Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐதராபாத்தில் போலியோ வைரஸ்?: பயம் வேண்டாம் என்கிறது அரசு

Posted: 15 Jun 2016 09:03 AM PDT

புதுடில்லி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கழிவுநீரில் போலியோ கிருமி இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, 'மக்கள் அச்சப்படத் தேவையில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தை உருவாக்கும் கிருமியில் இருந்து பாதுகாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. பல ஆண்டு களாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களால், இந்தியாவில், போலியோ பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.கடைசியாக, கடந்த, 2011, ஜனவரி, 13ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் போலியோ நோய் பாதிப்பு இருந்தது. ...

தகராறு செய்கிறார் ஜெயலலிதா கர்நாடக அமைச்சர் பாய்ச்சல்

Posted: 15 Jun 2016 09:09 AM PDT

பெங்களூரு,: ''தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போதெல்லாம், மேகதாது விஷயத்தில் தகராறு செய்கிறார்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், நேற்று கூறினார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. காங்கிரசைச் சேர்ந்த பாட்டீல், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்தித்து, 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதில், 'காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டமுயற் சிப்பதை தடுத்து ...

இந்திய மண்ணுக்குள் சீன வீரர்கள் ஊடுருவல் அட்டூழியம் அருணாச்சல பிரதேசத்தில் பதற்றம் நீடிப்பு

Posted: 15 Jun 2016 09:41 AM PDT

புதுடில்லி,: வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், யாங்ட்ஸி பகுதியில், சீனாவைச் சேர்ந்த,250 ராணுவ வீரர்கள் ஊடுருவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய எல்லையில் சில மணி நேரம்தங்கியிருந்த சீன வீரர்கள், அதன் பின், சீன எல்லைக்குள் திரும்பிச் சென்றதால், மோதல் சூழ்நிலை தவிர்க்கப்பட்டது. ஆனாலும், அருணாச்சல பிரதேசத்தில் பதற்றம் நீடிக்கிறது.என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோகஸ்தர் அமைப்பில் உறுப்பினராக, இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததை காரணம் ...

உயர் வகுப்பினரை விமர்சித்த தலித்பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கம்

Posted: 15 Jun 2016 09:42 AM PDT

லக்னோ,:உ.பி.,யில், அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், தலித், முஸ்லிம்கள், பிற்பட்டோரின் ஓட்டுகளை பெற, பிரதான கட்சிகள், பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன.

ஆனால், பிராமணர்களுக்கு எதிராக, 'பேஸ்புக்'கில் பதிவிட்ட தலித் நிர்வாகியை, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நீக்கியுள்ளது. உயர் வகுப்பினரின் அடக்குமுறையை எதிர்த்து, மறைந்ததலைவர் கன்ஷிராமால், பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்கப்பட்டது. பிராமணர் உள்ளிட்ட உயர் வகுப்பினருக்கு எதிராக, அனல்பறக்க, ஆவேசமாக கருத்துகளை தெரிவிக் கும் வழக்கம் உடையவர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ...

உள்ளாட்சி பதவிகளுக்குஅ.தி.மு.க.,வில் புதுமுகங்கள்3 மாதத்திற்குள் அரைகுறை பணிகளுக்கு விடிவு

Posted: 15 Jun 2016 10:02 AM PDT

மதுரை, : உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் அரைகுறையாக விடப்பட்டுள்ள பணிகளை முடிக்க கவுன்சிலர்களுக்கு அ.தி.மு.க., உத்தர விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இம்முறை புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., உள்ளாட்சி அமைப்புகளிலும் தனது அதி காரத் தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர் களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வார்டுகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள், அரை குறையாக விடப்பட்டுள்ள பணிகள் குறித்து ...

விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட வேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 15 Jun 2016 10:12 AM PDT

சென்னை,:'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:சமூக நீதிக்கு முன்னோடி மாநிலமான தமிழகத்தில், 1973 ஜூலை, 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், 'பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிட விரும் பாதவர்களிடம், அதை தெரிவிக்கும்படி வற்புறுத்த வேண்டாம்; மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதி, மதங்களை குறிப்பிட வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது.இதன்பின், 2000 ஜூலை, 31ம் தேதி, ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் தலைவர் கருணாநிதி 'ஆப்சென்ட்'

Posted: 15 Jun 2016 10:16 AM PDT

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், திருவாரூர் எம்.எல்.ஏ., வுமான, கருணாநிதி பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் உரையுடன், 15வது சட்டசபையின் முதல் கூட்டம், இன்று துவங்குகிறது.இதை முன்னிட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், நேற்று மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், கட்சித் தலைவரும், சட்டசபையின் மூத்த எம்.எல்.ஏ.,வு மான கருணாநிதி பங்கேற்கவில்லை. அவருக்காக, நீண்ட நேரம் காத்திருந்து, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், தாமதமாகவே கூட்டம் துவங்கியது. சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், ...

தேர்தல் தோல்விக்கு யார் காரணம் : விஜயகாந்திடம் கொந்தளித்த நிர்வாகிகள்

Posted: 15 Jun 2016 10:46 AM PDT

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தோல்வி அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் கட்சியினரை உற்சாகப்படுத்தி, மீண்டும் அவர்களை பழையபடியே தீவிர அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியில், கட்சித் தலைமை களம் இறங்கி உள்ளது. இதற்காக, கட்சியினர் பலரையும் சந்தித்து, அவர்களிடம் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து, ஆய்வு நடத்தி வருகிறார் விஜயகாந்த். மாவட்ட செயலர்கள் பலரையும் சென்னைக்கு வரவழைத்து பேசினார்.அதன் அடுத்த ...

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை

Posted: 15 Jun 2016 11:14 AM PDT

தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:* மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ...

பஸ் விபத்து30 பேர் பலி

Posted: 15 Jun 2016 11:40 AM PDT

ஷில்லாங்,: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மேகலாயாவில், முதல்வர் முகுல் சங்மா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது; இது, மலைப்பகுதிகளை அதிகம் உடைய மாநிலம். இந்நிலையில், அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து, கவுகாத்திக்கு, மேகாலயா மாநிலம் வழியாக, பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. சோனாபூர் அருகே நள்ளிரவில், அந்த பஸ் சென்றபோது, 500 அடி ஆழமான பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில், 30 பேர் உயிரிழந்தனர்; எட்டு பேர் காயமடைந்தனர். இரவு நேரம் என்பதால் பஸ் விபத்துக்குள்ளானது யாருக்கும் தெரியவில்லை. அதிகாலையில் தான், தகவல் தெரிந்து, மீட்பு பணி நடந்தது. ...

அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

Posted: 15 Jun 2016 01:19 PM PDT

தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் முக்கிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்துவது குறித்து, மூத்த அமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றுஆலோசனை நடத்தினர்.நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த, 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு, பொருட்களின் மொத்த விற்பனை விலை பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. டில்லி, கோல்கட்டாவில் தக்காளியின் விலை சராசரியாக, கிலோ, 65 ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்னையில், கிலோ, 80 - 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

இந்த திடீர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™