Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தெரிஞ்சுக்கவும், புரிஞ்சுக்கவும் இவ்வளவு நாள் ஆச்சா?

Posted: 23 May 2016 10:58 AM PDT

இப்பல்ல புரியுது... இவன் இவ்வளவு நாள் எதுக்கு இப்படி, 'அத்தே அத்தே'ன்னு வளைய வந்தான்னு...' என்று அத்தைக்காரி, தன் அண்ணன் மகனைப் பற்றி கூறியது, எதற்கு என்பது, இந்நேரம் உங்களுக்கு பிடிபட்டிருக்கும். எந்த ஒரு செயலும், ஒருமுறை இயல்பாகவும், தற்செயலாகவும் நடக்கலாம். அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நடக்கும் போது, அதில் ஏதோ, 'சம்திங்' இருக்கிறது என்பது தெளிவு. இந்த உள்நோக்கம் ஆராயப்பட்டால், நாம் விழித்து விட்டோம் என்று பொருள். இந்த அத்தைக்காரிக்காவது, தான் விரும்பியது நடந்ததில் சந்தோஷம். பல நேரங்களில், ...

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1

Posted: 23 May 2016 10:47 AM PDT

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம்ஓங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க அருள்கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க வளர்கருணை மயம்ஓங்கிஓர் வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க உய்கின்ற நாள்எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி ...

காவல்காரக் கடவுள்!

Posted: 23 May 2016 10:40 AM PDT

செல்வத்தின் பயன், ஈதல்; ஆனால், எல்லாருக்கும், கொடுக்கும் மனம் வருவதில்லை. மாகவி என பெயர் பெற்றவர் துளசிதாசர்; ஸ்ரீராமர் பெருமையை பரவச் செய்யவே, தான் பிறந்ததாக நினைத்தவர். அவர் செய்யும் தெய்வத் தொண்டுகளுக்காக, அடியார்கள் அள்ளிக் கொடுத்தனர். இதனால், ஏராளமான சாதுக்கள் அவர் இல்லத்திற்கு வருவதும், அங்கேயே தங்குவதுமாக இருந்தனர். அந்த சாதுக்களில், நான்கு பேர் மட்டும், அங்கு குவிந்திருக்கும் செல்வத்தை எப்படியாவது திருடிச் சென்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினர். அன்று அமாவாசை இரவு; எல்லாரும் ...

கனவுகளை துரத்தி, வாழ்க்கையை தொலைப்பவர்கள்!

Posted: 23 May 2016 10:36 AM PDT

கிளம்ப கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பதற்றமாக, திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது, நல்லவேளையாக சென்னை சென்ட்ரலுக்கான மின்சார ரயில், நிலையத்தில் நின்றிருந்தது. அவசரமாக ஒரு பெட்டியில் ஏறி, கூட்டத்தைக் கிழித்து முன்னேறி, ஜன்னலோரத்தில் வசதியாய் சாய்ந்து நின்றேன். ரயில் கிளம்ப இருந்த தருணத்தில், ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தவன், ''ட்ரெயின் கிளம்பப் போகுது; இன்னும் நீ ஸ்டேஷனுக்கே வரலயா... உன்னையெல்லாம்...'' என்று, மொபைல் போனில் யாரிடமோ சத்தமாய் கடிந்து, அவசரமாய் இறங்கிப் போக, சந்தோஷமாக ...

படித்ததில் பிடித்தது :) -..வீரப் பெண்மணி!

Posted: 23 May 2016 10:30 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

Posted: 23 May 2016 10:23 AM PDT

ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் என இரு சுற்றுப்பயணங்களுக்கும்
இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புதுமுகங்கள் சிலர்
இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு
ஷர்துல் தாக்குரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள்-டி20 போட்டியில்
ஃபயிஷ் ஃபஸல் சஹால், ஜயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங்
ஆகிய புதுமுகங்களும் தேர்வாகியுள்ளார்கள்.
அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பைக் காண்போம்.

'இன்று உலக ஆமைகள் தினம் ! - 23.05.2016

Posted: 23 May 2016 10:17 AM PDT

கடல் நீரை சுத்திகரிக்கும் ஆமைகள் ! ராமேஸ்வரம்: 'இன்று உலக ஆமைகள் தினத்தையொட்டி, கடல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, கடலை சுத்தமாக்கும் ஆமைகளை பேணிக் காப்போம்' என, அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை. கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், ...

18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

Posted: 23 May 2016 09:55 AM PDT

- லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்- தஜி ஆபிரகாம் . இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன் தனிஷ்க் ஆபிரகாம் (வயது 12) தனிஷ்க் ஆபிரகாம் குழந்தையாக இருந்த போதே சிறந்த அறிவு மற்றும் திறமையுடன் இருந்ததால் அவனது பெற்றோர், அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான 'மென்சா'வில் 4 வயதிலேயே அவனை சேர்த்து விட்டனர். அவனுக்கு ...

“இது நல்லா “ஆவி வந்த’ வீடு சார்…”

Posted: 23 May 2016 09:48 AM PDT

""டாக்டருக்குத் துணிச்சல் அதிகம்" ""எப்படிச் சொல்றே?" ""வேறு ஏதாவது சைட் பிஸினஸ் பண்றீங்களானு கேட்டதுக்கு "கிட்னி எக்ஸ்போர்ட் பண்றேன்'னு தில்லா சொல்கிறாரே!" – எம்.அசோக்ராஜா, – ————————————- – சர்வர்: வடையில நூல் வர ஆரம்பிச்சிடிச்சு முதலாளி…? முதலாளி: அப்படியே வை. பார்சல் கட்ட வச்சுக்கலாம்…! – ———————————- "இது நல்லா "ஆவி வந்த' வீடு சார்…" "எப்படிச் சொல்றீங்க தரகரே?" "டாக்டர் ஒருத்தர் கிளினிக் வச்சிருந்த வீடு சார் இது!" – ——————————— – குடிமகன்: எவ்வளவு சாப்பிட்டாலும் ...

ஏழை மக்களின் வசதிக்காக ‘திவ்ய தரிசனம்’ தொடக்கம்

Posted: 23 May 2016 09:45 AM PDT

- திருப்பதி : ஆந்திர மாநில அறநிலையத்துறை, 'திவ்ய தரிசனம்' என்ற பெயரில், புதிய சுற்றுலா திட்டத்தை தொடங்க உள்ளது. இதன்படி, ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஏழை எளிய மக்களுக்கு, இலவசமாக திருக்கோவில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆண்டுதோறும், 10 ஆயிரம் பேர் என, ஆண்டுக்கு, 1.30 லட்சம் பேரை, இந்த இலவச திருக்கோவில் சுற்றுலாவில் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே, முன்னுரிமை தரப்பட உள்ளது. ...

அடிக்கும் கையாக மாறிய அழகிய கை

Posted: 23 May 2016 09:44 AM PDT

- இனிமேல் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்காமல் சின்ன வேடமாக இருந்தாலும் தனித்துத் தெரியும் வகையிலான வேடத்தில் மட்டுமே நடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நிக்கி கல்ராணி. 'கோ 2' பட வரவேற்புதான் நிக்கி யின் இந்த அதிரடி மாற்றத்துக்கு காரணமாம். இப்போது விஷ்ணு வுடன் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற படத்தில் ஆக்ஷன் வேடத்தில் பிளந்து கட்டுகிறாராம் நிக்கி. இதற்காகவே முறைப்படி கராத்தே பயிற்சி எல்லாம் கற்றுள்ளார். கராத்தே உடையுடன் ஆக்ரோஷமாக ஓடு களை உடைக்கும் வீடியோவை டுவிட்டரில் ...

மருத்துவர் ஆனார் நடிகை சாய் பல்லவி!

Posted: 23 May 2016 09:44 AM PDT

- பிரேமம் என்கிற மலையாளப் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் சாய் பல்லவி. அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துவந்தார். இந்நிலையில் அவர் படிப்பை முடித்து தற்போது மருத்துவராகியுள்ளார். இத்தகவலை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார் சாய் பல்லவி. கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அ றிமுகமாகவேண்டும் என்று இருந்த ...

தமிழ் எழுதி

Posted: 23 May 2016 09:39 AM PDT

வணக்கம்

விண்டோஸ் 10 ல், தமிழில் எழுதுவதற்கு தாங்கள் எந்த கீ போர்ட் பயன்படுத்துகிறீர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நான் அழகி பயன்படுத்துகிறேன், இருந்தும் என்னால் ஒன் நோட், வேர்டு மொபைல், ஆகியவற்றில் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை,அதில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது?

தீர்வை எதிர்நோக்குகிறேன்.

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அனிருதன் மரணம்

Posted: 23 May 2016 09:37 AM PDT

திருவனந்தபுரம், கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான கே. அனிருதன் உடல் நல குறைவினால் நேற்றிரவு தனது வீட்டில் மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 92. கேரளாவின் தெற்கு பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சியினை வளர்ப்பதற்கு முக்கிய பங்கு வகித்த அனிருதன் கடந்த 1963, 1965, 1979 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வர்த்தக அமைப்பு தலைவராகவும் செயல்பட்டுள்ள அனிருதன் கடந்த 1967ம் ஆண்டு ...

தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்; நாளை மறுநாள் பதவியேற்பு

Posted: 23 May 2016 09:36 AM PDT

சென்னை, தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் ரோசைய்யா முன்னிலையில் இன்று பதவி ஏற்று கொண்டார். அவரது தலைமையிலான 28 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே வழங்கப்பட்ட துறைகளை பிரித்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக காதி, கிராம தொழில் துறை அமைச்சராக ஜி. பாஸ்கரன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக பாலகிருஷ்ண ...

அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது: நமீதா

Posted: 23 May 2016 09:34 AM PDT

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. என்று நமீதா கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை ...

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்

Posted: 23 May 2016 09:29 AM PDT

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள் பின்வருமாறு... - தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் கையெழுத்திட்டார். - மேலும்... 1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை ...

காரணம் தெரிந்தது

Posted: 23 May 2016 09:20 AM PDT

காரணம் தெரிந்தது நான் தினமும் போகும் பூங்கா . ஒரு நீளமான பெஞ்ச் .எப்போதும் 4/5 பெண்மணிகள் உட்கார்ந்து , மிகவும் சத்தம் போட்டுக்கொண்டும் கேலியாக சிரித்துக் கொண்டு பொழுதை போக்குவார்கள் .சந்தோஷமான அந்த கூட்டத்தைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கும் . நேற்று போனப் போது மிகவும் அமைதியாக இருந்தது அந்த கும்பல் . மனதிற்கு சிறிது கஷ்டமாகவும் இருந்தது . இன்று பழைய சிரிப்பும் கும்மாளமும் திரும்பி இருந்தது . சிறிது தைரியத்துடன்,அவர்களை அணுகி , நேற்றைய அமைதிக்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா ...

பட்டா வாங்குவது அவசியமா?

Posted: 23 May 2016 09:19 AM PDT

வீட்டுமனை வாங்குவதில் முக்கியமான ஒரு விஷயம் பட்டா வாங்குவது ஆகும். வீட்டு மனை வாங்கும்போது பத்திரப்பதிவு செய்தால் மட்டுமல்லாமல் பட்டாவும் வாங்க வேண்டும். வாரிசு முறையில் எழுதிவைக்கப்பட்ட வீட்டு மனையின் பட்டாவையும் நம்முடைய பெயரில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அது அவசியமானது. நம் சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணைய தளத்தில் ...

கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி

Posted: 23 May 2016 09:18 AM PDT

வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி - மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடந்த 21-ம் தேதி மாலை போட வந்தார். - அப்போது சாலையில் எந்த கட்அவுட்டையும் பார்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி தடுப்பு வேலியை மட்டும் போலீஸார் அமைத்திருந்தார்கள். 'முதல்வர் வரப் போகிறார்' என்பதை நினைவூட்டும் வகையிலேயே இருந்தது. - இது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் ஜெயலலிதா. ...

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

Posted: 23 May 2016 09:11 AM PDT

பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா படம் : நூல்வேலி – ————————— மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2) ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2) காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே – ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2) சோதனைக்களம் அல்லவா? நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா? ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2) – (மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே) – உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2) யாருக்கும் நீயல்லவா நெஞ்சே ...

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Posted: 23 May 2016 09:01 AM PDT

சென்னை ஆலந்தூரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம்

இடையிலான 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில்

சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்த வழித்தடத்துக்கான முதல் பயணிகள்

போக்குவரத்து ஜூலை மாதம் தொடங்கப்படும் என்று

சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

Posted: 23 May 2016 08:59 AM PDT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய ...

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

Posted: 23 May 2016 08:58 AM PDT

- புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பாஜக தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அவர் பதவியேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிரண் ...

வருவான் வடிவேலன் – தணிகை வள்ளல் அவன் –

Posted: 23 May 2016 07:48 AM PDT

படம் : வருவான் வடிவேலன் குரல்: வாணி ஜெயராம் வரி: கண்ணதாசன் இசை: MSV – ——————————— – வருவான் வடிவேலன் – தணிகை வள்ளல் அவன் – அழகு மன்னன் அவன் – நினைத்தால் வருவான் வடிவேலன்! சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன் இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (வருவான் வடிவேலன்) முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் – என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் ...

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]

Posted: 23 May 2016 01:43 AM PDT

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]




தொகுப்பு 1

சுட்டி

தொகுப்பு 2

சுட்டி

---
நன்றி - தமிழ்ப்ரீபுக்ஸ் வலைப்பூ

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012

Posted: 23 May 2016 01:03 AM PDT

ஆனந்த விகடனில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆண்டி வாரியாக தொகுத்துள்ளேன்

விகடன் சிறுகதைகள் 2011
https://db.tt/h089pRZ8

விகடன் சிறுகதைகள் 2012
https://db.tt/8IrnaiDd

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 22 May 2016 08:41 PM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

வருவான் வடிவேலன் – தணிகை வள்ளல் அவன் –

Posted: 22 May 2016 08:01 PM PDT

படம் : வருவான் வடிவேலன் குரல்: வாணி ஜெயராம் வரி: கண்ணதாசன் இசை: MSV – ——————————— – வருவான் வடிவேலன் – தணிகை வள்ளல் அவன் – அழகு மன்னன் அவன் – நினைத்தால் வருவான் வடிவேலன்! சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன் இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (வருவான் வடிவேலன்) முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் – என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் ...

நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்

Posted: 22 May 2016 07:09 PM PDT

- முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் நாளை திங்கள்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டான ஆர்.எல்.வி டிடி நாளை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார். பொதுவாக, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™