Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மோசடி தொடர்பில் நிறுவனம் ஒன்றின் இரண்டு உரிமையாளர்கள் கைது

Posted: 13 May 2016 12:29 PM PDT

oi

oiரொரன்ரோவில் உள்ள வீடு புதுப்பிப்பு பணிகளை முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்றின் இரண்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் ஆண் என்றும், மற்றைய நபர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முன்னெடுத்துவரும் வியாபார நடவடிக்கை தொடர்பிலேயே அவர்கள் இருவர் மீதும் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Jett Group என்ற பெயரில் அந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மோசடி தொடர்பான தகவல்களை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களின் தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் நிதி சம்பந்தமானது என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1.9 மில்லியன் டொலர் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக காவல்த்துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.

The post மோசடி தொடர்பில் நிறுவனம் ஒன்றின் இரண்டு உரிமையாளர்கள் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹமில்ரனில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Posted: 13 May 2016 12:28 PM PDT

j

jஹமில்ரன் டவுண் ரவுண் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் மது விற்பனை நிலையம் ஒன்றின் வெளிப்புறத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Catharine வீதிக்கு அருகில் King William வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் வருமாறு தாம் அழைக்க்பபட்டிருந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தை காவல்த்துறை அதிகாரிகள் சென்றடைந்ததுடன், அங்கு துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலத்தையும் காவல்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.j

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற நேரம் குறித்த மது விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடாபில் தகவல் எதனையம் வெளியிடாத காவல்த்துறையினர், அப் பகுதியில் காணப்பட்ட கண்காணிப்பு ஒளிப்படக்கருவியின் தடயங்களை ஆராயவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

The post ஹமில்ரனில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடியுங்கள்!

Posted: 13 May 2016 08:36 AM PDT

iu

iuஒரு நாளுக்கு மூன்றுலிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது.

அவரவர் உடல் எடைக்குஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நலசீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

45 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

50 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

55 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

60 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

65 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

70 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

75 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

80 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

85 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

90 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

95 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

100 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

The post உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடியுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து!

Posted: 13 May 2016 08:33 AM PDT

iu

iuகர்ப்பகாலத்தில் இளம் தாய்மார்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு. கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்புடன், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.iukj

இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் சரியாவதுடன் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால்வீக்கம் தடுக்கப்படுகிறது.

சீரகம், சோம்பு ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும். பசியை தூண்டும்.

The post கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்திக்கு மருந்து! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட ஃபோர்ட் மக்முர்றிக்கு பிரதமர் பயணம்

Posted: 13 May 2016 08:19 AM PDT

io

ioகாட்டுத்தீயால் பாதிப்பை எதிர்கொண்டள்ள அல்பேர்ட்டா மாநிலத்திற்கு கனேடியப் பிரதமா இன்று பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த ஒரு வார காலமாக பரவிய ஃபோர்ட் மக்முர்றி காட்டுதீ காரணமாக 80,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 2,400 வீடுகள் கட்டிடங்கள் முற்றாக எரிந்துபோயுள்ளதாகவும், மேலும் 530 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் அந்த மாநிலத்திற்கான பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் போது அந்த மாநிலத்தில் காட்டுத் தீயினால் அழிவைச் சந்தித்தள்ள ஃபோர்ட் மக்முர்றி பகுதிக்கு நேரில் செல்லும் பிரதமர், சேதங்களை நேரில் பாவையிடவுள்ளார்.

அத்துடன் காட்டுத்தீ அனர்த்தத்தின் போது அவசர உதவிப் பணிகளிலும், தீயணைப்பு பணிகளிலும் ஈடுபட்டவர்களையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.io

பின்னர் எட்மண்டனுக்கும் பயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு அல்பேர்ட்டா முதல்வருடன் சந்திப்பொன்றையும் நடாத்தவுள்ளார்.

பிரதமருடனான இன்றைய சந்திப்பின் போது எட்மண்டன் பகுதிக்கான பணியாளர் காப்புறுதித் திடடத்தில் மேம்பாடு ஏற்படுத்துமாறான வேண்டுகோளினை அல்பேர்ட்டா முதல்வர் முன்வைப்பார் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.

The post காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட ஃபோர்ட் மக்முர்றிக்கு பிரதமர் பயணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™