Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Posted: 06 May 2016 12:28 PM PDT

- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்றும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. – இதில், அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதா வெளியிட்டார். – தேர்தல் ...

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Posted: 06 May 2016 11:57 AM PDT

- சென்னை, - ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிகொடுத்து தவித்த நடிகை வித்யூலேகா ராமன் தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பினார். - நகைச்சுவை நடிகை - நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யூலேகா ராமன். இவர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். நீதானே என் பொன் வசந்தம், வீரம், புலி, விண்ணைத்தாண்டி வருவாயா, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வேதாளம் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள். - வித்யூலேகா ராமன் கோடை விடுமுறைக்காக தோழிகளுடன் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். தலைநகர் ...

உண்மையின் கதறல்

Posted: 06 May 2016 11:53 AM PDT

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின் கதறல்... அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு! . உன் பத்து நிமிட ஆசைக்காக உயிர்எடுத்தது ஏனோ? . பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே என் பார்வதிக்கு! . இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில் பார்க்கதானா? அட மிருகமே! . விலைமகள் ஆயிரம் இருக்க என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ? . உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை! காமவலிதந்து சிதைத்தது ஏனோ? . அட காமவெறியனே! உன் குடிபோதை என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது! . ஐயஹோ! கண்மைஅழிந்தாலே ...

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…

Posted: 06 May 2016 05:30 AM PDT

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம் நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன. தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார் அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார். அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப் பலவாறு அவரை வசைபாடினார். அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, 'அவர் ஓர் அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு எல்லாம் கேட்டு மகிழ்ந்து ...

கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு வாங்கும் சம்பளம்

Posted: 06 May 2016 05:23 AM PDT

- உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வீராட் கோலி(இந்தியா)- ரூ. 5811.21 மகேந்திர சிங்டோனி (இந்தியா) – ரூ. 3638.30 கிறிஸ் கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்) – ரூ. 950.34 ஷாகித் அப்ரிடி(பாகிஸ்தான்) – ரூ. 798.19 வீரேந்திர ஷேவாக்(இந்தியா) – ரூ. 734.71 ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) – ரூ. 696.71 ஏபி டிவில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா) – ரூ. 696.71 கவுதம் கம்பீர் (இந்தியா)- ரூ. 633.15 யுவராஜ் சிங்(இந்தியா) ...

நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது

Posted: 06 May 2016 05:08 AM PDT

- பனார்ஜி, - நேபாள சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். - நேபாள நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி கோவா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. பாபுஷ் மொன்சரேட் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. - பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் கொடுத்து உள்ள வாக்குமூலத்தில் என்னுடைய வளர்ப்பு தந்தை மற்றும் மற்றொரு பெண் என்னை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுவிட்டனர் என்று கூறிஉள்ளார். எம்.எல்.ஏ. தன்னை வலுக்கட்டாயமாக மதுஅருந்த செய்து பாலியல் ...

ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை

Posted: 06 May 2016 01:20 AM PDT

எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான். இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது? சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள். டியர் சிக்கு, இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் ...

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Posted: 06 May 2016 12:44 AM PDT

- உலகிலேயே, அதிக மதிப்புள்ள ஒற்றை கரன்சிகளில் ஒன்றாக, 500 யூரோ மற்றும் 1,000 சுவிஸ் பிராங்க் ஆகியவை உள்ளன. – இந்நிலையில், 500 யூரோ, சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், குற்றச் செயல்களுக்கும் அதிகமாக பயன்படுவது தெரியவந்துள்ளது. – இதையடுத்து, 500 யூரோ அச்சடித்து வெளியிடுவதை, 2018ம் ஆண்டு இறுதியில் நிறுத்த உள்ளதாக, ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. – தற்போது புழக்கத்தில் உள்ள, 500 யூரோ கரன்சிகள் செல்லு படியாகும்; இந்த கரன்சிகளை கொடுத்து, ...

சக்தி - ஒரு பக்க கதை

Posted: 06 May 2016 12:37 AM PDT

- ''சார், வாங்க... விக்ரம் ரெடியாதான் இருக்கான். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்'' - மகனுடைய டியூஷன் மாஸ்டரை வரவேற்றார் சிவா. ''ம்... ஓகே சார்... நான் பார்த்துக்கறேன்!'' ''சார், ஒரு நிமிஷம்... விக்ரம் எப்படி படிக்கிறான் சார்?'' ''ஏங்க? நல்லாத்தான் படிச்சிட்டு இருக்கான்!'' ''இல்ல சார், அவன் வயசுப் பசங்க எல்லாம் முக்கியமான சப்ஜெக்ட்கள்ல நூற்றுக்கு நூறு வாங்கும்போது இவன் எப்பவும் 60, 70லயே நிக்கறான். அதான் என்ன பிரச்னைனு...'' - சிவா இழுத்தார். ''சார், ஒரு ...

ரஹானே 63*; புணேவுக்கு 3-ஆவது வெற்றி

Posted: 06 May 2016 12:34 AM PDT

- – ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். – இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணே 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 3-ஆவது தோல்வியாகும். – சுருக்கமான ஸ்கோர் – டெல்லி-162/7 – டுமினி 34 (32) கருண் நாயர் 32 (23) போலன்ட் 2வி/31 ரஜத் பாட்டியா 2வி/22 – புணே-166/3 – ரஹானே 63* (48) கவாஜா ...

மேக்கப் - ஒரு பக்க கதை

Posted: 05 May 2016 10:53 PM PDT

- 'ஃபேஷியலா... வீட்டுக்கே வந்து செய்து தருகிறோம். மேனகா பியூட்டி சர்வீசஸ்' - அலைபேசியில் ரீங்காரமிட்ட விளம்பரம், பாவனாவின் ஆசையைக் கிளறியது. - தன்னந்தனியாக வீட்டிலிருந்து போரடிக்கவே அழைத்து விட்டாள். ''ஒரு மணி நேரத்துல உங்க முகம் எப்படி ஜொலிக்கப் போகுது பாருங்க மேடம்'' - வந்த பெண் மயக்கும் குரலில் பேசினாள். - அவள் சொன்ன கட்டணமும் பியூட்டி பார்லரில் கேட்பதை விட மிகக் குறைவு. - க்ரீம், எண்ணெய் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இவள் முகத்தில் பூசத் தொடங்கினாள். நறுமணம் அறையை ...

போட்டோ - ஒரு பக்க கதை

Posted: 05 May 2016 10:52 PM PDT

- ''நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!'' - புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம் கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல் ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு போட்டோவாக பார்த்தான் பாஸ்கர். காலேஜ் லைப்ரரியில், கேன்டீனில், வகுப்பறையில், கிரவுண்டில்... இப்படி பல இடங்களில் எடுக்கப்பட்டவை. - பல படங்களில் ரேகா தனியாக இருக்க, சிலவற்றில் மட்டும் தோழிகள். பக்கத்தில் எந்தப் பையனும் இல்லை. கோ-எட் காலேஜில் ...

பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

Posted: 05 May 2016 10:32 PM PDT

- பட்டாபிராம் அருகே விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் வியாழக்கிழமை (மே 5) மோதிக் கொண்ட விபத்து காரணமாக, சென்னை -அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணம் – சென்னை மார்க்கத்திலும் இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். – திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு விபத்து நடத்த இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி உள்ளிட்டோர் பார்வையிட்டு, சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் ...

திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது

Posted: 05 May 2016 10:29 PM PDT

கவுகாத்தி: கடத்தல் தங்கத்தை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் ராணுவ கர்னல் உள்பட 8 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய- மியான்மர் எல்லையான மிசோரம் மாநிலத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்ததை, அசாமின் 39 அசாம் ரைபில்ஸ்படை பிரிவின் கர்னல் ஜஸ்ஜித்சிங் தலைமையில் ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர். இதில் கடத்தல் தங்கம், உரிய முறையில் மிசோரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவில்லை. மேலும் கடத்தல் காரர்களையும் தப்பி விட்டனர்.இது தொடர்பாக மிசோரம் அரசு புகார் ...

31 விரல்களுடன் சீன குழந்தை

Posted: 05 May 2016 10:28 PM PDT

- பீஜிங்: அரிய வகை நோய் காரணமாக, கை, கால்களில், 31 விரல்களுடன் பிறந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பெற்றோர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம், சீனாவில் பிறந்த, ஹாங் காங் என்ற குழந்தையின் கைகளில், 15 விரல்களும், கால்களில் 16 விரல்களும் இருந்தன. அதேசமயம், கட்டை விரல் இல்லை. 'பாலிடெக்டலிஜம்' என்று அழைக்கப்படும் இந்த அரிய நோய், மனிதர்கள், நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படுகிறது. ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை, இந்நோயால் பாதிக்கப்படுவதாக, அட்லாண்டாவின் ...

வானமே எல்லை: கவிஜி

Posted: 05 May 2016 10:22 PM PDT

- உனைக் கனவில் இட்டுக் கிடந்த மொட்டைமாடி இரவில் என் உடலெங்கும் நட்சத்திர வியர்வைகள்…. – பின்னிரவு அணைத்தலில் மீண்டும் வானம் மூடும் மேகத்தின் வண்ணம் இரவுதான்…. – அதிகாலைப் பனிகளின் பார்வைகளில் கூசிடும் நிர்வாணக் கூழாங்கற்களின் அசைவில்லா நீலநதி நாம்…. – விடிந்த பின் முகம் பொத்தி எழும் நீ யாருமற்ற நம் வெளியில் ஓடி பறந்து நிலவுக்குள் மறைந்து விடுகிறாய்… – ஒரு பகல் ஒரு யுகம் என நான் மீண்டும் வெறும் ஆடைகளோடு வானமாகிக் கிடக்கிறேன் மீண்டும் ஓர் இரவை எல்லைகள்தாண்டி ...

வானமே எல்லை: H ஹாஜா மொஹினுதீன்

Posted: 05 May 2016 10:21 PM PDT

- வானமே எல்லை என ; பறந்து செல்லும் பறவைகளும் ; தேவைக்கேற்ற உணவுகளை ; தேடி அலைந்து அடைகிறதே ! – படிப்பினையும் அதிலுண்டு ; பரந்த மனதோடு நீ யோசி ! – ஐந்தறிவு விலங்கினமும்; அலைகிறதே அதன் தேவைக்காக ! எல்லை ஒன்றும் அதற்கில்லை ; ஏமாந்தும் திரும்புவதுமில்லை ! – ஏற்க மறுக்கும் ஆறறிவோ; எல்லை ஒன்றை வகுத்துக்கொண்டு ! ஏய்ச்சி பேச்சி வாழ்கிறதே ; ஏளனமாய் திரிகிறதே ! – எண்ணத்தை ஏணியாக்கி ; எரிமலையை துடுப்பு போட்டு ; ஏழ்மையை விரட்டியடிக்க ; எழுந்துவா! விண்ணைத்தொட ...

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

Posted: 05 May 2016 10:17 PM PDT

- - கடந்த 2-6-2014 'குங்குமம்' இதழில், பாம்பன் சுவாமிகள் அருளிய 'குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை' பாடலைப் பற்றி டாக்டர் சிவகடாட்சம் குறிப்பிட்டிருந்தார். ஏராளமான வாசகர்கள் அ ந்தப் பாடலைப் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காக… – —————- 1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்  மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்  கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ  நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே   – 2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்  மேவு முறுப்புநிழல் ...

கட்சி ஆபிசில எதுக்கு நாலு பூட்டு தொங்குது..?

Posted: 05 May 2016 10:13 PM PDT


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™