Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மேட்டூர் அணை திறப்பு: ஜூன் 12ல் சாத்தியமில்லை

Posted: 22 May 2016 09:43 AM PDT

நீர் இருப்பு குறைவாக இருப்பதால், ஐந்தாவது ஆண்டாக, மேட்டூர் அணை, ஜூன், 12ம் தேதி திறக்க வாய்ப்பில்லை என்பதால், ஆற்று பாசனத்தை நம்பியுள்ள டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில், குறுவை சாகுபடியின் இயல்பான பரப்பளவு, 1.20 லட்சம் ஹெக்டேர். மேட்டூர் அணை ஜூன், 12ம் தேதி திறக்கப்பட்டு, போதுமான அளவுக்கு நீர்வரத்து இருந்தால் மட்டுமே இந்த இலக்கு எட்டப்படும்.

குறுவை சாகுபடி:இல்லாதபட்சத்தில், பம்ப் செட் வசதியுடைய விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி ...

சட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 22 May 2016 10:14 AM PDT

தமிழக சட்டசபையில், 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சராசரியாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், 8.21 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளன. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உடைய மூன்று எம்.எல்.ஏ.,க்களில், முதல்வ ராக பதவியேற்க உள்ள ஜெயலலிதா வும் இடம் பெற்றுள்ளார்.

தேர்தலின் போது வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, ஏ.டி.ஆர்., என்ற, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், 'தமிழ்நாடு எலக் ஷன் வாட்ச்' அமைப்பும், புதிய எம்.எல்.ஏ.,க் களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம், 232 ...

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி

Posted: 22 May 2016 10:19 AM PDT

சென்னை;தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணி, 234 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. அதேநேரத்தில், 180 தொகுதி களில் தான் தி.மு.க., போட்டியிட்டது. அதிலும், தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் நேரடியாக போட்டியிட்ட, 172 இடங்களில், தி.மு.க., 89 இடங்களிலும், அ.தி.மு.க., 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அத்துடன், தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள்
போட்டியிட்ட, 60 இடங்களில், 51 இடங்களை,அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. மேலும், தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வலிமையுடன் சட்டசபையில் ...

தமிழக அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம்?

Posted: 22 May 2016 10:20 AM PDT

தமிழக அமைச்சரவையில், தேவர் சமுதாயத்தினர் ஒன்பது பேர், கவுண்டர்கள் ஐந்து பேர் உட்பட, பல சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. முதல்வர் ஜெ.,வுடன், 28 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்கின்றனர்.

இதில், ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல்
சீனிவாசன், செல்லுார் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் என, எட்டு பேரும் தேவர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ...

6வது முறையாக ஜெ., பதவியேற்பதால் அ.தி.மு.க.,வினர்... குதூகலம்!:சென்னை பல்கலை மண்டபத்தில் இன்று மதியம் விழா

Posted: 22 May 2016 10:27 AM PDT

சென்னை:தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்க உள்ளதால் அ.தி.மு.க.,வினர் குதுாகலம் அடைந்துள்ளனர். ஜெ., தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் இன்று மதியம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும்படி தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 134 இடங்களில் வெற்றி பெற்றதால், ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று, தமிழக முதல்வராக, ஜெயலலிதா இன்று ...

தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ ஆலோசனை

Posted: 22 May 2016 10:34 AM PDT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர, விஜயகாந்தும், வைகோவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்' இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. தேர்தல் தோல்வியால் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ண னும் ...

மாநில கட்சிகளுடன் கூட்டணிக்கு தயாராகிறது பா.ஜ., :நாடு முழுவதும் ஆட்சியை பிடிக்க யுக்தி

Posted: 22 May 2016 10:40 AM PDT

புதுடில்லி:உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபைகளுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், வெற்றி வாய்ப்பு அதிகம் இல்லாத மாநிலங்களில், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, பா.ஜ., மேலிடம், புது வியூகம் வகுத்துள்ளது.

அசாம் உட்பட நாடு முழுவதும், தற்போது, 14 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி உள்ளது. சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில தேர்தலில், அசாமில் மட்டுமே பா.ஜ., ஆட்சி அமைந்தது.
நல்ல பலன்:இந்த நிலையில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில ...

மெகா கூட்டணிக்கு வருகிறது ஆபத்து:நிதிஷுக்கு லாலு கட்சியினர் திடீர் எதிர்ப்பு

Posted: 22 May 2016 10:52 AM PDT

பாட்னா:'பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்' என, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு, கட்சி நிர்வாகிகள் குடைச்சல் கொடுக்க துவங்கிஉள்ளனர்.

உரசல்:பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. இதில், முக்கிய கட்சிகளான, நிதிஷ்
குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கும் இடையே, சமீப காலமாக உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. ...

ஈரானுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவோம்: நரேந்திர மோடி

Posted: 22 May 2016 11:48 AM PDT

டெஹ்ரான்;''வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஆகிய துறைகளில், ஈரானுடனான உறவை வலுப்

படுத்துவதே சுற்றுப் பயணத்தின் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்றடைந்தார்.
இதுதொடர்பாக, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், பிரதமர் மோடி வெளியிட்ட பல்வேறு பதிவுகளில் கூறியிருப்ப தாவது: ஈரானுடன்
வர்த்தகம், முதலீடு, எரிசக்தித் துறையில் நட்புறவு, இரு நாட்டு மக்கள் இடையே நல்லுறவு போன்றவை, ஈரான் சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சங்கள்.ஈரான் தலைமை தலைவர் அயதுல்லா அலி காமினே, ...

மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் 'ரேங்க்' பட்டியல் வெளியிட முடிவு

Posted: 22 May 2016 11:57 AM PDT

புதுடில்லி : அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.
மேலாண்மை, பொறியியல், மருந்தியல் ஆகிய கல்லுாரிகளுக்கு மட்டும், தேசிய அளவில், ரேங்க் எனப்படும் தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கு இந்த பட்டியல் வெளியிடப் படுவதில்லை. இந்நிலையில், உயர் கல்வித் துறைக்கான செயலர் வி.எஸ்.ஓபராய் மற்றும் உயர் அதிகாரிகளுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™