Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை

Posted: 06 May 2016 09:09 AM PDT

புதுடில்லி: 'தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.

அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.இந்த நுழைவுத் தேர்வை ...

மத்திய அரசை கண்டித்து பேரணி: சோனியா, மன்மோகன் கைது

Posted: 06 May 2016 09:13 AM PDT

புதுடில்லி: மத்திய அரசை கண்டித்து, டில்லியில் காங்கிரஸ் சார்பில், பார்லிமென்ட் முற்றுகை பேரணி, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசு, ஜனநாயக விரோத போக்கை கடைபிடிப்பதாகக் கூறி, டில்லியில், காங்கிரஸ் சார்பில் நேற்று, பார்லிமென்ட் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தரிலிருந்து காங்கிரஸ் தலைவர், சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர், பார்லிமென்ட் நோக்கி ...

இந்திய வரைபடத்தில் பிழையா? : ரூ.100 கோடி அபராதம்; 7 ஆண்டு சிறை

Posted: 06 May 2016 09:15 AM PDT

புதுடில்லி,: தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தினால், 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பல்வேறு இணையதளங்கள், இணைய சேவைகளில், இந்திய வரைபடம் தவறாகக் காட்டப்படுகின்றன. குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும் காட்டப்படுகின்றன.இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டுவதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, நிலபரப்பு தகவல் கட்டுப்பாட்டு மசோதா கொண்டு வரப்பட ...

மலிந்து கிடந்த ஊழலுக்கு முடிவு கட்டினோம்!: தமிழக பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 06 May 2016 09:58 AM PDT

''இந்தியாவில், காங்., ஆட்சி காலத்தில் ஊழல் மலிந்து கிடந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலே நடக்கவில்லை,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்

தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சென்னையில், நேற்று பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் நிலக்கரி ஊழல் பெருகி கிடந்தது. அதில் மட்டும், 1.76 லட்சம் கோடி அளவுக்கு, காங்., ஆட்சியில் ஊழல் புரிந்துள்ளனர். அதில் கிடைத்த பணம், குடோனில் இருந்து வெளியே போய்க் கொண்டிருந்தது. பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், ஒரு ரூபாய் கூட நிலக்கரி துறையில் ஊழல் கிடையாது. நியாயமான முறையில் ...

மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: ஜெ., வேண்டுகோள்

Posted: 06 May 2016 10:01 AM PDT

சென்னை,:''உங்களுக்காக உழைக்க, மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்,'' என, முதல்வர் ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா, பிரசார வேனில் இருந்தபடி பேசியதாவது:அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது, பல மணி நேரம் மின் தடை இருந்தது. இதனால், எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தீர்கள் என்பதை மறக்கவே முடியாது. அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.உங்கள் ஆதரவோடு, அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.மீன்பிடி தடை கால நிவாரண ...

மக்களை ஏமாற்றும் அ.தி.மு.க., சென்னையில் கருணாநிதி எச்சரிக்கை

Posted: 06 May 2016 10:03 AM PDT

சென்னை :''உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் புதுவேகம் பாய்ச்ச, உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மூன்றாம் கட்ட பிரசாரத்தை, நேற்று மாலை, சென்னை யில் துவங்கினார். மாலை 5:00 மணிக்கு, கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்ட கருணநிதி, சேப்பாக்கம், ஐஸ்ஹவுஸ், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், அம்பத்துார், ஆவடி, பூவிருந்த வல்லி ஆகிய பகுதிகளில் பேசியதாவது:தமிழக தேர்தல் களத்தில், கடந்த சில நாட்களாக, தி.மு.க., கூட்டணிக்கு அபார வெற்றி கிடைக்கும் என, கருத்துக் ...

தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடையில்லை

Posted: 06 May 2016 10:31 AM PDT

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், இலவச அறிவிப்புகளுக்கு, சட்டத்தில் தடை ஏதும் இல்லை;

வேட்பாளர்களோ, அவர்களின் ஏஜன்ட்களோ, வாக்காளர்களை கவர்வதற்காக, துாண்டில் போட்டால் தான் குற்றம் என்கிறது சட்டம்.போட்டி போட்டு இலவசங்களை அள்ளி விடுகின்றன, அரசியல் கட்சிகள். அனைத்து கட்சிகளையும் மிஞ்சும் வகையில், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் இடம் பெற்றுள்ளன.கடந்த, 2006 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்த, கலர், 'டிவி' தான், பிரதானமாக பேசப்பட்டது. தி.மு.க.,வின் இந்த அறிவிப்புக்கு, அப்போதே வழக்கறிஞர் சுப்ரமணியம் பாலாஜி மூலம் ...

தமிழகத்தை காப்பாற்ற போவது யார்?ஆவேசம்! :தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கேள்வி

Posted: 06 May 2016 11:29 AM PDT

ஓசூர்:''பலமாக இருந்த தமிழகம், தற்போது மிகவும் மோசமாக உள்ளது. இப்போது நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல், எந்த கட்சி, எந்த எம்.எல்.ஏ., பதவிக்கு வருவார் என்பதற்காக இல்லை; யார் தங்களை காப்பாற்றுவர் என்பதற்காகத் தான் நடக்கிறது,'' என, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: என் இனிய வாக்காளப் பெருமக்களே... எனக்கு தமிழ் பாஷை தெரியாது; ஆனால், பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் நடக்கும் இந்த தேர்தல் ...

'ஸ்டிக்கர் ஒட்டிய தேர்தல் அறிக்கை'

Posted: 06 May 2016 12:25 PM PDT

சென்னை, : 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க., ஸ்டிக்கரை ஒட்டி, தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்கூறியதாவது: தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையை எடுத்து, அதில், அ.தி.மு.க., ஸ்டிக்கரை ஒட்டி, அதையே தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. ஸ்டிக்கர்ஒட்டுவதுதான் அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.தி.மு.க., அறிக்கையில் உள்ள நம்பர்களை மட்டும் மாற்றிப் போட்டு, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை என, வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல; 100 ...

வெளி மாநில மாட்டிறைச்சி சாப்பிட மஹாராஷ்டிராவில் ஐகோர்ட் அனுமதி

Posted: 06 May 2016 02:16 PM PDT

மும்பை: ''மஹாராஷ்டிராவில், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கான தடை தொடரும்; அதே நேரத்தில், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மாட்டிறைச்சிகளை வைத்திருக்க, சாப்பிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது,'' என, மும்பை ஐகோர்ட், நேற்று தீர்ப்பளித்தது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இங்கு, பசுவை இறைச்சிக்காக கொல்வது, பசு இறைச்சியை சாப்பிடுவதற்கு தடை விதித்து, 1976ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. பட்னவிஸ் தலைமையிலான அரசு, எருது மற்றும் எருமை மாட்டையும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™