Tamil News | Online Tamil News |
- காரசாரம்! * கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் சட்டசபையில்... * 'படையெடுக்கவா முடியும்' என ஜெ., ஆவேசம்
- வருகிறது ரயில் பயணிகளுக்கும் காப்பீடு அடடே! ஒப்பந்தம் கோருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,
- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு : முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய முதலீடு
- தேர்தலில் குழி பறித்தோர் மீது நடவடிக்கை ஸ்டாலின் தடுப்பதால் கருணாநிதி அதிருப்தி
- அப்போ சொல்லாம போனேன்- இப்போ சொல்லிட்டு போறேன்: வெளிநாடுபறந்தார் ராகுல்
- 'கேட்காத கேள்விக்கு பதில் சொல்லும் அமைச்சர்!'
- மெட்ரோ ரயில் யார் ஆட்சியில் வந்தது தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
- 'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது'
- இன்று சர்வதேச யோகா தினம்: நாடு முழுவதும் ஒரு லட்சம் நிகழ்ச்சிகள்
- மாநகராட்சி அதிகாரி கொலை விவகாரம் கெஜ்ரிவால் - பா.ஜ., எம்.பி., கடும் மோதல்
- காபூல் தாக்குதல்; மோடி கண்டனம்
| காரசாரம்! * கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் சட்டசபையில்... * 'படையெடுக்கவா முடியும்' என ஜெ., ஆவேசம் Posted: 20 Jun 2016 10:04 AM PDT சென்னை:கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில், சட்டசபையில் நேற்று, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே காரசார விவாதம் நடந்தது. தி.மு.க., குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, 'படையை திரட்டிச் சென்று, கச்சத்தீவை மீட்பேன் என்று, பைத்தியக்காரத்தனமாக பேசவில்லை' என, ஆவேசமாக தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று இது தொடர்பாக நடந்த காரசார விவாதம்: பொன்முடி - தி.மு.க.,: 1991ல், முதல்வராகப் பதவியேற்று, குடியரசு தின விழாவில் பேசிய ஜெயலலிதா, 'கச்சத் தீவை மீட்போம்' என்றார். அதன்பின், ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்று விட்டார்; கச்சத்தீவை மீட்க என்ன செய்தார்?முதல்வர் ... |
| வருகிறது ரயில் பயணிகளுக்கும் காப்பீடு அடடே! ஒப்பந்தம் கோருகிறது ஐ.ஆர்.சி.டி.சி., Posted: 20 Jun 2016 10:09 AM PDT விமான பயணிகளுக்கு உள்ளது போல், ரயில் பயணிகளுக்கும் காப்பீடு அளிக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கோரியுள்ளது. உலகின் மிகப் பெரிய ரயில்வேக்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில், பயணிகளின் பாதுகாப்புக்கு தற்போது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே பயணிகள் பாதுகாப்பு நிதியாக, 1.19 லட்சம் கோடி ரூபாயை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது; இது, நிதியமைச்சகத்தின் பரிசீலனையில் நீண்ட காலமாக உள்ளது.ரயில் பயணிகளின் ... |
| மத்திய அரசு அதிரடி அறிவிப்பு : முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய முதலீடு Posted: 20 Jun 2016 10:11 AM PDT புதுடில்லி,: மத்திய அரசு, நேற்று அதிரடியாக, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை தளர்த்தியது. விமானம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வேலை வாய்ப்புகளை அதிகரித்து, புதிய தொழில்களை உருவாக்கும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பாதுகாப்பு, உள்நாட்டு விமான போக்குவரத்து, மருந்து, 'சிங்கிள்' பிராண்டு சில்லரை விற்பனை, ஒளிபரப்பு உட்பட, பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு ... |
| தேர்தலில் குழி பறித்தோர் மீது நடவடிக்கை ஸ்டாலின் தடுப்பதால் கருணாநிதி அதிருப்தி Posted: 20 Jun 2016 10:15 AM PDT சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக, 'உள்ளடி' வேலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில், ஸ்டாலின் மீது கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதால், பல இடங்களில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க.,வினர் தோல்வியடைந்தனர். இதனால், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முடியாமல், தி.மு.க., எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. இது, தி.மு.க., தலைமையை ரொம்பவே அதிர்ச்சியடைய செய்துள்ளது.'மேலும், ஐந்தாண்டு காலம் , ... |
| அப்போ சொல்லாம போனேன்- இப்போ சொல்லிட்டு போறேன்: வெளிநாடுபறந்தார் ராகுல் Posted: 20 Jun 2016 10:20 AM PDT புதுடில்லி,: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று முன்தினம், தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நேற்று, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ராகுல் நன்றிதெரிவித்துள்ளார். அதில், 'என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. சில நாட்களுக்கு வெளிநாடு செல்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார். எந்த நாட்டிற்கு ... |
| 'கேட்காத கேள்விக்கு பதில் சொல்லும் அமைச்சர்!' Posted: 20 Jun 2016 10:27 AM PDT சென்னை,:வருவாய் துறை அமைச்சர் கூறிய பதிலை, தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன் கிண்டலடித்ததால், சபையில் சிரிப்பலை எழுந்தது. சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - மா.சுப்ரமணியன்:சென்னை மாநகராட்சியில், 155 உறுப்பினர்களை வைத்து, கூட்டம் நடத்திய அனுபவம் உள்ளவன். சபையில் எதிர்க்கட்சியினர் பேசும் போது, ஆளுங்கட்சியினர் அமைதி காக்க வேண்டும். ஆனால், இங்கு சபை நடக்கும் விதத்தை பார்க்கும் போது, சற்று வேதனையாக தான் உள்ளது.சென்னையில் பெய்த மழையும், மழையால் ஏற்பட்ட வடுக்களும், மறையாத சூழ்நிலையில்...(அப்போது, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ... |
| மெட்ரோ ரயில் யார் ஆட்சியில் வந்தது தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் Posted: 20 Jun 2016 10:29 AM PDT சென்னை, : சென்னை மெட்ரோ ரயில் திட்டம், யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து, சட்டசபையில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் இடையே, காரசார விவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - மா.சுப்பிரமணியன்:கடந்த, 2008ம் ஆண்டு, சென்னை மெட்ரோ ரயில் பணி துவக்கப்பட்டது. இப்பணி, 2015 டிசம்பர் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 2017ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மெத்தனத்தால், இப்பணி நிறைவு பெறுவதில், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி: கடந்த, 2006ல் தி.மு.க., ஆட்சி ... |
| 'டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது' Posted: 20 Jun 2016 10:38 AM PDT அரசு பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுத்தாலோ, தனியார் பள்ளிகளில் பணிபுரிந்தாலோ, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, மாவட்டத்திற்கு, தலா, ஆறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை, மாவட்ட குழு மூலம் தேர்வு செய்து, ஆக., 8ம் தேதிக்குள் அனுப்பி வைக்க,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கல்வி ... |
| இன்று சர்வதேச யோகா தினம்: நாடு முழுவதும் ஒரு லட்சம் நிகழ்ச்சிகள் Posted: 20 Jun 2016 11:11 AM PDT புதுடில்லி,: சர்வதேச யோகா தினம், இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்காக, நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 'யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்' என, ஐ.நா., சபை அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, இந்த முடிவை, ஐ.நா., சபை அறிவித்தது. அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியா, உலகிற்கு அளித்த கொடையான யோகாவின் புகழை, உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், ... |
| மாநகராட்சி அதிகாரி கொலை விவகாரம் கெஜ்ரிவால் - பா.ஜ., எம்.பி., கடும் மோதல் Posted: 20 Jun 2016 01:35 PM PDT புதுடில்லி:மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பா.ஜ., - எம்.பி., மகேஷ் கிரி இடையேயான மோதல் வலுக்கிறது. இரு தரப்பினரும் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி அரசு உள்ளது. கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் கெஜ்ரிவால் இடையேயும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், டில்லி மாநகராட்சி ... |
| காபூல் தாக்குதல்; மோடி கண்டனம் Posted: 20 Jun 2016 03:19 PM PDT புதுடில்லி: ஆப்கானிஸ்தானில், இருவேறு இடங்களில் நிகழ்ந்த, தற்கொலைப்படை தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில், நேற்று, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும், நேபாளத்தை சேர்ந்த பாதுகாவலர்களை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பஸ் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில்,நேபாள நாட்டைச் சேர்ந்த, 14 பேர் உடல் சிதறி பலியாயினர். இதேபோல், அந்நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில், கேசிம் மாவட்டத்தில், மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 21,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |