Tamil Star |
- கனேடிய விமான நிலைய பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை
- யங் மற்றும் எக்லிங்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு
- குப்பை ஏற்றும் வாகனமும் காரும் மோதி விபத்து
- வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஐ.நா இணக்கப்பாட்டில் இணையும் கனடா
- பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்
| கனேடிய விமான நிலைய பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை Posted: 07 Jun 2016 01:09 PM PDT
அத்துடன் விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக காத்திருப்போரின் வரிசை நீண்டு செல்வதன் காரணமாக பயண நேரம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கனடாவில் கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 21 சதவீதத்தினால் அதிகரித்துள்ளமையையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், அதனை ஈடுசெய்யும் வகையிலான மேம்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது. 15 நிமிடத்தினுள் 85 சதவீதமான பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவதாக கனேடிய எல்லை பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்ற போதிலும், காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் நீண்டுகொண்டே செல்வதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறான நிலையினை தவிர்க்கும் வகையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்கான வசதிகள் அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான போக்குவரத்து தாமதங்களை கனேடிய விமானநிலையங்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். The post கனேடிய விமான நிலைய பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| யங் மற்றும் எக்லிங்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு Posted: 07 Jun 2016 12:59 PM PDT
இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை 3மணிக்கு சற்று முன்னராக இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த அந்த இடத்திற்கு காவல்த்தறையினர் வரவழைக்கப்படடிருந்தனர் என்றும், அப்போது துப்பாக்கிச் சூட்டிற் பாதிக்கப்பட்ட நபர் காரினுள் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவதிபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காயமடைந்த அவரை மீட்டு அவருக்கு முதலுதவி வழங்கிய போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த சம்பவ இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் கறுப்பு நிறக் காரில் தப்பி ஓடிவிட்டனர் என்றும், அவர்கள் இருவரும் கறுப்பின ஆண்கள் எனவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தப்பியோடிய சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கையில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். The post யங் மற்றும் எக்லிங்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குப்பை ஏற்றும் வாகனமும் காரும் மோதி விபத்து Posted: 07 Jun 2016 12:01 PM PDT
இந்த விபத்து Bloomington வீதி மற்றும் 10th Concession பகுதிக்கு அருகில் காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், கிழக்கு நோக்கிய தடத்தில் கார் பயணித்துக்கொண்டிருந்ததாகவும்,அப்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருந்த குப்பை ஏற்றும் வாகனத்தை அது கடக்க முற்பட்ட போது இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஆண் சாரதி ஆபத்தான காயங்களுக்கு உள்ளான நிலையில் அவரச மருத்துவ வான்னூர்தி மூலம் அவர் சென.மைக்கல்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர். விபத்தை அடுத்து குறித்த வீதிப் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதுடன், காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். The post குப்பை ஏற்றும் வாகனமும் காரும் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஐ.நா இணக்கப்பாட்டில் இணையும் கனடா Posted: 07 Jun 2016 06:07 AM PDT
குறித்த அந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கனடா முன்னராக இணைந்திருந்த போதிலும், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி அரசாங்கம் ஆட்சி வகித்த காலத்தில் குறித்த அந்த ஐ.நாவின் நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து கனடா வெளியேறியுள்ளது. இந்த நிலையில் குறித்த இந்த ஐ.நா திட்டத்தில் மீள இணையும் நடவடிக்கைகளை தற்போதைய புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைளில் பல்வேறு மாறுதல்களை மேற்கொண்டு வரும் நிலையிலேயே வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் இணக்கப்பாட்டில் சேர்ந்து கொள்வதற்கான நடவடிக்கையை யும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று திங்கட்கிழமை தகவல் வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அனைத்துலக ரீதியிலான வறட்சிக்கும் வறுமைக்கும் எதிரான நிகழ்ச்சித் திட்டத்தில் ஏனைய பங்காளி நாடுகளுடன் கனடாவும் இணைந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 17ஆம் நாளுக்கு முன்னர் இந்த இணக்கப்பாடு குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஐ.நா இணக்கப்பாட்டில் இணையும் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள் Posted: 07 Jun 2016 06:03 AM PDT
வாயுத் தொல்லை வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும். வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து. இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும். வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். பித்த வெடிப்பு கண்டங்கத்திரி இலைசாற்றை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். மூல வியாதி கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும். தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். The post பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அதிகருத்துவரும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய நிதி ஓதுக்கீட்டை மத்திய அரசாங்கம் அதிகரிக்காது விடின் கனேடிய விமான நிலைய பாதுகாப்புச் சோதனை நடைவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யங் வீதி மற்றும் எக்லிங்டன் அவனியூவிற்கு அருகாமையிலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதான ஆண் நபர் ஒருவர் உயிரழந்துள்ளார்.
Whitchurch-Stouffville பகுதியில் குப்பை ஏற்றும் வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் இணக்கப்பாட்டில் கனடா மீண்டும் இணைந்து கொள்ளக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,