Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்

Posted: 22 May 2016 01:25 PM PDT

திருச்சி,: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அவரது மகனும், நடிகருமான உதயநிதி அரசியல் களத்தில் இறங்கியுள்ளது, கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது. திட்டவட்டம் 'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும், அரசியல் வாரிசாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி உருவெடுப்பதை தடுக்க முடியாது என, தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் நடந்து ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 22 May 2016 01:18 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

எதிர்பார்ப்பு என்னா?

Posted: 22 May 2016 01:12 PM PDT

எதிர்பார்ப்பு என்னா? சிலர் விரும்பி இருக்கலாம் சிலர் விரும்பாதிருந்திருக்கலாம் . எது எப்பிடியோ நாளை முதல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் . தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்ற , அவரிடம் பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன . எதை செய்தால், அவர் நீடிக்க முடியும் . மக்கள் இடத்தில் /தேசிய அளவில் தமிழ்நாட்டை பற்றி உயர்வாகப் பேசவைக்க முடியும் . ஈகரை உறவுகளே ,உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன ? ஆரம்பிக்க , இரெண்டொரு எதிர்பார்ப்புகள் என்னிடமிருந்து . மேலும் தொடரும் . உங்கள் எதிர்பார்ப்புகளை எழுதுங்கள் ...

அறிமுகம் தனபால்

Posted: 22 May 2016 01:08 PM PDT

பெயர்: தனபால்
சொந்த ஊர்: பொள்ளாச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தேடுபொறியில் சிக்கியது
பொழுதுபோக்கு: படிப்பது
தொழில்: வேலை தேடும் ஆசாமி
மேலும் என்னைப் பற்றி: சொல்லுவதற்கு நான் என்ன சோழர் பரம்பரையா ?

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு

Posted: 22 May 2016 01:01 PM PDT

- திருவனந்தபுரம் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறது. – இடதுசாரி முன்னணி வெற்றி – கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்றது. இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றதால் முன்னாள் முதல்– மந்திரியும், தற்போதைய அரசில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான ...

சவாலான வேடத்தில் ஜோதிகா!

Posted: 22 May 2016 12:58 PM PDT

- - – திருமணத்திற்கு பின், நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த ஜோதிகா, ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த, ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தின் தமிழ் ரீ – மேக்கான, 36 வயதினிலே படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால், மறுபடியும், கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்த அவர், தற்போது, குற்றம் கடிதல் படத்தை இயக்கிய, பிரம்மா கூறிய கதையை ஓ.கே., செய்துள்ளார். இப்படத்திலும், முந்தைய படத்தைப் போலவே, சவாலான வேடத்தில் நடிக்கிறார். – ——————————– — ...

தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

Posted: 22 May 2016 12:57 PM PDT

- சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 23-ம் தேதி சென்னை பல்கலை வளாகத்தில் பொறுப்பேற்க உள்ளது இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களி்ன கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது அவை குறித்த விவரம் வருமாறு: – 1. ஜெயலலிதா – முதல்வர் —எஸ்.எஸ்.எல்.சி. .( மாநில அளவில் தங்கப்பதக்கம்) 2. பன்னீர்செல்வம் – நிதி B.A., 3. பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு B.A., 4. எடப்பாடி கே.பழனிச்சாமி — பொதுப்பணி, நெடுஞ்சாலை B.Sc., 5. டி.ஜெயக்குமார் -மீன்வளம் B.Sc., B.L., 6. ...

வெளியேறிய வெளிச்சம்!

Posted: 22 May 2016 12:55 PM PDT

- நன்றாய் நினைவிருக்கிறது நல்லவர்கள் தாம் நாம்! வைத்திருந்தது தொலைந்து விட்ட வருத்தத்தில் வாடுகிறோம்! எங்கே தொலைத்தோம் எப்போது தொலைத்தோம் இப்போது நினைத்தாலும் இதயம் கனக்கிறது! எறும்பின் இரைப்பைமேல் இரக்கம் இருந்ததால் தான் மண்ணில் மாக்கோலம் மலர்ந்தது அந்நாளில்… அணுவளவே அதன்வயிறு அதற்கும் பசிக்குமென்றுதானே அன்னமிட்டு ஆனந்தித்தோம்! – கரையும் காகத்தின் மேல் கருணை பிறந்ததால் தான் சனிக்கிழமைகளில் சாப்பாடு வைக்கிறோம்! – பசுவின் மீது உள்ள பாசமே அகத்திக்கீரையும், கழுநீரும் ஆகாரமாகியது! – கொட்டும் ...

இந்திக்கு செல்லும் தமன்னா!

Posted: 22 May 2016 12:55 PM PDT

- – தமன்னாவுக்கு, இந்தி தாய்மொழி என்ற போதும், தென்னிந்திய சினிமா தான், அவரை முன்னணி நடிகையாக வளர்த்து விட்டது. எனினும், தாய்மொழி பாசத்தால், அவ்வப்போது இந்தி படங்களில் நடிப்பதும், அப்படம் தோல்வி அடைந்ததும், இங்கு வருவதுமாக இருந்து வந்தவர், தற்போது, தர்மதுரை படத்தில் நடித்து முடித்ததும், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் தில்வாலே படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் நாயகனாக ரன்வீர்சிங் நடிக்கிறார். அருள் வேணும்; பொருள் வேணும்; ...

கொத்தும் பறவை..!

Posted: 22 May 2016 12:54 PM PDT

- மரம் கொத்தி (உட்பெக்கர் – woodpecker) பறவை மரத்தைக் கொத்தாமல் இருந்திருந்தால்? அதுக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருப்போம். அது கிடக்கட்டும்… இப்போதைக்கு, அது ஏன் மரத்தைக் கொத்துகிறது, அதன் இயல்புகள் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம். மரப்பட்டைகளில் உள்ள குட்டிக் குட்டிப் பூச்சிகளை சாப்பிடுவதற்காகத்தான் அது மரத்தைக் கொத்துகிறது. அதற்கு ஏற்றாற்போல் அதன் அலகு உறுதியானதாக அமைந்திருக்கிறது. மரத்தைக் குடைந்து பொந்து ஏற்படுத்தி அதில் இந்த பறவைகள் வசிக்கின்றன. விதை, ...

மம்மூட்டிக்கு ஜோடியான வரலட்சுமி!

Posted: 22 May 2016 12:43 PM PDT

- தாரைத்தப்பட்டை படத்தில், கரகாட்ட பெண்ணாக நடித்தவர் வரலட்சுமி. அவரது, அதிரடியான நடிப்பு, பலரையும் கவர்ந்ததால். ஆக்ஷன் கதாநாயகியாகி விட வேண்டும் என்று, நிபுணன் என்ற படத்தில், ஒப்பந்தமானார். அத்துடன், தொடர்ந்து அதிரடி வேடங்களாக தேடினார்; ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரியான வேடங்கள் சிக்கவில்லை. அதனால், தற்போது மலையாளத்தில், மம்மூட்டியுடன், கசபா என்ற படத்தில், குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் வரலட்சுமி, இப்போது, அழுத்தமான கதாபாத்திரங்கள் ப க்கம் திரும்பியுள்ளார். – —————————- — ...

திமுக-வை தோற்கடித்த நோட்டா…!

Posted: 22 May 2016 12:41 PM PDT

புத்தகம் தேவை

Posted: 22 May 2016 06:17 AM PDT

புத்தகம் தேவை

ஆர். வெங்கடேஷ் -ன் மியூச்சுவல் ஃபண்ட் புத்தகம் மின்னூலாக கிடைக்குமா ?

தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)

Posted: 22 May 2016 04:26 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

புத்தகம் தேவை

Posted: 22 May 2016 02:45 AM PDT

புத்தகம் தேவை

6174 மின்னூல் கிடைக்குமா ? எங்கு தேடியும் கிடைக்கவில்லை .

நன்றிகள் பல ...

ஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி

Posted: 21 May 2016 08:34 PM PDT

- மே 21 ————- கான்பூர்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. – ———————

சிம்பு படத்தில், ‘அவதார்’ மேக்-அப் மேன்!

Posted: 21 May 2016 08:32 PM PDT

- அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து, சிம்பு நடிக்கும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. அத்துடன், இப்படத்தில் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவுக்கு, 'மேக்-அப்' போடுவதற்காக ஹாலிவுட்டில் இருந்து, ஷான்புட் என்ற மேக்-அப் மேன் வரவழைக்கப் பட்டுள்ளார். இவர், ஹாலிவுட்டில் வெளியான, அவதார் உள்ளிட்ட பல படங்களில், மேக்-அப் மேனாக வேலை செய்தவர். அவ்வகையில், இப்படத்துக்காக சிம்புவின் கெட்டப்பையும், அவதார் ரேஞ்சுக்கு வித்தியாசப்படுத்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™