Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !

Posted: 07 May 2016 01:02 PM PDT

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம் ! என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், "நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ...

அன்னையர் அனைவருக்கும் , அன்னையர் தின நல் வாழ்த்துகள் !

Posted: 07 May 2016 12:24 PM PDT

அன்னையர் அனைவருக்கும் , அன்னையர் தின நல் வாழ்த்துகள் !  

அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?

Posted: 07 May 2016 12:13 PM PDT

சென்னை: சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்து இருந்தார். அதில் இலவச செல்போன் பற்றிய அறிவிப்புதான் பெரும்பாலோனோரை கவர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்தாலும் வந்தது, மக்கள் இது சாத்தியமா? தரமானதாக இருக்குமா? யார் டாப் அப் செய்வார்கள் என்று பேசத் துவங்கிவிட்டனர். ...

அடடா.. டாம் அன்ட் ஜெர்ரி மேல போய் இப்படி அபாண்டமா பழியைப் போடுறீங்களே!

Posted: 07 May 2016 12:05 PM PDT

அடடா.. டாம் அன்ட் ஜெர்ரி மேல போய் இப்படி அபாண்டமா பழியைப் போடுறீங்களே! கெய்ரோ: மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதமும், வன்முறையும் அதிகரிக்க யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. பின்லேடனா, மத வெறியா, சர்வாதிகார ஆட்சியாளர்களா.. இல்லைவே இல்லை. டாம் அன்ட் ஜெர்ரிதான் இந்த வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் காரணம் என்று கூறி எகிப்து அரசு அதிகாரி ஒருவர் அதிர வைத்துள்ளார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள கார்ட்டூன் கதாபாத்திரங்கள் டாம் அன்ட் ஜெர்ரி. இவர்களின் சேட்டைத்தனமாக ...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் - ருத்ர வீணை பாகம் 3 மற்றும் 4

Posted: 07 May 2016 11:55 AM PDT

வரலாற்றில் இன்று - மே

Posted: 07 May 2016 11:54 AM PDT

அக்ஷய திருதியை !

Posted: 07 May 2016 11:13 AM PDT

அக்ஷய திருதியை  கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம். சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை. (மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ...

யாருக்கு ஓட்டுப்போடலாம்? - சுஜாதா சொன்ன யோசனைகள்!

Posted: 07 May 2016 10:47 AM PDT

நான் வோட்டுப் போடத் தவறுவதே இல்லை. அதுவும் இந்த முறை வோட்டுப் போடுவது என் வாழ்வில் ஒரு நீண்ட எலெக்ட்ரானிக் பயணத்தின் நிறைவு. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில நகரத் தொகுதிகளில் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உருவ அமைப்பில், பாரத் எலெக்ட்ரானிக்ஸில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டவன் என்கிற தகுதியில் எனக்குத் தனிப்பட்ட திருப்தி. இந்தப் பயணம் பல வருடங்களுக்கு முன் கேரளாவில் பரூரில் துவங்கியது. முதன்முறையாக ஐம்பது இயந்திரங்களை, ஒரு தொகுதியின் பகுதியில் சோதனை முயற்சியாகப் ...

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா?

Posted: 07 May 2016 10:32 AM PDT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு, சோமகிரிமலையின் மலையடிவாரத்தில் கிழக்கே அமைந்துள்ள சிறிய கோயில் அழகுநாச்சி அம்மன் கோயில் . இந்த கோயில் கூரைகள், பிரித்து எடுக்காத நெற்கதிர்களால் வேயப்பட்டுள்ளது . பொதுவாக கிராமங்களில், எல்லா கோயில்களிலும் விவசாயிகள் வயலில் அறுவடைக்குபின் கிடைக்கும் நெற்பயிரை, நெல் மணிகளாகதான் காணிக்கை அளிப்பார்கள் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அறுவடை செய்த நெற்பயிற்களை பிரித்தெடுக்காமல், அப்படியே கூரையாக வேய்ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞரும் சமூக ஆர்வலருமான ...

சின்ன வயசு,பெரிய மனசு...

Posted: 07 May 2016 10:01 AM PDT

சும்மாவே சுடும் சென்னை தற்போது அக்னி நட்சத்திரத்தால் தகிக்கிறது. சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில் சூடு தாங்காமல் நடந்தும் வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள் ஒரு வீட்டில் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கிறார்கள். வீட்டு வேலை செய்பவர்கள்,கூரியர் பையன்கள்,ஆட்டோ ஒட்டுனர்கள்,கைவண்டி இழுப்பவர்கள்,தெருக்கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி சாப்பிட்டு தாகம் தீர்ந்து திருப்தியுடன் செல்கின்றனர்.இப்படியே அடுத்தடுத்த ...

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழ்கள் 2016

Posted: 07 May 2016 09:22 AM PDT

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழ்கள் 2016 மே http://www.mediafire.com/download/3amj98zv3w4s1yw/RKV_May2016.pdf ஏப்ரல் http://www.mediafire.com/download/8zly9stony8upfb/RKV_April2016.pdf மார்ச் http://www.mediafire.com/download/j93g6pw7n8y8a9v/RKV_March2016.pdf பெப்ரவரி http://www.mediafire.com/download/1x0yyd3tq0k2a60/RKV_Feb2016.pdf ஜனவரி http://www.mediafire.com/download/p31cjpe5qrpfz5p/RKV_Jan2016.pdf

தற்செயல் தானா

Posted: 07 May 2016 09:00 AM PDT

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும்! அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒன்று அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது! இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகள்!! 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ...

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Posted: 07 May 2016 08:53 AM PDT

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள் பிரேசிலைச் சேர்ந்தவர் ரிகார்டோ அஸிவேடோ. தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்திருக்கிறார். டி பவர் ஹெச்2ஓ (T Power H2O) என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருக்கிறார். பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், தண்ணீரில் உள்ள ...

சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

Posted: 07 May 2016 08:43 AM PDT

தூத்துக்குடி அருகே சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து 9 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவையனைத்தையும் பறிமுதல் செய்த ...

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

Posted: 07 May 2016 08:32 AM PDT

- பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க போராடும் பெங்களூரு மற்றும் புனே அணிகள் ஐபிஎல்லில் இன்று மோதுகின்றன. இதனால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இது வரை 9 போட்டிகளில் ஆடியுள்ள புனே அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வென்றே ஆகவேண்டும் ...

அஃறிணை நன்றிகள்

Posted: 07 May 2016 04:38 AM PDT

அஃறிணை நன்றிகள் எந்தன் வாயில் நுழைந்து பற்கள் இடுக்கில் இழைந்து பல்லின் சொத்தை குறைத்து போவாய் நீயும் விரிந்து எனக்கு காப்பாய் இருக்கும் பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே. எந்தன் உடலில் உராய்ந்து எந்தன் அழுக்கை தேய்த்து நன்றாய் நீயும் நுரைத்து போவாய் நீயும் கரைந்து எனக்கு காப்பாய் இருக்கும் சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே. எனக்கு அழகை சேர்த்து எந்தன் மானம் காத்து என்னால் நீயும் கிழிந்து போவாய் நீயும் அழிந்து எனக்கு காப்பாய் இருக்கும் உடையே !!! உனக்கு ...

சென்னையில் ஒரு செவ்வாய் கிரகவாசி!

Posted: 07 May 2016 02:02 AM PDT

'கிரேவிட்டி', 'இன்டர்ஸ்டெல்லார்' வரிசையில் விண்வெளி வீரர்களை மையப்படுத்தி வெளிவந்த 'மார்ஷியன்' திரைப்படமும் உலகளவில் பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்யச் செல்லும் குழுவுக்கு நேரும் பிரச்னையும் அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. இப்படி மனிதர்களே வேற்று கிரகத்துக்கு சென்று பிரச்னையில் மாட்டிக்கொள்கின்றனர். ஒரு மாற்றத்துக்கு இந்த ஏலியன்கள் நம் கிரகத்தில் அதுவும் நம் சென்னையில் சிக்கினால் எப்படியிருக்கும்? பறக்கும் ...

400 ரயில்வே ஸ்டேஷனில் வைபை

Posted: 07 May 2016 01:50 AM PDT

புதுடில்லி: இன்னும் ஒராண்டில் 400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்டெல் கார்ப்ரேஷன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் சைலேஷ் திவாரி கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா என்ற கனவு திட்டம் மிக வேகமாக முன்னெடுத்து செல்கிறது. இதில் இன்டர்நெட் சேவையில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கில் முக்கிய நகரங்களில் ரயில்வே நிலையம் சார்ந்த பகுதியில் தந்திஇல்லா இணைய தள வசதி வைபை இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக விஜயவாடா ...

முதல் பார்வை: 24 - மிஸ் ஆகாத டைமிங்!

Posted: 07 May 2016 01:44 AM PDT

- 'மனம்' தெலுங்குப் படத்தின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் குமாரின் படம், 'அஞ்சான்', 'மாஸ்' படங்களுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம், டைம் டிராவலை மையமாகக் கொண்ட படம் என்ற இந்தக் காரணங்களே '24' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆத்ரேயா என சூர்யா கர்ஜிக்கும் ட்ரெய்லர் யூடியூபில் செம ஹிட். படமும் அப்படியே இருக்க வேண்டும். சூர்யாவின் கிராஃப் எகிற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தோம். சூர்யாவின் பெயரை டைட்டில் கார்டில் போட்டவுடன் ...

வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Posted: 06 May 2016 09:59 PM PDT

இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை! - - கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர்.. இவர் தற்போது தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீப்ரியங்கா, சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பெயர் மாற்றம் குறித்து அவர் ...

சாதிக் கான் "லண்டன் மாநகர மேயராகிறார்"

Posted: 06 May 2016 09:43 PM PDT

- பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. - லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். வெள்ளி இரவு சுமார் பத்து மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™