Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தாக்குதலுக்கு ஆளாவதில் சந்தோஷமே'

Posted: 03 May 2016 08:43 AM PDT

புதுடில்லி, :''என்னை குறிவைத்தே, எப்போதும் தாக்குதல் நடத்தப்படுகிறது; இதில், எனக்கு சந்தோஷமே,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பா.ஜ.,வை சேர்ந்த, கிரித் சோமையா, வி.வி.ஐ.பி.,க்களுக்கு, 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட விவகாரத்தில், காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு எதிராககுற்றம் சாட்டியுள்ளார். கிரித் சோமையா, கூறியுள்ளதாவது:ராகுலின் மூத்த உதவியாளர் கனிஷ்கா சிங், அகஸ்டா வெஸ்ட்லேண்ட்நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில், இடைத் தரகராக செயல்பட்டவருடன் நெருங்கிய ...

பார்லிமென்டிற்கு அ.தி.மு.க., 'மட்டம்'

Posted: 03 May 2016 08:50 AM PDT

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம், கடந்த, 25ல் துவங்கியது; வரும், 13ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மிக முக்கிய அலுவல்களாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடக்கிறது.

பல முக்கிய பிரச்னைகள் அலசப்பட்டு, எம்.பி.,க்கள், தங்கள் கோரிக்கைகளை உறுதியாக வைத்து, வாதாடி வருகின்றனர். ஆனால், கூட்டத் தொடர் துவங்கியதிலிருந்து, தமிழக எம்.பி., க்கள் ஒருவர் கூட, லோக் சபாவில் இல்லை. அ.தி.மு.க.,வின், 37 எம்.பி.,க் களின் இருக்கைகளும் காலியாக கிடக்கின்றன. தமிழகத்தில் திறன் மேம்பாட்டு தொழில் சார்ந்த ஏராள மான தொழிலாளர்களுக்கு, பல பிரச்னைகள் உள்ளன. திறன் ...

மதுரையில் மருந்தியல் ஆராய்ச்சி மையம்... வருமா? கேட்டது ரூ.174 கோடி; கொடுத்தது ரூ.1 கோடி

Posted: 03 May 2016 09:55 AM PDT

தமிழகத்தின் மதுரையில், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற் காக, 174 கோடி ரூபாய் ஒதுக்கீடு கேட்ட நிலையில், பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நாட்டிலேயே மிகப்பெரிய மருந்தியல் கல்வி மையமாக அமைய வேண்டிய மதுரை திட்டம், தாமதமாகிறது.

உலகளவில் மருந்து தயாரிப் பில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. மருந்து தயாரிப்பு தொழிலிலுள்ள ஏராளமான வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தரமான, சிறந்த கல்வித்தகுதி உடையவர்களை உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டது, 'நைபர்' எனப்படும், தேசிய மருந்தியல் கல்வி ...

2 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 03 May 2016 09:57 AM PDT

புதுடில்லி:மத்திய அரசின் இரண்டாண்டு சாதனை களை, பொதுமக்களிடம் சேர்க்கும்படி, பா.ஜ., - எம்.பி.,க்களை, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில், பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது: பொது மக்களுக்கு, மத்திய அரசு அளித்த பல்வேறு வாக்குறுதிகள்அனைத்தும் நிறைவேற்றியது, மகிழ்வை அளிக்கிறது. சமையல், 'காஸ்' பயன்பாடு, நாடு முழுவதும்அதிகரித்துள்ளது.அரசின், 'முத்ரா' திட்டத்தின் கீழ் எண்ணற்றோர் பயன் ...

எம்.பி.,க்கள் சம்பள உயர்வு பிரதமர் அலுவலகம் 'கொக்கி'

Posted: 03 May 2016 10:00 AM PDT

புதுடில்லி,:எம்.பி.,க்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது குறித்து, எம்.பி.,க்களே முடிவு செய்வதை, பிரதமர் மோடி விரும்பவில்லை. அதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தை இரட்டிப்பாகும் பார்லி., குழுவின் பரிசீலனையை முடிவு செய்வதில், தாமதமாகும் என தெரிகிறது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, மாதச் சம்பளம், பல்வேறு படிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன. முன்னாள் எம்.பி.,க்க ளுக்கு ஓய்வூதியமும், பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.எம்.பி.,க்களின் சம்பளம், கடைசியாக, கடந்த 2010ல் திருத்தி அமைக்கப்பட்டது. உயர்ந்து வரும் விலைவாசி, அதிகரித்து வரும் செலவினங்களை ...

ரூ.100 கோடி மதிப்பு தமிழ்த்தாய் சிலை திருடு போனதா: மதுரையில் கருணாநிதி காட்டம்

Posted: 03 May 2016 10:24 AM PDT

மதுரை:''சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ரூ.100 கோடி மதிப்பில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என ஜெயலலிதா கூறினார். அந்த சிலை நிறுவப்பட்டதா, சிலை எங்கே போனது. கள்வர் திருடி சென்று விட்டனரா?'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று காட்டமாக கேள்வி எழுப்பி னார்.

மதுரையில் நேற்றிரவு தி.மு.க.,-காங்., வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 2013 மே 14ல் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என்றார். நான் மேடைக்கு வந்ததும் சுற்றி ...

அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted: 03 May 2016 10:31 AM PDT

அ.தி.மு.க.,வில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., சார்பில், ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் பணிகளை கவனிக்க, வேறு தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அவர்கள், அதிருப்தியாளர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தல் பணியாற்றுவர். இது, வேட்பாளருக்கு உதவியாக இருக்கும்.ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தலுக்கு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இதனால், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆள் இல்லாமல் வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் ...

விஜயகாந்தை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் வினோதம்

Posted: 03 May 2016 10:32 AM PDT

உளுந்துார்பேட்டை தொகுதியின் அ.தி.மு.க.,- -- தி.மு.க., வேட்பாளர்கள் விஜயகாந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க., - -ம.ந.கூ., முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், தற்போதைய எம்.எல்.ஏ., குமரகுரு, தி.மு.க., சார்பில் வசந்தவேல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.தொகுதியில் தனக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால்,விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். வரும் 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை பிரசாரம் செய்ய விஜயகாந்த் முடிவு ...

'தினமலர் - நியூஸ் 7' கருத்து கணிப்பு ஏற்படுத்திய அதிர்வலை... பிரமிப்பு!:தமிழகம் முழுவதும் பொதுமக்கள், கட்சி சாராதோர் வரவேற்பு

Posted: 03 May 2016 10:46 AM PDT

தமிழக வாக்காளர்களின் மனநிலையை படம் பிடித்தும் காட்டும் விதமாக, 'தினமலர்' நாளிதழும், 'நியூஸ் 7' தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முதல் முறையாக, மிக பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக, பொது மக்களும், கட்சி சாராதோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் களின் எண்ண ஓட்டத்தை அறியும் வகையில், தலா, 1,000 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. ...

விமான விற்பனையில் பாக்.,கிற்கு கிடுக்கிப்பிடி போட்டது அமெரிக்கா

Posted: 03 May 2016 02:12 PM PDT

வாஷிங்டன் : 'எப்-16' ரக போர் விமானங்களை, முழு தொகையையும் செலுத்தி, வாங்கிக் கொள்ளும்படி, பாகிஸ்தானை, அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு, எட்டு, 'எப்-16' ரக போர் விமானங்களை, மானிய விலையில், விற்பனை செய்ய, அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்தார். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக, இந்த விமானங்கள் வழங்கப்படுவதாக, அமெரிக்கா விளக்கம் அளித்தது. ஆனால், 'பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக, அந்த விமானங்களை பயன்படுத்தும் ஆபத்து உள்ளது' என, அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™