Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Posted: 20 Jun 2016 03:32 PM PDT

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க உறவுகளே ! பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் !.

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி !

Posted: 20 Jun 2016 01:25 PM PDT

சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி ! சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி நிந்தனை என்றே நினைக்கவேண்டா வந்தனையுடன் கேட்கிறேன் . மங்கையர் தினமென்றால் தந்தையர் பலரும் வரிசையில் நின்றே வாழ்த்திடுகிறார்கள் . தந்தையர் தினமென்றால் தந்தையரும் வாழ்த்துதல் இல்லை மங்கையரும் வாழ்த்துதல் இல்லை : மன்னிக்க, ஓரிருவரைத் தவிர . சிந்தையில் எழுந்த விந்தையான கேள்வி நிந்தனை என்றே நினைக்கவேண்டா வந்தனையுடன் கேட்கிறேன் . விளக்கம் எதுவாயினும் விரும்பியே ஏற்றுக்கொள்வேன் . உலக தந்தையர் ...

தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்

Posted: 20 Jun 2016 01:16 PM PDT

- புது தில்லி: காக்கா முட்டை.. சிறுவர்கள் இருவரை பீட்ஸா கடைக்குள் விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான தமிழ் திரைப்படம். அந்த திரைப்படத்தில் வரும் சம்பவத்தை போன்று நிஜமாகவே தில்லியில் ஒரு சம்பவம் நடைபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டேரூடானைச் சேர்ந்த எழுத்தாளர் சோனாலி ஷெட்டி. இவர் தனது கணவர் பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (ஜூன் 11) தில்லியில் தெருவோரும் வசிக்கும் எட்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு, தில்லி ஜன்பத் பகுதியில் உள்ள சிவ சாகர் உணவகத்துக்குச் சென்றார். அப்போது ...

செய்து பாருங்கள் - ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!

Posted: 20 Jun 2016 01:15 PM PDT

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்! செய்யலாமா குட்டீஸ்...? 1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும். 2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்) 3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ...

எல்லாவித வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தேன்!

Posted: 20 Jun 2016 01:14 PM PDT

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்.... * கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும். * வயிற்றில், ...

நல்லவங்களுக்கு இருட்டுக்கடை அல்வா,கெட்டவங்களுக்கு அருவா.

Posted: 20 Jun 2016 12:57 PM PDT

சினிமா வசனம் தான். அதன் விளக்கம் என்ன? 1930 – 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருவதுதான் இந்த இருட்டுக்கடை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ள இக்கடை தொடக்கத்தில் ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் வைத்து ஆரம்பிக்கப்பட்டதாம். மாலை ஐந்து மணியளவில் தொடங்கி சில மணி நேரம் திறந்திருக்கும் போது காண்டா விளக்கு காரணமாக இருட்டாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக ...

கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான 5 மாற்றங்கள்!

Posted: 20 Jun 2016 12:56 PM PDT

ஜூன் 1-ம் தேதியிலிருந்து நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் மாற்றம் அடைந்துள்ளன.அந்த மாற்றம் நம்முடைய அன்றாட செலவுகளில் சில நூறு ரூபாய்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.  அந்த மாற்றங்களை பார்ப்போம். தங்க நகை வாங்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு! ரொக்க பண பயன்பாட்டைக் குறைக்கிற மாதிரி, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து நகை வாங்கினால், 1 சதவிகிதம் மூல வரி (TCS-Tax Collection at Source) செலுத்த வேண்டும் என 2012-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. 2016 - 17 ...

டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.

Posted: 20 Jun 2016 12:53 PM PDT

• சுரேஷ்: பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்... ரமேஷ்: "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...' ................................................. • ஆசிரியர்: பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கறாங்க..? மாணவன்: உயிரை எடுக்கறாங்க சார்..! ................................................. • இவர்: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? அவர்: ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்... ................................................... ...

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

Posted: 20 Jun 2016 12:39 PM PDT

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம் நீ யாரோ நான் யாரோ தினம் தினம் பார்த்தாலும் சந்தித்தது இல்லை . நடைப் பயிற்சி வட்ட தளத்திலே ஒரு சுற்றில் நீ முன்னேற மறு சுற்றில் நான் முன்னேற முன்னேறும் போது தோன்றிடும் வெற்றிப் புன்னகை , வெற்றுப் புன்னகை அல்ல நட்புப் புன்னகை . ஆரோக்யமானப் போட்டி ஆரோக்கியத்திற்கான போட்டி . உந்தன் வெண்ணிற உடலில் , வியர்வை உடலில் ஒட்டி உள்ளாடைகள் உள்வாங்கிய பின் மேலாடைகளில் உறவாடும் வியர்வை உந்தன் உன்னத அங்க அமைப்பை உலகுக்கே பறைசாற்றுமே . ...

ஐந்து பாகங்களாக தயாராகும் அவதார்!

Posted: 20 Jun 2016 03:54 AM PDT

- ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், சினிமாத் துறையில் அடி எடுத்து வைத்து, 38 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும். இதுவரை, 11 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் எல்லாம், அவரிடம் இல்லை. 'ஒரு சில படங்களை இயக்கினாலும், நீண்ட காலத்துக்கு ரசிகர்களால் பேசப்படும் படமாக இருக்க வேண்டும்…' என்பதே, அவரது பாலிசி! கடந்த, 2009ல் வெளியான கேமரூனின் புகழுக்கு மணி மகுடம் சூட்டிய, அவதார் படத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது, அவர், அப்படத்தின் ...

நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்

Posted: 20 Jun 2016 03:52 AM PDT

நாடு முழுவதும் மதுபான விற்பனையைத் தடை செய்யாமல், யோகாசனப் பயற்சியை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: யோகா என்பது இயற்கை மருத்துவ முறையாகும். மதுவுக்கு அடிமையானவர்களால் யோகா பயிற்சி செய்ய முடியாது. நாடு முழுவதும் மதுபான விற்பனையைத் தடை செய்யாமல் யோகா பயிற்சி செய்வது பொருத்தமற்றது. நானும் சிறுவயதில் இருந்தே யோகப் பயிற்சியில் ...

12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு

Posted: 20 Jun 2016 03:50 AM PDT

திண்டுக்கல்: இந்த ஆண்டு தமிழகத்திற்கு 12 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி.,) தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இதில் 180 ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 12 இடங்கள். இவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொதுப் பிரிவில் இருந்து 3 பேர், பிற்பட்டோர் பிரிவில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல பிறமாநிலங்களைச் சேர்ந்த 8 பேரில் பொதுப் பிரிவில் ...

தி.மலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்

Posted: 20 Jun 2016 03:49 AM PDT

திருவண்ணாமலை கிரிவல பாதை சாலையை, 65 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கின. ஆம்புலன்ஸ் செல்ல, தனி வழி அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் போது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் செல்வர்.கிரிவலம் செல்லும் சாலை தற்போது, 30 அடி அகலத்துக்கு உள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்லும்போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத ...

இராஜேஷ்குமார் நாவல்

Posted: 20 Jun 2016 01:45 AM PDT

இந்தியனாக இரு = இராஜேஷ்குமார் நாவல்

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி குதூகலம்

ஈச்சங்குலை...!!

Posted: 19 Jun 2016 08:36 PM PDT

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™