Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


‛அடக்கி வாசிங்கப்பா!‛

Posted: 08 May 2016 08:57 AM PDT

'இந்த தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது என்பதை முடிவு பண்ணுங்கள். கூடவே, யார் வெற்றி பெற வேண்டும் என்றும், நாட்டு நலனை கருதி முடிவெடுங்கள்' என கூறி, வன்னியர்களை வளைக்கும் வேலையில், தி.மு.க., தீவிரமாக இறங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

வட மாவட்டங்களில் வன்னிய இனத்து மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி, தமிழக அரசியலில் தாங்கள் தவிர்க்க முடியாத சக்தி என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஓராண்டுக்கு முன்பாக, தனித்து போட்டி என அறிவித்தது, பாட்டாளி மக்கள் கட்சி.எடுபடாத முயற்சி கூடவே, அன்புமணி தான் கட்சியின் முதல்வர் ...

மாறி மாறி ஆளும் இரு அணிகள், கேரள தேர்தலிலும் மக்கள் சலிப்பு

Posted: 08 May 2016 09:01 AM PDT

திருவனந்தபுரம்: தமிழகத்தை போலவே, கேரளாவிலும், நீண்ட காலமாக, மாறி மாறி இரு அணிகள் ஆட்சி அமைப்பதால், மக்கள் சோர்வைடைந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கு மாற்று திட்டம் எதுவும் இல்லாத நிலையில், தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கேரள மாநில சட்டசபை தேர்தல், 16ல் நடக்கிறது. இதில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மூன்றாவது அணியாக, பா.ஜ., களமிறங்கியுள்ளது.
தேர்தல் நிலவரம் தொடர்பாக, ...

அசத்தல்!இந்திய ரயில்வேயின் முதல் பசுமை வழித்தடம் :மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே அமைகிறது

Posted: 08 May 2016 09:53 AM PDT

புதுடில்லி: நாட்டின் முதல், பசுமை வழித் தடமாக, தமிழகத்தின் மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை அமைகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக வுள்ளது. இந்த பாதையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'பயோ - டாய்லெட்' வசதி முழுமையாக அமலுக்கு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில்வேகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில், தற்போதுள்ள கழிப்பறை களை பயன்படுத்தும்போது, மலக்கழிவுகள்கீழே விழுந்து, ரயில் பாதையை அசுத்தப்படுகிறது.
இவ்வாறு ரயில் பாதையை அசுத்தம் செய்வதை தடுக்கும் வகையில், 'பயோ - டாய்லெட்' என்ற, சுற்றுச் சூழலை பாதிக்காத வசதி, சில ...

சோனியாவுக்கு 'நோட்டீஸ்'

Posted: 08 May 2016 10:11 AM PDT

புதுடில்லி: 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவை, செயல்படுத்தாதது ஏன்' என கேட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, மத்திய தகவல் ஆணையம், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமூக ஆர்வலர், ஆர்.கே.ஜெயின், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2014ல், காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு மனு அனுப்பியிருந் தார். அதற்கு பதில் கிடைக்காததால், தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால், டில்லி ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த ஐகோர்ட், ஆறு மாதத்துக்குள் ...

அ.தி.மு.க., அரசால் தமிழக மின் வாரியத்துக்கு இழப்பு ரூ.73,000 கோடி! தோலுரித்தார் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

Posted: 08 May 2016 10:30 AM PDT

''அ.தி.மு.க., அரசால், தமிழக மின் வாரியத்திற்கு, 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என சென்னை வந்த மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் மேலும் கூறியதாவது:பா.ஜ.,வால் மட்டுமே, தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். கடந்த 66 ஆண்டுகளாக, தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து, ஆண்டுக்கு 3,456 மெகாவாட் மின்சாரம் தரப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2,450 மெகாவாட் அதிகரிக்கப்பட்டு, 5,500 மெகாவாட் மின்சாரம் ...

'இதற்கோ', 'அதற்கோ' ஓட்டு போடாதீர்கள் திராவிட கட்சிகள் மீது மோடி மறைமுக தாக்கு

Posted: 08 May 2016 10:38 AM PDT

நாகர்கோவில்: ''இதற்கோ, அதற்கோ ஓட்டு போடாமல் தமிழக மக்கள் பா.ஜ., ஆதரிக்க வேண்டும்,'' என கன்னியாகுமரியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்ட பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த தேர்தலில் இங்கு வந்து நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதன்படி ஒரு ஊழல் அற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்திருக்கிறீர்கள். உங்களை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் குளச்சலில் மிகப்பெரிய ஒரு துறைமுகத்தை தந்துள்ளோம். 21 ஆயிரம் கோடி செலவில் குளச்சல் துறைமுகம் ...

தேர்தல் அறிக்கைக்கு எதிராக வழக்கா தஞ்சை பிரசாரத்தில் ஜெ., கொந்தளிப்பு

Posted: 08 May 2016 11:02 AM PDT

தஞ்சாவூர்: ''அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு போடும் தி.மு.க., தான், மக்களின் எதிரி,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, ஆட்சியில் இருந்த போது தி.மு.க, எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கருணாநிதி, காவிரி பிரச்னையை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தான், வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு கடந்த தி.மு.க., ஆட்சியில், 9,164 கோடி ரூபாய் கடன் தான் ...

விசாரணை கமிஷன் கருணாநிதி உறுதி

Posted: 08 May 2016 11:15 AM PDT

சென்னை: 'தேர்தலுக்கு பின், நிலக்கரி ஊழல் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கும்போது, பதில் சொல்லி தான் ஆக வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
மின் வாரியத்திற்காக, நிலக்கரி வாங்குவதில், எந்த அளவுக்கு ஊழலும், முறைகேடுகளும்
நடைபெற்றன என விரிவாக, நான் தெரிவித்ததற்கு, எந்த விதமான பதிலும் முதல்வரிட மிருந்தோ, அமைச்சரிடமிருந்தோ வரவில்லை. இப்போது சொல்லாவிட்டாலும்,தேர்தலுக்கு பின், இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து கேட்கும்போது, பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது ...

தே.மு.தி.க., கூட்டணி ஆட்சி வெளிப்படையாக செயல்படும்: விஜயகாந்த்

Posted: 08 May 2016 11:26 AM PDT

செங்கல்பட்டு: தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி அரசு வெளியப்படையாக செயல்படும் என, விஜயகாந்த், செங்கல்பட்டில், பேசினார்.

தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும், செங்கல்பட்டு வேட்பாளர் முருகேசன் எம்.எல்.ஏ., உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் வேட்பாளர் ஏகாம்பரம், மதுராந்தகம் வேட்பாளர் தென்னரசு, தாம்பரம் வேட்பார் செழியன், ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வீரகுமார், பல்லாவரம் ம.தி.மு.க., வேட்பாளர் வீரலட்சுமி ஆகியோர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம், செங்கல்பட்டில் நடைபெற்றது.கூட்டத்தில், ...

அ.தி.மு.க., அரசால் தமிழக மின் வாரியத்துக்கு இழப்பு... ரூ.73,000 கோடி: தோலுரித்தார் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

Posted: 08 May 2016 11:28 AM PDT

''அ.தி.மு.க., அரசால், தமிழக மின் வாரியத்திற்கு, 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் புகார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் தேசிய தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி; மதுரை, சென்னையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு; சென்னையில், மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும், சென்னை, விருகம்பாக்கம் தொகுதியின் தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™