Tamil News | Online Tamil News |
- 'ஸ்மார்ட் சிட்டி' போட்டியில் தமிழகம் 'அவுட்': அதிகாரிகளின் மெத்தனத்தின் விளைவு
- உ.பி.,யில் மாயாவதிக்கு 150 சிலைகள்: அட்டகாசமான பிரசாரம் ஆரம்பம்
- தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த சீன அரசு புதிய கணக்கு இந்திய எல்லை வரை ரயில் பாதை அமைக்க திட்டம்
- 'உறுப்பினர்கள் 25 லட்சம் ஓட்டு 10 லட்சமா'
- தி.மு.க., என்றைக்கும் தோற்காது செயற்குழுவில் கருணாநிதி பேச்சு
- தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்கள் பட்டியல் குளறுபடி
- கல்வி கடன் வட்டி சலுகை அளிப்பதில் மந்தம் பலன் பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் தான்
- எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்தால் மாணவர்கள்...மகிழ்ச்சி! ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
- தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற விருப்பம்:ஜெ., அறிக்கையால் அரசியல் அரங்கில் பரபரப்பு
- வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி
- தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த சீன அரசு புதிய கணக்கு :இந்திய எல்லை வரை ரயில் பாதை அமைக்க திட்டம்
- ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
| 'ஸ்மார்ட் சிட்டி' போட்டியில் தமிழகம் 'அவுட்': அதிகாரிகளின் மெத்தனத்தின் விளைவு Posted: 24 May 2016 08:38 AM PDT 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின் தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தை சேர்ந்த, 12 நகரங்கள் உட்பட, நாடு முழுவதும், 98 நகரங்களை மத்திய அரசு,' ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு தேர்வு செய்தது. விரைவாக திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதல், 20 நகரங்களின் பட்டியல் ஜன., 28ல் வெளியிடப்பட்டது. சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இதில் பின்தங்கிய ... |
| உ.பி.,யில் மாயாவதிக்கு 150 சிலைகள்: அட்டகாசமான பிரசாரம் ஆரம்பம் Posted: 24 May 2016 08:40 AM PDT லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்திற்காக, மாயாவதியின், 150 உருவச் சிலைகளை வடிவமைக்கும் பணியில், பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிஉள்ளன.பிரசார திட்டம், வேட்பாளர் தேர்வு, , ஆலோசனை கூட்டம் என, இப்போதே, அனல் பறக்கிறது. ஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பகுஜன் சமாஜ், பிரசாரத்தை ... |
| தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த சீன அரசு புதிய கணக்கு இந்திய எல்லை வரை ரயில் பாதை அமைக்க திட்டம் Posted: 24 May 2016 09:27 AM PDT புதுடில்லி: தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும், இந்தியாவை மட்டுப்படுத்தவும், சீனா புதிய கணக்கை போட்டு வருகிறது. இதற்காக, திபெத் வழியாக நேபாளத்தை, ரயில், சாலை மூலம் இணைக்கும் திட்டத்தை, இந்தியா வரை நீட்டிக்க சீனா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவும் இந்தியாவும், தெற்காசியாவில் மிகவும் வலுவான நாடாகத் திகழ முயற்சி மேற் கொண்டு வருகின்றன. சீனா, தெற்கு சீனக்கடல் பகுதியை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்தியாவுடன் எல்லை பிரச்னை உள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா வலுவடைந்து வருவது சீனாவுக்கு ... |
| 'உறுப்பினர்கள் 25 லட்சம் ஓட்டு 10 லட்சமா' Posted: 24 May 2016 09:46 AM PDT தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து, மாவட்ட செயலர்களுடன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டாம் நாளாக ஈரோடு, நீலகிரி, திருப்பூர், பெரம்பலுார், அரியலுார் உட்பட, 20 மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர்.அப்போது, '10 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற முடியாதது ஏன்' என, மாவட்ட செயலர்களிடம், விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறிய தாவது: தே.மு.தி.க.,வில், மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர் என, மாவட்ட செயலர்களிடம் விஜயகாந்த் கேட்டுள்ளார். அதற்கு மாவட்ட செயலர்கள், 25 லட்சம் பேர் என, கூறியுள் ளனர். ... |
| தி.மு.க., என்றைக்கும் தோற்காது செயற்குழுவில் கருணாநிதி பேச்சு Posted: 24 May 2016 09:52 AM PDT ''தி.மு.க.,வை அழிக்கலாம் என, நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டனர்; இனி, நாம் யாருக்கும் பயப்படாத அடியாக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு, துணை போகாத அடியாக, எடுத்து வைக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சென்னையில், நடந்த தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:நான் உங்களுக்கெல்லாம், இப்போது அறிவுரை எதுவும் கூறப் போவதில்லை. ஏனென்றால், உங்களுக்கெல்லாம், இனிமேல் அறிவுரை எதுவும் தேவையில்லை. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஏற்கனவே தேவையான அறிவுரைகளை பெற்றுள்ளீர்கள்.இனிமேலாவது, நாம் எப்படி செயல்பட வேண்டும் ... |
| தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்கள் பட்டியல் குளறுபடி Posted: 24 May 2016 10:30 AM PDT தமிழக அரசு இணைய தளத்தில், அமைச்சர்கள் பட்டியலை, முறையாக வெளியிடாமல் குழப்பம் செய்திருப்பது, பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், நேற்று முன்தினம் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, அமைச்சர்கள் பெயர் மற்றும் புகைப்படம், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சட்டசபை இணைய தளத்தில், முறையாக வெளியிடப்படவில்லை.பழைய அமைச்சரவை பட்டியலில், சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் பெயர் வரிசையாக இடம் பெற்றுள்ளது. ... |
| கல்வி கடன் வட்டி சலுகை அளிப்பதில் மந்தம் பலன் பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் தான் Posted: 24 May 2016 10:43 AM PDT 'கல்வி கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ், 20 சதவீதம் மாணவர்களே பயன் பெற்றுள்ளனர்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு, கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி அளிக்கும் திட்டம், 2009 - 2014ம் ஆண்டுக்கு அறிவிக்கப் பட்டது. இதற்கு, 'வட்டாட்சியர் கையெழுத்து பெற்று, உரிய படிவத்தில் வங்கிகளுக்கு அளிக்க வேண்டும்' என, மாணவர்கள், பெற்றோர் அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில், வட்டித் தள்ளுபடி பெற்றவர்கள் விவரம் குறித்து, மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கல்வி கடன் பெற்ற மாணவர் களுக்கு, வட்டி ... |
| Posted: 24 May 2016 10:43 AM PDT எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. 'இந்த நுழைவுத் தேர்வை இந்த ... |
| தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற விருப்பம்:ஜெ., அறிக்கையால் அரசியல் அரங்கில் பரபரப்பு Posted: 24 May 2016 10:49 AM PDT தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தி.மு.க., உடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக, 6வது முறையாக நேற்று முன்தினம் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். அவரது அமைச்சரவை பதவியேற்பு விழாவில், அரசியல் வேறுபாடுகளை மறந்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., - எம்.எல்.ஏ., க்களுடன் பங்கேற்றார். ஆனால், ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட ... |
| வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி Posted: 24 May 2016 12:44 PM PDT ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் நிலவி வருகிறது. இதுபோலவே, தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 'ரோனு' புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி வருகிறது. அடிலாபாத், மெகபூப் நகர், கரீம்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த கோடைகாலத்தில், ... |
| தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்த சீன அரசு புதிய கணக்கு :இந்திய எல்லை வரை ரயில் பாதை அமைக்க திட்டம் Posted: 24 May 2016 02:05 PM PDT புதுடில்லி:தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும், இந்தியாவை மட்டுப்படுத்தவும், சீனா புதிய கணக்கை போட்டு வருகிறது. இதற்காக, திபெத் வழியாக நேபாளத்தை, ரயில், சாலை மூலம் இணைக்கும் திட்டத்தை, இந்தியா வரை நீட்டிக்க சீனா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவும் இந்தியாவும், தெற்காசியாவில் மிகவும் வலுவான நாடாகத் திகழ முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சீனா, தெற்கு சீனக்கடல் பகுதியை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்தியாவுடன் எல்லை பிரச்னை உள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா வலுவடைந்து வருவது ... |
| ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள் Posted: 24 May 2016 02:17 PM PDT புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 25,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |