Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மைக்ரோ கதை.

Posted: 15 Jun 2016 10:03 AM PDT

Micro story. Tamil / English;.

சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.

காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.

Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

Posted: 15 Jun 2016 10:00 AM PDT

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம் நீ யாரோ நான் யாரோ தினம் தினம் பார்த்தாலும் சந்தித்தது இல்லை . நடைப் பயிற்சி வட்ட தளத்திலே ஒரு சுற்றில் நீ முன்னேற மறு சுற்றில் நான் முன்னேற முன்னேறும் போது தோன்றிடும் வெற்றிப் புன்னகை , வெற்றுப் புன்னகை அல்ல நட்புப் புன்னகை . ஆரோக்யமானப் போட்டி ஆரோக்கியத்திற்கான போட்டி . உந்தன் வெண்ணிற உடலில் , வியர்வை உடலில் ஒட்டி உள்ளாடைகள் உள்வாங்கிய பின் மேலாடைகளில் உறவாடும் வியர்வை உந்தன் உன்னத அங்க அமைப்பை உலகுக்கே பறைசாற்றுமே . ...

ஊனம் ஒரு தடையல்ல !

Posted: 15 Jun 2016 09:58 AM PDT

சரக்கடித்துவிட்டு , சரக்குந்து ஓட்டி உன்னை முடமாக்கிய முட்டாளை நொந்து கொள்ளாதே ! அரசு செய்த தவறுக்கு , அவன் என்ன செய்வான் பாவம் ! கால்களை இழந்து வாடும் சகோதரனே ! கால்கள் போனால் என்ன ? கைகள் இல்லையா உன்னைக் காப்பாற்ற ? கைகளைக் கொண்டு ஆயிரம் கலைகளைக் கற்கலாம் ! கவலைப்படாதே ! விபத்திலே கண்கள் போயிருந்தால் என்ன செய்வாய் ? அதுவரைக்கும் நீ அதிர்ஷ்டசாலிதான் ! கண்ணிழந்த ஹெலன் கெல்லரை நினைத்துப் பார் ! பார்வை இழந்தபின் பட்டம் பெறவில்லையா ? பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்த மாற்றுத் ...

வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ்

Posted: 15 Jun 2016 09:52 AM PDT

வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ் புதுடில்லி : 2ஜி சேவை உள்ளிட்ட  இலவச தொலைபேசி அழைப்பு சேவை வழங்கும் புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது சிங்கப்பூரைச் சேர்ந்த இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் 'நானு' உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற ...

பிறந்த நாள் ----முனைவர் soundarapandian

Posted: 15 Jun 2016 09:45 AM PDT

பிறந்த நாள் ----முனைவர் soundarapandian இன்று பிறந்த நாள் காணும் ,மதிப்புக்குரிய திரு   செளந்திரபாண்டியன்  அவர்களை வாழ்த்துவோம் வளமும் நலமும் என்றும் உங்களுடன் இருக்க எங்களின் அன்பு பிரார்த்தனை , அய்யா . தாவரங்களின் அன்பர் நீர் .தாவரங்களைப் போல் தழைத்து நல்வாழ்வு பல பெற ,எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக . ரமணியன்

காஷ்மீரில் 75 ஆண்டுகளுக்கு பின் மகா கும்ப திருவிழா

Posted: 15 Jun 2016 07:48 AM PDT

- ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கண்டேல்பர் மாவட்டத்தில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மகா கும்ப திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிந்து மற்றும் விதாஸ்டா நதியில் புனித நீராடினர். கடந்த 1941ம் ஆண்டு கடைசியாக அங்கு இத்திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் அங்கு மீண்டும் மகா கும்ப திருவிழா கொண்டாடப்படுகிறது. – ————————————- தினமலர்

வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!

Posted: 15 Jun 2016 07:45 AM PDT

- அந்தப் பெண் பள்ளிப் படிப்பில் படுசுட்டி. ததும்பி வழியும் அழகு. தகதகக்கும் அறிவு. தகுதியின் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து ஹவுஸ் சர்ஜனாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். – மனம் முழுக்க வருங்காலம் பற்றிய வண்ணக் கனவுகள். வாழ்க்கைத் துணை எப்படி அமைவாரோ என்ற வெட்கம் கலந்த எதிர்பார்ப்பு, அப்போதுதான் விதி சூழ்ந்த அந்த நாள் வந்தது. – சின்னஞ்சிறிய குழந்தை ஒன்றை மேசையில் இருத்தி, தனது காதில் ஸ்டெதாஸ்கோப்பைப் பொருத்திப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். ...

உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?

Posted: 15 Jun 2016 07:28 AM PDT

சத்குரு பதில் -------------- - சத்குரு: வாழ்க்கை, படைப்பு இவற்றின் பிரமாண்டங்களுக்கு முன்னால், நான் ஒரு சிறு துரும்பு! வாழ்க்கை என்பது மிக அசாதாரணமான ஓர் அனுபவம். அற்புதங்களின் ஆழத்தை உணரும் வாய்ப்பு எனக்கு நேர்ந்தது. – அந்த வரமும் சலுகையும் எனக்குப் புதிய அனுபவங்களுக்கு வழி திறந்தது. அதனால் மட்டுமே நான் பெரியவனாகி விடவில்லை. ஞானம் என்பது ஒரு வழி திறத்தல் மட்டுமே. அது நீங்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளும் பரிசுக்கோப்பை அல்ல. என்னைப் பற்றி நான் பெரிதாக நினைக்காதபோது, எதை என் தத்துவம் ...

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Posted: 15 Jun 2016 05:46 AM PDT

ஆச்சிமா என அழைக்கப்படும் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய பல கதை,கட்டுரை,நாவல்களில் நான் சமீபத்தில் படித்த அவரின் முதல் நாவல் காதலா கடமையா,மற்றும் மகிழம்பூ என்னைக் கவர்ந்தவை. இவர் யார்? நாகூரில் உள்ள கிறித்துவ தெருப்பள்ளியில் மூன்றாவது படித்தவர் ஆச்சிமா சித்தி. அதற்கு மேல் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னிரண்டு வயதில் திருமணம், ஐந்து ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுடன் விதவைக் கோலம். அவ்வளவுதான் அவரின் வாழ்க்கை. பதினாறு வயதில் எழுதத் தொடங்கினார். முதல் நாவலான காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா ...

பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி?

Posted: 15 Jun 2016 05:00 AM PDT

கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் மத்தியில் சுடச்சுட பேசப்பட்டு வந்த விஷயம் 'பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா' (தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி) மற்றும் 'பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா' (ஆயுள் காப்பீட்டு பாலிசி) என்கிற மத்திய அரசின் இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள்தான். கடந்த ஓராண்டு காலத்தில் இந்தத் திட்டங்கள் எப்படி செயல்பட்டன, இதுவரை இந்த பாலிசியின் மூலம் எத்தனை பேருக்கு க்ளெய்ம் தரப்பட்டிருக் கிறது, எத்தனை பேர் இந்த  திட்டத்தில் இணைந்திருக் கிறார்கள், புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்க ...

மென்பொருள் பொறியாளர் வாய்ப்பு

Posted: 15 Jun 2016 03:52 AM PDT

நண்பர்களே
                    நன் பணியாற்றும் பிரிவில் காலியிடங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் இருந்தால் அணுகவும்

php மற்றும் android குறைந்தது 2 வருட அனுபவம் வேண்டும், கல்வி தகுதி - இளங்கலை பொறியியல்(BE) மற்றும் முதுநிலை கம்ப்யூட்டர் (MCA)

நன்றி

என்றும் அன்புடன்
சின்னவன்

காட்ரேஜ் முதல் அஜினோமோட்டோ வரை .

Posted: 15 Jun 2016 03:22 AM PDT

காட்ரேஜ் முதல் அஜினோமோட்டோ வரை . அந்தக் காலத்தில் , கல்யாணத்திற்கு என்ன சீர் செய்தீர்கள் ? என்றால் , பெண்ணுக்கு 50 சவரன் நகை , 5 கிலோ வெள்ளி , மாப்பிள்ளை வீட்டுக்கு xxxx வரதட்சினை ,கூட காட்ரேஜ் ஒன்று என்பார்கள் .மாப்பிள்ளை வீட்டார் , காசி யாத்திரைக்கு மாப்பிள்ளைக்கு பாட்டா ஒன்னு வாங்கிடுங்கோ என்பார்கள் இந்த காலங்களில் , அந்த டாகுமெண்டை முழுதும் ஜெராக்ஸ் எடுக்கணும் என்பார்கள் சமையல் கலை நிபுணர்களும் அஜினோமோட்டோ சேர்க்கலாம் என்று ஒரு சாராரும் சேர்க்ககூடாது ஒரு சாராரும் கொடி பிடித்துக் ...

மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி

Posted: 15 Jun 2016 02:38 AM PDT

ஓட்டத்தில் பலசாலியான மான், குதிரைகளை எளிதாக வேட்டையாடும் புலிக்கு ஒரு குரங்கு தண்ணி காட்டிய வீடியோவை பார்த்து மகிழுங்கள். உத்தரகாண்ட் ராம்நகரில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அனைத்து வகை மிருகங்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும். கடந்த மாதம் ஒரு குரங்கு தனது குட்டியுடன் சிறிய மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற புலி ஒன்று தாய்குரங்குடன் குட்டியையும் சேர்த்து உணவாக்கிக்கொள்ள நினைத்தது. இதனால் மரத்தின் மீது தாவிக்குதித்து ஏறியது. இதைப்பார்த்து பயந்துபோன குட்டிக் ...

ஈகரை கைபேசியில்

Posted: 15 Jun 2016 12:35 AM PDT

ஈகரை கைபேசியில் பயன் படுத்த முடியாத ? லாகின் செய்ய செய்ய முடியவில்லை . எந்த இன்னைப்பும் காட்ட வில்லை .

நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது..!

Posted: 15 Jun 2016 12:29 AM PDT

பாடல்: நடையா இது நடையா திரைப்படம்: அன்னை இல்லம் பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1963 - --------------------------------------- - நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது – கடற்கரைக் காத்து அடிக்குது காத்துல சேலை நடிக்குது கடற்கரைக் காத்து அடிக்குது காத்துல சேலை நடிக்குது முன்னாலே வரச்சொல்லி அழைக்குது முகத்திலே ...

அண்ணனுக்கு நயன்தான் பொருத்தமான ஜோடி! – குறளரசன் பளீர்!

Posted: 15 Jun 2016 12:26 AM PDT

- 'முழுசா ஆன்மிகம் பக்கம் திரும்பிட்டேன். ஆகவேதான் அதிகம் பேசுறதே இல்ல. என் மகனிடம் நீங்களே பேசிக்கோங்க. நான் வெளியில வெயிட் பண்றேன்' என நமக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு அமைதியாக வெளியேறுகிறார் டி.ஆர். – பழைய கோபம் இல்லை. வெடித்துச் சிதறும் வார்த்தைகள் இல்லை. அவரைப் போகவிட்டு குறளரசனை சந்தித்தோம். – சின்ன வயசுலயே எனக்கு மியூசிக்தான் விருப்பம். அதற்காக மியூசிக் டைரக்டர் ஆகணும்னு நினைக்கல. ஆல்பம் பண்றது, டியூன் போட்டு எனக்க நானே ரசிப்பது. இப்படித்தான் இருந்தேன். அண்ணா ஒருநாள் ...

முகப்பரு நீங்க

Posted: 14 Jun 2016 11:03 PM PDT

முகப்பரு மற்றும் தழும்பு நீங்க வழிகள் கூறுங்கள் ..

வௌ்ளை நிறத்தில் ஒரு பூனை!

Posted: 14 Jun 2016 07:42 PM PDT

குறிப்பு -------------- கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம் ... இந்தப் பதவிக்கு வர அந்தப் பெண் எவ்வளவு போராடி இருப்பாள். எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள். எல்லாவற்றிலும் போராடி மீண்டு வரவில்லையா? - இந்த சிந்தனையின் விளைவாக எழுதப்பட்ட சிறந்த கதை... - மனதை நெகிழ வைக்கும் ஒரு கதை...:- - ------------------------------- - [size=16]தனது மகன் அரவிந்தின் நடவடிக்கை கொஞ்ச நாளாகவே வித்தியாசமாகப் பட்டது சாவித்திரிக்கு. யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி அவனது அறைக்குள் ...

குழந்தை மொழி மழலை ( கவிதை ) :

Posted: 14 Jun 2016 05:49 PM PDT

- பல் இல்லா சிறு வாயாலே மழலை மொழியால் பேசி தலையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னிசையாய் பாடி - கவிதைகள் பல எழுதியதைப் போல் காகிதத்தை கிழித்த பின்பு - தன் பிள்ளை மொழியாலே என் உள்ளமதில் எழுதுகின்றாள் ! என் செல்லமகள் ! - அவள் அழகு புன்னகையில் உலகத்தை மறந்துவிட்டேன்! - அவள் பிஞ்சு விரல் தீண்டலில் என்னையே மறந்துவிட்டேன் !!! - மனதையும் மதியையும் மயக்கி எனை அடிமை செய்திட்டாள் - என் செல்லமகள் ! இவள் என் செல்வமகள்! - ------------------------------ P.kathiresan


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™