Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகைக்கு முதல் கையெழுத்து அசத்தல்! மதுவிலக்கிற்கு அச்சாரமாக 'டாஸ்மாக்' பணி நேரத்தையும் குறைத்தார்

Posted: 23 May 2016 09:22 AM PDT

தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை உள்ளிட்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்தும் அறிவிப்புகளில் நேற்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 7,566 கோடி ரூபாய்க்கான சலுகைகள் அறிவித்து அசத்தி உள்ளார். முக்கியமாக மதுவிலக்கிற்கு அச்சாரமாக 'டாஸ்மாக்' பணி நேரத்தில் இரண்டு மணி நேரத்தை குறைத்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்து, தைரியமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க., 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை ...

'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது... அம்பலம்1 :விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

Posted: 23 May 2016 09:27 AM PDT

தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் பரவலாக விற்பனையாகும், 38 வகை பிரெட்களில், 32ல், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது, சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. சி.எஸ்.இ., துணை பொது இயக்குனர் சந்திரபூஷண் கூறியதாவது:பிரெட் ...

ராஜ்யசபாவில் ஜொலிக்குமா அ.தி.மு.க.?

Posted: 23 May 2016 09:28 AM PDT

லோக்சபாவில், மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள நிலையில், ராஜ்யசபாவிலும், நான்காவது பெரிய கட்சியாக உருவெடுக்கப்போகும் அ.தி.மு.க., இனிமேலாவது, பார்லிமென்ட் நடவடிக்கைகளில் ஜொலிக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், பெரும் வெற்றியை பெற்று, அ.தி.மு.க.,விலிருந்து, 37 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், பா.ஜ., - காங்., ஆகிய இரு கட்சிகளுக்கு அடுத்து, மூன்றாவது பெரிய கட்சியாக, லோக்சபாவில் அ.தி.மு.க., உருவெடுத்துள்ளது.
நான்காவது கட்சி
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றதன் மூலம், ராஜ்யசபாவில், ...

'தோல்வியால் துவண்டு விடாதீர்!' மா.செ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை

Posted: 23 May 2016 09:32 AM PDT

'தேர்தல் தோல்வியால், துவண்டுவிட வேண்டாம்' என, மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் உட்பட, அனைத்து வேட்பாளர்களும், 'டிபாசிட்' இழந்துள்ளனர்.இந்த தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய தோல்வி,அக்கட்சியினரை சோகத்தில் மூழ்கடித்து உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரும், கடன் நெருக்கடியில் சிக்கும் நிலையில்உள்ளனர்.இந்நிலையில், மாவட்ட செயலர்களின் ...

ஆறாவது முறையாக முதல்வராக ஜெ., பதவியேற்பு: 28 அமைச்சர்களும் ஆண்டவன் பெயரில் உறுதிமொழி

Posted: 23 May 2016 09:37 AM PDT

தமிழக முதல்வராக, ஆறாவது முறையாக, ஜெயலலிதா நேற்று பதவியேற்றார். அவருடன், 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும், ஆண்டவன் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 134 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க., சட்டசபை குழுத் தலைவராக, ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா, நேற்று சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.அரங்கம் முழுவதும், மலர்களாலும், மின் விளக்குகளாலும் ...

திருந்தாத ஜெயலலிதா கருணாநிதி ஆவேசம்

Posted: 23 May 2016 09:43 AM PDT

சென்னை,: ஸ்டாலினுக்கு பின்வரிசை ஒதுக்கியதன் மூலம் திட்டமிட்டு தி.மு.க.வை அவமானப்படுத்தும் ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை, என கருணாநிதிகூறினார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை நுாற்றாண்டு விழா மண்டபத்தில், நேற்று நடைபெற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில், சமீபத்தில் நடைபெற்றதேர்தலில், 89 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமரும் தகுதி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு, கூட்டத்தோடு கூட்டமாக அமர இடம் கொடுத்துள்ளனர்.அதே நேரத்தில், தேர்தலில்தோல்வி அடைந்த நடிகர்சரத்குமாருக்கு முதல் ...

மீண்டும் தலை தூக்கியது வெயில் : பொதுமக்கள் அவதி

Posted: 23 May 2016 10:00 AM PDT

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் மீண்டும் தலை துாக்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம் முழுவதும், கடந்த வாரம் பரவலான மழை பெய்தது. இதனால், வெப்பம் ஓரளவு தணிந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்ததால், கடும் கோடையில் இருந்து தப்பிய மக்கள் மகிழச்சி அடைந்தனர்.காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, ஆந்திரா, ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. இதனால், தமிழகத்தில், மீண்டும் வறண்ட வானிலை நிலவுகிறது. அத்துடன், கடல் காற்று தரைப்பகுதிக்கு வராததாலும், ...

மூட வேண்டிய 500 மது கடைகள் :பட்டியல் தயாரிப்பில் 'டாஸ்மாக்'

Posted: 23 May 2016 10:06 AM PDT

மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, 'டாஸ்மாக்' நிறுவனம் தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,803 மது கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய் மதிப்பிலான மது, பீர் வகைகள் விற்பனையாகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, 504; மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, 1,500 கடைகள் உள்ளன.

மது அருந்தி விட்டு, வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த, 504 கடைகள், 2013ல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.மாநில நெடுஞ்சாலைகளை ...

வரலாற்று சிறப்புமிக்க 'சாபஹார்' ஒப்பந்தம்: இந்தியா - ஈரான் இடையே கையெழுத்து

Posted: 23 May 2016 10:20 AM PDT

டெஹ்ரான்,:ஈரான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க, 'சபாஹர்' துறைமுகம் உள்ளிட்ட மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியா, பெட்ரோலிய தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வந்ததுடன், அந்நாட்டுடன் நீண்ட கால கலாசார உறவையும் கொண்டிருந்தது. அந்நாடு மீது ஐ.நா., விதித்த பொருளாதார தடையால், பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் இந்தியா இருந்தது. தற்போது தடை நீக்கியதால், புதிய வாய்ப்புகள் ...

கார்த்தி சிதம்பரம் மீதான நடவடிக்கை: அமலாக்கத்துறை தீவிரம்

Posted: 23 May 2016 01:42 PM PDT

புதுடில்லி: 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் வாங்கி குவித்த விவகாரத்தில் பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி விவரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் கிடைத்த பணத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், பிரிட்டன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, கிரீஸ், யு.ஏ.இ. , அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, சொத்துகளை குவித்ததாக கடந்த மார் மாதம் 'தி பயோனியர்' ஆங்கில நாளிதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டது. இதையடுத்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™