Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கொளுத்தும் வெயிலில் உச்சகட்ட பிரசாரம்...இன்னும் ஆறே நாள் ஓட்டுப்பதிவிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயார்

Posted: 07 May 2016 07:35 AM PDT

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு பெற, இன்னும் ஆறு நாட்களே உள்ளன. அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வதில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதி களிலும், 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு, இன்னும் எட்டு நாட்களே உள்ள தால், அனைத்து கட்சி தலைவர்களும், தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். சுயேச்சை ...

உ.பி. மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உணவுக்கு... பஞ்சம் ? 2 ஆண்டுகளாக பொய்த்த பருவமழை

Posted: 07 May 2016 08:02 AM PDT

மஹோபா: நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உ.பி., மாநிலம், புந்தேல்கண்ட் பகுதியில், வறட்சி பாதிப்பு மிக மோசமாகியுள்ளது. 'பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும்' என அங்கு ஆய்வு செய்துள்ள தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், 'எல் நினோ' எனப்படும் பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தாலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் பட்டவையாக, ஏற்கனவே ...

பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...கேள்வி சோனியாவை கைது செய்யாதது ஏன் என்கிறார்

Posted: 07 May 2016 08:23 AM PDT

''ஊழல் செய்தவர்களை, சிறைக்கு அனுப்புவேன் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள சோனியாவை கைது செய்வதற்கு தைரியம் உள்ளதா,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதாகவும், பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, இந்த ...

நான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு: மதுரையில் ராகுல் சாடல்

Posted: 07 May 2016 10:54 AM PDT

மதுரை, :''நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தமிழகத்திற்கு தேவையில்லை. தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளது,'' என, மதுரையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்., துணை தலைவர் ராகுல் சாடினார்.

அவர் பேசியதாவது:அரசியலில் இரு வகை தலைவர்கள் உள்ளனர். ஒரு வகை தலைவர்கள், கடலை நோக்கி செல்லும் ஆறுகளை போல மக்களை நோக்கி செல்லக் கூடியவர்கள்; மக்களுடன் கலந்துரையாடுவர். அவர்களிடம் இருந்து பிரச்னைகளை தெரிந்து கொள்வர்; மக்களிடம் செல்லும் போது பலவற்றை தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.மற்றொரு வகை தலைவர்கள், ...

கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது: மதுரையில் ஸ்டாலின் உறுதி

Posted: 07 May 2016 10:56 AM PDT

மதுரை,:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

காங்.,- தி.மு.க., கூட்டணி சார்பில் மதுரை மேனந்தலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:நானும், ராகுலும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். என்னை பொறுத்தவரை தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். அவரை பொறுத்தவரை சகோதர மனப்பான்மை நிலவ நினைப்பவர். காங்.,- தி.மு.க., இணைந்து மத்தியிலும், மாநிலத்திலும் பல திட்டங்களை, சாதனைகளை நிகழ்த்தின. ஜனாதிபதி தேர்வு, பிரதமரை உருவாக்கியது, பொருளாதாரத்தை தலைநிமிர செய்தது, நல்லாட்சி, மதசார்பற்ற ஆட்சி ...

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கவுன்ட் டவுன்... துவக்கம்?

Posted: 07 May 2016 11:23 AM PDT

'தினமலர் - நியூஸ் 7' நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகளை, இன்று வெளியிடு கிறோம். இந்த முடிவுகள், ஒரு புதிய அரசியல் சூழல் நோக்கிய நகர்வை முன்னிலைப் படுத்துகின்றன.

அந்த நகர்வின் தாக்கம், இந்த தேர்தலில் ஓரளவிற்கு தெரியும் என்றாலும் இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தையும் உடைக்கும் அளவிற்கான வேகத்தை பெறவில்லை. ஆனால், தமிழக கட்சிகளின் சுதந்திர போக்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு உழைப்போடு தொடருமானால், நிச்சயம் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றத்திற்கான அறிகுறி, கருத்துக் கணிப்பு புள்ளி விவரங்களின் மூன்று அம்சங்களில் இருந்து ...

மீ்ண்டும் தி.மு.க., ஆட்சி

Posted: 07 May 2016 12:15 PM PDT

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

தாம்பரம் தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். ராஜாவை ஆதரித்துதி.மு.க.,தலைவர் கருணாநிதி தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேசியதாவது:தமிழக மக்கள் தி.மு.க.., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் எனவிரும்புகின்றனர். இது நடக்க வேண்டுமானால் தொண்டர்கள் அயராது உழைத்து தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கடசி வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். ...

அட்சய திருதியை தங்கம் விற்பனை தேர்தல் ஆணைய கெடுபிடியால் 'டல்'

Posted: 07 May 2016 12:45 PM PDT

தேர்தல் ஆணைய கெடுபிடிகளால், நடப்பாண்டு அட்சய திருதியைக்கு, தங்கம் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன. 'தீபாவளி மற்றும் அட்சய திருதியை சுப தினங்களில், தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும்' என்ற எண்ணம், சில ஆண்டுகளாக, தமிழக மக்களிடம் நிலவி வருகிறது. தங்க நகை கடைகளும், வாடிக்கையாளர்களை கவர, சுப தினங்களில், குறைந்த செய்கூலி, தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கும். இதனால், தங்கம் வாங்க பலரும், நகை கடை களுக்கு சென்று முன்பதிவு ...

பொதுப்பணி துறை திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

Posted: 07 May 2016 01:32 PM PDT

சென்னை:பொதுப்பணித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை ஆகியவற்றில், 110வது விதியின் கீழ் அறிவித்து, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் விவரத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

அவரது அறிக்கை:ஐந்தாண்டு காலத்தில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், பொதுப்பணித் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சார்பில் நிறைவேற்றிய திட்டங்களின் விவரங்கள் வருமாறு:பொதுப்பணித் துறை* காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்வள அமைப்புகளைவலுப்படுத்தி, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™