Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பேரவைக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பாரா?மு.க.ஸ்டாலின் பதில்
- பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தயார்
- கடலில் காணாமல்போன 2 மீனவர்களில் ஒருவர் மீட்பு
- வரம்புக்குள்பட்டே செயல்படுகிறேன்:புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
- கும்பகோணம் பள்ளித் தீ விபத்து:கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு
- ரேஷன் அரிசி கடத்தல்:தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
- கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற 3 போலீஸாருக்கு கத்திக்குத்து
- 400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா' ஆரோக்கியத் திட்டம்:30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 25 வகையான பரிசோதனை
- முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிஆணை
- லாரி மோதியதில் எஸ்.ஐ. சாவு
- மீட்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்
- கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு
- ராஜீவ் கொலை வழக்குக் கைதி அரசு மருத்துவமனையில் அனுமதி
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அறைகள் தயார்: அரசு வாகனத்தை தவிர்க்க ஸ்டாலின் முடிவு?
- நண்டுப்பிடிப் புற்று!
- வாழ்க என்றால் வாழ்ந்து விடாது!
- சமுதாயம் அன்றும், இன்றும்
- ஐவரி கோஸ்ட் அதிபருடன் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தைகோகோ தொழிலில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு அழைப்பு
- மேக்கேதாட்டு அணைத் திட்டம்:கைவிடும் பேச்சுக்கே இடமில்லை :கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா
- இஸ்ரத் ஜஹான் தொடர்பான ஆவணங்கள் மாயமானது உண்மையே:விசாரணை அறிக்கையில் தகவல்
- இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத் திருத்தம்:அமெரிக்க செனட்டில் தோல்வி
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது:கேரள அரசு
- சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட நிர்பந்திக்கக் கூடாது:அரசாணையை விளம்பரப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை
- சீனப் படையினரின் ஊடுருவல் எதிரொலி:எல்லையில் ராணுவத் தளபதி ஆய்வு
- தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ராஜிநாமா
- பருப்பு விலையைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது
- மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்:நிலைக் குழுவுக்கு அமித் ஷா கடிதம்
- காஷ்மீர் பல்கலை.க்கு ராணுவ நிலத்தை ஒதுக்க மோடி ஒப்புதல்
- ஆக்கிரமிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை:உ.பி. முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
- சட்டத் துறைச் செயலராக சுரேஷ் சந்திரா நியமனம்
- பழைமையான கோயில் சேதம்: ஜம்முவில் வன்முறை
- மேகாலயம்: மலைப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி
- பிகார் +2 தேர்வு முறைகேடு விவகாரம்:பள்ளிக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவருக்கு பிடிஆணை
- இந்திய கடற்படைக் கப்பல்களை பின்தொடர்ந்த சீன உளவுக் கப்பல்
- சிறு கடன் வங்கிகள் விவகாரம்:ஆர்பிஐக்கு எதிராக சிபிஐ விசாரணை:பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
- ஹிந்து, சீக்கிய மதம் குறித்து தவறான தகவல்:மன்னிப்புக் கேட்டது மலேசியப் பல்கலைக்கழகம்
- கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே "ஒயிட் வாஷ்'
- யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா
- கோபா அமெரிக்கா கால்பந்து காலிறுதியில் நுழைந்தது சிலி
- சர்வதேச தடகளப் போட்டி:ஸ்பான்சர் இன்றி தவிக்கும் அரசுப் பள்ளி மாணவி
- தோல்வி எதிரொலி:பிரேசில் பயிற்சியாளர் துங்கா நீக்கம்
- ஐஎஸ்எல்: மும்பை அணியில் டிஃபெட்ரிகோ
- 2 ஆண்டு தடையை எதிர்த்து ஷரபோவா மேல்முறையீடு
- சாம்பியன்ஸ் டிராபி:இந்தியா-ஆஸி. இன்று மோதல்
- சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் திறக்கலாம்:மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரைன
- இரு மடங்கு வருவாய்க்கு:நீடித்த - நிலையான கரும்பு சாகுபடி!
- ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரகம்
- அமெரிக்கக் கேளிக்கை விடுதியில் தாக்குதல்:ஒமர் மதீன் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு?
- அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு:இறுதி மாகாண வாக்கெடுப்பிலும் ஹிலாரி வெற்றி
- காபி பருகுவதால் புற்று நோய் வராது:உலக சுகாதார அமைப்பு
- பிரிட்டன் அலுவலகத்தில் பயிற்சி மேலாளரான ரோபோ!
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலை மாயம்:பக்தர்கள் அதிர்ச்சி
- திருவள்ளுவர் சிலையின் கங்கை பயணம்: ஆளுநருக்கு தருண் விஜய் அழைப்பு
- ரூ.4 கோடி கார் டயர்கள்:துபையில் கின்னஸ் சாதனை
- ரூ. 42 ஆயிரத்தை எட்டியது வெள்ளி:தங்கம் விலை குறைந்தது
- இயக்குநர் திருலோகசந்தர் காலமானார்
- முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
- கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
- பகுதி - 273
- 27. நன்று நாள் தொறும் - பாடல் 10
- நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 64
- 16.06.2005 - காந்தி பிறந்தநாளில் அமலாகிறது: சினிமா, டிவியில் சிகரெட்டுக்குத் தடை
- பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமணன்
- கும்பகோணத்தில் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஆலங்குடி அருகே வாழைமரங்களை சேதப்படுத்தியவர் கைது
- நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி
- நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
- என் மகள் என்னை நினைவில் வைத்து கொள்வாள்: நீண்ட ஓய்வு குறித்து டோனி தமாஷ்
- முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: காங். எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு பிடி ஆணை
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையை மாற்றுவதற்கு எதிர்ப்பு: ஜூன் 22-ல் போராட்டம்
- பேரவையில் இருக்கை வசதி அளித்தால் கருணாநிதி பங்கேற்பது குறித்து பரிசீலனை: ஸ்டாலின்
- எங்கள் பணியை தொடர வழிவிடுங்கள்: மோடிக்கு கேஜரிவால் வேண்டுகோள்
- திருவாரூரில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம்
- கும்பகோணம் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க உத்தரவு
- ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் ‘ஒயிட் வாஷ்’ ஆனது ஜிம்பாப்வே!
- சென்னையில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 3 பேர் கைது
- தேசிய ஊரக சுகாதாரத்திட்ட நிதியில் ரூ.1.17 கோடி முறைகேடு: குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை
- `அன்பே வா' இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்!
- பொன்முடி 36%, விஜயகாந்த் 53%, எ.வ.வேலு 63%, துரைமுருகன் 71%
- ரஜினியை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசிய ராம்கோபால் வர்மா! இயக்குநர் வெங்கட் பிரபு பதிலடி!
- பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்
- இஷ்ரத் ஜஹான் விவகாரம்: தகவல் கேட்டவரை இந்தியர் என நிரூபிக்கச் சொன்ன உள்துறை அமைச்சகம்
- சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு!
- தொடரும் சொதப்பல்: 3-வது ஒருநாள் போட்டியில் 123 ரன்களுக்குச் சுருண்டது ஜிம்பாப்வே!
- மதுரைவாசிகளே இந்த தகவல் உங்களுக்குத் தெரியுமா?
- ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு
- `மை டியர்' என பிகார் கல்வி அமைச்சர் குறிப்பிட்டதற்கு ஸ்மிருதி இரானி எதிர்ப்பு!
- ஃபிரிட்ஜ் ரிப்பேர்: மாற்றிக் கொடுக்க உதவுமாறு கோரிய இளைஞரும் சுஷ்மாவின் பதிலும்
- சென்னை ஐஐடி.,யில் ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
- 7 பேரை ஏமாற்றி திருமணம், 8வது நிச்சயதார்த்ததோடு கைதான இளம் பெண்
- AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
- 3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே நிதானமான ஆட்டம்!
- என்னவொரு முரண்பாடு: நிர்பயா வழக்கை விசாரித்த காவல் அதிகாரி மீது பாலியல் வழக்கு
- சென்னை: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி
- கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறப்பு: 33 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை
- காஜியாபாத் காவல் துறையில் இணையதளப் பிரிவு தொடக்கம்
- புதிய விதிகளின்படி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தலைமை நீதிபதி உத்தரவாதம்
- பட்டதாரிகளுக்கு மதுரை மண்டல புள்ளியல் துறை அலுவலகத்தில் பணி
- தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை: ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு
- சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
| பேரவைக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பாரா?மு.க.ஸ்டாலின் பதில் Posted: 15 Jun 2016 01:31 PM PDT சட்டப்பேரவையில் உரிய இருக்கை வசதி செய்து கொடுத்தால், கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார். |
| பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தயார் Posted: 15 Jun 2016 01:31 PM PDT இந்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் சனிக்கிழமை (ஜூன் 18) வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
| கடலில் காணாமல்போன 2 மீனவர்களில் ஒருவர் மீட்பு Posted: 15 Jun 2016 01:30 PM PDT நாகப்பட்டினம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 2 மீனவர்களில் ஒருவர் புதன்கிழமை மீட்கப்பட்டார். |
| வரம்புக்குள்பட்டே செயல்படுகிறேன்:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் Posted: 15 Jun 2016 01:30 PM PDT அதிகார வரம்புக்குள்பட்டே செயல்படுகிறேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதன்கிழமை தெரிவித்தார். |
| கும்பகோணம் பள்ளித் தீ விபத்து:கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு Posted: 15 Jun 2016 01:29 PM PDT கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| ரேஷன் அரிசி கடத்தல்:தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் Posted: 15 Jun 2016 01:29 PM PDT கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய தனியார் சொகுசுப் பேருந்தின் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. |
| கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற 3 போலீஸாருக்கு கத்திக்குத்து Posted: 15 Jun 2016 01:29 PM PDT கர்ப்பிணி ஆசிரியையைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற குற்றவாளிகளை விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற காவல் துறை துணை ஆய்வாளர் உள்பட 3 போலீஸாரை கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தனர். |
| Posted: 15 Jun 2016 01:27 PM PDT தமிழகத்தில் உள்ள 400 ஆரம்ப சுகாதார மையங்களில் "அம்மா' ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25 வகையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. |
| முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிஆணை Posted: 15 Jun 2016 01:26 PM PDT தமிழக முதல்வர்ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடி ஆணை பிறப்பித்து, நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 15 Jun 2016 01:25 PM PDT அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி, காவல் சார்பு- ஆய்வாளர் உயிரிழந்தார். |
| மீட்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் Posted: 15 Jun 2016 01:24 PM PDT சென்னை தொழிலதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், எந்தக் கோயிலில் திருடப்பட்டவை என்பதைக் கண்டறிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். |
| கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு Posted: 15 Jun 2016 01:24 PM PDT கோடை விடுமுறைக்குப் பின்னர், கலை, அறிவியல் கல்லூரிகள் வியாழக்கிழமை (ஜூன் 16) திறக்கப்படுகின்றன. |
| ராஜீவ் கொலை வழக்குக் கைதி அரசு மருத்துவமனையில் அனுமதி Posted: 15 Jun 2016 01:24 PM PDT ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார். |
| சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அறைகள் தயார்: அரசு வாகனத்தை தவிர்க்க ஸ்டாலின் முடிவு? Posted: 15 Jun 2016 01:23 PM PDT சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அரசு வாகனத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. |
| Posted: 15 Jun 2016 01:19 PM PDT உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி, அடுத்த இருபது ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 70% அதிகரிக்கக்கூடும். இதிலிருந்து உலகம் எத்தனை பெரிய, எந்த அளவு கடுமையான பாதிப்பை எதிர்நோக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். |
| வாழ்க என்றால் வாழ்ந்து விடாது! Posted: 15 Jun 2016 01:18 PM PDT உலகம் மிகப் பெரியது. ஏராளமான உயிரினங்களுக்கு இருப்பிடமாய் இருப்பது. எல்லா உயிர்களும் தத்தம் எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பரிமாறிக் கொள்கின்றன. அதனால்தான் அவை கூட்டு வாழ்க்கை வாழ்கின்றன. |
| Posted: 15 Jun 2016 01:17 PM PDT மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். |
| Posted: 15 Jun 2016 01:14 PM PDT ஐவரி கோஸ்ட் நாட்டின் அதிபர் அலாசான் அவுட்டாராவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். |
| மேக்கேதாட்டு அணைத் திட்டம்:கைவிடும் பேச்சுக்கே இடமில்லை :கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா Posted: 15 Jun 2016 01:13 PM PDT மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றார் கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா. |
| இஸ்ரத் ஜஹான் தொடர்பான ஆவணங்கள் மாயமானது உண்மையே:விசாரணை அறிக்கையில் தகவல் Posted: 15 Jun 2016 01:12 PM PDT இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த ஆவணங்கள் மாயமானது உண்மைதான் என்று விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
| இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத் திருத்தம்:அமெரிக்க செனட்டில் தோல்வி Posted: 15 Jun 2016 01:12 PM PDT இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. |
| முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது:கேரள அரசு Posted: 15 Jun 2016 01:10 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் கேரள அரசு எதிர்க்கும் என்று, அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் மேத்யூ டி.தாமஸ் கூறினார். |
| Posted: 15 Jun 2016 01:09 PM PDT கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி நிர்பந்தம் செய்யக்கூடாது என்ற அரசாணை குறித்து, தமிழக அரசு பரவலாக விளம்பரப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| சீனப் படையினரின் ஊடுருவல் எதிரொலி:எல்லையில் ராணுவத் தளபதி ஆய்வு Posted: 15 Jun 2016 01:09 PM PDT அருணாசலப் பிரதேச மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீனப் படையினர் ஊடுருவியதாகக் கூறப்படும் நிலையில், இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலத் தளபதி பிரவீண் பக்ஷி, எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ராஜிநாமா Posted: 15 Jun 2016 01:09 PM PDT தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். |
| பருப்பு விலையைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது Posted: 15 Jun 2016 01:07 PM PDT பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
| மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்:நிலைக் குழுவுக்கு அமித் ஷா கடிதம் Posted: 15 Jun 2016 01:07 PM PDT ஒரே சமயத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார். |
| காஷ்மீர் பல்கலை.க்கு ராணுவ நிலத்தை ஒதுக்க மோடி ஒப்புதல் Posted: 15 Jun 2016 01:06 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் கட்டட விரிவாக்கப் பணிக்காக ராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். |
| ஆக்கிரமிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை:உ.பி. முதல்வருக்கு ஆளுநர் கடிதம் Posted: 15 Jun 2016 01:06 PM PDT உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநர் ராம்நாயக் கடிதம் எழுதியுள்ளார். |
| சட்டத் துறைச் செயலராக சுரேஷ் சந்திரா நியமனம் Posted: 15 Jun 2016 01:05 PM PDT மத்திய சட்ட விவகாரங்கள் துறைச் செயலாளராக முதுநிலை சட்ட ஆலோசனை அதிகாரி சுரேஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். |
| பழைமையான கோயில் சேதம்: ஜம்முவில் வன்முறை Posted: 15 Jun 2016 12:13 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பழைமைவாய்ந்த கோயில் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டங்கள், தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது. |
| மேகாலயம்: மலைப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி Posted: 15 Jun 2016 12:13 PM PDT மேகாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மலைப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். |
| பிகார் +2 தேர்வு முறைகேடு விவகாரம்:பள்ளிக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவருக்கு பிடிஆணை Posted: 15 Jun 2016 12:12 PM PDT பிகார் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த மாநில பள்ளிக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரான லால்கேஷ்வர் பிரசாத் சிங்குக்கு எதிராகவும், அவரது மனைவியும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான உஷா சின்ஹாவுக்கு எதிராகவும் பாட்னா உயர் நீதிமன்றம் புதன்கிழமை பிடிஆணை பிறப்பித்தது. |
| இந்திய கடற்படைக் கப்பல்களை பின்தொடர்ந்த சீன உளவுக் கப்பல் Posted: 15 Jun 2016 12:12 PM PDT அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் இந்திய கடற்படைக் கப்பல்களை சீன உளவுக் கப்பல் பின்தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| சிறு கடன் வங்கிகள் விவகாரம்:ஆர்பிஐக்கு எதிராக சிபிஐ விசாரணை:பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் Posted: 15 Jun 2016 12:12 PM PDT சிறு கடன் வங்கி தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உரிமம் வழங்கியதில் உள்ள விதிமீறல்கள் |
| ஹிந்து, சீக்கிய மதம் குறித்து தவறான தகவல்:மன்னிப்புக் கேட்டது மலேசியப் பல்கலைக்கழகம் Posted: 15 Jun 2016 12:11 PM PDT ஹிந்து, சீக்கிய மதம் குறித்து தவறான தகவல்களை பாடத்தில் வெளியிட்டதற்காக மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மன்னிப்புக் கோரியுள்ளது. |
| கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே "ஒயிட் வாஷ்' Posted: 15 Jun 2016 12:11 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. |
| யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா Posted: 15 Jun 2016 12:10 PM PDT யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது. |
| கோபா அமெரிக்கா கால்பந்து காலிறுதியில் நுழைந்தது சிலி Posted: 15 Jun 2016 12:10 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் பனாமாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. |
| சர்வதேச தடகளப் போட்டி:ஸ்பான்சர் இன்றி தவிக்கும் அரசுப் பள்ளி மாணவி Posted: 15 Jun 2016 12:09 PM PDT துருக்கியில் நடைபெறவுள்ள சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கு ஸ்பான்சர் இன்றி தவித்து வருகிறார் அரசுப் பள்ளி மாணவி ஹேமமாலினி. |
| தோல்வி எதிரொலி:பிரேசில் பயிற்சியாளர் துங்கா நீக்கம் Posted: 15 Jun 2016 12:08 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் குரூப் சுற்றில் பிரேசில் அணி படுதோல்வி கண்டதன் எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா |
| ஐஎஸ்எல்: மும்பை அணியில் டிஃபெட்ரிகோ Posted: 15 Jun 2016 12:07 PM PDT இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 3-ஆவது சீசனில் ஆர்ஜென்டீனா வீரர் மத்தியாஸ் டிஃபெட்ரிகோ மும்பை அணிக்காக களமிறங்குகிறார். |
| 2 ஆண்டு தடையை எதிர்த்து ஷரபோவா மேல்முறையீடு Posted: 15 Jun 2016 12:07 PM PDT ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மேல்முறையீடு செய்துள்ளார். |
| சாம்பியன்ஸ் டிராபி:இந்தியா-ஆஸி. இன்று மோதல் Posted: 15 Jun 2016 12:06 PM PDT சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான லீக் ஆட்டம் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. |
| Posted: 15 Jun 2016 12:06 PM PDT தஞ்சாவூர் : சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் திறக்கலாம் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரை செய்துள்ளது. |
| இரு மடங்கு வருவாய்க்கு:நீடித்த - நிலையான கரும்பு சாகுபடி! Posted: 15 Jun 2016 12:05 PM PDT விழுப்புரம்: கரும்பு சாகுபடியில் குறைந்த நீர் பாசனத்தில் இரு மடங்கு வருவாய் பெற நீடித்த- நிலையான சாகுபடி முறையை (எஸ்.எஸ்.ஐ) விவசாயிகள் பின்பற்றலாம். |
| ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரகம் Posted: 15 Jun 2016 12:04 PM PDT திருவள்ளூர்: தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 ரக நெல்லைப் பயிரிட்டால் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும் என்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர். |
| அமெரிக்கக் கேளிக்கை விடுதியில் தாக்குதல்:ஒமர் மதீன் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு? Posted: 15 Jun 2016 12:03 PM PDT அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியில் 49 பேரை சுட்டுக் கொன்ற ஒமர் மதீனின் மனைவி நூர் ஜஹி சல்மானுக்கு அந்தத் தாக்குதல் குறித்து ஏற்கெனவே தெரியும் என்று கூறப்படுகிறது. |
| அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு:இறுதி மாகாண வாக்கெடுப்பிலும் ஹிலாரி வெற்றி Posted: 15 Jun 2016 12:02 PM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாஷிங்டன் மாகாணத்தில் இறுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். |
| காபி பருகுவதால் புற்று நோய் வராது:உலக சுகாதார அமைப்பு Posted: 15 Jun 2016 12:02 PM PDT புற்று நோயை ஏற்படுத்தும் பொருள்கள் பட்டியலில் இருந்து காபியை உலக சுகாதார மையம் நீக்கியிருக்கிறது. |
| பிரிட்டன் அலுவலகத்தில் பயிற்சி மேலாளரான ரோபோ! Posted: 15 Jun 2016 12:01 PM PDT பிரிட்டனின் பர்மிங்ஹம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய அதிநவீன இயந்திரப் பெண், அந்த நாட்டின் தனியார் நிறுவன அலுவலகத்தில் பயிற்சி அலுலக மேலாளராகப் பணியில் சேர்ந்துள்ளது. |
| காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலை மாயம்:பக்தர்கள் அதிர்ச்சி Posted: 15 Jun 2016 11:50 AM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையுடன் இணைந்த பாலமுருகன் (ஸ்கந்தர்) சிலை 1993-லிருந்து மாயமாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இதனால், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
| திருவள்ளுவர் சிலையின் கங்கை பயணம்: ஆளுநருக்கு தருண் விஜய் அழைப்பு Posted: 15 Jun 2016 11:49 AM PDT திருவள்ளுவரின் சிலையை கன்னியாகுமரியிலிருந்து ஹரித்துவாருக்கு எடுத்துச் செல்லும் "திருவள்ளுவரின் கங்கை' பயணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு, தருண் விஜய் எம்.பி. அழைப்பு விடுத்தார். |
| ரூ.4 கோடி கார் டயர்கள்:துபையில் கின்னஸ் சாதனை Posted: 15 Jun 2016 11:48 AM PDT துபையில் 24 காரட் தங்கம், உயர்தரமான வைரங்கள் ஆகியவை பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள 4 கார் டயர்கள், மொத்தம் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. |
| ரூ. 42 ஆயிரத்தை எட்டியது வெள்ளி:தங்கம் விலை குறைந்தது Posted: 15 Jun 2016 11:48 AM PDT சென்னையில் புதன்கிழமை ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 42 ஆயிரத்தை எட்டியது. ஆனால், தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. |
| இயக்குநர் திருலோகசந்தர் காலமானார் Posted: 15 Jun 2016 11:47 AM PDT பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் (86), சென்னையில் புதன்கிழமை (ஜூன் 15) காலமானார். |
| Posted: 15 Jun 2016 11:47 AM PDT பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி Posted: 15 Jun 2016 11:46 AM PDT தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 17) கடைசி நாளாகும். |
| Posted: 15 Jun 2016 11:30 AM PDT உரைத்த மொழி தவறாதே: நான் சொல்லும் வார்த்தையைத் தவறாது பின்பற்று; |
| 27. நன்று நாள் தொறும் - பாடல் 10 Posted: 15 Jun 2016 11:30 AM PDT திருவேட்களத்து இறைவனைத் தொழுது நமது வினைகளை தீர்த்துக்கொள்ளலாம். |
| நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 64 Posted: 15 Jun 2016 11:30 AM PDT உலகளந்தவன் எம்பிரான், அவனுடைய திருவடிகளை, இந்தப் பூமியில் வாழும் தேவர்களாகிய அந்தணர்கள் வேத மந்திரங்களின்படி முறை தவறாமல் வணங்குவார்கள், |
| 16.06.2005 - காந்தி பிறந்தநாளில் அமலாகிறது: சினிமா, டிவியில் சிகரெட்டுக்குத் தடை Posted: 15 Jun 2016 11:30 AM PDT திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இனி புகை பிடிப்பது உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது. |
| பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமணன் Posted: 15 Jun 2016 09:34 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் தெரிவு செய்கின்றனர். |
| கும்பகோணத்தில் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Jun 2016 09:19 AM PDT கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| ஆலங்குடி அருகே வாழைமரங்களை சேதப்படுத்தியவர் கைது Posted: 15 Jun 2016 08:41 AM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியின் தோட்டத்தில் வாழைமரங்களை வெட்டி சேதப்படித்தியவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி Posted: 15 Jun 2016 08:35 AM PDT அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. |
| நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு Posted: 15 Jun 2016 08:24 AM PDT பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. |
| என் மகள் என்னை நினைவில் வைத்து கொள்வாள்: நீண்ட ஓய்வு குறித்து டோனி தமாஷ் Posted: 15 Jun 2016 08:07 AM PDT ஓய்வு நேரத்தில் மகளுடன் நேரம் செலவிடுவதால், அவள் என்னை நினைவில் வைத்து கொள்வாள் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறினார். |
| முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: காங். எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு பிடி ஆணை Posted: 15 Jun 2016 07:45 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையை மாற்றுவதற்கு எதிர்ப்பு: ஜூன் 22-ல் போராட்டம் Posted: 15 Jun 2016 07:35 AM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை மாற்றிவிட்டு புதிய சிலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ல் பக்தர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. |
| பேரவையில் இருக்கை வசதி அளித்தால் கருணாநிதி பங்கேற்பது குறித்து பரிசீலனை: ஸ்டாலின் Posted: 15 Jun 2016 07:28 AM PDT திமுக தலைவர் கருணாநிதிக்கு தேவையான இருக்கை வசதி அளித்தால் அவர் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறினார். |
| எங்கள் பணியை தொடர வழிவிடுங்கள்: மோடிக்கு கேஜரிவால் வேண்டுகோள் Posted: 15 Jun 2016 07:13 AM PDT நாடாளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் குறித்த விவகாரத்தில், தங்களது பணியை தொடர வழிவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் கேஜரிவால் கேட்டுக் கொண்டார். |
| திருவாரூரில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் Posted: 15 Jun 2016 06:22 AM PDT திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டத்துக்கு முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். |
| கும்பகோணம் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க உத்தரவு Posted: 15 Jun 2016 05:54 AM PDT கடந்த 2004 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்தது தொடர்பாக கூடுதல் இழப்பீடு கோரிய வழக்கில், பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் ‘ஒயிட் வாஷ்’ ஆனது ஜிம்பாப்வே! Posted: 15 Jun 2016 05:23 AM PDT ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய அணி. ஏற்கெனவே முதல் இரு ஆட்டங்களிலும் வென்று தொடரைக் கைப்பற்றியிருந்த இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கியது. |
| சென்னையில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 3 பேர் கைது Posted: 15 Jun 2016 05:21 AM PDT சென்னை கொடுங்கையூரில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தலைமுடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தேசிய ஊரக சுகாதாரத்திட்ட நிதியில் ரூ.1.17 கோடி முறைகேடு: குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை Posted: 15 Jun 2016 05:01 AM PDT புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் |
| `அன்பே வா' இயக்குநர் திருலோகச்சந்தர் காலமானார்! Posted: 15 Jun 2016 03:46 AM PDT பழ்மபெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். |
| பொன்முடி 36%, விஜயகாந்த் 53%, எ.வ.வேலு 63%, துரைமுருகன் 71% Posted: 15 Jun 2016 03:32 AM PDT தமிழகத்தில் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்கள் நீங்கள் அறிந்து கொள்வதற்காக... |
| ரஜினியை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசிய ராம்கோபால் வர்மா! இயக்குநர் வெங்கட் பிரபு பதிலடி! Posted: 15 Jun 2016 03:17 AM PDT அமிதாப் நடித்து வெளியாகியுள்ள Te3n படம் பற்றி இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதில் அமிதாப்பை ரஜினியுடன் ஒப்பிட்டு தெரிவித்த கருத்துகளுக்கு ரசிகர்கள் எதிப்பு தெரிவித்தார்கள். |
| பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும் Posted: 15 Jun 2016 03:12 AM PDT சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. |
| இஷ்ரத் ஜஹான் விவகாரம்: தகவல் கேட்டவரை இந்தியர் என நிரூபிக்கச் சொன்ன உள்துறை அமைச்சகம் Posted: 15 Jun 2016 03:11 AM PDT இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கு குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு விண்ணப்பித்தவரை, தான் ஒரு இந்தியர் என நிரூபிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. |
| சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு! Posted: 15 Jun 2016 02:58 AM PDT திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்விமையம் வழியாக கடந்த டிசம்பர் 2015-ல் மாணவா்கள் தேர்வுகளை எழுதினர். |
| தொடரும் சொதப்பல்: 3-வது ஒருநாள் போட்டியில் 123 ரன்களுக்குச் சுருண்டது ஜிம்பாப்வே! Posted: 15 Jun 2016 02:51 AM PDT இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. |
| மதுரைவாசிகளே இந்த தகவல் உங்களுக்குத் தெரியுமா? Posted: 15 Jun 2016 02:47 AM PDT நிர்வாக காரணங்களால் இனி மதுரை மாவட்டம் நார்த்தாமலை, மற்றும் திண்டுக்கல் அருகேயுள்ள கருப்பட்டி ரயில் நிலையங்களில் சில பயணிகள் ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு Posted: 15 Jun 2016 02:44 AM PDT தொழில்நுட்ப காரணங்களால் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட்கிராஜுவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரிசர்ச் (JIPMER) நடத்தும் எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| `மை டியர்' என பிகார் கல்வி அமைச்சர் குறிப்பிட்டதற்கு ஸ்மிருதி இரானி எதிர்ப்பு! Posted: 15 Jun 2016 02:44 AM PDT மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், பிகார் மாநில கல்வித் துறை அமைச்சர் அசோக் செளதரிக்கும் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. |
| ஃபிரிட்ஜ் ரிப்பேர்: மாற்றிக் கொடுக்க உதவுமாறு கோரிய இளைஞரும் சுஷ்மாவின் பதிலும் Posted: 15 Jun 2016 02:41 AM PDT புதிதாக வாங்கிய குளிர்பதனப் பெட்டியை மாற்றித் தர உதவுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சுட்டுரையில் (டுவிட்டர்) சமூக வலைதளப் பயன்பாட்டாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். |
| சென்னை ஐஐடி.,யில் ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் Posted: 15 Jun 2016 02:18 AM PDT சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். |
| 7 பேரை ஏமாற்றி திருமணம், 8வது நிச்சயதார்த்ததோடு கைதான இளம் பெண் Posted: 15 Jun 2016 02:17 AM PDT தாராபுரத்தில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததாக இளம் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 15 Jun 2016 02:12 AM PDT அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. |
| 3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே நிதானமான ஆட்டம்! Posted: 15 Jun 2016 02:06 AM PDT இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. |
| என்னவொரு முரண்பாடு: நிர்பயா வழக்கை விசாரித்த காவல் அதிகாரி மீது பாலியல் வழக்கு Posted: 15 Jun 2016 02:04 AM PDT 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதான பாராமெடிக்கல் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை யார் விசாரிப்பது என்று இரண்டு காவல்நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். |
| சென்னை: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி Posted: 15 Jun 2016 01:57 AM PDT சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் "National Institute for Research in Tuberculosis" காலியாக ஸ்டாப் நர்ஸ் மற்றும் எல்டிஎஸ் |
| கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறப்பு: 33 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை Posted: 15 Jun 2016 01:53 AM PDT விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் நாளை வியாழக்கிழமை (ஜூன் 16) திறக்கப்படுகின்றன. |
| காஜியாபாத் காவல் துறையில் இணையதளப் பிரிவு தொடக்கம் Posted: 15 Jun 2016 01:42 AM PDT இணையதளக் குற்றங்களைக் கையாளுவதற்காக தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் மாவட்டத்தில் சைபர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. |
| புதிய விதிகளின்படி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தலைமை நீதிபதி உத்தரவாதம் Posted: 15 Jun 2016 01:37 AM PDT சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். |
| பட்டதாரிகளுக்கு மதுரை மண்டல புள்ளியல் துறை அலுவலகத்தில் பணி Posted: 15 Jun 2016 01:31 AM PDT மதுரையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான புள்ளியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் |
| தெலங்கானா மக்களுக்கு எச்சரிக்கை: ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு Posted: 15 Jun 2016 01:01 AM PDT தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. |
| சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 15 Jun 2016 12:50 AM PDT பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை குறித்து பள்ளிகளுக்கு மீண்டும் நினைவூட்டுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |