத்து, பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்துள்ள மலர்களை களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| Posted: 04 Jun 2016 12:27 PM PDT தில்லியில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.9 டிகிரி செல்ஷியஸாக பதிவானதால், தலைநகரவாசிகள் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகினர். |
| தில்லி பேரவைத் துணைத் தலைவர் பந்தனா குமாரி ராஜிநாமா ஏற்பு Posted: 04 Jun 2016 12:27 PM PDT தில்லி சட்டபேரவைத் துணைத் தலைவர் பந்தனா குமாரியின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் சனிக்கிழமை ஏற்றுக் கொண்டார். |
| டிடிஏ மைதானங்களில் திருமண நிகழ்வை ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) சொந்தமான மைதானங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த வாடகைக் கட்டணம் செலுத்திய பிறகு அதை ரத்து செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| நோயாளிகளை தத்தெடுக்கும் திட்டம்: எய்ம்ஸ் அறிமுகம் Posted: 04 Jun 2016 12:26 PM PDT பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்கும் வகையில் "ஒரு நோயாளியை தத்தெடுத்தல்' திட்டத்தை எய்ம்ஸ் சனிக்கிழமை அறிமுகம் செய்தது. |
| மாநகராட்சி அதிகாரியின் வீட்டில் இருந்து ரூ. 26 லட்சம் பறிமுதல் செய்தது சிபிஐ Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லியில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை போலியாக வழங்கி மோசடி செய்த வழக்கில் தில்லி மாநகராட்சியின் முன்னாள் சார்பதிவாளரின் வீடுகளில் இருந்து ரூ. 26 லட்சத்தை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பறிமுதல் செய்துள்ளது. |
| ஆங்கிலத்தில் சரளமாக பேச காவல் துறை "பிசிஆர்' வாகன காவலர்களுக்குப் பயிற்சி Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லியில் வசிக்கும் வெளிநாட்டவருடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள வசதியாக தில்லி பிசிஆர் (காவல் கட்டுப்பாட்டு அறை) வாகனங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு சரியான உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலப் பயிற்சி அளிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. |
| தில்லியில் சட்டவிரோத சிறுநீரக பரிமாற்றம்: சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் தீவிரம் Posted: 04 Jun 2016 12:26 PM PDT சட்டவிரோதமாக சிறுநீரகம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுநீரகத்தை அளித்தவர்களுக்கும், அதனை பெற்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தில்லி காவல் துறை சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. |
| ஹைதராபாதில் சிகிச்சை முடிந்து அமைச்சர் கோபால் ராய் தில்லி திரும்பினார் Posted: 04 Jun 2016 12:26 PM PDT ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய், சிகிச்சை முடிந்து தில்லி திரும்பியுள்ளார். |
| மதுரா கலவரம் நீதி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 04 Jun 2016 12:26 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நிகழ்ந்த கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) வலியுறுத்தியுள்ளது. |
| "என்ஐஓஎஸ்' பிளஸ் -2 வகுப்பு தேர்வு முடிவு நாளை அறிவிப்பு Posted: 04 Jun 2016 12:26 PM PDT தேசிய திறந்தவெளி பள்ளி (என்ஐஓஎஸ்) மார்ச்-மே பருவத்தில் நடத்திய பிளஸ்-2 தேர்வு முடிவு திங்கள்கிழமை (ஜூன் 6) அறிவிக்கப்படுகிறது. இதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வரும் 9ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. |
| Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லியின் புறநகர் பகுதியான சமய்பூர் பத்லி நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். |
| பொம்மை கார் வாங்கிய போது வாக்குவாதம்: நால்வர் மீது தாக்குதல் Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லி இந்தியா கேட் பகுதியில் பொம்மை கார் வாங்கிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை தாக்கியதாக பேட்டரி மூலம் இயங்கும் பொம்மை கார் விற்பனையாளர் உள்பட சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நைஜீரிய பெண் கைது Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லியில் ஓலா நிறுவனத்திற்கு சேவை அளிக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 26 வயதுடைய நைஜீரிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 04 Jun 2016 12:26 PM PDT |
| கள்ளத் துப்பாக்கிகள் விற்றவர் கைது: 27 துப்பாக்கிகள் பறிமுதல் Posted: 04 Jun 2016 12:26 PM PDT தில்லியில் கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் நபரை சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம் Posted: 04 Jun 2016 12:26 PM PDT வருமான வரிக் கணக்கினை ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் பழனி அங்கன்வாடி பணியாளர்கள் அவதி Posted: 04 Jun 2016 12:26 PM PDT பழனி மற்றும் சுற்று வட்டார அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவதி அடைந்துள்ளனர். |
| தேனி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு Posted: 04 Jun 2016 12:26 PM PDT தேனி மாவட்ட ஆட்சியராக ந.வெங்கடாசலம் சனிக்கிழமை பொறுப்பேற்றார். |
| நிலக்கோட்டை பகுதி புன்செய் நிலங்களை பாதுகாக்க நிலத்தடி நீர் மேம்படுத்தப்படுமா? Posted: 04 Jun 2016 12:26 PM PDT நிலக்கோட்டை பகுதியில் உள்ள புன்செய் நிலங்களை பாதுகாக்க, சோத்துப்பாறை, மஞ்சளாறு, மருதாநதி உபரிநீரை தனிக் கால்வாய் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| திண்டுக்கல் அருகே கார் மீது மணல் லாரி மோதி கணவன்- மனைவி சாவு: நெல்லையைச் சேர்ந்தவர்கள் Posted: 04 Jun 2016 12:26 PM PDT திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை இரவு கார் மீது மணல் லாரி மோதியதில் திருநெல்வேலியைச் சேர்ந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். |
| காவல்துறை சார்பில் புகார்கள் மீது தீர்வு காணும் முகாம் Posted: 04 Jun 2016 12:26 PM PDT பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை புகார்கள் மீது தீர்வு காணும் முகாம் (பெட்டிசன் மேளா) நடைபெற்றது. |
| உளவுப்பிரிவுக்கு புதிய எஸ்.பி. Posted: 04 Jun 2016 12:25 PM PDT தமிழக காவல்துறை உளவுப்பிரிவுக்கு (எஸ்.பி.சி.ஐ.டி.) புதிய எஸ்.பி.யாக டி. கண்ணனை நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா சனிக்கிழமை உத்தரவிட்டார். |
| இந்திய மீனவர்கள் 19 பேரை மீட்க உதவுங்கள்: மத்திய அரசிடம் கேரளம் வலியுறுத்தல் Posted: 04 Jun 2016 12:15 PM PDT இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் பிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டியகோ கார்சியா தீவின் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கேரள மீனவர்கள் 6 பேர் உள்பட இந்திய மீனவர்கள் 19 பேரை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. |
| உலக மணல் சிற்பப் போட்டி: சுதர்சன் பட்நாயக்குக்கு தங்கம் Posted: 04 Jun 2016 12:14 PM PDT பல்கேரியா நாட்டில் நடைபெற்ற உலக மணல் சிற்பப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக்குக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. |
| ஒடிஸா: அவசரமாக இறக்கப்பட்ட விமானம் Posted: 04 Jun 2016 12:12 PM PDT பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புவனேசுவரம் விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. |
| சிறுநீரக மோசடி விவகாரம்: சென்னையில் தில்லி போலீஸ் சோதனை Posted: 04 Jun 2016 12:11 PM PDT சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவனை பிடிப்பதற்காக, சென்னை மற்றும் கொல்கத்தாவில் தில்லி போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். |
| வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம்! Posted: 04 Jun 2016 12:10 PM PDT வருமான வரிக் கணக்கினை ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| நில ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: கேரள முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு Posted: 04 Jun 2016 12:07 PM PDT அரசு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், கேரள முன்னாள் அமைச்சர்கள் அடூர் பிரகாஷ், குஞ்ஞாலிக்குட்டி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மாநில ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. |
| என்ஐஏ தலைவரின் கருத்து: பிரதமர் விளக்கமளிக்க திக்விஜய் சிங் வலியுறுத்தல் Posted: 04 Jun 2016 12:06 PM PDT பதான்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் கருத்து தெரிவித்திருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார். |
| ஆந்திரத்தில் 2 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் Posted: 04 Jun 2016 12:04 PM PDT விசாகப்பட்டினம்-சென்னை நகரங்களுக்கு இடையேயும், பெங்களூரு-அமராவதி நகரங்களுக்கு இடையேயும் வெளிநாட்டின் உதவியுடன் 2 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். |
| கர்நாடக அரசின் எச்சரிக்கை எதிரொலி: போராட்டத்தைக் கைவிட்ட போலீஸார் Posted: 04 Jun 2016 12:02 PM PDT ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடகம் முழுவதும் கூண்டோடு விடுமுறை எடுக்கும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த அந்த மாநில போலீஸார், மாநில அரசின் கடுமையான எச்சரிக்கையால் போராட்டத்தைக் கைவிட்டு, வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர். |
| காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்: 2 போலீஸார் பலி Posted: 04 Jun 2016 11:59 AM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின், இடைத் தேர்தல் நடைபெறவுள்ள அனந்தநாக் தொகுதியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 2 போலீஸார் உயிரிழந்தனர். |
| சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம் Posted: 04 Jun 2016 11:59 AM PDT காஞ்சிபுரத்தில் மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. வடக்கு கிருஷ்ணன் தெருவில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் இதனை மின்சார வாரியம் உடனடியாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். |
| ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு Posted: 04 Jun 2016 11:59 AM PDT இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் நீக்கப்பட்டதைக் கண்டித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வெடி விபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளர் கைது Posted: 04 Jun 2016 11:59 AM PDT உத்தரமேரூரில் வியாழக்கிழமை (ஜூன் 2) நிகழ்ந்த வெடி விபத்தில் வீடு தரை மட்டமானது. இந்த விபத்தில் சிக்கி வீட்டின் உரிமையாளர் ரவியின் மனைவி ஜெயா, மகன் தீனதயாளன் ஆகியோர் இறந்தனர். வெடி விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். |
| பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவர் மீது வழக்குப் பதிவு Posted: 04 Jun 2016 11:59 AM PDT திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| Posted: 04 Jun 2016 11:59 AM PDT உத்தரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல், திருப்புலிவனம் கிராமங்களில் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மாணவி லாரி மோதி சாவு Posted: 04 Jun 2016 11:59 AM PDT போரூர் அருகே தாயுடன் மொபெட்டில் சென்றபோது தவறி விழுந்த சிறுமி லாரி மோதியதில் இறந்தார். |
| Posted: 04 Jun 2016 11:59 AM PDT திமுக தலைவர் கருணாநிதியின் 93-ஆவது பிறந்தநாளை கும்மிடிப்பூண்டியில் நகர திமுகவினர் சனிக்கிழமை கொண்டாடினர். |
| காணாமல் போன மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு Posted: 04 Jun 2016 11:59 AM PDT காணாமல் போனதாக தேடப்பட்ட பள்ளி மாணவரின் சடலம் கிணற்றில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 04 Jun 2016 11:58 AM PDT அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| தீ விபத்து: வீடு எரிந்து சேதம் Posted: 04 Jun 2016 11:58 AM PDT காஞ்சிபுரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. |
| மரம் சாய்ந்து மின்மாற்றி சேதம் Posted: 04 Jun 2016 11:58 AM PDT காஞ்சிபுரம் அருகே மரம் சாய்ந்து மின்மாற்றி சேதமடைந்ததால், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 பேர் சாவு Posted: 04 Jun 2016 11:58 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| வெறி நாய்கள் கடித்து 6 ஆடுகள் சாவு Posted: 04 Jun 2016 11:58 AM PDT காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே வெறி நாய்கள் கடித்து 6 ஆடுகள் இறந்தன. 14 ஆடுகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. |
| எங்கள் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு இடம் கிடையாது Posted: 04 Jun 2016 11:51 AM PDT பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என்று அந்நாட்டுத் தூதர் அப்துல் பாசித் தெரிவித்தார். |
| குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி Posted: 04 Jun 2016 11:49 AM PDT சமூகப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| களியங்காட்டில் இன்று யோகா தினம் கடைப்பிடிப்பு Posted: 04 Jun 2016 11:48 AM PDT களியங்காடு சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. |
| கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்கள் இயக்காமல் குமரி புறக்கணிப்பு: ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு Posted: 04 Jun 2016 11:48 AM PDT கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்காமல் குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. |
| ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 04 Jun 2016 11:48 AM PDT நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. |
| கேரளத்துக்கு பாறைப் பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவர் கைது Posted: 04 Jun 2016 11:48 AM PDT களியக்காவிளை அருகே வாகனச் சோதனையின்போது, கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகை Posted: 04 Jun 2016 11:48 AM PDT பள்ளி, ஆலயங்கள், குடியிருப்புப் பகுதிக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற 15 பெண்கள் உள்ளிட்ட 71 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 04 Jun 2016 11:48 AM PDT |
| நாகர்கோவில் நகர குடிநீர் விநியோகிக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு Posted: 04 Jun 2016 11:48 AM PDT நாகர்கோவில் நகரில் குடிநீர் விநியோகிக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை Posted: 04 Jun 2016 11:48 AM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடலோரக் கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| சாமிதோப்பு பதியில் அகிலத்திரட்டு பாராயண நூல் வெளியீடு Posted: 04 Jun 2016 11:48 AM PDT சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி வளாகத்தில் அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கண்ணுமாமூட்டில் பழங்குடியினர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2016 11:48 AM PDT கண்ணுமாமூடு சந்திப்பில் பழங்குடியினர் மக்கள் இயக்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| விடுமுறை நாள்களிலும் அரசு இ-சேவை மையங்கள் இயங்கும்: ஆட்சியர் தகவல் Posted: 04 Jun 2016 11:48 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை நாள்களிலும் அரசு இ-சேவை மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஓட்டுநர் உரிமத்தில் தமிழ் புறக்கணிப்பு: முதல்வருக்கு குளச்சல் எம்.எல்.ஏ. மனு Posted: 04 Jun 2016 11:48 AM PDT ஓட்டுநர் உரிமத்தில் தமிழை இடம்பெறச் செய்யவேண்டும் என தமிழக முதல்வருக்கு குளச்சல் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். |
| தேசிய கூடைப்பந்து: கேரள மின்வாரிய அணிகள் வெற்றி Posted: 04 Jun 2016 11:48 AM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய மின்னொளி கூடைப்பந்து போட்டியில், இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன. |
| ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஜூன் 9இல் ஜமாபந்தி துவக்கம் Posted: 04 Jun 2016 11:48 AM PDT ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி வருகிற ஜூன் 9ம் தேதி துவங்குகிறது. |
| உடன்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை இயக்கக் கோரிக்கை Posted: 04 Jun 2016 11:47 AM PDT உடன்குடி பகுதி கிராமங்களில் இயங்கி வந்த சிற்றுந்துகள் அண்மையில் நிறுத்தப்பட்டன. இந்த சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 04 Jun 2016 11:47 AM PDT தூத்துக்குடி ஸ்ரீ சித்தர்நகர் அருள்மிகு ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் கோயிலில் நான்காவது ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து மாணவர்கள், ஓட்டுநர் உள்பட 13 பேர் பலத்த காயம் Posted: 04 Jun 2016 11:47 AM PDT விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டியில் தனியார் பள்ளிப் பேருந்து சனிக்கிழமை சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்,மாணவிகள்,ஓட்டுநர் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர். |
| தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல் Posted: 04 Jun 2016 11:47 AM PDT தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, தூத்துக்குடியில் நடைபெற்ற சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. |
| விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் Posted: 04 Jun 2016 11:47 AM PDT விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருச்செந்தூரில் பள்ளி வாகனங்களில் ஆய்வு Posted: 04 Jun 2016 11:47 AM PDT திருச்செந்தூரில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆட்டோ மற்றும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்தார். இதில் விதிகளைப் பின்பற்றாத 2 வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |