Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எஸ்.ஆர்.பி.,க்கு எம்.பி., பதவி தந்து வாசனுக்கு புத்தி புகட்டிய ஜெ.,

Posted: 25 May 2016 09:17 AM PDT

சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்.

இதன்மூலம், 'அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற விரும்பாமல், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டம் பிடித்த, த.மா.கா., தலைவர் வாசனுக்கு, பாடம் புகட்டப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற விரும்பிய து. கூட்டணி தொடர்பாக, நடத்தப்பட்ட பேச்சில், வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், கட்சி அடிப்படையில், ...

விளைபொருள் வாரிய தலைவர் பதவிகளில்அதிரடி அதிகாரிகளுக்கு பதிலாக அரசியல்வாதிகள் நியமனம்

Posted: 25 May 2016 09:48 AM PDT

காபி, தேயிலை, ரப்பர், புகையிலை போன்ற விளைபொருட்கள் வாரியங்களின் தலைவர் பதவிகளுக்கு, இனிமேல் அரசியல்வாதிகளை நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், இந்த வாரியங்களின் செயல்பாடுகள் வேகமெடுக்குமென, மத்திய அரசு நம்புகிறது. கடுமையான வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, சர்வதேச போட்டி, மற்ற நாடுகளின் ஆதிக்கம் என பல காரணங்களால், விவசாய விளைபொருட்களின் உற்பத்தியும், வர்த்தகமும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. விளைபொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு பல திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை.
உரிய ...

2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் மத்திய அமைச்சரவையில் முடிவு

Posted: 25 May 2016 09:49 AM PDT

புதுடில்லி,:'தேசிய மூலதன பொருட்கள் உற்பத்திகொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், 2.10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும்' என, அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அரசு செய்தி தொடர்பாளர்கூறியதாவது: மூலதன பொருட்கள் உற்பத்தி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், இத்துறையில், 2014 - 15ம் ஆண்டு நிலவரப்படி, 2.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ள உற்பத்தி, 2025ம் ஆண்டு, 7.5 லட்சம்கோடி ரூபாயாக ...

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு

Posted: 25 May 2016 09:51 AM PDT

கோல்கட்டா,:'மேற்கு வங்கத்தில், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த மாட்டோம்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம், கையெழுத்து வாங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அசாம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த அந்த கட்சி, மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களிலும், பெரிய வெற்றியை ஈட்ட வில்லை. புது ரத்தம்இதனால், 'காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பிரியங்காவை, கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்' என, கட்சியின் ...

'டுவிட்டரில்' கலக்கும் அமைச்சர்: மாயமான மாணவியர் மீட்பு

Posted: 25 May 2016 10:00 AM PDT

மும்பை:பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், வீட்டை விட்டு வெளியேறிய இரு மாணவியர், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் துரித நடவடிக்கையால், பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராக இருப்பவர், சுரேஷ் பிரபு. ரயில் பயணத்தின் போது, பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து, பிரபுவின் டுவிட்டர் பதிவில் புகார் தெரிவித்தால், அப்புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயணிகள் பலரும், இந்த வகையில் பலனடைந்துஉள்ளனர்.இந்நிலையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவியர் இருவர், ...

எம்.எல்.ஏ.,வாக 13வது முறை பதவியேற்றார் கருணாநிதி

Posted: 25 May 2016 10:43 AM PDT

தமிழகத்தின், 15வது சட்டசபையில், 13வது முறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று எம்.எல்.ஏ.,வாக, பதவியேற்றார். அதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்கு வந்தார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதன் முதலாக, 1957 சட்டசபை தேர்தலில், குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த அனைத்து சட்டசபை தேர்தலிலும், வெற்றி பெற்று வருகிறார்.இம்முறை, 13வது முறையாக, திருவாரூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். சட்டசபையில்,அவர் சக்கர நாற்காலியுடன் சென்று அமர, வசதி செய்து தரப்படாததால், ஐந்து ஆண்டுகளாக, சட்டசபைக்கு வராமல் இருந்தார். ...

முதல்வர் உட்பட 230 எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு

Posted: 25 May 2016 10:46 AM PDT

சட்டசபையில் 16 பெண் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, 230 எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர்.

தமிழகத்தில், 15வது சட்டசபையின் முதல் கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு, சட்டசபை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க, காலை, 9:00 மணி முதல், உறுப்பினர்கள் வரத் துவங்கினர்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு புறமும், எதிர்புறத்தில் தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ., க்களும் அமர்ந்தனர். அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, இருக்கை எண்ணின்படி அமர்ந்தனர். காலை, 10:48 மணிக்கு, ஸ்டாலின் உள்ளே வந்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, மேஜையை தட்டி வரவேற்றனர். அடுத்து, 10:53 ...

சபாஷ்!10ம் வகுப்பு தேர்வில் 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி:499 மதிப்பெண்கள் பெற்று இருவர் முதலிடம்

Posted: 25 May 2016 10:58 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடமும்; 53 பேர், இரண்டாம் இடமும்; 230 பேர், மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில், 77 ஆயிரம் பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 10.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; 10.12 லட்சம் பேர் பங்கேற்றனர். 4.64 லட்சம் மாணவர்கள்; 4.84 லட்சம் மாணவியர் ...

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? * சென்னை ஐகோர்ட் வேதனை

Posted: 25 May 2016 01:07 PM PDT

சென்னை:'மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, இந்தி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்துவது போல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை துவங்க ...

உ.பி.,யில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா

Posted: 25 May 2016 01:44 PM PDT

புதுடில்லி : அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமித் ஷா தெரிவித்ததாவது: உ.பி., மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளது. அத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியை தோற்கடித்து பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். அதற்கான யுக்தி கையாளப்படும். உ.பி., மாநில முதல்வர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் குஜராத் சட்டசபை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™