Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எதை கடைசியில் செய்வது?

Posted: 08 May 2016 12:42 PM PDT

பத்திரிகை பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில், எனக்கென்று நிருபர்கள் கிடையாது; நானே பேட்டி எடுப்பேன். இந்த அனுபவம் தான், பிற்காலத்தில், 'அலசல்' என்கிற தொலைக்காட்சி தொடரில், தூர்தர்ஷனுக்காக, தமிழக அரசியல் தலைவர்களை, பேட்டி காண பெரிதும் உதவிற்று. அண்மையில், தொலைக்காட்சி பேட்டிகளின் போது, இரு பெரிய அரசியல் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'அலசல்' பகுதியில், நான் கேட்ட சில கேள்விகளும், கிட்டத்தட்ட வெளிநடப்பு செய்கிற அளவிற்கு, அனலானவை தாம். ஆனால், கேள்வி கேட்குமுன் ஒத்தடம் ...

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Posted: 08 May 2016 12:40 PM PDT

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள். பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம். ஒரு ...

அம்மாவை பற்றி இவர்கள்.............. :)

Posted: 08 May 2016 12:38 PM PDT

அம்மாவை பற்றி இவர்கள் காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை. காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், ...

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்

Posted: 08 May 2016 12:09 PM PDT

நீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது. பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இப்பிடிப் பண்றீங்களேம்மா?

Posted: 08 May 2016 12:04 PM PDT

ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார். RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். இரண்டாம் முறை சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். மூன்றாம் முறை சென்றார் அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார். நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை. RTO லைசென்ஸ் ...

கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு

Posted: 08 May 2016 11:53 AM PDT

கனடாவின் போர்ட் மெக்மர்ரி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பள வுக்கு தீ பற்றி எரிகிறது. சுமார் 1600 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். போர்ட் மெக்மர்ரி நகரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அபாய எல்லைப் பகுதியை தாண்டவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்து ...

சந்திரனின் இருண்ட பாகம்

Posted: 08 May 2016 11:51 AM PDT

சந்திரனின் இருண்ட பாகம் பூமியின் பின்னணியில் நிலவின் இருண்ட பக்கம் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை, நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. நாசாவின் 'டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி' செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு, கடந்த மாதம் நிலவின் இருண்ட பக்கத்தை புகைப்படம் எடுத்துள்ளது. சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகர்ந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் ...

நினைவு! – ‘சொல் கேளான்’ ஏ.வி. கிரி,

Posted: 08 May 2016 11:35 AM PDT

- பண்டிகை நாட்களில் யாரோ வந்து உணவு தருகின்றனர்! தலை வாழை இலையில் வித விதமான உணவு வகைகள்! லட்டைப் பார்த்ததும் பெரிய மகனுக்கு பிடிக்குமே என்கிறது மனது! மெல்லிய சப்பாத்தியை கண்டு மகளுக்கு பிடிக்குமே என்ற நினைவு வருகிறது! நெய் ஊற்றிய பருப்பு சாதம் இளைய மகன் நன்றாக சாப்பிடுவான் என்று ஞாபகம்! அப்பளம் இளைய மகளுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதை மறக்க முடியவில்லை! பால் பாயசம்… மறைந்த கணவருக்கு மிகவும் பிடிக்குமே என்கிறது உள்ளுணர்வு! இப்படியே எல்லாவற்றையும் ...

தோழியைக் கண்டு பயப்பட மாட்டேன்…!!

Posted: 08 May 2016 11:25 AM PDT

தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை

Posted: 08 May 2016 11:23 AM PDT

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும். இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் ...

ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Posted: 08 May 2016 11:08 AM PDT



http://www.mediafire.com/download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf

என்றும் அன்புடன்
செல்லா

நுனாத்தேரும் நுங்குவண்டியும்

Posted: 08 May 2016 09:41 AM PDT

நுனாத்தேரும் நுங்குவண்டியும் கருவறை கண்ட பின் கல்லறை காணும் வரை காணும் அனுபவம் கணக்கற்றதாயினும்... குழந்தைப் பருவத்தில் கூடுதல் சுகமே!!! நடை வண்டி பயிற்சியும் நரம்பு பையில் புத்தகங்களும் நுனாத்தேரும் நுங்குவண்டியும் குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும் குண்டுமணி பதித்த களிமண் பொம்மைகளும் பஞ்சு தாத்தா பறக்க விட்டதும் பனம் பழம் சுட்டுத் தின்றதும் பானைக்குள் மீன் பிடித்ததும் பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும் பெட்ருமாஸ் விளக்கு எரிந்த பெட்டிக் ...

கலையாத மௌனங்கள்

Posted: 08 May 2016 07:17 AM PDT

நண்பர்களே  உங்களுக்காக  செல்போன் மற்றும் tab ல் படிக்கும் வகையில்  http://www.mediafire.com/download/pph4c1yc53rxmy8/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.படப் நன்றி

தாயுமானவர்

Posted: 08 May 2016 07:03 AM PDT

தாயுமானவர் சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார்.   நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார்.   எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார்.  வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்?  இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் ...

தாய்

Posted: 08 May 2016 06:45 AM PDT

தாய்

தன்னலம் துறந்தவள்
உன்நலம் காப்பவள்

தன்குருதி பாலாக
தந்துனைக் காப்பவள்

தன்பசி மறுத்தவள்
உன்பசி ஆற்றினள்

தன்னுடை போர்த்தியே
உன்னுடல் காப்பவள்

தன்னுயிர் ஈந்தேனும்
உன்னுயிர் காப்பவள்

தரணியில் உயர்ந்தவள்
தங்கத் தாயவள்.
ச.சந்திரசேகரன்

சினி துளிகள்....

Posted: 08 May 2016 02:56 AM PDT


-
* 2.0 படத்தில், ரோபோ வேடத்தில் நடிப்பதாக
கூறப்படுவதை மறுக்கிறார் எமிஜாக்சன்

இந்தோனேஷியாவில் ரஜினியின், கபாலி!

Posted: 08 May 2016 02:51 AM PDT

- ரஜினியின் படங்கள் சமீபகாலமாக லண்டன், இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. – இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள, கபாலி படம் இந்தோனேஷியாவில், 300 தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கு முன், இந்தி படங்களே அதிகமாக வெளியாகி வந்த நிலையில், முதன் முறையாக, ஒரு தமிழ் படம், 'என்ட்ரி' கொடுத்திருப்பதோடு, அதிக தியேட்டர்களிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. – ——————————— — சி.பொ.,

சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் இங்கிலாந்தில் மறைவு

Posted: 08 May 2016 02:28 AM PDT

- பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார். அவருக்கு வயது 80. இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங் களை ஆங்கிலத்தில் வசன நடையில் எழுதி வெளியிட்டுள்ளார். மௌனி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்பு களையும், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். - தமிழ் தி இந்து காம

மீண்டும் கதாநாயகியான அமலாபால்!

Posted: 08 May 2016 02:19 AM PDT

- – இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்பும், நடிப்பைத் தொடர்ந்து வரும் அமலாபால், தமிழில் பசங்க – 2 படத்தை அடுத்து, அம்மா கணக்கு படத்தில், ரேவதியின் மகளாக நடித்துள்ளார். – இதையடுத்து, மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக தோப்பில் ஜோப்பன் என்ற படத்திலும், கன்னடத்தில் சுதீப்புடன், ஹேப்புலி என்ற படத்திலும் நடிக்கிறார் – அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது! — எலீசா ——–

ஜனனி அய்யரை கவர்ந்த, மலர் டீச்சர்!

Posted: 08 May 2016 02:17 AM PDT

- - பிரேமம் மலையாள படத்தில், மலர் டீச்சராக நடித்தவர் சாய் பல்லவி. – அதில், அவரது யதார்த்தமான நடிப்பு, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்ததால், அம்மாதிரி தனக்கும், ஒரு வேடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார் ஜனனி அய்யர். – அந்த ஏக்கத்தை, இப்போது, உல்டா என்ற படம் தீர்த்து வைத்துள்ளது. இப்படத்தில், இவர் பாரம்பரியம் மிக்க தமிழ் பெண்ணாக, மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். – அதனால், மலர் டீச்சர் ரோலில், சாய் பல்லவி நடித்தது போன்று, யதார்த்தம் மீறாத வகையில், ...

கவிதை அரங்கேறிய மேடை..!

Posted: 08 May 2016 01:58 AM PDT

விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி

Posted: 08 May 2016 12:05 AM PDT

- பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திகழ தோனியின் புனே அணியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. - 7 போட்டிகளில் 6-ல் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. - தொடர்ந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™