Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வன்முறையாக மாறிய மே நாள் நிகழ்வு

Posted: 01 May 2016 01:54 PM PDT

r

rமொன்றியலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலாலித்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட மே நாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தாக கூறப்படுகிறது.

முதலாலித்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டப் பேரணியானது காவல்த்துறையினரால் கலைக்கப்பட்டிருந்தது.

பேரணி நடாத்தியவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவித்திருந்த காவல்த்துறையினர், பின்னர் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரரைக் கலைத்திருந்தனர்.

அத்துடன் 80 வரையிலான நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.r

இந்த சம்பம் இடம்பெற்று ஒரு மணித்தியாளங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மொன்றியல் டவுண்ரவினில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று, அதன் யன்னல் கண்ணாடிகளை உடைத்திருந்தனர் என கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் காயமடைந்திருந்ததாகவும், 10 போ கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வன்முறையாக மாறிய மே நாள் நிகழ்வு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மொன்றியல் மின்சார இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஆதரவு

Posted: 01 May 2016 12:50 PM PDT

r

rமொன்றியல் நகரின் பில்லியன் டொலர் மூதலீட்டிலான போக்குவரத்துத் திட்டம் ஒன்றிற்கு மத்திய அரசின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டள்ளன.

மொன்றியலில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற லிபரல் மாநாட்டில் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதற்கான சமிக்கைகளை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மொன்றியலின் ஓய்வூதிய நிதியம் மூலம் மொன்றியல் பெரும்பாகத்தை உள்ளடக்கிய பகுதிகளில் மின்சார இலகு தொடருந்து போக்குவரத்து வலையமைப்பை ஏற்படுதும் திட்டம் ஒன்றை மாநில அரசாங்கம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கியூபெக் ஓய்வூதிய நிதியின் முதலீட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறித்த இந்த திட்டத்தின் மூலம், Trudeau விமான நிலையத்தில் இருந்து கியூபெக்கின் தெற்குக் கரையில் உள்ள Laval பகுதிவரையும் உள்ள நகரின் 24 நிலையங்களை இணைத்து மொன்றியலின் சுமார் 67 கீலோ மீற்றர் தூரத்திற்கு இந்த இலகு தொடரூந்து பாதை நிறுவப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு மொத்தமாக 5.5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 3 பில்லியன் நிதியை கியூபெக் ஓய்வூதிய நிதியம் முதலிட முன்வந்துள்ளதுடன், எஞ்சிய 2.5 பில்லியன் தொகை மத்தியி மற்றும் மாகாண அரசின் அனுசரணையுடன் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, இந்த திட்டத்திற்கான மத்திய அரசின் உதவி குறித்து பேசுவதற்கு தமது அரசாங்கம் தயாராக உள்ளது என்ற அறிவிப்பினை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேற்று வெளியிட்டுள்ளார்.

மாநில அரசாங்கத்தின் இந்த திட்ட முன்மொழிவு குறித்து தாம் மிகவும் பெருமிதமும் ஆச்சரியமும் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் பரப்புரைகளின் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்ததாக வகையிலான உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்வதாக லிபரல் கட்சி உறுதியளித்துள்ள நிலையில், கியூபெக் மாநில அரசாங்கத்தின் இந்த திட்ட முன்மொழிபும் தமது திட்டங்களுடன் ஒத்துப்போவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

The post மொன்றியல் மின்சார இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஆதரவு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தக்காளி பழத்தை முகத்தில் தடவுங்கள்! அழகு ஜொலிக்கும்

Posted: 01 May 2016 06:53 AM PDT

po

poசிலரது முகம் எண்ணெய் பசை கொண்ட முகமாக இருக்கும், அதனால் என்னதான் மேக்கப் போட்டாலும் அழகாக எடுத்துக்காட்டாது.

அதனால் எண்ணெய் பசை கொண்ட சருமத்தை போக்குவதற்காக சில வழிகள் உள்ளன.

அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசைகுறையும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன்,ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து,அந்த கலவையை முகத்தில் பூசிசுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு,முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில்தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசைகுறையும்.po

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப்பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஒவ்வொருவருக்கும்2 வகையான சருமம் உள்ளது. ஒன்றுஉலர்ந்த சருமம். மற்றது எண்ணெய்வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில்இருந்து பாதுகாக்க வேண்டும்.

உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசிபின் குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும்.

இதே போல் எண்ணைவழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கிபூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் பொலிவாகும்.

The post தக்காளி பழத்தை முகத்தில் தடவுங்கள்! அழகு ஜொலிக்கும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் கீரை சாப்பிடுங்கள்!

Posted: 01 May 2016 06:51 AM PDT

op

opஅன்றாடம் ஏதேனும் ஒருவகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால், எந்தெந்த கீரையில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்துசாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்புஆகியவை குணமாகும்.

கீரைகளில்மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பைசேர்த்துச் செய்ய வேண்டும். இதுசுவையைக் கூட்டுவதோடு, உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில்அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்புசேர்த்து லேசாக வேக வைத்து,மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய்தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாகவைக்கும்.

வயிற்றில்இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச்செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு.லேசாக வேக வைத்து பொரியல்செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறிவெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
இரவுவேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.opj

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு,தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிதுபருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம்,நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம்குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.கீரையை நிறம் மாறாமல் நன்றாகவதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டுபல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச்சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும்அப்படியே உடல் சேரும்.

The post தினமும் கீரை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™